Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்துக்கள் மீது வன்முறை…. பிரிட்டன் பிரதமருக்கு… அனுப்பப்பட்ட கடிதம்…!!

பாகிஸ்தானின் இந்துக்கள் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவதாக பிரிட்டன் இந்து அமைப்பினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  பிரிட்டனில் வசிக்கும் இந்து மக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர். அதாவது இந்துக்கள் மன்றம், இந்து ஸ்வயம், சேவக் சங்கம், பிரிட்டன் இந்து கவுன்சில், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட 10 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்கள் மீதான தாக்குதல்கள் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா… எவ்வாறு வேகமாக பரவுகிறது…? ஆய்வு முடிவுகள் வெளியீடு…!!

உருமாறிய புதிய கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனோ சாதாரண கொரோனாவைவிட 70% வீரியம் மிக்கது. மேலும் இந்த கொரோனோ வேகமாக பரவுவதற்கு, மனிதனின் தொண்டையிலேயே வேகமாக இனப்பெருக்கம் செய்து வருவது தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன் படி உருமாற்றம் பெற்ற இந்த கொரோனோ நோயாளிகளின் மூக்கிலும், தொண்டையிலும் […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தை பிரிந்த தம்பதி… மகாராணியாரின் பிறந்தநாளன்று… ஒன்றிணைவார்களா…??

அரச குடும்பத்தை விட்டு பிரிந்த தம்பதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் அரசு குடும்பத்தை சேர்ந்த ஹாரி மற்றும் மேகன் என்ற தம்பதி கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு இருவரும் கடந்த 2019 ஆம் வருடம் அரச குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மகனுடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அரச குடும்பத்தில் இருந்து விலகிச் சென்ற ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தற்போது அரச குடும்பத்துடன் இணைய உள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அமைச்சர்… கொரோனாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள… முக்கிய நடவடிக்கைகள் வெளியீடு…!!

பிரிட்டன் அமைச்சர் கொரோனாவிற்கான மூன்றாம் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பிரிட்டனின் மூன்றாவது ஊரடங்கு மிகக் கடுமையானது மேலும் உருமாறிய புதிய கொரோனா வைரசானது சமூகத் தொடர்புகள் மூலமாகத்தான் எளிதில் பரவுகிறது. ஆகவே, மற்றவர்களுடன் பழகுவது தான் மக்கள் செய்வதில் மிக மோசமான செயல் என்று Nadhim Zahawi கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்தல் அல்லது தேவையுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மற்றபடி வீட்டிலேயே இருங்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப்பின்… ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்… ஜெர்மன் அதிபர் எதிர்ப்பு…!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின், அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிர்வாகம் முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இனிவரும் காலங்களில் கலவரத்தை ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதால் அவரின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய தாக்குதலை தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்குள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் அதற்கான அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

விண்கல் மற்றும் இஞ்சியை பயன்படுத்தி… கொரோனாவிற்கு சிகிச்சை…. அளிக்கும் நாடு…!!

ஜெர்மனியில் விண்கல்லையும் இஞ்சையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறை பயன்பாட்டில் உள்ளது.  ஜெர்மனி முதன்முதலாக கொரோனாவை கண்டறியும் பரிசோதனையை உருவாக்கியிருந்தது. அதன் பின்பு அதற்கான தடுப்பூசியையும் முதன் முதலில் உருவாக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது விண்கல்லையும் இஞ்சியையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறையை  பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதாவது பிற நாடுகளில் அலோபதி தவிர்த்து மாற்று சிகிச்சை முறைகளான இயற்கை வைத்தியம் முதலானவற்றை பயன்பாட்டில் வைத்துள்ளனர். அதனை போல ஜெர்மனியிலும் இந்த சிகிச்சை பயன்பாட்டில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த…. யோகா மாஸ்டருக்கு… கனடாவில் கிடைத்த கௌரவம்…!!

