Categories
உலக செய்திகள்

ஏப்ரல் 12 முதல் திருமண நிகழ்ச்சிகளுக்கு 15 பேர் வரை அனுமதி ..எந்த நாட்டில் தெரியுமா ?

பிரிட்டனில் திருமண நிகழ்ச்சியில் 15 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் ஏப்ரல் 12 முதல் திருமண நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்தினர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட 15 நபர்களை அனுமதிக்கலாம். மேலும் அதனை தொடர்ந்து  நடக்கக்கூடிய வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் அனுமதிக்கப்பட உள்ளது .ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் ஏப்ரல் 12 முதல் 15 பேர் வரை திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளை தேவாலயங்கள் போன்ற சில […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் ரயிலுக்குள் பயணிகளை தாக்கிய மர்ம நபர்கள் ..!!போலீசார் வெளியிட்ட சிசிடிவி புகைப்படங்கள் ..!!

லண்டனில் இரண்டு பயணிகளை ரயிலிலிருந்து தாக்கிய நபர்களைப் பற்றிய தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆறாம் தேதி இரவு 10.30 மணி அளவில் மூன்று ஆண்கள் சென்ட்ரல் டுயூப் ரயிலுக்குள் ஏறி உள்ளனர். அங்கிருந்த இரண்டு பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பைகளை தங்களிடம் தருமாறு பயமுறுத்தி உள்ளனர். இந்த இரு பயணிகளும் பைகளை தர மறுத்ததால் அவர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பிரிட்டன் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் சிசிடிவி புகைப்படங்களை […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கைது செய்யப்பட்ட பெண் திடீர் மரணம் ..!!காரணம் என்ன ?தீவிர விசாரணையில் போலீசார் .!!

கனடாவில் போலீசால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சஸ்கடூனில் 30 வயதான பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .அவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் இருந்ததால் கடந்த 24ஆம் தேதி 10 மணிக்கு போட்டல் போர்ட்ஸ் யூனியன் என்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் 10.30 மணி அளவில் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

மிரட்டல் கடிதம் ..!!விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி கொலை செய்த சம்பவம் ..!!போலீசால் கைது .!!

கனடாவில் வீட்டின் முன் விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி உயிரை எடுத்த ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடாவில் அல்பேர்ட்டாவிலுள்ள மெடிசின் ஹாட் என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அவரையும் அவரின் மனைவியும் ஏதோ ஒரு கும்பல் கண்காணித்து வருவதாகவும் தங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்றும் எழுதியிருந்தது .அப்படி பணம் தரவில்லை என்றால் அவரின் உறவினர்களை கொல்வதாக கூறி மிரட்டல் கடிதம் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

7 மாணவர்களிடம் பாலியல் ரீதியான தாக்குதல் ..ஆசிரியர் கைது ..!!

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியாக குற்றம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளது . அமெரிக்காவில் கிராணட் சிட்டி உயர்நிலை பள்ளியில் 59 வயதான ஜான் மாங்குயின் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர்  அந்த பள்ளியில் படித்து வரும் 14 லிருந்து 16 வயதான 7 மாணவர்களிடம் பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக தெரிய வந்துள்ளது . உடனே தகவல் அறிந்த போலீசார் ஜான் மீது  வழக்கு பதிவு செய்து  கைது செய்துள்ளது.

Categories
உலக செய்திகள்

தேசத்துரோக வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் குறித்த தகவல் ..வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் ..!!எந்த நாட்டிற்கு தெரியுமா?

ஜெர்மனியில் தேசத்துரோக வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல சமையல் கலைஞர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொரோனா தொற்றால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு  எதிராக விமர்சித்து  பொதுமக்களிடையே வெறுப்புகளை தூண்டுதல், மக்களை திசை திருப்புவது போன்ற குற்றசாட்டுகள் அட்டிலா ஹில்டமன் என்பவர் மீது வைக்கப்பட்டது. மேலும் அவர் மீது தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன . கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஜெர்மன் நிர்வாகம் அவருக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளது . மேலும் […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியா எண்ணெய் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்…பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ..!!வெளியான விடியோ காட்சிகள்.. !!

