தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை கையிலெடுத்து, ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணியில் தொடர முடியும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார், பின்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இறங்கி வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. இந்த நிலையில் 15 சதவீதம் […]