கனடா யோகா மினிஸ்டரியின் நடுவராக தமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கனடாவில் YMC (யோகா மினிஸ்ட்ரி ஆஃப் கனடா) என்ற அமைப்பின் சார்பில் யோகா கல்வி  யோகா வணிகம் ,யோகா சாதனைகளுக்கான அங்கீகாரம் மற்றும் யோகா ஆசிரியர்களுக்கான  பயிற்சி வழங்குவது போன்றவற்றிற்கான ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கனடாவின் சமூகத்தில் YMC அமைப்பு, ஐஎன்சி யின் கீழ் யோகாவின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. சி.ஆர்.ஏ கனடா என்ற நிறுவனத்தின் நிறுவன பதிவுக்கான ஒப்புதல் பெற்று இயங்கி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் பதவி விலக வேண்டும்… மக்கள் அதிருப்தி… பிரிட்டனில் குவிந்த எதிர்ப்பு…!!

பிரிட்டனில் கொரோனாவை போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம் ஏமாற்றமளித்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.   பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனாவை கையாண்ட விதம் குறித்து விமர்சனம் அதிகரித்துவருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை சுமார் 2003 நபர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் பதிலளித்து நபர்களில் குறைந்தது 43% பேர் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள். அதே நேரத்தில் 40% பேர் அவர் பதவியில் இருக்க […]

Categories
உலக செய்திகள்

மர்மமான வடகொரியாவின்… அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு… கிடைத்துள்ள முக்கிய பதவி…!!

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.  வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக தற்போது அதிபர் கிம் ஜாங் உன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. வடகொரியா மர்மமான நாடாக கருதப்பட்டு வரும் நிலையில் வடகொரியாவின் அதிபராகவும், தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர் கிம் ஜாங் 2. இவர் கடந்த 2011 ஆம் வருடத்தில் மரணமடைந்துள்ளார். அதன் பிறகு அவரின் மகன் கிம் ஜாங் உன் […]

Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான விமானத்தில்… குழந்தைகளுடன் சென்ற பெண்… வெளியிட்ட மனதை உருக்கும் புகைப்படம்…!!

விபத்துக்குள்ளான விமானத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண் ஒருவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேசியாவில் Sri Wijaya Airflight sJ 128 போயிங் என்ற விமானம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் Pontianak புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பையிழந்து ரேடாரில் மாயமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது விமானத்தின் சில பாகங்கள் துண்டு துண்டுகளாக நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் பயணித்த 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 6 குழு உறுப்பினர்களின் […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமானத்தின்…. கருப்பு பெட்டிகள் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்…!!

மாயமான ஏர் விமானத்தின் கருப்பு பெட்டிகள் கடல்பகுதியில் மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுடன் மாயமானது. இதையடுத்து விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேர்தல் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது போர்க்கப்பல் அந்த விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சிக்கனல்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. இது குறித்து தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பாகுஸ் புரூஹீடோ கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

நாய்கள் திருட்டு … மிக மோசமான வருடம் 2020… வெளியான தகவல்…!!

கடந்த 2020ஆம் வருடத்தில் ஊரடங்கின் காரணமாக நாய்கள் அதிகமாக காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளது.  பிரிட்டனில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 320 வழக்குகள் நாய்கள் திருடு போனதற்காக பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வருடத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அதாவது கடந்த 2019 ஆம் வருடத்தில் பிரிட்டன் முழுவதும் மொத்தமாக 170 வழக்குகள் நாய்கள் திருடு போனதாக பதிவாகியுள்ளது. இதனால் இந்த 2020 ஆம் வருடம் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

என்னது வட்டி இல்லாம வீட்டுக்கடனா…? எங்கப்பா கொடுக்குறாங்க…? வாங்க பார்க்கலாம்…!!

ஒரு நாட்டில் வீட்டுக்கடனுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகின்றதாம் அதை பற்றி இங்கே பார்க்கலாம். நாம் வீடு வாங்கவோ, கட்டவோ வீட்டுக்கடன் வாங்க இந்தியாவை பொறுத்தவரை, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுவது என்பது புத்திசாலித்தனம். வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான சில சலுகைகளை வழங்குகின்றன. வட்டி தள்ளுபடி, பிராசஸிங் கட்டணம் சலுகை, பண்டிகைக் கால சலுகைகள் என வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சலுகைகளை வழங்கி வருகின்றது. ஆனால் நாம் கடன் வாங்கும் முன் குறைந்த வட்டிக்கு எங்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கமலா ஹாரிஸின்…. செய்தி தொடர்பாளராக…. இந்திய அமெரிக்கர் தேர்வு…!!

