Categories
உலக செய்திகள்

“அளவை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்”….. சிறுவனின் பிறப்புறுப்பில் சிக்கிய…. யுஎஸ்பி கேபிள்….!!

இங்கிலாந்து நாட்டில் லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த  பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது தனது பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கின்றது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து  அளந்து பார்த்துள்ளான். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆண்குறிக்குள் யுஎஸ்பி கேபிள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தம் வரத் தொடங்கியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கின்றார். அப்பொழுது […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு எவரும் ஆணை பிறப்பிக்க முடியாது… அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்…!!!

இஸ்ரேல் பிரதமர், தங்களின் துப்பாக்கிசூடு கொள்கைக்கு, எவரும் ஆணையிட முடியாது  கூறியிருக்கிறார்.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த மே மாதத்தில் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினர் ஜெனின் நகரத்தில் இருக்கும் முகாமில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இஸ்ரேல் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இது பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக ஷெரின் அபு அக்லே என்ற பெண் பத்திரிகையாளர் சென்றிருக்கிறார். அப்போது, இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை பந்தாடிய…. “ஹின்னம்னோர்” புயல்…. 2 பேர் பலி….!!

தென் கொரியாவை பந்தாடிய ‘ஹின்னம்னோர்’ புயலால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா நாட்டை ‘ஹின்னம்னோர்’ புயல் நேற்று முன்தினம் பலமாக தாக்கியது. இந்த புயல் அதிகாலை 4.50 மணிக்கு உல்சான் நகரம் அருகே கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் தென் பகுதிகளில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. 3 அடி அளவுக்கு பலத்த மழை பெய்தது. இது  போன்று பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

சுதந்திர தின நூற்றாண்டிற்குள்… இந்திய பொருளாதாரம் இத்தனை லட்சம் கோடியாக மாறுமா?…

இந்தியாவின் சுதந்திர தின நூற்றாண்டிற்குள் அந்நாட்டின் பொருளாதாரமானது, 2400 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியான பியூஸ் கோயல், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடிய போது தெரிவித்ததாவது, இந்திய நாட்டின் சரக்குகள், சேவைக்கான ஏற்றுமதியானது, 675 பில்லியன் டாலர்கள் வரை இருந்தது. வரும் 2030-ம் வருடத்திற்குள், […]

Categories
உலக செய்திகள்

நான் உங்களுக்கு முழு ஆதரவளிப்பேன்…. அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் லீஸ் டிரஸ் பேச்சு வார்த்தை…. வெளியான தகவல்….!!!!

இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்  அமெரிக்கா மற்றும் உக்ரைன்  அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் அமெரிக்கா மற்றும் உக்ரைன்  அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

திறப்பு விழாவிலேயே உடைந்து விழுந்த பாலம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

காங்கோ நாட்டில் ஆற்று பாலம் ஒன்றின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கோ நாட்டில் மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக புதிய ஆற்றுப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை திறக்கும் விழா நடைபெற்ற போதே அந்த பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. Bridge collapses while being commissioned in […]

Categories
உலக செய்திகள்

அட டேய் சூப்பர்!!…. உள்துறை மந்திரி பதவியை கைப்பற்றிய இந்திய வம்சாவளி பெண்…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!!

இங்கிலாந்தின் உள்துறை மந்திரி பதவியை இந்தியா வம்சாவளி பெண்  கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து  நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ்  டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில் லிஸ்  டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல்   தன்னுடைய உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாட்டின் உள்துறை மந்திரியாக சூலா  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் […]

Categories
உலக செய்திகள்

இனி இலங்கையில் அதிகாரம் யாருக்கு?…. அதிபரின் அதிகாரங்கள் குறைப்பு…. சுப்ரீம் கோர்ட் உத்தரவு….!!!!

அதிபருக்கான  அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவை உருவாக்கியுள்ளனர். இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அதிபராக சிறிசேனா இருந்தார். அப்போது அரசியல் சட்டத்தில் 19ஏ என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்தினால் அதிபரை விட நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர்  அதிபராக வந்த கோத்தபய ராஜபக்சே வந்தார். அப்போது அவர் இந்த திருத்தத்தை மாற்றி 20 ஏ என்ற திருத்தத்தை கொண்டு வந்தார். அதில்  அதிபருக்கே  கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு அனுமதி இல்லை…. உக்ரைனுக்கு சென்ற 25 ஹாலிவுட் பிரபலங்கள்…. நிரந்தர தடை விதித்த ரஷ்யா….!!!!

