Categories
உலக செய்திகள்

அச்சத்தில் நீர் அருந்தும் சிறுத்தை…. “வெறும் 20 நொடிகள் தான்”…. நடந்த பயங்கர வேட்டை காணொளி…!!

தண்ணீர் குடிக்கும் சிறுத்தையை வெறும் 25 நொடிகளில் முதலை இரையாக்கியுள்ள வீடியோ காண்போரை நடுங்க வைத்துள்ளது.  இயற்கையின் முழு படைப்பையும் தன் வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆனால் அதே காட்டில் தான், வேட்டையாடும் கொடூர மிருகங்களும் நிறைந்திருக்கும். இதுபோன்று வேட்டை ஒன்று தான் இந்தகாணொளியில் அரங்கேறியுள்ளது. தாகத்திற்கு தண்ணீர் அருந்த வந்த சிறுத்தை ஒன்று மிகவும் பயத்துடன் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில் முதலை […]

Categories
உலக செய்திகள்

1 அல்ல… 2 அல்ல 6 நாள்…… தாய் பாசம் காட்டிய வளர்ப்பு நாய்….. மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இப்படி சண்டை போட்டுட்டு இருந்தா நல்லா இருக்காது… இந்தியா- சீனா இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை…!!

லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கார்ப்ஸ் கமாண்டர்ஸ்  அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று 15 மணிநேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் விவகாரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி இந்தியா – சீனாவின் ராணுவ அலுவலர்கள் அளவிலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்நிலையில் 9வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காலை 11 மணிக்கு கார்ப்ஸ் கமாண்டெர்ஸ் அளவிலான தொடங்கிய பேச்சுவார்த்தையானது […]

Categories
உலக செய்திகள்

ஒரே ராக்கெட் தான்… ஆனால் 143 செயற்கைகோள் இருக்கு…. சாதனை படைத்த Space X நிறுவனம்…!! 

Space X  என்ற நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 சிறிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. நார்த்ரோப் க்ரம்மன் என்ற நிறுவனம்  2018ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 108 செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்தி சாதனைப் படைத்தது. ஆனால் தற்போது Space X  நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை  விண்ணிற்கு அனுப்பி அந்த சாதனையை முறியடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பலவகையான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

இதுலாம் தப்புங்க…! ஏன் அர்ரெஸ்ட் பண்ணீங்க ? உடனே ரிலீஸ் பண்ணுங்க….. ரஷ்யாவை மிரட்டும் அமெரிக்கா…!!

ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களையும், போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும், அவர் வழிநடத்திய அரசின் ஊழலையும் குறித்து பல விமர்சனங்களை கூறி வந்தவர் நாவல்னி.  இந்நிலையில் விஷம் வைக்கப்பட்ட உணவை உண்ட  நாவல்னி  சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற நிலையில் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பினார். தற்போது பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன்  பெற்றிருந்த நாவல்னியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . இதனால் […]

Categories
உலக செய்திகள்

“கணவனின் கனவில் வந்த எண்” மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்…. ஒரே நாளில் கோடீஸ்வரி…!!

கணவனின் கனவில் வந்த எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்மணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்த டெங் பிரவதூதம் என்ற பெண்மணி 20 வருடங்களுக்கு முன் தன் கணவன் கனவில் கண்ட எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கி ரூபாய் 340 கோடி பரிசை வென்றுள்ளார். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அடிக்கடி ஒரு எண் வந்துள்ளது. இதை அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

துடிக்க துடிக்க உயிரோடு…. “பாம்பை வேட்டையாடும் தவளை”…. வைரல் வீடியோ…!!

பச்சை தவளை ஒன்று பாம்பை உண்ணும் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் தான் உணவாக உட்கொள்வது வழக்கம். இதைத்தான் உணவு சங்கிலி முறையில் நாம் சிறு வயதிலிருந்தே படித்திருக்கிறோம். ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று பாம்பினை பிடித்து சுவைத்து சாப்பிடுகின்றது. இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். Frog swallows a snake🙄Everything is possible in […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு படை வீரர்களிடம்…. மன்னிப்பு கேட்ட அதிபர் ஜோ பைடன்…!!

பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு கேட்டுள்ளது பேரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ளார் அதிபர் ஜோ பைடன். இதையடுத்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதியன்று ஜோ பிடன் அதிபராக பதவியேற்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பிறகு அந்தக் கட்டடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“லப் டப், லப் டப்” இறந்த மகனின் இதயத்துடிப்பு…. டெடிபியரில் கேட்டு கண்ணீர் விட்ட தந்தை…. நெகிழ்ச்சி வீடியோ…!!

இறந்த மகனின் இதயத்துடிப்பை டெடிபியரில் கேட்ட தந்தை கண்ணீர் விட்டு அழும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றோர்களாகிய நாம் எப்பொழுதுமே தங்களது குழந்தையின் மேல் அளவுக்கதிகமான பாசத்தை வைத்திருப்போம். அவர்களை பிரிந்து நம்மால் அவ்வளவு எளிதில் இருந்து விட முடியாது. மேலும் அவர்களின் மரணத்தை விரும்ப மாட்டோம். அப்படி அச்சம்பவம் நிகழ்ந்தால் அது நம் குடும்பத்தையே அளிக்கக்கூடிய ஒரு சோக நிகழ்வாக அமையும். இருப்பினும் தங்கள் துக்கத்தை மறந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளில், பிறரது வாழ்க்கை […]

Categories
உலக செய்திகள்

200 கேமராக்கள்…. 200 நிர்வாண பெண்கள் – பரபரப்பு சம்பவம்…!!

நபர் ஒருவர் 200 கேமராக்களை ஹேக் செய்து 200 பெண்களை நிர்வாணமாக பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 35 வயது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் 200க்கும் மேற்பட்ட வீடுகளின் கேமராக்களை ஹேக் செய்து அந்த வீட்டில் இருக்கும் பெண்களை நிர்வாணமாக பார்க்க பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அழகான பெண்கள் இருக்கும் வீடுகளை கண்காணித்து ஹேக் செய்துள்ளார். இதையடுத்து 200 பெண்களை நிர்வாணமாக பார்ப்பதற்காக கேமராக்களை ஹேக் செய்து வேவு பார்த்துள்ளதால் காவல்துறையினர் வரை […]

Categories
உலக செய்திகள்

என்னது எல்லாம் இலவசமா… ? உண்மையான நண்பன் நீங்கள் தான்… அமெரிக்கா புகழாரம்…!!

இந்திய அரசு பல சர்வதேச நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளதற்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.  இந்திய அரசானது சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிப்பில் உருவான கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்தியா இந்த தடுப்பூசிகளை சர்வதேச நாடுகள் பலவற்றிற்கும் வழங்கியுள்ளது. அதன்படி  பூட்டானிற்கு 1.5 லட்சம் டோஸ்கள் மற்றும் ஒரு லட்சம் டோஸ்கள் மாலத்தீவிற்கும், 10 லட்சம் டோஸ்கள்  நேபாளத்திற்க்கும், 20 லட்சம் டோஸ்கள் வங்காளதேசத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

“சிகிச்சைக்காக சென்ற உரிமையாளர்” ஆஸ்பத்திரியில் 6 நாட்கள்…. நாயின் நெகிழ்ச்சியான செயல்…!!

நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஐசியூவில் காதல் திருமணம்…. உடல்நிலை முன்னேற்றம்…. ஆச்சர்ய சம்பவம்…!!

காதல் ஜோடிகள் ஐசியுவில் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிரையன், எலிசபெத் என்ற ஜோடி ஐசியூவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்ய இருந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரையனுக்கு தீவிர தொற்று ஏற்பட்டதால்  80% அவர் இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து கைவிட்டுள்ளனர். இதனால் இறப்பதற்கு முன் அவர்கள் ஐசியூவிலேயே திருமணம் செய்துள்ளனர். தற்போது திருமணம் முடிந்த நிலையில் பிரையனின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா – பெரிய வீடு விற்பனை அதிகம்…!!

கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவுள்ள பெரிய வீடுகள் விற்பனையாவதாக சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குளாகி வருகின்றனர். மேலும் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. தற்போது ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவிலான வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் கன்சல்டன்ட் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தோடு சென்றால்…. முகக்கவசம் அணிய வேண்டாம்…!!

குடும்பத்தோடு சென்றால் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று புனே அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் முகக் கவசம் அணிதல் என்பது கட்டாயம் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனேவில் குடும்பத்துடன் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தால் மாஸ்க் […]

Categories
உலக செய்திகள்

சுரங்கத்தில் சிக்கியவர்களை…. மீட்க 15 நாட்கள் ஆகும் – வெளியான தகவல்…!!

சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு 15 நாட்களாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள நகரில் தங்க சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுமார் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பலியான நிலையில் 11 பேர் உயிருடன் உள்ளனர். ஈஞ்சியவர்களை காணவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் உயிருடன் உழவர்களை மீட்க இன்னும் 15 நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிய துளையின் வழியே உணவு மற்றும் மருந்து பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

எம்மாடி 65 வருஷம் குளிக்கல…. அழுகிய இறைச்சி உணவு…. யார் இந்த அழுக்கு மனிதர்…??

நபர் ஒருவர் 65 வருடங்களாக குளிக்காமல் இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் நம் உடலை குளித்து சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் தான் நம்மை நோய் நொடிகள் அண்டாது, நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் ஆனால் ஈரானைச் சேர்ந்த அம்மு ஷாஜி (83) என்ற முதியவர் உலகின் அசுத்தமான மனிதர் என அழைக்கப்படுகிறார்.  ஈரானில் உள்ள கெர்மன்ஷா மகாணத்தில் உள்ள தேஜ்கா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் விவிலியத்தில் வரும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா மக்களே…! 100 நாட்களுக்கு இத செய்யுங்க…! பைடனின் அதிரடி உத்தரவு….!!

அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்தால் மட்டுமே கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலிகளை தடுக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். பதிவியேற்ற சில நிமிடங்களிலேயே  வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தனது பணிகளை உடனடியாக தொடங்கினார்.  மேலும் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே  முன்னாள் அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் எடுத்த சில  முக்கிய கொள்கைகளை மாற்றியமைத்தார். […]

Categories
உலக செய்திகள்

“பைடன் நிர்வாகத்தில்” எத்தனை இந்தியர்களுக்கு முக்கிய பதவி தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ…!!

பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கும் இந்தியர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகளையும் பொறுப்புகளையும் வழங்கியுள்ளார். அவ்வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இதுபோன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டென்பெண்ணுக்கு மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் விவேக் மூர்த்தி என்பவருக்கு கோவிட்-19 […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…! 2ஆம் அலையால் நடுங்கும் ஜெர்மன்… பொதுமுடக்கம் நீட்டிப்பு…!!

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி வரை ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை  மிக வேகமாக பரவி வருவதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஜெர்மனியில் இதுவரை 20,00,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஜெர்மனியில் இதுவரை 49,500க்கும்  மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில்…. பைடனுக்கு “கனிவான கடிதம்”…. விட்டு சென்ற ட்ரம்ப்…!!

முன்னாள் அதிபர் ட்ரம்ப் பைடனுக்கு கனிவான கடிதம் ஒன்றை வெள்ளை மாளிகையில் விட்டு சென்றுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர்ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இந்நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு பைடனை வரவேற்கவில்லை. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக 150 வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

வெள்ளையின மேலாதிக்கத்தை ஒழிப்போம்! – அதிபர் பைடன் உறுதி…!!

