சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 12-வது மந்திரிகள் மாநாட்டில் மீன்வளத்தை அதிகப்படுத்தும் வகையில் மீன்பிடித்தலை கட்டுப்படுத்தி கடல் வளத்தை உறுதி செய்வது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஷியாங்சென் சாங், மீன்பிடித்தல் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித்தல் சலுகைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்டு வரும் […]