உக்ரேனுக்கு சென்ற 25 பிரபலங்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் உள்ளிட்ட 25 பிரபலங்கள் கடந்த சில நாட்களாக உக்ரைன்  அதிபரை சந்தித்து வருகின்றனர். இதனால் அந்த 25 பிரபலங்களும்  ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பல நாடுகளில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த வேன்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!!!

சட்ட விரோதமாக வேனில் அகதிகளை ஏற்றி வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள  ஏ2 நெடுஞ்சாலையில் இத்தாலி பதிவு எண் கொண்ட பார்சல் வேன் ஒன்று  வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வேனை  நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சோதனையில் வேனில் சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளை சேர்ந்த 23 அகதிகளை   அழைத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வேனில் இருந்த 23 அகதிகளையும்  மீட்டனர். […]

Categories
உலக செய்திகள்

அதிக எரிவாயு பயன்படுத்தினால் சிறையா?… அதிரடி திட்டம்… எந்த நாட்டில் தெரியுமா?…

சுவிட்சர்லாந்து அரசு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அதிகமாக எரிவாயு பயன்படுத்தும் மக்களுக்கு சிறை தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுக்க எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குளிர்காலத்தை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எரிவாயு குறித்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை அளிக்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, எரிவாயு மூலமாக […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் மின்சார சிக்கனம்…. முன்னோடியாக திகழும் நகரங்கள்…!!!

பிரான்ஸ் நாட்டில் சில நகர்கள் மின்சாரத்தை சேமிக்க தாங்களாகவே முன்வந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் பல நாகர்கள், மின்சாரத்தை சேமிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றது. Lyon நகரில் மின் விளக்கு திருவிழா மிகவும் பிரபலமானது. இந்நிலையில் அந்நகரத்தை சேர்ந்த அதிகாரிகள் அங்குள்ள கட்டிடங்களில் மின்சாரத்தை சேமிக்க சில வழிமுறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, அங்குள்ள கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் தேவாலயங்களில் இருக்கும் அலங்கார விளக்குகளை […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இன்றி விற்ற நிறுவனத்திற்கு…. இவ்வளவு கோடி அபராதம்?…. அதிரடி நடவடிக்கை….!!!!

பிரேசில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இன்றி விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூபாய்.19.17 கோடி அபராதத்தை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. பிரேஸ் நாட்டில் பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஐபோனின் 12 மாடல் சார்ஜர் இன்றி விற்பனை செய்தது குறித்து நடந்த விசாரணையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையற்ற தயாரிப்பின் விற்பனை, நுகர்வோருக்கு எதிரான பாகுபாடு, 3ஆம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றுதல் போன்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

வட கொரியாவிடமிருந்து…. ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ரஷ்யா…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு உளவுத் துறை….!!

வட கொரியாவிடமிருந்து மில்லியன் கணக்கான ராக்கெட் மற்றும் பீரங்கி வெடிகுண்டுகளை வாங்கி குவிக்கும் பணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கையில் போதிய தாக்குதல் உபகரணங்களை ராணுவ வீரர்களுக்கு வழங்க முடியாமல் ரஷ்யா திணறி வருகின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நாடான வட கொரியாவிடமிருந்து ரஷ்யா ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்குவது தொடர்பான நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு வழங்குகின்றோம்…. ஒரே ஒரு நிபந்தனை…. பிரபல நாடுகளுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்….!!

எரிவாயு வழங்களை ரஷ்யா மொத்தமாக முடக்கியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிபந்தனையுடன் உதவ முன்வந்துள்ளது உக்ரைன். ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை பராமரிப்பு காரணங்களை குறிப்பிட்டு மொத்தமாக நிறுத்தியுள்ளது ரஷ்யா. இதனால் ஜேர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் எரிவாயு சேமிப்பில் களமிறங்கியதுடன், அக்டோபர் மாதத்திற்கான இலக்கையும் எட்டியுள்ளனர். எனினும் பல ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு கட்டணம் மற்றும் எரிசக்தி கட்டணம் பல மடங்கு எகிறும் என்ற தகவல் பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஜேர்மனியில் பொதுமக்களுக்கான […]

Categories
உலக செய்திகள்

நான் புதிய பிரதமருக்கு ஆதரவாக இருப்பேன்….. நாட்டு மக்களிடம் இறுதி உரையாற்றிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்….!!!!

