Categories
உலக செய்திகள்

குடிமக்களுக்கும் கட்டயாமான… விதிமுறையை … அறிவித்துள்ள நாடு…!!

பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.   பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வெளி நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிரிட்டன் குடிமக்களாகவே இருந்தாலும் பிற நாடுகளை விட்டு வெளியேறுவதற்கு  72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் என்ற முடிவு வந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது முதன் முதலாக இங்கிலாந்தில் அடுத்த வார துவக்கத்திலிருந்து நடைமுறைப்படுத்தவுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்கேட்லாந்திலும் […]

Categories
உலக செய்திகள்

அரசியல்வாதிகள் செய்த சதி தான் கொரோனா…. நீதிமன்றத்தில் வாதாடிய நபருக்கு… நேர்ந்துள்ள நிலை…!!

நபர் ஒருவர் நீதிமன்றத்தில் கொரோனா தொற்று என்பது அரசியல்வாதிகளால் செய்யப்பட்டுள்ள சதி என்று வாதிட்டுள்ளார்.  சூரிச்சை சேர்ந்த Naim Rashiti என்ற நபர் நீதிமன்றத்தில் இந்த கொரோனா தொற்று என்பது வியாபாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளால் இணைந்து திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சதி என்றும் வாதாடியுள்ளார். மேலும் முகக்கவசம் அணிவதால் சுவாச பற்றாக்குறை ஏற்படும் என்றும் முகக்கவசம் ஒருவர் மேல் ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர்களை நோயாளியாக்கும் என்று நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். ஆனால் சூரிச் […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக் செயலி மீண்டும் பயன்படுத்தலாம்…. நீதிமன்றம் அதிரடி…. குஷியில் அமெரிக்க மக்கள்…!!

அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் தடை விதிப்பிற்கு பெடரல் நீதிமன்றம் மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவின் தயாரிப்புகள் அனைத்திற்கும் அமெரிக்க அரசு தடை விதித்தது. எனவே சீனாவை சேர்ந்த டிக் டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… மருத்துவ ஊழியர் என்று வீட்டில் நுழைந்த நபரால்… நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் …!!

மர்ம நபர் ஒருவர் வயதான பெண்மணியிடம் போலியான தடுப்பு மருந்தை செலுத்தி பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 92 வயதான பெண்மணி ஒருவரின் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் “நான் NHS ஊழியர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை  செலுத்துவதற்காக வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டின் கதவை திறந்த மூதாட்டி அந்த நபரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இதனையடுத்து ஊசியை செலுத்தி அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர வன்முறைக்கு…. பின்னால் இருப்பது ட்ரம்ப் – அமெரிக்க தலைவர்கள் விமர்சனம்…!!

அமெரிக்காவில் நடந்த வன்முறைக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று அமெரிக்க தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். வட அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சித் தலைவர் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி சென்ற அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

காதல் தம்பதிகளை… விருந்துக்கு அழைத்து துன்புறுத்திய … கொடூர சம்பவம்…!!

தம்பதிகள் இருவர் காதல் திருமணம் செய்துகொண்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துருக்கியிலுள்ள கமான் என்ற மாவட்டத்தில் இருக்கும் பேயரமோசு என்ற கிராமத்தை சேர்ந்த பெண் Vilton Ince (24). இப்பெண்ணின் குடும்பத்தினர் இவரிடம் உறவினர் ஒருவரை கட்டாயத் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதில் விருப்பம் இல்லாமல் இருந்த Vilton காதலர் Osman celik என்பவருடன் மாயமாகியுள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தம்பதிகள் தங்களின் சொந்த கிராமத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

தோழியின் கணவர் மீது… காதல் கொண்ட இளம்பெண்… ஒரே வீட்டிலா…??

பெண் ஒருவர் தன் தோழியின் கணவர் மீது காதல் கொண்டு ஒரே வீட்டில் வசித்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளம் பெண்ணான Piddu Kaur (31). இவர் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக Piddu கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதன்பின்பு சில நாட்கள் கழித்து தன் பள்ளிக்கால தோழர்களான Speetie Sing மற்றும் அவரது […]

Categories
உலக செய்திகள்

இவ்வாறு செய்யாவிட்டால்… கட்டுப்பாடுகள் தொடரும்… ஜெர்மன் அதிபரின் உதவியாளர் எச்சரிக்கை…!!