அமெரிக்காவில் கமலா ஹாரிஸின் துணை செய்தி தொடர்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றியை பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் துணை செய்தித்தொடர்பாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான சபரீனா சிங் என்பவர் தேர்வாகியுள்ளார். இதுதொடர்பாக பைடன்-ஹாரிஸ் ஆட்சி மாற்ற குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கமலா ஹாரிஸ் […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு தவறான புகைப்படங்கள்…. அனுப்பிய நபர்… பிரபல கால்பந்து வீரரா…??

கால்பந்து வீரர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொடர்புடைய புகைப்படங்களை அனுப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் பிர்மிங்காம் என்ற நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பான விசாரணையில் சைமன் பர்ச்  என்ற வழக்கறிஞர் வாதாடியுள்ளளார். அதன்படி கடந்த 2018 ஆம் வருடத்தில் leroy Robinson (34) என்ற  கால்பந்து வீரர் 14 வயது சிறுமி ஒருவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு சிறுமியுடன் பேசுவதற்காக தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு அவருக்கு பாலியல் ரீதியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அச்சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

தனியாக வீட்டில் இருந்த கோடீஸ்வர பெண்ணுக்கு… 17 வயது சிறுவனால் நேர்ந்த துயரம்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோடீஸ்வர பெண் ஒருவர் 17 வயது சிறுவனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த Sue Addis (69) பெரிய ஹோட்டல்களை நடத்தி வந்துள்ளார். இவரின் ஹோட்டலுக்கு கால்பந்து வீரர்கள் உட்பட பல பிரபலமானவர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத்தொர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது ஒரு நபருக்கும் Sue […]

Categories
உலக செய்திகள்

“சேற்றில் தென்பட்ட மனித விரல்” தகவல் கொடுத்ததால் ஓடி வந்த போலீசார்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

சேற்றில் புதைந்திருந்த மனித விரலை எடுத்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன்னுடைய செல்லப்பிராணியுடன் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சேறு நிறைந்த பகுதியில் மனிதனின் கால் விரல் தெரிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய செல்போனில் அந்த புகைப்படத்தை எடுத்த பெண் தன்னுடைய வீட்டிற்கு வேகமாக வந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் யாரையும் கொன்று […]

Categories
உலக செய்திகள்

கணவரின் இறுதி சடங்கு முடிந்து…. வீடு திரும்பிய மனைவி…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

உயிரிழந்து விட்டதாக நினைத்த கணவர் ஒருவர் மீண்டும் உயிரோடு இருந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் வசிக்கும் தம்பதிகள் ஜூலியோ -விக்டோரியா. இவர்கள் அங்குள்ள பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஜூலியோ தன்னுடைய வீட்டில் இருந்து வழக்கமாக வாக்கிங் சென்றுள்ளார். இஇந்நிலையில் ஜூலியோ எதிர்பாராவிதமாக காட்டுப்பாதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த விக்டோரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது கொரோனாவால் இருந்த முதியவரின் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு துயரம்…. “அடுத்தடுத்து நிலச்சரிவு” குழந்தைகள் உட்பட 11 பேர் பலி…!!

கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் ரக  விமானம் விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட 62 பேருடன் புறப்பட்டது.  புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! “உயிரைக்கொல்லும் கொடிய வைரஸ்” மருத்துவமனை வார்டுகளிலே எளிதாக பரவுதாம்…!!

உயிரை கொல்லும் கொடிய வைரஸ் மருத்துவமனையிலேயே எளிதாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுகளில் நோயாளிகளிடையே புதியதாக ஒரு மர்மமான உயிர்கொல்லி பூஞ்சை பரவி வருவதாக  அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.  Candida auris  என்று அழைக்கப்படும் இந்த கொடிய உயிர் கொல்லி பூஞ்சையானது மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்த நோய் முதன் முதலாக 2009ஆம் வருடம் ஜப்பானில் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் சமீபகாலமாக உலக அளவில் வேகமாக பரவி வருவதாக அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

மலம் கழிக்க சென்ற விதவை பெண்… தேடி சென்ற உறவினர்கள்… கண்ட கொடூரக்காட்சி…!!

