வாகனத்தில் சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியதற்கு பயணியை கத்தியால் குத்தியுள்ளார் ஊபர் கால் டாக்ஸி ஓட்டும் ஓட்டுநர். டெல்லி காவல் துறையில் துணை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஜிதேந்தர் ரானா. இவர் கடந்த திங்கட்கிழமை டெல்லியின் ராஜீவ் கார்னரில் இருந்து மால்வியா நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு ஊபர் கால் டாக்ஸி ஒன்றை புக் செய்தார். பின்னர் காரில் தனது மனைவி மற்றும் மகளுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். ஆனால் காரை ஓட்டிய […]
