60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 கலைஞர் பங்கேற்ற உலக நாட்டுப்புறக்கலை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ரஷ்யாவில் 6-வது உலக நாட்டுப்புறக்கலை விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த உலக நாட்டுப்புறக்கலை விழா 4 வருடங்களுக்கு ஒருமுறை யுனெஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழா கடந்த 1996ஆம் ஆண்டு முதல் முறையாக நெதர்லாந்தில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா ஹங்கேரி மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த நாட்டுப்புறக் கலைவிழா நடைபெற்றுள்ளது […]