விதவை பெண் ஒருவரை 3 நபர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் 50 வயதுடைய விதவை பெண் ஒருவர் இரவு 10 மணியளவில் மலம் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் சென்று பல மணி நேரங்கள் ஆனதால் பதற்றமடைந்த உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் குட்டை ஒன்றின் அருகே மயங்கி கிடந்ததை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபரின் மனைவிக்குமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரான்ஸ் அதிபரின் மனைவிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  பிரான்ஸ் அதிபரான இம்மானுவேலின் மனைவியான Brigitte Macronக்கு  கடந்த டிசம்பர் இறுதியில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதன் பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று Brigitteக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகள் உட்பட 50 பயணிகளுடன்… மாயமான விமானத்தின்… பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு…!!

குழந்தைகள் உட்பட 50 பயணிகளுடன் மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேஷியாவில் Jagarta விலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் Ponitianak எந்த இடத்திற்கு SriWijaya Air flights போயிங் என்ற விமானத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமானம், போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து ரேடாரிலிருந்து மாயமாகியுள்ளது. மேலும் விமானத்தில் 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் 3 கைக்குழந்தைகள் உட்பட ஆறு குழு உறுப்பினர்கள் இருந்துள்ளனர் என்று போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

வேலைய விட்டு என்ன தூக்குறியா…? என்ன பன்றேன்னு பாரு…. ஊழியர் செய்த செயல்…!!

நபர் ஒருவர் கம்பெனியிலிருந்து பணியிடை நீக்கப்பட்டதால் கோபத்தில் அங்கிருந்த கார்களை இடித்து நொறுக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக, ஜெர்மனியை சேர்ந்த மெர்சீடஸ் பென்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின், ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளையான பாஸ்க் கேப்பிட்டல் விட்டோரியா கேஸ்டெய்ஸ் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தொழிற்பேட்டைக்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, உயர் ரக வகுப்பைச் சேர்ந்த 50 கார்களை ஜே.சி.பி. இயந்திரத்தால் இடித்து […]

Categories
உலக செய்திகள்

ஆண்களை கொன்று சமைத்துவிட்டேன்… காவல்துறையினரை அழைத்த பெண்… பின் நடந்த சம்பவம்…!!

பெண் ஒருவர் இரண்டு ஆண்களை கொன்று சமைத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள cheshire பகுதியில் வசிக்கும் Kati Jones (30) என்ற பெண் காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்து தன்னிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறையினரை அழைத்துள்ளார். அப்போது நான் ஒருவரை கத்தியால் குத்திவுள்ளதாக கூறி உடனடியாக வருமாறு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரம் வாங்க…. “2 பேரை கொன்று குழம்பு வைக்கிறன்” விரைந்து வந்த போலீசாருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் இரண்டு பேரை கொன்று சமைத்து கொண்டிருப்பதாக கூறி போலீசாரின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதித்துள்ளார். பிரிட்டனில் ketie என்ற பெண் ஒருவர் காவல் துறையினரை அழைத்து தன்னிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பவும் அழைத்த அவர் தான் ஒருவரை கத்தியால் குத்தி விட்டதால் உடனே வருமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனே அந்த வீட்டுக்கு வந்துள்ளனர். கதவை திறக்க மறுத்த அந்த பெண் காவலர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மகள்…. ஒரே சமயத்தில் குழந்தை பெற்ற… ஆச்சர்ய சம்பவம்…!!

தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருத்தரித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் Kelsi perce (31) என்ற பெண்ணிற்கு kyle என்பவருடன் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்து வந்துள்ளனர். ஆனால் Kelsi கருத்தரிக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Kelsi மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால்  Kelsi […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவுக்கு பயந்து” விமானத்தில் மொத்த டிக்கெட்டையும்…. புக் செய்த தொழிலதிபர்…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் மொத்த விமான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் முல்ஜாடி என்ற நபர்  கொரோனாவில் இருந்து தப்பிக்க நினைத்துள்ளார். இதனால் தான் பயணம் செய்ய இருந்த […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனாவையும்…. பைசர் தடுப்பூசி கட்டுப்படுத்தும்…. வெளியான தகவல்…!!