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இறுதி உரையை  மக்களிடம் நிகழ்த்தியுள்ளார். பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் லிஸ்  டிரஸ்  புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் போரிஸ்  ஜான்சன் டவுனிங்  தெருவில் வைத்து தனது இறுதி உரையை நிகழ்த்தியுள்ளார். அப்போது போரிஸ் ஜான்சன் கூறியதாவது. புதிய பிரதமர் லிஸ்  டிரஸ்க்கு எனது வாழ்த்துக்கள். இந்நிலையில் நான் நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில்  பிரெக்சிட், தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

இந்தோ -பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம்….. கோரிக்கைகளை முன்வைத்த மந்திரி….!!!!!

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் பொருளாதார  திட்டங்களுக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சி மாநாடு மற்றும் இந்தோ -பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர் மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் உள்ள 6 இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இது குறித்த அவர் பேசியதாவது. இந்தியா […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. தேர்தலில் தோல்வியடைந்த ரிஷி…. கொந்தளித்து இருக்கும் நாட்டு மக்கள்….!!!!

இதுதான் பிரதமர் தேர்தலில் ரிஷி தோல்வி அடைந்ததற்கான காரணங்களாக கூறப்படுகிறது. பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னேறி சென்ற ரிஷி பாதி வழியில்  பின் வாங்கினார். போட்டியில் தாமதமாக இணைந்த லிஸ்  டிரஸ் வேகமாக முன்னேறி பிரித்தானியாவின் பிரதமர் பதவியை கைப்பற்றினார். ரிஷி திடீரென பின்னடைவை சந்தித்ததற்கான காரணங்கள் பின்வருமாறு. போரிஸ் ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் பலி… வெளியான அறிக்கை…!!!

உக்ரைனில், ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை ரஷ்யப்படையை சேர்ந்த 50,150 வீரர்கள்  உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில், இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டை சேர்ந்த அப்பாவி பொது மக்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆயுதப்படையினர் வெளியிட்ட தகவலின் படி, […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் நாட்டில் போராட்டம் நடத்தும் ரஷ்ய மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?…

ஜெர்மன் அரசு, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதை அந்நாட்டில் வாழும் ரஷ்ய மக்கள் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டில் வசித்தாலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த தொலைக்காட்சிகள் தெரிவிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, அந்நாட்டின் அரசாங்கம் கூறுவதை மட்டுமே நம்பக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அதன்படி, ஜெர்மன் நாட்டில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த 2000 மக்கள் ஒன்று கூடி உக்ரைன் நாட்டிற்கு தெரிவிக்கும் ஆதரவை நிறுத்துமாறும், ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்படும் தடைகளை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நேற்று […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. குண்டு வெடித்து”35 பேர் பலி”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!!

குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 37 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒகாடவ்கோ நகரில் பொதுமக்களை ஏற்றி  கொண்டு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென அந்த வண்டியில் இருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு […]

Categories
உலக செய்திகள்

திடீரென துப்பாக்கிச்சூடு…. முன்னாள் மேயர் உள்பட 4 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோவில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  மெக்சிகோ நாட்டில் மோரேலோஸ் என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள யேகாபிக்ஸ்ட்லா நகரில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நகரின் முன்னாள் மேயர் ரெபுஜியோ அமரோ லூனா உள்பட ஏராளமானோர் கால்பந்து போட்டியை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு…. இங்கிலாந்தின் புதிய பிரதமர் உதவுவார்…. நம்பிக்கை தெரிவித்த அதிபர் ஜெலென்ஸ்கி….!!

உக்ரைன் நாட்டின் உறுதியான  நட்பு நாடாக இங்கிலாந்து இருந்து வருகின்றது. உக்ரைன் நாட்டின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்திருந்து வருகின்றது. உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள், நிதி மற்றும் பயிற்சி போன்ற உதவிகளை இங்கிலாந்து வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு இதுவரை 3 முறை நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 46 பேர் பலி…. 50 பேர் படுகாயம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு லுடிங்  நகரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டர் ஆப் – பில்…. எதிர்பார்க்கும் பட்டன்…. முதலில் யாருக்கு கிடைக்கும்….?

டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது டுவீட்டரில் பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு இருந்தால் எடிட் செய்ய முடியாது. இந்த வசதியை விரைவில் கொண்டு வருமாறு பயனாளர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் கட்டண சந்தாதாரர்களுக்கு எடிட் பட்டன் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

தமிழகத்தில் இருக்கும் ஈழ தமிழர்களை அழைக்க முடிவு… சிறப்பு குழு அமைத்த இலங்கை அரசு…!!!