ஜெர்மனி அதிபரின் உதவியாளர் கொரோனா ஊரடங்கை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.  ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கலின் உதவியாளரான Helge Braun, நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிட்டால் ஜெர்மனி நீண்டகாலமாக ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இப்போது ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக  தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் அதிக காலத்திற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை போல ஜெர்மனியும் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த போராடி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இது தான் அமெரிக்காவின் ஜனநாயகம்…!!

அமெரிக்காவின் ஜனநாயகம் வெவ்வேறாக இருக்கிறது என்று இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் ஆதரவாளர்களால்… நேர்ந்த கலவரம்… ஈரான் அதிபர் கண்டனம்…!!

ட்ரம்ப் அமெரிக்காவை அழிவு பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் என்று ஈரான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.  அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த ஜோ பைடனை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது. அப்போது திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இதனை தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர்புகை […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பனிப்பொழிவால்… தத்தளித்து வரும்… ஸ்பெயின் மக்கள்…!!

ஸ்பெயினில் வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.  ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு கடுமையாக ஏற்பட்டுள்ளது. மேலும் குளிர்ந்த காற்றும் பலமாக வீசி வருகிறது. இதனால் வடகிழக்கு ஸ்பெயினின் லீடாவில் இருக்கும் எஸ்தானி- ஜெண்டாவில் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் மைனஸ் 32 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்துள்ளது. மேலும் இது கடந்த 1956 ஆம் வருடத்தில் பதிவாகியிருந்த மிகக் குறைந்த வெப்ப நிலையைவிட 2 டிகிரி குறைவு என்று அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

போலியான தடுப்பு மருந்துகள்… மக்களே உஷார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரான்சில் போலியான கொரோனா தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரித்துள்ளனர்.  உலகையே துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரனோ வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில்  கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் என்று கூறி போலியான மருந்துகளால் மக்களை […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி மாற்றத்திற்கு ஓகே …. ஆனால் மீண்டும் வருவேன் – ட்ரம்ப்…!!

அதிகார மாற்றத்திற்கு ஒத்துப்போவதாகவும், மீண்டும் வருவோம் என்றும் ட்ரம்ப்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

6 பிள்ளைகளையும் மருத்துவத்துறைக்கு… அர்பணித்துள்ள தந்தைக்கு… நேர்ந்துள்ள துயரம்…!!

நபர் ஒருவர் தன் 6 பிள்ளைகளும் மருத்துவத்துறைக்கு அர்பணித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.   இந்தியாவை சேர்ந்த Ashan-ul-haq Choudry (81). இவர் கடந்த 1950 களில் இந்தியா-பாகிஸ்தான் வன்முறையில் தப்பி தன் 19 வயதில் பிரிட்டனுக்கு வந்துள்ளார். தற்போது  அவரின் மகள் பணிபுரியும் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அவருக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு வாழ்வளித்த பிரிட்டனுக்காக Choudry தன் 6 பிள்ளைகளையும் […]

Categories
உலக செய்திகள்

உமிழ்நீரின் மூலம்… கொரோனா பரிசோதனை… அறிமுகம் செய்துள்ள நாடு…!!

சூரிச் விமான நிலையத்தில் உமிழ்நீரிலிருந்து கொரோனா பரிசோதனை செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் உமிழ்நீரின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. அதாவது சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு முன்புபோல் மூக்கிலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படாது. இதற்கு பதிலாக பயணிகளின் உமிழ்நீரிலிருந்து பரிசோதனை செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் பிசிஆர் சோதனை முடிவுகள் வருவதற்கு சுமார் 24 மணி நேரங்கள் ஆகும். இந்நிலையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

27 வயதான இளம் நடிகருக்கு… திடீரென… நேர்ந்துள்ள துயரம்…!!

