Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிகாரபூர்வ பதவியேற்பு விழா…. கோபமடைந்தாரா சார்லஸ்?…. வைரலாகும் வீடியோ…!!!

பிரிட்டன் நாட்டின் மன்னராக அறிவிக்கப்படும் அதிகாரபூர்வமான நிகழ்வில் மேசையை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் அரசர் சார்லஸ் சமிக்ஞை காட்டி பேசியதை, கோபமாக பேசியதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். பிரிட்டன் நாட்டை 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில் சார்லஸ், மன்னராக பொறுப்பேற்ற […]

Categories
உலக செய்திகள்

ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்ட மகாராணி உடல்… பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடலை ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு கொண்டு சென்ற போது வழி எங்கிலும் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். பிரிட்டன் மகாராணியார், அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் உலக மக்களாலும் நேசிக்கப்பட்டவர். கடந்த எட்டாம் தேதி அன்று, பால்மோரல் கோட்டையில் அவரின் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மகாராணியாரின் உடல் ஓக் மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, மகாராணியார் அதிகம் விரும்பும் பால்மோரல் கோட்டையிலிருந்து கருப்பு நிற வாகனத்தில் அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார், […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்….. இன்னும் 63 ஆண்டுகளுக்கு யாரும் படிக்க முடியாது…. ஏன்? மர்மம் என்ன….!!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1952-ஆம் ஆண்டு முதல் ராணியாக இருந்தவர் கடந்த வியாழக்கிழமை உடல்நல குறைவால் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியாவிற்க்கு ரகசிய கடிதம் ஒன்றை கடந்த 1986-ஆம் ஆண்டு நவம்பரில் எழுதியுள்ளார். அதில் சிட்னி நகர மக்களின் முகவரியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். இருப்பினும் இந்த கடிதம் சிட்னி நகரிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டுக்கு சட்டவிரோத படகு பயணம்…. 85 பேரை கைது செய்த…. பிரபல நாட்டு கடற்படை….!!

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை  அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த ரணவிக்ரமா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோத வகையில் சிலரை ஏற்றி கொண்டு பட்டிகலோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த கடற்படை அதிகாரிகள் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த படகில் 85 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 60 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

பப்புவா நியூ கினியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு…!!!

பப்புவா நியூ கினியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் மாட்டி, தற்போது வரை ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் இருக்கும் லே என்ற மிகப்பெரும் துறைமுக நகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.7 என்ற அளவில் ரிக்டரில் பதிவாகியிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் மறைவை கொண்டாடிய பெண் மீது தாக்குதல்…. வெளியான வீடியோ….!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை கொண்டாடிய பெண் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் கடந்த 8-ஆம் தேதி அன்று மரணமடைந்தார். நாட்டு மக்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் சுமார் 10 தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், ஸ்காட்லாந்து நாட்டில், ஈஸ்டர் ரோஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலின் உரிமையாளரான ஜகி பிக்கெட் என்ற பெண், மகாராணியாரின் மறைவை மதுபாட்டிலுடன் […]

Categories
உலக செய்திகள்

“735 அடி உயரத்தில் பிரம்மாண்ட நிலா கட்டிடம்”‌‌ துபாயில் வரப்போகும் சர்ப்ரைஸ்….. ஆச்சரியத்தில் உலக நாடுகள்…..!!!!

சந்திரன் போன்ற பிரம்மாண்ட சொகுசு விடுதியை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டுவது அசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் துபாயில் சந்திரன் போன்ற பெரிய சொகுசு விடுதி ஒன்றினை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை கனடா மூன் வேர்ல்டு ரிசார்ட் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. அதன்பிறகு சந்திரன் போன்ற கட்டிடத்தை 735 அடி உயரத்தில் உலகமே […]

Categories
உலக செய்திகள்

தரைமட்டமாகிய இரட்டை கோபுரத்தின்…. 21ஆம் ஆண்டு நினைவு தினம்….!!!!

இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினமானது நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டில் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. முன்னதாக நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 19 பேர் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி காலை பயங்கரவாதிகள் கடத்திக்கொண்டு சென்ற விமானங்களில் இரண்டை நியூயார்க் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…. மக்கள் அச்சம்….!!

ஆப்கானில் அடுத்தடுத்து இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் டஷ்ட்-இ-பர்ஷி என்ற பகுதி உள்ளது. இங்கு மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இரு பைக்குகளில் நிரப்பப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியுள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பகுதியிலிருந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில்…. முன்னேறி வரும் இராணுவ படைகள்…. தகவல் வெளியிட்ட உக்ரைன் அரசு….!!

கிழக்கு உக்ரைனில் உக்ரைன் இராணுவ படைகள் மின்னல் வேகத்தில் முன்னேறி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிடியில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைன் படைகள் இறங்கியுள்ளன. கிழக்கு உக்ரைனில், உக்ரைன் படைகள் மின்னல் வேகத்தில் முன்னேறி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ சமூக ஊடகங்களில் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியதாவது, “கிழக்கு உக்ரைனில், உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றன. இதன்மூலம், […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட அமெரிக்க புவி அறிவியியல் ஆய்வு மையம்…..!!

பப்புவா நியூ கினியாவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக கருதப்படும் லே நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவி அறிவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமி பசியால் பலி…. பிரபல நாட்டில் வெடித்த போராட்டம்….!!

சிந்த் மாகாணத்தின் சுக்கூர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது பாகிஸ்தான்  நாட்டில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிந்த் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள சுக்கூர் நகரில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளனர். இதில் ஒரு பகுதியினர் பத்னி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

எதிர்தாக்குதலை துல்லியமாக நடத்திய உக்ரைன்…. கோட்டை விட்டதை திரும்ப பிடித்தது ரஷ்யா….!!

கார்கிவ் நகரத்தில் 2 இடங்களில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க, கடந்த வாரம் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் தொடங்கியது. உக்ரைன் நாட்டின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கார்கிவ் நகரத்தில் 2 இடங்களில் உள்ள தங்கள் இராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய செய்திதொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் அடைக்கப்பட்ட ஜபோரிஜ்ஜியா அணு உலை… வெளியான அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்னும் உலையில் மீண்டும் மின் கட்டமைப்பை சேர்த்து இயங்க தொடங்கிய நிலையில் தனியாக செயல்பட்ட ஒரு உலை அடைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்ற உலையில் கடந்த வாரத்தில் நடந்த போர் தாக்குதல் காரணமாக மின் இணைப்புகள் மொத்தமாக துண்டிக்கப்பட்டன. ஆறு உலைகள் இருக்கும் அதன் இயக்கம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அந்த நகரத்தின் மற்ற இடங்களுக்கு மின் விநியோகம் செய்வதில் இடையூறு உண்டானது. இதன் காரணமாக, மீதமிருந்த ஒரு அணு […]

Categories
உலக செய்திகள்

இப்போ எதற்கு மந்திரி சபை விரிவாக்கம்?… எதிர்கட்சியினரின் எதிர்ப்பால் அதிபருக்கு சிக்கல்…!!!

இலங்கையில் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதிபருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததால் மக்கள் கொந்தளித்தனர். எனவே போராட்டம் தீவிரமடைந்தது. அதன் பிறகு அதிபர் ரணில்  விக்ரமசிங்கே நிதி நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளையும் சேர்த்து அமைச்சரவை உருவாகும் என்று அறிவிப்பு வெளியிட்டார். தற்போது மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இணை […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த… மகாராணியரின் உடல் எடின்பர்க் கொண்டு செல்லப்படுகிறது…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடல் பால்மோரல், மாளிகையிலிருந்து ஸ்காட்லாந்தில்  இருக்கும் எடின்பர்க்கிற்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியின் இறுதிச்சடங்கானது வரும் 19ஆம் தேதி அன்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்ர் வளாகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக ராஜ குடும்பத்தினர் மகாராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் […]

Categories
உலக செய்திகள்

கோவாவில் பறிக்கப்பட்ட பூர்விக சொத்துக்கள்…. புகாரளித்த இங்கிலாந்து உள்துறை அமைச்சரின் தந்தை…!!!

இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சரான சூவெல்லா பிரேவா்மனின் தந்தை கோவாவில் இருக்கும் தன் சொத்துக்கள் பறிக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தற்போது புதிதாக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் லிஸ் ட்ரஸ், சூவெல்லா பிரேவா்மன் என்ற இந்திய வம்சாவளியினரை உள்துறை அமைச்சராக நியமனம் செய்தார். இந்நிலையில், அவரின் தந்தை காவல்துறையினிடம் தெரிவித்த புகாரில், கோவாவில் இருக்கும் தன் பூர்வீகமான சொத்துக்கள் பறிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் காவல்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!… துபாயில் நிலா தோற்றத்தில்… அழகான பிரம்மாண்ட சொகுசு விடுதி…!!!

துபாயில் நிலவின் தோற்றத்தில் மிக பிரம்மாண்டமான சொகுசு விடுதி அமைக்கப்பட இருக்கிறது. வான் அளவிற்கு மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு பெயர் போன நகரமான துபாய், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறது. அதன்படி, தற்போது அங்கு நிலவின் வடிவமைப்பை போன்று மிகவும் பிரம்மாண்டமாக ஒரு சொகுசு விடுதி அமைக்கப்படவிருக்கிறது. கனடா நாட்டின் மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் என்னும் நிறுவனமானது, இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளை செய்ய இருக்கிறது. சந்திரனின் மேற்பரப்பு போல வடிவம் கொண்ட பிரம்மாண்டமாக […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் பயிற்சியில் விபத்து… தலீபான்கள் மூவர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சி நடந்த சமயத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு தலீபான்கள் மூவர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் தலீபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். அதன் பிறகு அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களையும் ஹெலிகாப்டர்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். மேலும், அவர்களுக்கென்று தனியாக பாதுகாப்பு படைகளும் அமைத்துக் கொண்டனர். அந்த பாதுகாப்பு படையில் அமெரிக்க நாட்டின் ராணுவ ஆயுதங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிளாக் வாக் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரிய நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து… கார் மீது மோதிய பேருந்து… 15 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் கார் ஒன்றின் மீது பேருந்து மோதி தீ விபத்து ஏற்பட்டதில் 15 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள ஓயோ மாகாணத்தில் இபரபா என்னும் நகரத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து எதிரில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தும் காரும் தீ பற்றி எரிந்தது. தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்ததால், கார் […]

Categories
உலக செய்திகள்

திமிங்கலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான படகு… 5 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

நியூசிலாந்தில் படகு ஒன்று திமிங்கிலத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி ஐந்து நபர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்தில் உள்ள கோஸ் பே என்னும் பகுதியில் இருக்கும் கடலில் சிறிய வகை படகு ஒன்றில் நேற்று 11 நபர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பறவை ஆர்வலர்கள். அப்போது அந்த படகின் மீது திடீரென்று ஒரு பெரிய திமிங்கலம் வந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இது பற்றி கடலோர […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… பேருந்தில் மோதிய டேங்கர் லாரி… கோர விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…!!!