இலங்கை அரசு, இந்திய நாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்ற தங்கள் மக்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 1983 ஆம் வருடத்தில் ராணுவத்தினர் மற்றும் விடுதலை புலிகளுக்கு இடையே பெரும் போர் மூண்டது. அப்போதிலிருந்து, அந்நாட்டு தமிழ் மக்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அதன்படி, தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அதில் 68 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

புதிய பிரதமராக பதவியேற்கும் லீஸ் டிரஸ்…. ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பிரித்தி படேல்….. வெளியான தகவல்….!!!!!

லிஸ்  டிரஸ் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த இரண்டாம் தேதியுடன் முடிந்தது . இந்நிலையில் நேற்று தேர்தல் வாக்குகள் எனப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தது போல் லிஸ் டிரஸ்  தேர்வாணர். இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக லிஸ்  டிரஸ் அறிவிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக… பயங்கவாதியின் உடலை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான்…. என்ன காரணமாக இருக்கும்?…..!!!!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள கோட்லியை அடுத்த சப்ஸ் கோட் கிராமத்தில் வசித்து வந்தவர் தபாரக் ஹுசைன் (32). சென்ற ஆகஸ்ட் 21ம் தேதி இந்திய-பாகிஸ்தான் எல்லையின் வழியாக ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினரால் சுடப்பட்டதில் அவரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாா். ரஜௌரி மாவட்டத்திலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது அவரை உயிருடன் வைத்திருப்பதற்காக ராணுவ வீரா்கள் அவருக்கு 3 யூனிட் […]

Categories
உலக செய்திகள்

இனி உங்கள் போனில் கொரோனாவை கண்டறியலாம்… அசத்திய விஞ்ஞானிகள்…!!!

கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய செல்போன் செயலியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் செல்போன் செயலியில் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் குரல் பதிவை வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விடும். அதாவது தகுந்த நபரினுடைய புகைப்பிடிப்பு நிலை, மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு அதன் பிறகு சுவாசத்தின் போது வெளியாகும் ஒலிகளை பதிவிடும். அந்த வகையில் மூன்று தடவை இருமுவது, ஐந்து தடவை […]

Categories
உலக செய்திகள்

21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் “பிரதமர் பதவியை கை பற்றிய லிஸ் டிரஸ் ” …. வெளியான தகவல்…..!!!!!

நடந்து முடிந்த பிரதமர் தேர்தலில் லீஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நடைபெற்று வந்த  வாக்குப்பதிவு கடந்த 2-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் தபால் மற்றும் இணைய வழிகள் மூலமாக வாக்களித்து வந்தனர். பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தது போல ரிஷி […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கடலில் விமானம் நொறுங்கி விழுந்து “4 பேர் பலி”….. தேடுதல் பணி தீவிரம்…..!!!!

கடலில் விமானம் விழுந்து  4  பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட்  தனியார் விமானம் ஒன்று நேற்று 4  பேருடன் ஜெர்மனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் திசை திரும்பி சென்றது. இந்நிலையில் விமானம் திசை திருப்ப பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. உடனடியாக விமானியை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டி”…. திடீரென நடந்த கத்திக்குத்து தாக்குதல்….. வலை வீசி தேடும் போலீசார்….!!!!

கத்திக்குத்து சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை அந்நாட்டு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கனடா நாட்டில் சஸ்கட்சாவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று தொடர்ச்சியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஜினா நகரில் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருவதால் இந்த தாக்குதல் நடைபெறுகிறதா? […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்… கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த பத்திரிக்கையாளர்…!!!

அமெரிக்க நாட்டில் புலனாய்வு பிரிவினுடைய மூத்த பத்திரிக்கையாளர் தன் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ்ட் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த ஜெப் ஜெர்மன் என்ற புலனாய்வு பத்திரிகையாளர் அவரின் குடியிருப்பில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்திருக்கிறார். அவரின், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், அதனை பார்த்து, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இவருக்கும், வேறு ஒரு […]

Categories
உலக செய்திகள்

புதிய பிரதமர் யார்?…. எதிர்பார்ப்புடன் இருக்கும் இங்கிலாந்து மக்கள்…. !!!!!

இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பிரதமர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில்  இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி  மந்திரி ரிஷி சுனக்கும், தற்போது வெளியுறவு மந்திரி லீஸ் டிரஸ்சுக்கும்  போட்டியிடுகின்றனர். இதனால் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் 1.60 லட்சம்  கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள்   கடந்த வெள்ளிக்கிழமை வரை தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்குகள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. உணவிற்காக பரிதவித்த குழந்தையை கடத்தி… கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பல்…!!!

