கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே வசிப்பவர் கருப்பசாமி. இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் அவர் வேலைக்கு புறப்பட்டு வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. அருகிலிருந்த மரக்கிளை ஒடிந்து மின்சார வயரில் விழுந்திருந்தது அதனால் மின்சார வயர் அறுந்து தண்ணீரில் விழுந்திருந்தது. எனவே […]
