உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கொரோனாவிற்காக பள்ளிகளை அடைப்பது நியாயம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக வங்கியின் கல்வி இயக்குனர், இனிமேல் புதிதாக கொரோனா அலைகள் பரவினாலும் பள்ளிகளை அடைப்பது இறுதி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுவது, குழந்தைகள் கல்வி கற்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை பெற்றோருக்கு உண்டாக்குகிறது. பள்ளி வளாகங்களில் இல்லாமல் வீட்டிலேயே இணையதளத்தின் வழியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. […]