உருமாறிய கொரோனாவை தற்போதைய கொரோனா தடுப்பு மருந்து கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுகாண் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரசானது தற்போது உலகம் முழுவதும் பரவி மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளன. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும் புதிய வகை கொரோனா ஒன்று அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலமாக தற்போது பல நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் மிகவும் மோசமான நாள்… ஒரே நாளில்… உச்சத்தை தொட்ட உயிர் பலி

பிரிட்டனில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் உச்சத்தை அடைந்துள்ளதாக மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரிட்டனில் கொரோனோ பாதிப்பு ஏற்பட தொடங்கிய நாளிலிருந்து மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை ஒரே நாளில் பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 21ம் தேதியில் பதிவாகியுள்ள 1,224  என்ற எண்ணிக்கையைவிட 101 எண்ணிக்கை அதிகமானதாகும். மேலும் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1325 என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,053 என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைகள் […]

Categories
உலக செய்திகள்

“இந்த டீல் நல்லா இருக்கே” 3 குழந்தை பெற்றால்…. 7 லட்சம் பரிசு அறிவித்த நாடு…!!

பிறப்பு வீதத்தை அதிகரிக்க 3 குழந்தை பெற்றால் 7 லட்சம் பரிசு என்று ஒரு நாடு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறிவரும் நவீன காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளும் குழந்தை பெற்றுக் கொள்வதை குறைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர. இந்நிலையில் குழந்தை பெற்றால் 7 லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்து இருக்கும் நாடு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம். தென் கொரியா நாட்டில் உள்ள சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டருக்கு எதிராக…. புதிய தளத்தை தொடங்குவேன் – ட்ரம்ப்…!!

டிவிட்டருக்கு எதிராக சொந்தமாக தனது கருத்தை பதிவிடும் ஒரு புதிய தளத்தை உருவாக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்பு ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போது 5 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய விடியோவை ட்ரம்ப் தனது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை…. அதிரடியாக முடக்கிய நிர்வாகம்… வன்முறை தூண்டப்படுவதாக அச்சம்…!!

ட்விட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் ட்ரம்ப்  வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்று அவரின் கணக்கை நிரந்தமாக முடக்கிவிட்டது.  அமெரிக்காவில் கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஜோபிடனின்  வெற்றி அறிவிப்பை தடுப்பதற்காக ட்ரம்பின் ஆதரவாளர்கள் முயன்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் அமைதியாக வீடு தருமாறு கேட்டுள்ளார். அதனோடு அந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை நான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக ஊடகங்களை […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கிட்ட போனில் பேசுவேன் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே…!!

அதிபர் ட்ரம்பிடம் போனில் பேச போவதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்தார். இதையடுத்து ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். இதையடுத்து பைடனின் வெற்றிக்கு எதிரான அவருடைய வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வன்முறைக்கு காரணம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு… லஞ்சம் தர முன்வந்த… பிரபல நிறுவனம்…!!

ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த லஞ்சம் தர முன்வந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.  பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் சில மருத்துவர்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்காக லஞ்சம் தருவதற்கு முன்வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் சுமார் 20 தடுப்பூசிகள் தங்களுக்கு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது. இதனோடு மட்டுமன்றி பிரிஸ்டல் மற்றும் ஒர்த்திங் போன்ற பகுதியில் இருக்கும் மருத்துவர்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளது. இதில் ஒர்த்திங் பகுதியில் இருக்கும் மருத்துவர்கள் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

இறுதிசடங்கு நடத்தப்பட்ட… கணவர் வீடு திருப்பியதால்… அதிர்ந்துபோன மனைவி…!!

பெண் ஒருவர் தன் கணவருக்கு இறுதிச்சடங்கு நடத்திய நிலையில் அவர் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹோண்டூராஸ் என்ற நாட்டை சேர்ந்த ஜூலியோ சர்மீன்டோ (65). இவரின் மனைவி விக்டோரியா சர்மீன்டோ. இந்நிலையில் வெளியில் செல்வதாக கூறிச் சென்ற ஜூலியோ பல நாட்கள் கடந்த நிலையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் விக்டோரியா கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் மருத்துவமனையின் அடையாள அட்டையை பார்த்த ஊழியர்கள் இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் […]

Categories
உலக செய்திகள்

பெண் மாயம்… 100 நாட்களாக தேடி வரும் அவலம் .. துயரத்தில் குடும்பத்தினர்…!!