மெக்சிகோ நாட்டில் பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதி தீ விபத்து உண்டானதில் 18 நபர்கள் பலியாகியுள்ளனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் ஹிடால்கோ நகரத்திலிருந்து ஒரு பேருந்து மான்டேரியை நோக்கி சென்றது. அந்த சமயத்தில், நெடுஞ்சாலையில் எரிபொருள் எடுத்து சென்ற டேங்கர் லாரி அந்த பேருந்தின் மீது மோதியதில், தீ பற்றி எரிந்தது. டேங்கர் லாரியும், பேருந்தும் மொத்தமாக  எரிந்து கருகி நாசமானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர், அங்கு தீயை கட்டுப்படுத்தும் பணியை […]

Categories
உலக செய்திகள்

வந்தே பாரத் திட்டத்தில்…. 70 லட்சம் இந்திய மக்களை மீட்டுள்ளோம்… ஜெய் சங்கர் பேச்சு…!!!

மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரியான ஜெய்சங்கர், வந்தே பாரத் திட்டப்படி உலகில் மொத்தமாக 70 லட்சம் மக்களை இந்தியாவிற்கு வரவழைத்திருப்பதாக கூறியிருக்கிறார். மத்திய வெளிவகார மந்திரியான ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் ரியாத் நகரத்தை சேர்ந்த இந்திய சமூக மக்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலக நாடுகளிலிருந்து மொத்தமாக சுமார் 70 லட்சம் மக்களை, வந்தே பாரத் திட்டப்படி இந்திய நாட்டிற்கு வரவைத்திருக்கிறோம். இவ்வாறு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வில்லியம் தான் வேல்ஸின் இளவரசர்… அறிவிப்பு வெளியிட்ட மன்னர் சார்லஸ்…!!!

பிரிட்டனில் மகாராணியாரின் மறைவை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ், தன் மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்தரினை  இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் தன் 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் மகனான இளவரசர் சார்லஸ் நேற்று மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர்  தன் உரையில், இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்ரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது நேரத்தில் வில்லியம் மற்றும் கேத்தரின் […]

Categories
உலக செய்திகள்

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த…. எலிசபெத் ராணி மறைவு…. தொடர்ந்து 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு….!!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நேபாள அரசு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன்  நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக காலமானார். தனது 25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில் உலக தலைவர்கள் பலர் மகாராணி இறப்பிற்கு இரங்கல் தெர்வித்து வருகின்றனர். இந்நிலையில் நேபாள அரசானது இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் […]

Categories
உலக செய்திகள்

“இது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நான் அறிவேன்”…. மகாராணி எலிசபெத் மறைவு குறித்து…. புதிய ராஜா 3-ஆம் சார்லஸ்….!!

இங்கிலாந்து நாட்டின் மகாராணி  இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்துள்ளர். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய […]

Categories
உலக செய்திகள்

மனித வளர்ச்சி குறியீட்டில்…. 161-வது இடத்திற்கு தள்ளப்பட்ட…. பிரபல நாடு….!!

ஐ.நா. அமைப்பின் வளர்ச்சி திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமீபத்திய மனித வளர்ச்சி தரவரிசை பட்டியலில் 192 நாடுகளில் பாகிஸ்தான் நாடு, 7 இடங்கள் பின்தங்கி 161-வது இடத்திற்கு சென்றுள்ளது என தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 189 நாடுகளில் பாகிஸ்தான் நாடு 154-வது இடத்தில் இருந்தது. சமீபத்திய அறிக்கையின்படி, அந்நாட்டில் வாழும் நபர்களின் ஆயுட்காலம் சராசரியாக 66.1 ஆண்டுகள் என்றும் குழந்தைகளை அவர்களது 8 வயதில் பள்ளிக்கு சேர்க்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்க அறிவியல் மையம்…..!!

அமெரிக்க கண்டத்தின் பசிபிக் தீவுக்கு உட்பட்ட பகுதியில் தன்னாட்சி குடியரசாக உள்ள பலாவ் நாட்டில் மெலிகியோக் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  தென்கிழக்கே 1,165 கி.மீ. தொலைவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 5.01 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. நடுக்கடலில் படகு கவிழ்ந்து…. 14 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் மராஜோ தீவில் பாரா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து  பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்று கொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பிலும் பாலியல் வன்கொடுமைகள்… வெட்கி தலைகுனிந்த ஐ.நா தூதர்…!!!