சவுதி எண்ணெய் நிலயத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா ஜசன் நகரிலுள்ள எண்ணெய் நிலையத்தின் மீது தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டதாக அரேபியாவின்  எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும்  ஒரு டேங்கர் மட்டும் தீப்பிடித்துள்ளதாக  கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதில் முக்கிய நிறுவனங்களுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு  சவூதி அரேபியா கடுமையாக கண்டிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை கடத்திய மர்ம நபர் ..அருகில் வந்தால் வெடிக்க வைத்துவிடுவதாக மிரட்டல்..!! போலீசாரால் கைது ..!!

ஆப்பிரிக்காவில் மர்ம நபரால்  விமானம்  கடத்தப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா தலைநகரமான நோவக்ச்சோட்டடில் மௌரிட்டானிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடத்துவதற்காக விமானத்திற்குள் நுழைந்துள்ளார் .பிறகு அந்த மர்ம நபர் விமான உரிமம் தனக்கு வழங்குமாறு விமான அதிகாரிகளிடம் கூறியுள்ளார் .மேலும் பாதுகாப்பு படையினர் அருகில் வந்தால் விமானத்தை வெடிக்க வைத்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளான். விமானத்தை கடத்தியவன் அமெரிக்க குடிமகன் என்று கூறப்படுகிறது. விமானம் கடத்தப்பட்டதை  தொடர்ந்து பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

சீனா சக்தி வாய்ந்த நாடாக ஆக முடியாது ..அமெரிக்கா ஜனாதிபதி சபதம் ..!!

ஜோ பைடன் ஜனாதிபதியாக இருக்கும் வரை சீனா அமெரிக்காவை விட சக்தி வாய்ந்த நாடாக ஆக முடியாது என்று  அவர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா மாறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுப்பேன் என்று கூறியுள்ளார் .மேலும் ஜோ பைடன் அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் கீழ்  துணை ஜனாதிபதியாக வேலை பார்த்தபோது சீன ஜனாதிபதியான சி ஜின்பிங் உடன் பேசியதாக கூறியுள்ளார் […]

Categories
உலக செய்திகள்

இரண்டாவது இடத்தில இந்த நாடா ?கொரோனா தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 3,00,000 தாண்டியுள்ளது ..பீதியில் மக்கள் ..!!

கொரோனா தொற்றால் பிரேசிலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,000 த்தை தாண்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரேசிலில் இதுவரை கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 3,00,685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது ,புதன்கிழமை ஒரே நாளில் 89,992 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,20,011 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் வடிகுழாயில் சிக்கிய பெண்…உயிருடன் மீட்கப்பட்ட பெண் கூறிய ஆச்சரியமான தகவல்..!!

புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் வடிகுழாயில் சிக்கிய பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் சாலையோரமாக அமைந்துள்ள மழைநீர் வடிகுழாயிலிருந்து  கடந்த செவ்வாய்க்கிழமை அன்று யாரோ உதவி கேட்பது போன்று சத்தம் கேட்டதால் வழிப்போக்கர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார் .உடனே  தகவல் அறிந்து  தீயணைப்பு வீரர்களுடன் போலீஸ் வந்து வடிகுழாயில் சிக்கியிருந்த பெண்ணை கண்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு வெகுநேரம் முயற்சித்த பின் அந்த பெண்ணை நிர்வாண நிலையில் மீட்டுள்ளனர்.மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

பனி சரிவில் சிக்கி உயிரிழந்த பிரான்ஸின் முன்னாள் பனிச்சறுக்கு உலக சாம்பியன் ..விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்து ..!!எந்த நாட்டில் தெரியுமா ?