இளம்நடிகர் ஒருவர் தீடிரென்று உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவைச் சேர்ந்த இளம் நடிகர் Taraan Kootanhayo (27). இவர் கனடாவில் உள்ள Cold Lake என்ற நகரில் பிறந்துள்ளார். இதனையடுத்து வான்கூவர் என்ற இடத்தில் உள்ள நடிப்பு பள்ளி ஒன்றில் நடிப்பு கற்றுள்ளார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். மேலும் ஒரு பிரபல துணி நிறுவனத்தின் மாடலாக நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென Taraan உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் இறப்பிற்கான காரணம் என்ன? […]

Categories
உலக செய்திகள்

நீச்சல் உடையில் புகைப்படம்…. வெளியிட்ட இளம்பெண்… முன்னாள் காதலன் வெறிச்செயல்…!!

இளம்பெண் ஒருவர் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டதால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரேசிலில் வசிக்கும் இளம்பெண் Bienca Lorenco (24) இவர் தன் முன்னாள் காதலனை வெறுப்பேற்றும் விதமாக நீச்சலுடையை அணிந்திருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் புகைபடங்களின் கீழ் “நான் நீயாக இருந்திருந்தால் என்னையே நான் கண்டிப்பாக வெறுத்திருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படம் வெளியானதையடுத்து  Bienca திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர விசாரணையில் Bienca வின் உடல் […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர்… திடீரென பெண்ணாக மாறிய… அதிர்ச்சி தகவல்…!!

பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தீடிரென தான் பெண்ணாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.  இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்வப்னிஸ் ஷிண்டே என்பவர் பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு $6,00,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னிஸ் திடீரென்று தனக்கு பாலியல் மாற்றம் ஏற்பட்டு பெண்ணாக மாறியுள்ளதாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் பெயரை சாயிசா என்றும் மாற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து பெண்ணாக மாறி அழகிய தோற்றத்தில் இருக்கும் தன் புகைப்படங்களை […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பிற்கு ஆதரவாளராக… வந்த பெண் சுட்டு கொல்லப்பட்ட… அதிர்ச்சி சம்பவம்…!!

ட்ரம்பின் ஆதரவாளரான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவிலுள்ள நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர், அப்போது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்  தோல்வியுற்றார். எனினும் அதனை அவரின் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். மேலும் ஜோபைடனின் வெற்றி ஆவணப்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் நேற்று மாலையில் திடீரென அவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களின் ஒப்பந்தத்தால்… கோடீஸ்வரர்களாக மாறிய… ஆச்சர்ய சம்பவம்…!!

ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் நண்பர்கள் 7 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரளாவை சேர்ந்த அப்து சலாம் என்பவர் ஓமனில் மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் ஓமனில் தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் அப்து சலாம் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் இணைந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அதில் யாருக்குப் பரிசு விழுகிறதோ அவர் அதனை மற்ற நண்பர்களுடன் சமமாக பிரித்துக் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து […]

Categories
உலக செய்திகள்

“என்னை போல இவன் இல்லை” வெள்ளையாக இருக்கிறான்…. குட்டியை ஒதுக்கிய தாய் புலி…!!

தாய் புலி ஒன்று தன்னை போல் இல்லாத தனது குட்டியை ஏற்காததால் மிருக காட்சி சாலை ஊழியர்கள் வளர்த்து வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள நிக்கராகுவா மிருகக்காட்சி சாலையில், ஒரு ஜோடி மஞ்சள் புலிகள் மற்றும் கருப்பு நில பெங்கால் புலிகள் இருக்கின்றது. இந்நிலையில், அங்கு முதல் முறையாக வெள்ளை நிற  புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதற்கு நீவ் என பெயர் சூட்டியுள்ளனர். ஸ்பானிஸ் மொழியில் நீவ் என்றால் வெண் பனி என்று பொருள். பிறந்து ஒரு வாரம் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகள் அனைவருமே உயிரிழப்பு… உறவினர்கள் கதறல்… வெளியான பதற வைக்கும் வீடியோ…!!

கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எகிப்திலுள்ள ஆஷ் ஷர்க்கியா என்ற மாகாணத்தில் இருக்கும் எல் ஹூசைனியா என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆக்சிஜன் அளவு இரண்டு சதவீதத்திற்கு குறைவாக இருந்ததால் கொரனோ பாதித்த நோயாளிகள் அனைவருமே இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நோயாளிகள் உயிரிழந்த காட்சிகளை நோயாளியின் உறவினர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த காணொளியில் […]

Categories
உலக செய்திகள்

சிறுமிகளை வன்கொடுமையா…? இனி உங்கள் கதி அவ்ளோதான்…. விவாதத்திற்குரிய சட்டம்..!!