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், பெண்களுக்கு எதிராக நடக்கும்  பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில் தர முடியாமல், அந்நாட்டின் ஐ.நா தூதர் தடுமாறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால், கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு கும்பல் வெள்ள நிவாரணம் அளிப்பதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாஷிங்டனில் பாகிஸ்தான் நாட்டிற்கான ஐ.நா தூதராக இருக்கும் மசூத் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். […]

Categories
உலக செய்திகள்

சிறையில் அடைத்தால்… ஆபத்து நிறைந்தவனாக மாறுவேன்… எச்சரித்த இம்ரான் கான்..!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தீவிரவாத வழக்கில் என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று நடந்த போராட்டத்தில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது. எனவே, அவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அவர் இம்மாதம் 12ஆம் தேதி வரை ஜாமீனில் இருக்கிறார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கே திரும்பி போ… இந்திய வம்சாவளி பெண் எம்.பிக்கு மிரட்டல்…!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.க்கு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு செல்லுமாறு மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆளும் கட்சியினுடைய எம்.பி யாக இருக்கும் 56 வயதிலேயே பிரமிளா ஜெயபால் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு தொலைபேசியில் வெறுப்பூட்டத்தக்க வகையில் மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அதில் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது. Typically, political figures don't show their vulnerability. I chose to do so here because […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் மகாராணியின் மறைவை தொடர்ந்து… நாட்டின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்பு….!!!

பிரிட்டன் நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து அவரது மகனான சார்லஸ் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மகனான சார்லஸ் தன் 73 வயதில் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மகாராணி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு சார்லஸ் சென்றுள்ளார். அதன் பிறகு, மகாராணியின் மறைவிற்கு பின், மன்னராக பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பி இருக்கிறார். புதிதாக மன்னராக பதவி ஏற்கும் சார்லஸிற்கு, அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

11 முறை திருமணம்…. 28 முறை நிச்சயதார்த்தம்…. குறை கூறி வாய்பிளக்க வைத்த பெண்….!!

பெண்ணொருவருக்கு இதுவரை 11 முறை திருமணம் நடைபெற்றுள்ளதோடு, 28 முறை நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் Utah என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் Monette Dias என்ற பெண். இவருடைய வயது 53 ஆகும்.  இவர் இதுவரையில் 11 முறை திருமணம் செய்துள்ளார், இதோடு 28 முறை Monette-க்கு திருமண நிச்சயதார்த்தமும் ஆகியுள்ளது. அவர் தனது முதல் காதலனை தொடக்க பள்ளியில் சந்தித்தார். Monette-னுக்கு 15 வயதான போது அவரின் […]

Categories
உலக செய்திகள்

வீதியில் சென்றவர்களை கத்தியால் குத்திய இளைஞர்…. துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவல்துறையினர்…!!!

ஜெர்மன் நாட்டில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய 30 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் உள்ள அன்ஸ்பெக் என்னும் பகுதியில் ஒரு இளைஞர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை திடீரென்று கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் இருவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதனைக் கண்ட மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். எனினும், அந்த நபர் கத்தியுடன் அவர்களை நோக்கி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சோதனைக்கு வந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியரின் இறுதி அஞ்சலியில் அதிசயம்… வானத்தில் இரட்டை வானவில்…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த சமயத்தில், வானில் அதிசயமாக இரண்டு வானவில்கள் தோன்றியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். உலக தலைவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிகப்படியான மக்கள் அரண்மனை முன்பு கூடினார்கள். மழை கொட்டி தீர்த்த போதும், மக்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தியை பலப்படுத்தும் நோக்கத்தை கைவிட மாட்டோம்…. -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்…!!!

வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு சக்தியை பலப்படுத்தும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியிருக்கிறார். வடகொரியா அரசு போர் அச்சுறுத்தல்களில் தங்களை காக்க தானாகவே அணு ஆயுதங்களை உபயோகிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் வடகொரிய அதிபர் தெரிவித்ததாவது, அணுசக்திக்கான நிலையை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அணு சக்தியை பலப்படுத்தப்படும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் அரசு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார் சார்லஸ்…. ராணியாகிறார் அவரின் மனைவி கமிலா..!!!

பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இளவரசர் சார்லஸின் மனைவி கமிலா நாட்டின் ராணியாகியிருக்கிறார். பிரிட்டனில் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நல பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவரின் மகனான இளவரசர்  சார்லஸ் மன்னராகவும் அவரின் மனைவி கமிலா ராணியாகவும் அறிவிக்கப்படவிருக்கிறார்கள்.  எனினும் கமிலா இளவரசி என்று தான் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் இதற்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

பிற நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில்…. இந்திய வம்சாவளியினர் பாலமாக இருக்கிறார்கள்… -பியூஸ் கோயல்…!!!

மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுடன் உறவை பலப்படுத்திக் கொள்வதில் பாலமாக இருப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டிற்கு சுற்று பயணமாக சென்றிருக்கும் மத்திய அமைச்சரான பியூஸ் கோயல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களுடன் உரையாடினார். அதில் அவர் கூறியதாவது, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள் தொழில்துறை சார்ந்த வகையில் புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்திய பாரம்பரியத்தையும், […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு இறுதி மரியாதை… பால்மோரல் கோட்டையின் வெளியில் குவிந்த மக்கள்…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பால் மோரல் கோட்டையின் வெளியில் நாட்டு மக்கள் மலர் வளையங்கள் வைத்து இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், தன் 96 வயதில் நேற்று, உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கடந்த இரு தினங்களாக அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இதற்கிடையில் பால் மோரல் இல்லத்தில் நேற்று அவர் உயிரிழந்தார். உலக தலைவர்கள், அவரின் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் சேதமடைந்த பருத்தி… இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய கோரிக்கை….!!!

பாகிஸ்தான் நாட்டின் வர்த்தக அமைப்பு, பருத்தி இறக்குமதிக்காக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் 1200க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இயற்கை பேரிடரில் மாட்டிக் கொண்ட அந்நாட்டிற்கு பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் பருத்தி உற்பத்தியாளர்கள் இழப்பை சந்தித்தார்கள். உற்பத்தியில் 25% பருத்தி அழிந்து போனது. மேலும், நாட்டின் ஜவுளி தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் வர்த்தக […]

Categories
உலக செய்திகள்

நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்…. வரும் 23 ஆம் தேதி ஏவப்படும்…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.  சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்கா திட்டமிடப்பட்டுள்ளது. 2025- ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக விண்கலன் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பரிசோதிக்கும் முயற்சிகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் துவங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.  பொம்மைகளுடன் ஓரியன் விண்கலத்தை எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் விண்கலம் புறப்பட […]

Categories
உலக செய்திகள்

வங்கதேச பிரதமர் கலைஞர்களுடன் உற்சாக நடனம்…. வைரலாகும் வீடியோ…!!!

வங்கதேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனா, ராஜஸ்தான் மாநில விமான நிலையத்தில் தனக்கு வரவேற்பு அளித்த கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடியிருக்கிறார். இந்திய நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுபயணமாக வந்திருக்கும், வங்கதேச பிரதமரை, கடந்த செவ்வாய் கிழமை அன்று அதிபர் மாளிகையில் சிறப்பாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் ராஜ்காட்டில் இருக்கும் காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். #WATCH | Rajasthan: Upon her arrival at Jaipur airport earlier today, Bangladesh PM Sheikh Hasina […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் அதிசயம்… ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகள்… ஆனால் தந்தைகள் வேறு…!!!