சுவிட்சர்லாந்தில்  ஏற்பட்ட பனிச்சரிவில் பிரான்சின்  முன்னாள் பனிச்சறுக்கு உலகச் சாம்பிய வீரர் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . பிரான்ஸின் முன்னாள் பனிச்சறுக்கு உலக சாம்பிய வீரரான 40 வயதான பொமகல்ஸ்கி  யூரியின் மண்டலத்தில் நான்கு பேர் கொண்ட குழுவில் பனிச்சறுக்கு விளையாடும் போது பனியில் சிக்கிய உயிரிழந்ததாக ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த பனி சறுக்கில்  பிரான்ஸ் வீரரான புருனோ புடெல்லியும் சிக்கி பலியாகியுள்ளார். மற்றோரு வீரர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

வலிப்பு நோயால் சாலையில் விழுந்த கனடிய பெண் …வளர்ப்பு நாய் என்ன செய்தது தெரியுமா ?

கனடிய பெண்மணி ஒருவர் சாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்து  தனது வளர்ப்பு நாயால் உதவி பெற்றுள்ளார் . ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் மார்ச் 16 அன்று காலை நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சாலையின் ஓரத்தில் விழுந்துள்ளார். இதனை அறிந்த அவரின் செல்ல நாய் சாலை நடுவே சென்று வாகனத்தை வழிமறித்துள்ளது .அந்த வழியாக லாரியில் வந்த ட்ரிடான் ஓட்வெ […]

Categories
உலக செய்திகள்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு..!! 14 பேருக்கு மரண தண்டனை ..!!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது  வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை  கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி 2000த்தில்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து கொலை செய்வதற்காக பயங்கரவாதிகள் சுமார் 76 கிலோ எடைகொண்ட வெடி பொருளை பதுக்கி வைத்தனர் .தேர்தல் பிரச்சார கூட்டம் என்பதால் போலீஸ் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில் இதுதொடர்பாக 9 பேர்  கைது செய்யப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அலைமோதும் மக்கள் கூட்டம் ..!!காரணம் என்ன ?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் டோனட் இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் மக்கள் கூட்டமாக வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். கொரோனா தொற்று சீனாவில் இருந்து பரவ தொடங்கி உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பூசியை பல நாடுகளும் கண்டுபிடித்தனர். ஆனால் அந்தக் தடுப்பூசிக்கு உரிய விழிப்புணர்வு இல்லாததால் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வருடம் முழுவதும் இலவசமாக டோனட் வழங்கப்படும் என்று க்ரிஸ்பி க்ரீம்  என்ற கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இளம்பெண் அடித்து கொலை ..காதலன் போலீசாரால் கைது ..!!

கனடாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவிலுள்ள மொண்ட்ரியலை சேர்ந்த 29 வயதான ரிபாக்கி ஹரி வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்றபோது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரிபாக்கி இருந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் 32 வயதான பிராண்டன் மெக்லிண்டயர் எனும் அவரின் காதலனும் இருந்துள்ளார். பிறகு ரிபாக்கி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே பிராண்டன் […]

Categories
உலக செய்திகள்

கோழிகளை கொல்ல தடையா ?ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் அரசாங்கம் போட்ட சட்டம் ..!!கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரான்ஸ் இஸ்லாமியர்கள் ..!!

பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கோழிகளை கொல்வதற்கு தடை விதித்க்கவுள்ளதால்  இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து கோழிகளை கொல்வதற்கு தடை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி கோழிகளை கழுத்திலுள்ள சுவாசக் குழாயை துண்டித்து பிறகு கோழிகளை கொல்ல வேண்டும் .ஆனால் இது மனிதத்தன்மையற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வாதிடுகின்றனர் .ஐரோப்பிய வழக்கப்படி கோழிகளை  ஸ்டன் […]

Categories
உலக செய்திகள்

கடவுளை பற்றி குறிப்பிடுவதை நீக்கவேண்டும் ..கோரிக்கையை முன்வைத்த சுவிஸ் அரசியல்வாதி ..!!காரணம் என்ன ?

சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் அரசியல் சாசனத்தில் கடவுளைப்பற்றி குறிப்பிடுவதை நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்விட்ஸர்லாந்து அரசியல் சாசனத்தின் முகப்புரையில் கடவுளின் பெயரால் ஸ்விஸ் மக்கள் அவர்களின் கடமையை செய்வதில் கவனம் செலுத்துவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்தக் கூற்று பொருத்தமானது அல்ல மேலும் அரசியல்  சாசனம் என்பது மக்களின் நம்பிக்கையை தேர்ந்தெடுக்கக்கூடிய உரிமை என்பதால் இந்த கூற்று மாற்றமானது  என்று தேசிய கவுன்சிலரான ஃபபியன்  மோலினா  கூறியுள்ளார். எனவே அவர் அரசியல் சாசனத்தில் கடவுளைப் பற்றி குறிப்பிடுவதை நீக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஓப்ராவுடனான பேட்டியில் ஹரி மேகன் கூறியது உண்மையில்லை ..கடும் கோபத்தில் மக்கள்..!!

ஹரி மேகன் தம்பதியினர் தங்களின் திருமணத்திற்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வெளியிட்ட செய்தி உண்மையில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர். ஹரி மேகன் தம்பதியினர் ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டியில் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் மேற்கொண்டதாக கூறியிருந்தனர்.இந்த செய்தி  பிரிட்டன் மக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்று நாட்களுக்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்தபின் மக்களின் வரிப்பணம் 32 மில்லியன் பவுண்டுகள் வாங்கி தேவாலயத்தில் திருமணம் செய்தது எதற்கு என்று கேட்டு […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம் ..!!பிரதமர் வருகை தந்த நகரில் ராக்கெட் தாக்குதல் ..பாதுகாவலர்கள் அழைத்துக் கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் ..!!

இஸ்ரேலில்  பிரதமர் வருகை தந்த  நகரில் திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவிலிருந்து இஸ்ரேலின் பீர்ஷேபா  நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பீர்ஷேபா  நகருக்கு வருகை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #BREAKING: Rocket launched from Gaza towards the city of Beer Sheva, while PM Netanyahu visited the city pic.twitter.com/jLAGAeDotj — Amichai […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஷ்ய அதிபர் ..ரகசியமான முறையில் பெற்றுக்கொண்டார் ..!!

கொரோனா தொற்றுக்கான முதல் தடுப்பூசி டோஸை ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின்  செலுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  செலுத்திக்கொண்டார் .இந்த தகவலை அவரின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கொவ்  வெளியிட்டுள்ளார். மேலும் புதின் தடுப்பூசியை எல்லோரும் பார்க்கும்படி நேரலையாக பெற்றுக்கொள்ளவில்லை தனியான முறையில் செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது . மேலும்  அவர் ரஷ்யாவில் தயாரித்த ஸ்புட்னிக் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் தன்னார்வலராக இருந்த நபர் செய்த மோசமான செயல் ..7 வருடங்களாக பாலியல் குற்றம் ..!!போலீசாரால் கைது ..!!

கன்னடா தேவாலயத்தில் தன்னார்வலராக இருந்தவர் பாலியல் ரீதியாக குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொரன்ரோவில் உள்ள மிசன்  கிரொஸ்டியனா வோஸ் டி தேவாலயத்தில் 62 வயதான ஜோஸ் போர்டிலோ தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார். அவர் தேவலாயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான இரண்டு சிறுவர்களிடம் பாலியல் ரீதியான குற்றம் செய்து உள்ளார். இவர் கடந்த 2013 ஜூலையில் இருந்து 2020 ஆகஸ்ட் வரை இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது […]

Categories
உலக செய்திகள்

போர் விமானம் புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்து..3 விமானிகள் பரிதாபமாக உயிரிழப்பு ..!!நடந்தது என்ன ?

ரஷ்யாவில் போர் விமானத்தை புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்தால்  3 விமானிகள் இறந்துள்ளனர். மேற்கு ரஷ்யாவிலுள்ள கழுகாவிலே போர் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் விபத்து ஏற்பட்டு 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான உடனே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. Tu -22M3 போர் விமானம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது விமானத்திலிருந்து வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதால் விமானத்திலிருந்த விமானிகள் தங்களின் இருக்கை உடனே […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனா தொற்றின் 3 வது அலை பரவ வாய்ப்பு ..!!

பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் கொரோனா தொற்றின் மூன்று அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐரோப்பா ஒன்றியம் பிரிட்டனுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பிரிட்டன் கொரோனாவால் மேலும் பாதிக்கப்படும் என்றும்  தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா ஆணையத்தின்  தலைவர் வோன் டெர் லேன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

2.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட ட்வீட் ..நன்கொடையாக வழங்கிய ட்விட்டர் நிறுவனர் ..!!

ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய்வின்  முதல் டீவீட்டை மலேசியாவை சேர்ந்த ஒருவர் 2.9 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய்  முதன்முதலில் ‘just setting up my twttr ‘ என்று ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நன்கொடை வழங்குவதற்காக விற்கப்பட்டுள்ளது. ஜாக் டோர்செய் 15 மில்லியன் டாலர் ஏழை குடும்பங்களுக்காக நன்கொடையாக வழங்கினார். அதில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்த ஐரோப்பிய ஆணையம் ..எச்சரிக்கை செய்த ஜெர்மனி ..!!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு  தடை விதித்த  ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை ஜெர்மன் உறுப்பினர் எச்சரிக்கை செய்துள்ளார். அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான வோன் டெர் லேன் தடை விதிப்பதாக கூறியுள்ளார். இதனைக் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜெர்மன் உறுப்பினர் அன்ன காவஸ்ஸினி  தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தடை எவ்வாறு விதிக்கலாம் என்று  கூறியுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை பார்த்தால் நியாயமற்ற விநியோகத்தில் நம்மிடம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்காக  தடுப்பூசிக்கு ஏற்றுமதி […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் விமானத்தில் ஏறும்போது தடுமாற்றம் …கண்டுகொள்ளாத அமெரிக்க ஊடகங்களை திட்டிய டிரம்ப் ..!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் விமானத்தில் ஏறும் போது படிக்கட்டில் தடுமாறி விழுந்ததை கண்டு கொள்ளாத அமெரிக்க ஊடகங்களை  முன்னாள் அதிபர டிரம்ப் திட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அட்லான்டா செல்வதற்காக விமானத்தின்  படிக்கட்டில் ஏறும்போது மூன்று முறை தடுமாறி மூன்றாவது முறையில் விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இதனைப் பற்றி செய்திகள் வெளியிடும் போது அமெரிக்க ஊடகங்கள் மட்டும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை குறித்து முன்னாள் அதிபரான டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

திருமண விழாக்கள் நடத்த புதிய விதிமுறைகள் ..பிரிட்டன் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு ..!!

திருமண நிகழ்விற்காக விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை பிரிட்டன் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் திருமணங்கள் மற்றும் மற்ற விழாக்களை நிகழ்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற விழாக்களில் ஆறு பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அதனால் மார்ச் 29 முதல் திருமண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் ஆறு பேர் அல்லது இரண்டு வீடுகள் வரை பங்கேற்றுக் கொள்ளலாம். மேலும் ஏப்ரல் 12 முதல் கொரோனா  தொற்று குறைந்த பகுதியில் 15 பேர் வரை திருமண […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பழைய பழக்கத்திற்கு சென்ற மக்கள்..ஜெர்மனியில் அன்பிற்குரியவர்களுக்கு தபால் அட்டைகள் மூலம் வாழ்த்து பரிமாற்றம்..!

ஜெர்மனியில் மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுடன்  தகவலை  பரிமாறிக்கொள்ள தபால் அட்டைகளை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு காலத்தில் மொபைல் போன்கள் வருவதற்கு முன்பு எந்த ஒரு தகவலை பரிமாறி கொள்ள வேண்டும் என்றாலும் தபால் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும்  அன்பிற்குரியவர்களுக்கு வாழ்த்துக்கள் போன்றவற்றை அனுப்புவார்கள் . இந்நிலையில்  தற்போது கொரோனாவால்  ஊரடங்கு மேற்கொண்டதால் ஜெர்மனியில் மீண்டும் இந்த பழக்கத்தை கொண்டு வந்துள்ளார்கள். கடந்த டிசம்பரை விட இந்த டிசம்பரில் 11% மக்கள் தபால் அட்டைகளை பயன்படுத்துவதாக […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் விபத்தில் பலியான இளைஞன்…. இலங்கையில் இரங்கல்… நெகிழ்ச்சியடைந்த இளைஞனின் தந்தை ..!!