சிறுவர்களை துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேசியா அரசாங்கம் இனி சிறுவர்களை துன்புறுத்துவதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று சர்ச்சைக்குரிய நெறிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய நெறிமுறைகளின்படி சிறுவர்களை துன்புறுத்தும் நபர்களுக்கு தண்டனை அளிக்கப்படும். பின் தண்டனை காலம் முடிந்தவுடன் ஆண்மை நீக்கம் செய்யலாமா? என்ற அடிப்படையில் நிபுணர்களின் குழு முடிவெடுக்கவுள்ளது. மேலும் அந்த குற்றவாளிகளின்  விடுதலைக்குப் பின்பு எலக்ட்ரானிக் சிப் ஒன்று அவர்கள் மேல் பொருத்தப்படும் அதாவது அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பொது முடக்கம்… எப்போது முடிவுக்கு வரும்..? பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு…!!

பிரிட்டன் பிரதமரால் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.  பிரிட்டனில் உருமாறியுள்ள புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தேசிய அளவில் பொது முடக்கம் மூன்றாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறையை அபராதம் கடுமையாக விதிக்கப்படும் மற்றும் தண்டனைகளும் கடுமையான முறையில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமின்றி கிறிஸ்துமஸ்த்திற்கு முன்புள்ள வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற நாடுகளில் சுமார் 3000 பேர் […]

Categories
உலக செய்திகள்

விலையுயர்ந்த வைரங்கள் திருட்டு… போலீஸாரின் தீவிர வேட்டை… தப்பியோடிய கொள்ளையன்…!!

ஜெர்மனியில் விலைமதிப்பற்ற பல பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் கொள்ளையர் தப்பியோடியுள்ளார்.  ஜெர்மனியில் இருக்கும் Dresden என்ற நகரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வரலாற்றுப் பெருமை வாய்ந்த Dresden என்ற வெள்ளை வைரம் உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் அரேபியாவைச் சேர்ந்த Remmo clan என்ற கொள்ளை கும்பல் இதில் இருக்கக்கூடும் என்று ஜெர்மன் அதிகாரிகள் நம்புவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த அரேபியர்கள் பெர்லினில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் பேச்சு மூச்சின்றி… கிடந்த சிறுமி…. அதிர்ச்சி பின்னணி…!!

சிறுமி ஒருவர் வீட்டில் பேச்சு மூச்சின்றி  உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் இருக்கும் Laval என்ற நகரில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வீட்டில் 7 வயது சிறுமி ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடைத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் […]

Categories
உலக செய்திகள்

பண்ணையில் கொரோனா… 1000 விலங்குகளுக்கு… நேர்ந்துள்ள கொடூரம்…!!

பண்ணையாளர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக தன் பண்ணையிலிருக்கும் 1000 விலங்குகளை கொல்வதற்கு முடிவெடுத்துள்ளார்.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Mink என்ற விலங்குகளை தன் பண்ணையில் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் பண்ணையில் பணிபுரிந்து வரும் 8 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தோற்று எங்கிருந்து பரவியுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் முயற்சியாக அவரின் பண்ணையில் இருக்கும் Mink விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

கால் நடைகளை காப்பாற்ற…. மிருகத்துடன் போராடிய விவசாயி… இறுதியில் நடந்த சம்பவம்…!!

விவசாயி ஒருவர் தன் கால்நடைகளை மீட்பதற்காக ஓநாயுடன் போராடிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் கிராமம் ஒன்று உள்ளது. இக்கிராமத்திற்குள் ஓநாய்கள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவது வழக்கமாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் அதே போல் கிராமத்திற்குள் புகுந்த ஒரு பெரிய ஓநாயானது நாய்கள் இரண்டை கொன்றுள்ளது.மேலும் அங்கிருந்த குதிரையையும் தாக்கியுள்ளது. அப்போது அங்கு வந்த விவசாயி தன் நாய்கள் ஓநாயால் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மீதமுள்ள தன் கால்நடைகளை காப்பாற்ற […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஆரம்பம் குறித்து…. WHO விசாரணைக்கு – சீனா மறுப்பு…!!

