கேரளா கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதன் உண்மையை கண்டறிவதற்கு குழு ஒன்றை மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. […]