கனடாவில் விபத்தில் இறந்த இளைஞனுக்காக இலங்கையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதால் இளைஞனின் தந்தை நெகிழ்ச்சி அடைந்துள்ளார். கனடாவில் 19 வயதான நீல் லிஙக்ளைடேர் என்ற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாலை விபத்தில் இறந்துள்ளான். ஏற்கனவே அந்த நெடுஞ்சாலை மிகவும் குறுகியது அதனால் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்படுவதால் பலர் புகார் அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே  அப்பகுதியில் மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளது. அதில் ஒருவர்தான் ஹாக்கி வீரரான நீல் லிஙக்ளைடேர். அவரின் தந்தையான டேவிட் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ரயிலில் ஆயுதத்துடன் ஏறிய போலீசார் …பீதியில் மக்கள் ..!! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் .!!

சுவிட்சர்லாந்தில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் ஏறியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் சூரிச்சில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் திடீரென்று நுழைந்ததை  கண்ட பயணிகள் சிலர் பயந்து அலரி கைகளை தூக்கியபடி இருந்துள்ளனர். போலீசார் ரயிலில் ஏறி சுமார் 10 நிமிடங்கள் சோதனையை மேற்கொண்டதாக பயணிகளில் சிலர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் இருப்பதாக வெளியான  தகவலை அடுத்து ரயிலில் சோதனை செய்ததாக […]

Categories
உலக செய்திகள்

சனா மீது தாக்குதல் நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப்படை…காரணம் என்ன? வெளியான வீடியோ காட்சிகள் ..!!

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் நாட்டின் தலைநகரமான சனா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் ஹவுத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சனாவில் நடத்தப்பட்ட வான்வழி  தாக்குதலில் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிமனை மற்றும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. video of the destruction of Houthi ammunition depot/warehouse pic.twitter.com/IlckJP4jmu — Al33MK Khan – 🇵🇰 (@Al33mK) March 21, […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் …கலவரத்தில் 13 போலீஸ் உட்பட 33 பேர் காயம் ..!!

தாய்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல் தாய்லாந்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து தலைநகரமான பாங்காங்கில் உள்ள அரண்மனைக்கு வெளியே கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ‘பிரதமர் பதவி விலக வேண்டும்’ ‘மன்னராட்சி சீரமைக்க வேண்டும்’ என்றெல்லாம் கோரிக்கைகளை வைத்து இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேப்பர் ராக்கெட்களை  அரண்மனைக்குள் வீச  திட்டமிட்டுள்ளதாக கூறினர் . இதனால் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

உலகின் ராணுவ வலிமையில் முதல் இடத்தில் சீனா ..இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா ?

உலகின் ராணுவ வலிமையில் இந்தியா 4-வது இடத்திலும் பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிலிட்டரி டைரக்ட் இணையதளம் ராணுவத்திற்கான  படைக்கலன்கள், கருவிகள், நிதிஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சீனாவும் ,இரண்டாம் இடத்தில் அமெரிக்கா, மூன்றாம் இடத்தில் ரஷ்யா, நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது.மேலும்  ஐந்தாவது இடத்தில் பிரான்சும், ஒன்பதாவது இடத்தில் பிரிட்டனும் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று […]

Categories
உலக செய்திகள்

நாசாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஸ்பேஸ்எக்ஸ்…காரணம் என்ன ?

விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எலான் மஸ்க்கின்  தனியார் விண்வெளி நிறுவனம். எலான் மஸ்க்கின்  தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜூர்சிக் இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘வானிலை நிலவரங்கள் ,லொகேஷன், தகவல் தொடர்புகள் போன்ற பல செயற்கைக்கோளை நம்பி தான் மக்கள் உள்ளனர்’ . விண்வெளியில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த வேண்டும்.அதற்கு தகவல் தொடர்புகளை  அதிகரிப்பது , தகவலை […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவியை கடத்த முயன்ற இளைஞன் தப்பியோட்டம் ..தீவிரமாக தேடி வரும் போலீஸ் ..!!மாணவியின் நிலை என்ன ?

கனடாவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவின் ரொறன்ரோவில் உள்ள எட்டோகிகொக் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த 8 வயது மாணவியை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் தோளில் தூக்கி கொண்டு  கடத்த முயன்றுள்ளான். அதனைக் கண்ட மற்ற மாணவிகள் சத்தம் போட்டதால் பயந்துபோய்  உடனே மாணவியை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான் . தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து… ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க குடிமக்கள்… தகவலை வெளியிட்ட ரஷ்யா தூதர்..!!

ரஷ்ய அதிபரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஜோ பைடனுக்காக அமெரிக்க குடிமக்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக ரஷ்ய தூதர் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஏபிசி நியூஸ் நேர்காணலில் அமெரிக்க அதிபரான ஜோ பைடனிடம்’ ரஷ்ய ஜனாதிபதி புடின் கொலையாளி என்பதை நம்புகிறீர்களா’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஆம் அதை நான் ஏற்கிறேன் ‘என்று கூறியுள்ளார்.மேலும்  2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்காக நிச்சயம் பதிலடி பெரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிடம் அடிபணிந்த மலேசியா…. உங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம்…. வடகொரியா அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடி பணிந்து வடகொரியாவை எதிர்த்து செய்த செயலுக்கு மலேசியாவின் தூதரகத்தை முற்றிலும் துண்டிக்க போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் அணு ஆயுத விவகாரத்தில் இருந்து எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமெரிக்க தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

5 இல்ல 16 கொலை…. நாடு முழுவதும் தேடப்பட்ட குற்றவாளி…. வாக்குமூலத்தில் அதிர்ந்த காவல்துறை…!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் 5 கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தாம் 16 கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியை சேர்ந்த 47 வயதான சீன் மைக்கேல் லானன் என்பவர் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் நாடு முழுவதும் தேடப்பட்டு கடந்த 8 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரித்ததில் அவர் இதுவரை 16 கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தனது பாதுகாப்பில் இருந்த சீறாரின் மீது பாலியல் தாக்குதல் ..53 வயது நபர் போலீசாரால் கைது ..!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது பாதுகாப்பிலிருந்த சீறார் மீது பாலியல் ரீதியான தவறு செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹர்ட்சன் கவுண்டியை சேர்ந்த 53 வயதான பிரான்சிஸ்கோ எஸ்பினல்  என்பவர் தனது பராமரிப்பில் இருக்கும் 15 வயது சீறாரிடம் பலமுறை பாலியல் ரீதியான தவறு செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரான்சிஸ்கோவை  நேற்று போலீசார் கைது செய்தது.மேலும் வரும் 24ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.

Categories
உலக செய்திகள்

முடிவை மாற்றி கொண்ட ஜெர்மன் அதிபர் …. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்த தயார் ..!!

ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்துவதில் தயாராக இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது முடிவே மாற்றியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் ,’அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன் ‘என்று கூறியுள்ளார். கடந்த மாதம் தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கவில்லை என்று தகவல் வெளியாகும் போது மெர்க்கல்,தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்துவதால் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு..போலீசார் விசாரித்ததில் முக்கிய திருப்பம் .!!

சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு ஒன்று போலீசாரால்  விசாரிக்கப்பட்டு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் பெர்ன் மண்டலத்தில் கண்டெர்தல் பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் இரண்டு நபரை 63 வயது தக்க நபர் தள்ளிவிட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. கடந்த 2019 நவம்பர் 5 ஆம் தேதி இளைஞன் ஒருவனை நபர் ஒருவர் அழைத்து சென்று பள்ளத்தாக்கில் தள்ளி விட்டுள்ளார்.பிறகு அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பியதாக அதிகாலை வந்த வாகன ஓட்டுநரிடம் இளைஞன் […]

Categories
உலக செய்திகள்

11 வயதில் காதல்…. அவர் வேறு ஒருவரை விரும்புகிறாள்…. 23 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்….!!