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் உணவிற்காக பரிதவித்து வந்த சிறுமியை கடத்தி ஒரு கும்பல் அறைக்குள் பூட்டி வைத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால் பல மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி சிந்த் மாகாணத்தில் உணவிற்காக அலைந்து கொண்டிருந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்… 6 பேர் உயிரிழப்பு… ரிக்டரில் 5.3-ஆக பதிவு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலடுக்கத்தில் ஆறு நபர்கள் பலியானதாகவும் ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குனார், நங்கர்ஹார், லக்மன் ஆகிய மாகாணங்கள் மற்றும் காபூல் நகரில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் பதற்றமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஆறு நபர்கள் பலியானதாகவும், ஒன்பது நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 5.3 என்ற அளவில் […]

Categories
உலக செய்திகள்

நீச்சல் குளத்திற்குள் தலைகீழாக செல்லும் பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

நீச்சல் குளத்திற்குள் அழகி ஒருவர் தலைகீழாக நடந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீச்சலில் நான்கு தடவை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ்டினா மகுஷென்கோ என்ற அழகி அதிக உயரம் கொண்ட ஹை ஹீல்ஸ் செருப்புடன் நீச்சல் குளத்தில் தலைகீழாக நடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார். https://www.instagram.com/reel/CgR9S4vIDuZ/?utm_source=ig_embed&ig_rid=33621582-6a17-4335-9506-40d500f2f976 அந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர், சுமார் 360 டிகிரி சுழன்று கொண்டு நடந்த அந்த வீடியோ இணையத்தளத்தில் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

உடற்பயிற்சி கூடத்தில் தலைகீழாக தொங்கிய பெண்…. ஸ்மார்ட் வாட்ச்சால் காப்பாற்றப்பட்ட சம்பவம்…!!!

அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் தலைகீழாக மாட்டிக் கொண்ட பெண், தன் ஸ்மார்ட் வாட்ச் ஆல் தப்பித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஒஹியோ என்னும் மாகாணத்தில் இருக்கும் பெரீயாவில் அமைந்திருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் கிறிஸ்டைன் பால்ட்ஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியவாறு உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் இறங்க முடியாமல் போனது. 'This is so embarrassing' — A woman went viral after getting stuck upside […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 6.8-ஆக ரிக்டரில் பதிவு…!!!

சீனாவில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் சிச்சுவான் என்னும் நகரில் இன்று திடீரென்று பயங்கர நிலடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பதறிய மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தார்கள். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. மேலும் இந்த நிலநடுக்கமானது 6.8 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு பல வழிகளில் 400 கோடி டாலர்கள் வழங்கிய இந்தியா… ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

இந்திய அரசு ஏறக்குறைய 400 கோடி டாலர்கள் மதிப்புடைய நிதி உதவிகளை இலங்கைக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், பல பிரச்சனைகள் உண்டானது. எனவே, இந்தியா உட்பட பல நாடுகள் அந்நாட்டிற்கு நிதி உதவிகளை வழங்கி வந்தது. அதன்படி சமீப மாதங்களில் சுமார் 400 கோடி டாலர் மதிப்பில் உணவு பொருட்களையும் நிதி உதவியையும் இந்தியா, அந்நாட்டிற்கு அளித்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவினுடைய நிரந்தர பிரதிநிதியாக இருக்கும் ருசிரா கம்போஜ் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்… முகாம்களில் தங்கவைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியை சேர்ந்த 47 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது. எனவே, பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இதில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிந்த் மாகாணத்தின் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் படி, வெள்ளம் உருவான பிறகு லட்சக்கணக்கான மக்களுக்கு பல விதமான […]

Categories
உலக செய்திகள்

தாய்க்கு அனுப்புவதற்கு பதில்… ஊதியத்தை வேறொருவருக்கு மாற்றி அனுப்பிய பெண்… கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!!

மலேசியாவை சேர்ந்த ஒரு இளம் பெண் தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாய் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு பதிலாக வேறொருவருக்கு மாற்றி அனுப்பியிருக்கிறார். மலேசியாவை சேர்ந்த பஹதா பிஸ்தாரி என்னும் இளம் பெண், தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாயின் வங்கி கணக்கிற்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு, தன் தாயிடம் பணம் அனுப்பப்பட்ட ரசீதை பார்க்குமாறு கூறியிருக்கிறார். அவரின் தாயார் பணம் வந்து சேரவில்லை என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் கடுமையாக உயர்ந்த பண வீக்கம்… 50 வருடங்களில் இல்லாத வகையில் அதிகரிப்பு…!!!

