சுவிட்சர்லாந்தில் இனிமேல் உளவியல் சிகிச்சையானது, அடிப்படை சுகாதார காப்பீட்டு படி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து பயிற்சி அளிக்கப்பட்ட உளவியலாளர்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை சுவிஸ் அடிப்படை கட்டாய சுகாதார காப்பீட்டு படி திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற மருத்துவர்களின் பரிந்துரை தேவை. இதுமட்டுமல்லாமல் நிபந்தனைகள் சிலவற்றையும் பூர்த்தி செய்வது அவசியம். இந்த சேவைக்குரிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. மருந்துச் சீட்டு ஒன்றில் 15 அமர்வுகளுக்கு தான் அனுமதி. […]
