நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவரின் வீட்டின் முன் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இன்று காலையில் அவரின் வீட்டின் முன்பு ஒன்றுகூடினர். கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடி தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து உள்ளார். […]