வெள்ளையின மேலாதிக்கத்தை ஒழிப்போம் என்று அதிபர் ஜோ பைடன் முதலில் உறுதி ஏற்றுள்ளார். கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அபார  வெற்றி பெற்றன.ர் இதையடுத்து நேற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். டிரம்ப் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சிவப்பு கம்பாலா மரியாதையுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்றர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் வயதான அதிபர் இவர் தான்…!!

அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் மிக அதிக வயதான அதிபர் ஆவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அபார  வெற்றி பெற்றன.ர் இதையடுத்து நேற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். டிரம்ப் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சிவப்பு கம்பாலா மரியாதையுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பைடன் அமெரிக்காவின் மிக அதிக வயதில் அதிபராக தேர்வானவர் ஆவார். […]

Categories
உலக செய்திகள்

காதலர் தினத்திற்கு தடை…. உற்சாகத்தில் SINGLES…. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்…!!

பிப்ரவரி-14 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதால் சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் காதலர்களை கலாய்த்து மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் முந்தைய கொரோனா வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் தற்போது புதிய கொரோனா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து புதிய கொரோனாவிலிருந்து ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாநில அரசுடன் ஜெர்மன் அதிபர் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனை ககூட்டத்தில் 16 மாநகராட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பனிச்சறுக்கில் வழி மாறிய இளைஞர்… மீட்க சென்ற குழுவினருக்கு… காத்திருந்த ஆச்சர்யம்…!!

பனிச்சறுக்கில் தவறிய இளைஞர் பாதுகாப்பாக அமர்ந்திருந்த சம்பவம் ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டிஷின் கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 6:15 மணியளவில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக சென்ற நிலையில் தாம் வழி தவறி வந்ததை உணர்ந்துள்ளார். அச்சமயத்தில் அவரின் குடும்பத்தினர் அவர் காணாமல் போனதால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞரரை தேடி மீட்பு குழுவினர் புறப்பட்டுள்ளனர். அப்போது அங்கு பனிச்சறுக்கு வாகனமொன்று நிற்பதை கண்ட மீட்பு குழுவினர் அருகே சென்று பார்த்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்! இங்க மட்டும் வைரமழை பெய்யுதாம்…. எங்க தெரியுமா…?

நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அடிக்கடி வைர மழை பெய்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கமழை, வைரம் மழை, வைடூரியம் மழை போன்றவற்றை திரைப்படங்களில் வரும் பாடல்களில் தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே வைர மழை பெய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதே. ஆனால் பூமியில் இதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை.  ஆனால் கனவில் கூட அது நடக்க வாய்ப்பில்லை. ஆனால் நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களின் அடிக்கடி வைர […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையை விட்டு…. வெளியேறினார் ட்ரம்ப்…!!

அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் சிவப்பு கம்பள மரியாதையுடன் வெளியேறியுள்ளார். கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று பைடனுக்கு பதவி ஏற்பு விழா நடந்தது. இதையடுத்து பதவியேற்பு விழாவில் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் ட்ரம்ப் அதிபர் பைடனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த கணவரை… எழுப்பிய மனைவிக்கு… நேர்ந்த கொடூரம்…!!

நபர் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுப்பிய மனைவி மீது வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துருக்கியிலுள்ள Konya என்ற பகுதியில் வசித்து வரும் 23 வயதுள்ள பெண் Rukiya Ay. இவரது கணவர் Ali ay. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென Rukiya உடல் முழுவதும் வெந்து போன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து Rukiya கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, சம்பவத்தன்று என் கணவருக்கு மிகவும் பிடித்த […]

Categories
உலக செய்திகள்

அடடே! இந்த நாய்க்கு யோசனையை பாருங்களேன்…. வைரல் வீடியோ…!!

