ஊத்தங்கரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் பெற்றோர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லாவி அருகே உள்ள சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் திடீர் என்று மயங்கி விழுந்தனர். […]