கொரோனா உருவான ஆரம்பம் குறித்து WHOன் விசாரணைக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியது சீனாவில்தான். சீனாவிலுள்ள வுகான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் உருவாகியது. ஆனால் இந்த பற்றிய தகவல்களை வெளிப்படையாக இதுவரை சீனா எந்த தகவலும் வழங்கவில்லை. சீனா வெளிப்படையாக இருந்திருந்தால் உலகநாடுகள் இந்த பேரிடரை சந்தித்திருக்குமா? இதை தவிர்த்திருக்கலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக […]

Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட…. வங்கி தலைவருக்கு… மரண தண்டனை…!!

வங்கியின் தலைவர் ஒருவருக்கு பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  சீனாவைச் சேர்ந்த லாய் ஜியாமின் என்பவர் China Haurong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்தபோது பல்வேறு வகைகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் லஞ்சம், பலதார மணம் போன்று சுமார் 1,700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார். தற்போது அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லாய் மீது டியான்ஜின் என்ற நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா” உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறது – உலக சுகாதார அமைப்பு…!!

உலகின் பல நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து உருவாகிய புதிய வகை உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட வீரியமிக்கதாகவும், வேகமாகவும் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பல நாடுகள் ப்ரிட்டனினுடனான […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு தொடர் அழைப்புகள்… கையில் குழந்தையுடன்… பெண் செய்த காரியம் …!!

இளம்பெண் ஒருவர் தன் குழந்தையுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை இரவில் பெட்ரோல் நிலையம் மீது பெண் ஒருவர் காரை மோதுவதற்கு முயற்சி செய்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் காரிலிருந்து இறங்கிய அந்த பெண் மேம்பாலத்தை நோக்கி நடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு இரண்டாவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் கையில் குழந்தையுடன் ஒரு பெண் பாலத்தை நோக்கி நடந்து செல்வதாகவும் மேலும் அதன் பின்பு அவரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்… காவல்துறையினரின் அதிரடி… காரணம் என்ன…??

குடியிருப்பு ஒன்றில் எரிவாயு கசிவால் 700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள Crawly என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த குடியிருப்பாளர்கள் நூற்றுக்கணக்கான பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது இன்று காலையில் காவல்துறையினர் Crawly  என்ற ஒரு குறிப்பிட்ட எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்ட பின்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. West susex தீயணைப்பு, மீட்பு சேவை மற்றும் தென்கிழக்கு […]

Categories
உலக செய்திகள்

சக நண்பர்கள்சேர்ந்து… செய்த கொடூரம்…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள Berk shire என்ற பகுதியைச் சேர்ந்த olly stephens என்ற 13 வயதுடைய சிறுவன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக 13 வயதுடைய சிறுமி மற்றும் சிறுவர்கள் நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து olly யின் மரணத்திற்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை கொடூரமாக கொன்று… சிறுவர்களுக்கு உணவளித்த மூதாட்டி… அதிர்ச்சி சம்பவம்…!!

மூதாட்டி ஒருவர் மனிதர்களை கொன்று மாமிசத்தை சிறுவர்களுக்கு உணவளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவைச் சேர்ந்த சோபியா ஜுகோவா 81 வயதுடைய இந்த மூதாட்டி 7 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோபியா ஜுகோவா பன்றிகள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கடந்த 2005ஆம் வருடம் சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் […]

Categories
உலக செய்திகள்

பூமியை நோக்கி…. ராட்சத விண்கல் வந்து கொண்டிருக்கிறது – அதிர வைக்கும் ரிப்போர்ட்…!!

2021 தொடக்கத்தில் ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராட்சத விண்கல் 2021 CO247 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விண்கல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல ஈபிள் டவரின் உயரத்தில் இருந்து 83% உயரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விண்கல் பூமியில் இருந்து 74 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

செவிலியர்களை… ஜெனீவா திருடுகிறதா…? பிரான்ஸ் குற்றச்சாட்டு…!!