ரஷ்யாவை சேர்ந்த 11 வயது சிறுவன் தான் விரும்பிய பெண் வேறொருவரை காதலித்ததால் 23 வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். ரஷ்யாவை சேர்ந்த 11 வயதான மசார் என்ற  சிறுவன் தான் விரும்பிய பெண் வேறு ஒரு சிறுவனை காதலிப்பதை தெரிந்து தன் பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். அதனால் 23 வது மாடியிலிருந்து கீழே குதிக்க முயற்சிக்கும் போது கீழே டிரக் ஒன்று இருந்ததால் அந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு வழங்க திட்டம் ..!எத்தனை டோஸ்கள் தெரியுமா ?

மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளில்  4 மில்லியன் டோஸ்களை வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு கனடா மற்றும் மெக்ஸிகோ அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்கா ஃபைசர்,ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது இருந்தாலும் அஸ்ட்ராஜெனேகா  தடுப்பூசிகளை அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று 3 வது அலை பயத்தால் பிரான்சில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் ..!!வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதா ?வெளியான தகவல் .!!

பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜென் கஸ்டெக்ஸ் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பயம் குறித்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 35,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால்  தலைநகர் பாரிஸ் உட்பட 16 பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்ட்ரோஜனகா தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் பணி ஆரம்பிக்கப் போவதாகவும் தடுப்பூசி குறித்து எந்த […]

Categories
உலக செய்திகள்

மெக்ஸிகோவில் நடந்த கொடூர சம்பவம் ..!!13 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ர பயங்கரவாதிகள் ..!!வைரலாகும் புகைப்படம் .!!

துப்பாக்கியுடன் மெக்சிகோ சிட்டிக்கு வெளியே இருந்த பயங்கரவாதிகள் 13 மெக்சிகன் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்ஸிகோ தலைநகரத்தில் 13 மெக்சிகன் போலீசாரை  துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கொடூரமாக  சுட்டுக் கொன்றுள்ளனர். அவற்றின்  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்தத் தாக்குதலில்  கொல்லப்பட்ட 8 அதிகாரிகள் மாநில காவல்துறையினர். மேலும் 5 பேர் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். இதனை குறித்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ரோட்ரிகோ மார்ட்டினெஸ் செலிஸ் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மீண்டும் பயன்படுத்த ஒப்புதல் ..!தடுப்பூசி குறித்து வெளியான தகவல் .!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மீண்டும் செலுத்தி கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்  வியாழக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கு இரத்தம் உறைதல்  போன்ற அபாயம் இருப்பதால் பல முன்னணி ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. இதனால் ஐரோப்பிய மருத்துவ கட்டுப்பாட்டாளரான ஐரோப்பியன் மெடிக்கல் ஏஜென்சி தடுப்பூசியை  குறித்து விசாரணை மேற்கொண்டது. விசாரணை மேற்கொண்டதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ‘பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது’ என்று தகவல் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடக்கமா ?பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்..!!

 பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து தடுப்பூசிகளை பற்றி விளக்கம் அளித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவல்லா தெரிவித்தார் .இதனால் தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து பிரிட்டனில்  முடங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதனை குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரிப்பு ..!!பீதியில் மக்கள் .!!

பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை பிரிட்டனில் ஒரே மாதத்தில் 80 சதவீதம் சரிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .பிரிட்டனில் உள்ள மற்ற ஒன்பது பகுதிகளில் தொற்று அளவு மாறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 141 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,758 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று எண்ணிக்கை நான்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ஜானதிபதியை கொலைகாரன் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி ..அதற்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ..!!!காரணம் என்ன ?

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன்  ரஷ்ய ஜனாதிபதி புடினை  கொலைகாரன் என்று கூறியதற்கு புடின் பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏபிசி நியூஸ் நேர்காணலில் அவரிடம்’ ரஷ்ய ஜனாதிபதி ஒரு கொலைகாரன் ‘என்பதை நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு ‘அதை நான் ஏற்கிறேன் ‘என்று பதிலளித்துள்ளார். மேலும் அவர் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்கு பதிலடி கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா அதனை மறுத்து வருகின்றது. இதனை குறித்து […]

Categories

Tech |