பெண் ஒருவர் மாயமாகி 100 நாட்கள் கடந்த நிலையில் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.  ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயதுள்ள பெண் ஸ்கார்லெட். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். ஸ்விஸ் எல்லையில் இருக்கும் வனபகுதியில் தான் அவர் மாயமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்கார்லெட் இறுதியாக பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது ஆனால் அதன் பின்பு அவர் எங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை… வரிசையில் நிற்க சொன்ன காவலர்… கடுமையாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

காவலர் ஒருவரை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. எனவே அதிக பாதிப்படைந்த மாகாணங்களில் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள லியாங்கிங் என்ற மாகாணத்தில் உள்ள ஷேன் யாங் என்ற நகரில் கடந்த ஜனவரி 1ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் கலந்துகொள்ள […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம்… கூடுதலாக 300 மில்லியன்… கொரோனா தடுப்பூசிகள் ஒப்பந்தம்…!!

ஐரோப்பா கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கூடுதலாக 300 மில்லியன் டோஸ்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியம் பைசர் நிறுவனத்தின் ஆர்டரை இரட்டிப்பாக்கி அதிகமாக 300 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளது. இதனை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான, உர்சுலா வான் டென் லேயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஐரோப்பியர்கள் தேவையான அளவு பாதுகாப்பான மற்றும் உபயோகமுள்ள கொரோனா தடுப்பூசிகளை வைத்திருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஐரோப்பா பைசர் தயாரித்த கொரனோ […]

Categories
உலக செய்திகள்

எம்மாடியோவ் கொரோனா பரவிரும்…. மொத்த டிக்கெட்டையும் வாங்கிய நபர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் மொத்த விமான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில்  கொரோனாவில் இருந்து தப்பிக்க ரிச்சர்ட் முல்ஜாடி என்ற நபர் நினைத்துள்ளார். இதனால் தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின்  அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கிய […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் குறிப்பிட்ட 10 மாவட்டங்கள்… கொரோனாவின் ஆபத்து வலையாக… அரசு அறிவிப்பு…!!

பிரான்சில் இரவுநேர ஊரடங்கில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை   கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரிட்டனில் உருவான உருமாறிய கொரனோ வைரஸ் காரணமாக பிரான்சில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இரவு நேரங்களில் 10 மாவட்டங்களுக்கு ஊரடங்கில்  மாற்றம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு நேரத்திற்கான ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் கொள்ளையடிக்க சென்ற திருடர்கள்… வெளியே வந்தவுடன்… காத்திருந்த அதிர்ச்சி…!!

திருடர்கள் இருவர் கொள்ளையடித்தவுடன் எளிதாக காவல்துயினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டனிலுள்ள Stoke on Trent என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு 42 மற்றும் 49 வயதுடைய  இரண்டு திருடர்கள் நேற்றுமாலையில்  திருடச் சென்றுள்ளனர். அங்கு திருடிவிட்டு வெளியே வந்த திருடர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். என்ன காரணம் என்றால் அந்த வீட்டின் வெளியே காவல்துறையினர் வாகனங்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து காத்துகொண்டிருந்துள்ளனர். அதாவது இந்த கொள்ளையர்கள் பாக்கெட்டில் மொபைலை வைத்திருந்துள்ளனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

பிரபலமான பெண்… திடீரென உயிரிழந்த… பரிதாப சம்பவம்…!!

பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றிய பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Saarah Jones (39). இவர் பிசினஸ் லண்டன் என்ற பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்த Saarah மீது லாரி ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து, […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்… உலகின் முதல் பணக்காரரான நபர்… பின்னுக்கு தள்ளப்பட்ட அமேசான் நிறுவனர்…!!

நபர் ஒருவர் ஒரே நாளில் அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் பணக்காரராகியுள்ளார்.  உலகின் பணக்காரகள் பட்டியலில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் முதல் இடத்தை பிடித்த அமேசான் நிறுவனர் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ஒருவர் முன்னேறியுள்ளார். அவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் (49). அதாவது கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு […]

Categories
உலக செய்திகள்

இரட்டை கொள்ளை சம்பவங்களில்… ஈடுபட்ட பெண் தலைமறைவு… காவல்துறையினர் கோரிக்கை…!!