நாய் ஒன்று தனது எஜமானரை போல காலில் அடிபட்டது போல் அனுதாபத்தை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாய்கள் என்றாலே நன்றியுள்ள ஜீவனாக இருக்கும். மேலும் வளர்பவர்களோடு இணைந்து நண்பர்கள் போலவே பழகி விடும். இந்நிலையில் லண்டனை சேர்ந்த ரசெல் ஜோன்காலிஸ் என்பவருக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்நிலையில் தனது நாயுடன் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதையடுத்து நடைப்பயிற்சியின் போது தனது எஜமானர் கஷ்டப்படுவதை பார்த்த நாய், தனது காலிலும் அடிபட்டது போல நடந்து கொண்டுள்ளது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும்” பதவியேற்கும் பைடனுக்கு…. வாழ்த்து தெரிவித்த ட்ரம்ப்…!!

ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ள நிலையில் ட்ரம்ப், பைடன் நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் வெற்றி அடைந்தார். இதையடுத்து வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி 10 மணிக்கு) நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பைடன் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்புக்கு மட்டும் இல்ல…. 70,000 கானாக்குகள் முடக்கம்…. ட்விட்டர் நிறுவனம் அதிரடி…!!

ட்ரம்பின் ஆதரவாளரின் ட்விட்டர் கணக்கு விளக்கமின்றி முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  வாஷிங்டனின் ஜார்ஜியா மாகாணத்தில் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மார்ஜோரி டெய்லர் கிரீன்(46). இனவெறி கருத்துக்களை ஆதரிக்கும் விதத்தில் செயல்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் இவரின் கணக்கை முடக்கியுள்ளது. இந்நிலையில் இவர் தன் ட்விட்டர் கணக்கு காரணமின்றி மூடக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது தொழில் அதிபரான இவர் அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ளார். மேலும் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான கிரீன் பழைமைவாத கருத்துக்களையும் ஆதரித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லைக்குள்…. சீன ராணுவம் கட்டிய “கிராமம்” – பெரும் அதிர்ச்சி…!!

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் கிராமத்தை உருவாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சீன ராணுவம் சில அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 101 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தையே  உருவாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்தியேகமான இதுகுறித்த செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கிலோ […]

Categories
உலக செய்திகள்

ஏரோபிளேன் கூட போட்டியா….? விமான ஓடுதளத்தில் தாறுமாறாக ஓடிய கார்…. வெளியான காணொளி….!!

நபர் ஒருவர் மது அருந்திவிட்டு விமான நிலைய ஓடுதளத்தில் வாகனத்தை ஓட்டிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாங்காங்கில் ஸ்வர்ணபூமி என்ற விமான நிலையத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தைகர் செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் அந்த நபர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விமானம் ஒன்று தரை இறங்கி கொண்டிருக்கிறது. அச்சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பு மருந்து விநியோகம்… உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு… WHO தலைவர் வேதனை…!!

கொரோனா நோய்க்கு எதிராக  உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி வினியோகத்தில் உலக நாடுகளுக்கு இடையே  கடும் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து  உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு எதிராக கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போடும் பணியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் களமிறங்கியுள்ளது.  இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் கணவர்… “செகண்ட் ஜென்டில்மேன்” பைடன் கொடுத்த அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் கமலா ஹாரிஸின் கணவருக்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும்  இன்று பதவியேற்கவுள்ளனர்.  எனவே வெள்ளை மாளிகையில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இதற்காக ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டாம்…. மோடி படத்தை கையிலெடுத்த மக்கள்… புலம்பும் இம்ரான் அரசு …!!

நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்துடன் கூடிய  சுதந்திர பேரணியை பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் போராட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர் . 1967இல் முதன்முதலாக சிந்து மாகாண தலைவர் ஜிஎம் சையது மற்றும் பீர் முகமது அலி ஆகியோர்  பாகிஸ்தானிடம்  தனி சிந்து தேசம் கேட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜிஎம் சையதுவின் 117வது பிறந்தநாளையொட்டி பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்தை கொண்டு பேரணி நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

தொழிலாளர்களை மீட்க…. களமிறங்கிய 300 வீரர்கள்… கிடைத்த தகவலில் நிம்மதியான சீனா ..!!

