மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் தலைநகர் மும்பையில் காவலர்கள் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் சின்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஆட்சி கவலும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனால் தொடர்ந்து காவல்துறைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