பிரேசிலில் 19 வயதுடைய இளம் பெண்ணிற்கு ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் இருக்கும் அதிசய நிகழ்வு நடந்திருக்கிறது. பிரேசில் வசிக்கும் 19 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. எனினும் குழந்தைகள் வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்தவர்கள் என்ற அதிசயத்தை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனை  Heteropaternal Superfecundation என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிடாய் சுழற்சியில் வெளியாகும் இரண்டாம் கரு முட்டை வெவ்வேறு நபர்களின் விந்தணுக்களால் தனித்தனியான உறவில் கருத்தரிக்கும் போது உண்டாகும் என்று […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடமும் போர் நீடிக்கும்… மீண்டும் தலைநகரை குறிவைப்பார்கள்… எச்சரிக்கும் உக்ரைன் தலைமை தளபதி…!!!

உக்ரைன் நாட்டின் தலைமை தளபதி, அடுத்த ஆண்டும் போர் நீடிக்கும் என்றும் தலைநகரை  மீண்டும் குறி வைப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், தொடர்ந்து ஏழாவது மாதமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படையினர் தவறிவிட்டனர். மேலும், உக்ரைன் படையினர் பலமாக எதிர் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்ய படையினரால் அவர்களது இலக்குகளை அடைய முடியவில்லை. https://twitter.com/TpyxaNews/status/1567796997951815681 இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கான தலைமை தளபதியாக இருக்கும், Valerii […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக… இறைச்சி விளம்பரங்களுக்கு தடை விதித்த நகரம்…!!!

நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் என்னும் டச்சு நகர், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இறைச்சிக்காக பொதுவெளிகளில் விளம்பரம் செய்யப்படுவதற்கு தடை அறிவித்திருக்கிறது. உலகிலேயே இறைச்சி விளம்பரம் செய்வதற்கு தடை விதித்த முதல் நகரமாக ஹார்லெம் மாறவிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதன்படி, 1,60,000 பேர் வாழும் அந்த நகரில் வரும் 2024 ஆம் வருடத்திலிருந்து திரையரங்குகள், பேருந்துகள் […]

Categories
உலக செய்திகள்

லிஸ் ட்ரஸ் தலைமையில் அமைந்த மந்திரி சபை…. ரிஷி சுனக் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடம் இல்லை…!!!

இங்கிலாந்து நாட்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் ரிஷி சுனக்கிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியினரால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், லிஸ் ட்ரஸ் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய பிரதமரான அவர் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஆசீர்வாதம் பெற்றார். அதன் பிறகு, அவர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கனமழை…. நிலச்சரிவில் சிக்கி…. 15 பேர் பலி….!!

உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.  கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உகாண்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கசேஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து காங்கோ நாட்டில் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில்  கேசஸ் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுவனின் செயலுக்கு…. சான்றிதழ் வழங்கிய தேசிய நெருக்கடி கால சேவை…. பிரபல நாட்டை ஆழ்த்திய சம்பவம்….!!

வலிப்பு நோயால் கீழே விழுந்த தனது தாயை ஆம்புலன்சை அழைத்து சிறுவன்  காப்பாற்றிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மாண்டி காக்கர் என்ற 4 வயதுடைய சிறுவன்  வலிப்பு நோயால் கீழே விழுந்து பாதிப்புக்குள்ளான தனது தாயை ஆம்புலன்சை அழைத்து காப்பாற்றியுள்ளான். இந்த சம்பவம் அங்கு அவனுக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. இந்த சம்பவத்தன்று மாண்டி காக்கரின் தாய் வலிப்பு நோயால் கீழே விழுந்து விட்டார். இதை கண்ட சிறுவன் உடனடியாக தேசிய நெருக்கடி […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடி சிறந்த நபர்…. பாராட்டு தெரிவித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்….!!

இந்திய பிரதமர் மோடி சிறந்த நபர் என்றும் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடி சிறந்த நபர் என்றும் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது, ” பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கின்றது. நான் அமெரிக்க அதிபராக இருந்த போது இந்தியாவுடன் நல்லுறவைப் […]

Categories

Tech |