ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என புகார்கள் எழுந்துள்ளதால், பகுதிநேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை, 4 வாரங்கள் […]
