உடல்நிலை சரியில்லாத மனைவியை ஊசி போட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ராமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் சன்னேசப்பா என்பவரின் மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மருத்துவரான சன்னேசப்பாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரை பல ஆண்டுகளாக அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ஷில்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் […]