பெண் ஒருவர் இரண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனைச் சேர்ந்த Tamara Clifton என்ற 40 வயதுடைய பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற இரண்டு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் சட்டத்தை மீறி தலைமறைவாகியுள்ளார். இதனால் காவல் துறையினர் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை கண்டால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் புதிய விதிமுறை… மக்கள் 5 நாட்களுக்குள்… நாடு திருப்ப வேண்டிய கட்டாயம்…!!

பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்களுக்கு திரும்பவில்லை எனில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று நிரூபித்தால் மட்டும்தான் பிரிட்டனிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரிட்டன் போக்குவரத்து செயலர் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சுமார் […]

Categories
உலக செய்திகள்

பைசர் தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… அடம்பிடிக்கும் பிரிட்டன் மக்கள்… காரணம் என்ன…??

பைசர் தடுப்பூசியை போட பிரிட்டன் மக்கள் அடம்பிடித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  பிரிட்டனிலுள்ள வயதான குடிமக்கள் தங்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி வேண்டாம் என்று அடம்பிடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அது வெளிநாட்டின் தயாரிப்பு என்று கூறுகிறார்களாம். மேலும் எங்கள் நாட்டின் தடுப்பூசி எங்களுக்கு கிடைத்தால் போதும் அதைத் தான் நாங்கள் போட்டுக் கொள்வோம் என்றார்களாம். மேலும் ஆங்கில தடுப்பூசி தயாராகும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று கூறிவிட்டார்களாம். இதில் குறிப்பாக வடகிழக்கு பிரிட்டனில் உள்ள பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

காதலியை காண வந்த காதலன்… போலீசில் மாட்டிவிட்ட காதலி… அதிர்ச்சி பின்னணி…!!

பெண் ஒருவர் தன்னை காண வந்த காதலனை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள பிர்மிங்கம் என்ற நகரத்தைச் சேர்ந்த அஜாஸ் ஹுசைன் ஷா மில்லியனரான இவர் தன் 1,65,000 டாலர் மதிப்புடைய தங்க லம்போர்கினி ஹூராக்கன் காரை எடுத்துக்கொண்டு இத்தாலியிலுள்ள தன் காதலியை பார்க்க வந்துள்ளார். ஆனால் ஹுசேன் ஷா வின் காதலி தன் வீட்டு பால்கனியில் அவரின் காரைப் பார்த்ததும் உற்சாகம் அடையவில்லை. எனினும் அதற்கு மாறாக இத்தாலியின் காவல்துறைக்கு அழைப்பு […]

Categories
உலக செய்திகள்

வருங்கால கணவரை தவறுதலாக…. முன்னாள் காதலனின் செல்ல பெயரால்… அழைத்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்…!!

பெண் ஒருவர் வருங்கால கணவரை தவறுதலாக தன் முன்னாள் காதலனின் பெயரை சொல்லி அழைத்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  பிரிட்டனில் உள்ள Ports Mouth என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் Keileigh Dunning (32) என்ற பெண் கீழே விழுந்து கிடப்பதையும் அவருக்கு அருகில் அவரின் வருங்கால கணவர் Mark Brand ford என்பவர் முதலுதவி செய்ய முயற்சிப்பதையும் கண்டுள்ளனர்.ஆனால் உடற்கூராய்வின் முடிவில் Keileighவின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க இராணுவத்தின்… முக்கிய பொறுப்பில்… தமிழர் நியமனம்…!!

அமெரிக்க இராணுவத்தில் தலைமை தகவல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் ராணுவத்தில் கடந்த வருடம் தலைமை தகவல் அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ் ஐயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த டாக்டர் ராஜா ஐயர் அங்கிருக்கும் தேசிய தொழில்நுட்ப மையத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின்பு பெங்களூரில் பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மின் பொறியியல் படிப்பில் PHD ஆய்வு நிறைவுசெய்துள்ளார். அதன்பிறகுதான் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற துவங்கியுள்ளார். மேலும் […]

Categories

Tech |