ஜெனீவா மருத்துவமனைகள் தங்கள் செவிலியர்களை திருடுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.  பிரபல பத்திரிக்கை ஒன்றில் “ஜெனிவா எங்கள் செவிலியர்களை திருடுகிறது” என்று தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிரான்சில் கொரோனா மிகவும் தீவிரமடைந்து வருவதால்  மருத்துவமனை ஊழியர்களை நாங்கள் இழந்து வருகிறோம் என்று பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். பிரான்ஸிலுள்ள Haute-sevoie என்ற பகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினர் Martial Saddier கூறுகையில், ஜெனிவாவிலிருக்கும் தனியார் மருத்துவமனைகள் பல என்ற Haute-sevoie பகுதியில் உள்ள செவிலியர்களை அதிக […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் இராணுவவீரர்கள்… படுகொலை சம்பவம்… அல்கொய்தா அமைப்பு உரிமை கோரல்…!!

பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அல்கொய்தா அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். மாலி நாட்டில் கடந்த 2ஆம் தேதி அன்று பிரான்ஸின் ராணுவ வீரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதாவது அவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வாகனம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் Al-zallaqa எனும் சிறு அமைப்பு தான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் இதற்கான வெடிகுண்டுகளை வழங்கியுள்ளது நாங்கள்தான் அல்கொய்தா அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் எதிரொலி… மீண்டும் பொது முடக்கமா…? போரிஸ் ஜான்சன் அறிவிப்பு…!!

போரிஸ் ஜான்சன் புதிய கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.   பிரிட்டன் கேபினேட் அலுவலக அமைச்சர், இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் மார்ச் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஏழு வாரங்களுக்குள் சுமார் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் அவ்வாறு திட்டமிட்ட நேரத்தில் தடுப்பூசி போடப்படாமல் என்றால் போரிஸ் ஜான்சன் அறிவிப்பின்படி பொது முடக்கம் […]

Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கு… சக ஊழியர்களால்… நேர்ந்த கொடூரம்…!!

விமான பணிப்பெண் ஒருவர் சக பணியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் கிறிஸ்டின் ஏஞ்சலிக்கா டசெரா (23) என்ற பெண் பிலிப்பைன்ஸ் விமானத்தின் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன் சக ஊழியர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மக்காட்டி மணிலா என்ற நகரில் உள்ள சிட்டி கார்டன் என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இரவு புத்தாண்டு கொண்டாடிய அவர்கள் மது அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மறு நாள் காலை 10 […]

Categories
உலக செய்திகள்

குளவி கொட்டியதால்… ஏற்பட்ட கொடூர விபத்து… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

பெண் ஒருவர் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள Kirkle levington என்ற இடத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால்  பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் Rosina Ingram என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும்  ஒருவர் மரணத்திற்கு காரணமாக இருக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக Helen shaw என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடரப்பட்டு வருகிறது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் ராணியின்… 2021 கௌரவ பட்டியல்… இலங்கையர்களுக்கு விருது…!!

பிரிட்டன் ராணியின் 2021 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவ பட்டியலில் இலங்கையை சேர்ந்த பலர் இடம் பிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள மக்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பிரிட்டன் ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பேரரசர் ஆணைக்குழு (CBE) விருதானது பேராசிரியர்கள் ரவி சில்வா, Mohan Edirisinghe, Ramani munne singhe, Gajan Wallopillai, Dr.Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ரவி சில்வா கடந்த மூன்று தசாப்தங்களாக […]

Categories
உலக செய்திகள்

200 கூகுள் ஊழியர்கள்… இணைந்து உருவாக்கிய… புதிய தொழிற்சங்கம்…!!

கூகுள் ஊழியர்கள் சுமார் 200 பேர் இணைந்து புதிய தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.  அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இத்தொழில் சங்கத்திற்கு “ஆல்பாபெட் ஒர்க்கர்ஸ் யூனியன்” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இச்சங்கத்தின் நிர்வாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் கூகுள் இன்ஜினியர்களான பருல்கோவுல் மற்றும் செவி ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சங்கம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நியாயமான ஊதியம் […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு…. நண்பர்கள் ஒன்றுகூடிய விழா… நொடியில் நேர்ந்த துயரம்…!!