ஜெர்மன் நாட்டில் கடந்த 50 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கியவுடன், சர்வதேச நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்யா கச்சா எண்ணெயின் விலையை அதிகரித்தது. இதனால், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்தது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

சபாநாயகருக்கோ 75….. பிரதமருக்கு 70….. அதிபருக்கு 73…. எங்களுக்கு மட்டும் 60…. இலங்கை அரசை கலாய்க்கும் மக்கள்….!!!!

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. அதன் பிறகு சாக்லேட் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற 300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச நிதிய […]

Categories
உலக செய்திகள்

ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா….. தக்க பதிலடி கொடுக்க காத்திருக்கும் சீனா…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…..!!!!

தைவானுக்கு போர்  ஆயுதங்களை விற்க பிரபல நாடு  முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான  நான்சி பெலோசி கடந்த மாதம் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனாலும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்தல் தொடர்ந்து தைவானுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன்  […]

Categories
உலக செய்திகள்

“தலை விரித்தாடும் இனவெறி” கண்டுகொள்ளாத இங்கிலாந்து அரசு…. டி.யு.சி. ஆய்வு….!!!!!

பணி செய்யும் இடங்களில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் குறித்து டி.யு.சி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழிலாளர்கள் டி.யு.சி அமைப்பு  பொதுமக்கள் பணி செய்யும் இடங்களில் அவர்களை  கேலி செய்வது, தோற்றத்தை விமர்சிப்பது, கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்றவை குறித்து ஆய்வு ஒன்று செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 41 சதவீத கருப்பின மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் 5  ஆண்டுகளில் பணி செய்யும் இடங்களில் இனவெறி பாகு பாட்டை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“மீண்டும் தலை தூக்கும் கொரோனா”…. 24 மணி நேரத்தில் உயிரிழந்த 92 பேர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 ஆயிரத்தி 953  ஆக இருந்தது.  இந்நிலையில் 2-வது நாளாக  நேற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் […]

Categories
உலக செய்திகள்

புதிதாக பரவும் லெஜியோனேயர்ஸ்   நோய்…. 4 பேர் உயிரிழந்த பரிதாபம்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

லெஜியோனேயர்ஸ்  நோய் தொற்றால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அர்ஜென்டினா நாட்டின்  வட மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கல் 4 பேர்    லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த  லெஜியோனேயர்ஸ்  நோய் என்பது பாக்டீரியாவால் உருவாகும் ஒரு நிமோனியா நோயாகும். இது முதல் முதலில் 1976-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் நடைபெற்ற  படைவீரர் குழுவின் கூட்டத்தில் தோன்றியது. […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டின் நலனுக்காக மட்டுமே இந்தியா செயல்படும்…. நடைபெற்ற ரஷ்யா-இந்தியா நட்புறவு நிகழ்ச்சி…. தகவல் அளித்த ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி….!!!!

ரஷ்யா-இந்தியா நல்லுறவை பாராட்டும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ரஷியாவில் உள்ள தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் வைத்து ரஷியா-இந்தியா நல்லுறவு தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஷி ய வெளியுறவுத்துறை மந்திரி செர்லி லவ்ரோ பங்கேற்றார். இந்நிலையில் அவரிடம் ரஷியா-இந்தியா இடையே உள்ள உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செர்லி லவ்ரோ  கூறியதாவது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் ரஷ்யா-இந்தியா நட்பிற்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் ரஷிய கச்சா எண்ணெய்  கொள்முதல் செய்யும் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையின் பெயர் “பகோரா”…. எதற்காக வச்சாங்கன்னு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தைக்கு பிரபல இந்திய உணவின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. கேப்டன்டேபிள் அயர்லாந்திலுள்ள நியூடவுன்பேயில் இருக்கும் ஒரு பிரபலமான உணவகம் ஆகும். அண்மையில் உணவகம் சமூக ஊடகங்களில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துகொண்டது. அதாவது தங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர் தற்போது தங்கள் உணவகத்திலுள்ள ஒரு உணவின் பெயரை பிறந்த குழந்தைக்குப் பெயராக வைத்துள்ளனர் என அவர்கள் பேஸ்புக்கில் அறிவித்தனர். அது ஒரு இந்திய உணவின் பெயர் பகோரா ஆகும். மழைக் காலங்களில் […]

Categories

Tech |