தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான நிதி அதிகாரத்தினை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இது சிறந்த மாற்றத்தை உருவாக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கடந்த 6-ம் தேதி புதிய அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின் படி கிராம ஊராட்சிகளுக்கு ரூபாய் 5 லட்சமும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூபாய் 25 லட்சமும், மாவட்ட ஊராட்சிகளுக்கு […]
