புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி ஆணையர் முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக மேற்பார்வையாளர், கிளார்க், மேஸ்திரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை. மேலும் இதுகுறித்து கேட்டால் நகராட்சி நிர்வாகம் முறையாக பதில் கூறவில்லை […]