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் கூடிய பார்ட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸிலுள்ள Dordogne என்ற பகுதியில் இருக்கும் மன்பாசிலாக்கில் நீண்ட நாட்களுக்கு பின் முன்னாள் பள்ளி நண்பர்கள் இணைந்து பார்ட்டி ஒன்றை வித்தியாசமாக முறையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனால் நெட்பிலிக்ஸில் கடந்த 2013ஆம் வருடம் வெளியான Peaky blinders என்ற பிரபலமான தொடரில் வரும் கதாபாத்திரங்களை போல வேடமிட்டு வருமாறு பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் புத்தாண்டு தினத்தின் மாலையில் […]

Categories
பல்சுவை வைரல்

“எவ்வளவு அழகு” காதுக்குள்ள இவ்ளோ இருக்கா…? வியப்படைய வைத்த நெட்டிசன்கள்…!!

காதுக்கு மேல் கருவில் உள்ள குழந்தையின் வரைபடம் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடவுள் மனிதர்களை ஆண், பெண் என இரு பாலினமாக பிரித்து, அதற்கு கண், காது, மூக்கு, கை, கால் வைத்து அழகாக படைத்திருக்கிறார். இதில் ஆணும், பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகி அந்த கருவானது ஒரு புது மனிதனாக உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. இவ்வாறு கருவில் இருக்கும் குழந்தையானது முதல் மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட… பெண் உயிரிழப்பு… இறப்பிற்கு பதில் என்ன? தந்தை கதறல்…!!

பெண் ஒருவர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  போர்ச்சுகீசிய நாட்டைச்சேர்ந்த Soniya Acevedo (41) என்ற பெண் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளின் தாயான இவர் கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து கடந்த புத்தாண்டு அன்று திடீரென்று உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லையாம். மேலும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றுடன்… பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்… பின் நேர்ந்த சம்பவம்…!!

கொரோனா பாதிப்புடன் பயணம் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான மார்க்ரெட் பெரியர்(60). இவர் மீது கடந்த வருடம் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு  அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர் கொரோனா பாதிப்புடன் சுமார் 800 மைல் தூரம் பயணம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்திய செப்டம்பர் மாதம் தான் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு ஆதரவாக…. ட்ரம்ப்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள… 10 முன்னாள் அமைச்சர்கள்…!!

அமெரிக்காவின் 10 முன்னாள் அமைச்சர்கள் இணைந்து ட்ரம்ப்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  அமெரிக்காவின் 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜனாதிபதி டிரம்பை எச்சரித்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளின் சர்ச்சையில் ராணுவத்தை குறிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டிற்கு ஆபத்து மற்றும் சட்ட விரோதமாகவும் அரசியலமைப்பற்ற எல்லைக்குள் கொண்டு செல்வது போன்ற செயல் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த முன்னாள் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்கள்… நாட்டிற்குள் நுழைய… அதிரடியாக தடை விதித்துள்ள நாடு…!!

நெதர்லாந்தின் கொரோனா விதிகளின்படி பிரிட்டன் மக்கள் நாட்டிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, பிரிட்டனை சேர்ந்த மக்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று தடை விதித்துள்ளது. அதாவது டிசம்பர் 31-ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது. இதன் காரணமாகவே ஜனவரி 1 முதல் சுமார் பத்து நபர்கள் நெதலாண்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று நாட்டின் எல்லைக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நெதர்லாந்தின் கொரோனா விதிமுறைகளின்படி ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

ஈரான் சிறைபிடித்துள்ள…. எண்ணெய் கப்பல்… எந்த நாட்டுடையது தெரியுமா…??

தென் கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.  சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. மேலும் பாதுகாப்பு நிறுவனம் இது குறித்து கூறுகையில், ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி எண்ணெய் கப்பல் பயணம் செய்து கொண்டிருக்கையில் ஈரான் கடற்பகுதிக்கு சென்றுள்ளதால் சிறைபிடித்து இருக்கலாம் என்று கூறியுள்ளது. இந்நிலையில், வளைகுடாவை ரசாயனங்களால் மாசுபடுத்திய குற்றத்திற்காக நாட்டின் கடற்படையானது தென் கொரியாவின் MT Hankak […]

Categories

Tech |