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிக்கொண்ட 22 தொழிலாளர்களில் 12 பேர் உயிருடன் இருப்பதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் குவிக்சியா என்ற பகுதியில் தங்கச்சுரங்கம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த வாரம் தொழிலார்கள் வழக்கம்போல்  பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது . இதில் சுரங்க பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 22 தொழிலாளர்கள் இடிபாடுகளில்  சிக்கிக் கொண்டனர். இதனால்  300க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தொழிலாளர்களை […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் மிதந்த…. இளம்பெண்ணின் சடலம்…. அடையாளம் வெளியிட்ட காவல்துறையினர்…!!

பெண் ஒருவர் ஏரியில் சடலமாக அவசர சேவை பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டல அவசர சேவைப் பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் துன் ஏரியில் இருந்து பெண் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2: 30 மணியளவில் துன் ஏரியில் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவசர சேவை பிரிவினருடன் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

வளர்ப்பு மகனை… திருமணம் செய்த தாயாருக்கு… எழுந்துள்ள சர்ச்சை…!!

பெண் ஒருவர் தன் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Marina Bhalamasheva . இவரின் கணவர் Alexey (45).  இந்நிலையில் இத்தம்பதியின் வளர்ப்பு மகன் Vladimir “voya” Shavyrin (20) என்பவருக்கும் Marina விற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த Alexey, Marina வை விவாகரத்து செய்துள்ளார். இதனை தொடர்ந்து தனது வளர்ப்பு மகனான Shavyrin ஐ Marina திருமணம் செய்துள்ளார். இச்செய்தி உலகம் […]

Categories
உலக செய்திகள்

மகனை திருமணம் செய்த தாய்…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு…. அதிர்ச்சியில் இணையவாசிகள்….!!

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை தாயே திருமணம் செய்து கொண்டு வெளியிட்ட பதிவு சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா(35). இவர் உடல் எடை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை செய்து வந்தார். மரினா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸ்(45) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் அலெக்ஸின் ஐந்து பிள்ளைகளையும் தத்தெடுத்து அவர் வளர்த்துள்ளார். இந்நிலையில் தத்து பிள்ளைகளில் ஒருவரான விளாடிமிர்(21) என்பவரை மரினா தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்! 65 வருஷமா குளிக்கலையாம்…. குளிச்சா நோய் வருமாம் – ஆச்சர்ய மனிதர்…!!

நபர் ஒருவர் 65 வருடங்களாக குளிக்காமல் இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் நம் உடலை குளித்து சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் தான் நம்மை நோய் நொடிகள் அண்டாது, நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் ஆனால் ஈரானைச் சேர்ந்த அம்மு ஷாஜி (83) என்ற முதியவர் உலகின் அசுத்தமான மனிதர் என அழைக்கப்படுகிறார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு தண்ணீர் என்றாலே பயம். ஆகையால் 65 வருடங்களாக குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

அபாய எச்சரிக்கை… இரண்டு மாதங்களுக்கு… பெய்யும் மழை ஒரே நாளில்…!!

பிரிட்டனின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  பிரிட்டனின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இரண்டு மாதங்களுக்கு பெய்ய இருக்கும் மழையானது ஒரு நாளில் பெய்ய இருப்பதால் பிரிட்டனின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக லீட்ஸ், மான்செஸ்டர் ஷ்பீல்ட் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலையில் 6 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மாயமான இளம்பெண்… காவல்துறையினர் வெளியிட்டுள்ள… முக்கிய தகவல்…!!

இளம்பெண் ஒருவர் மாயமான சம்பவம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை காவத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடந்த 11ஆம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் அப்பெண் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த தகவல் ரொறன்ரோ காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 26 வயதுடைய Susan Felics என்ற இளம்பெண் கடந்த மாதம் 11ம் […]

Categories
உலக செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்… மர்மநபர் செய்த வேலை… போராடி மீட்ட தாய்…!!

மர்ம நபர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   லண்டனில் உள்ள Northala field என்ற பகுதியில் 5 வயதுள்ள சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது மர்ம நபர் ஒருவர் அச்சிறுவனிடம் பேசியுள்ளார். அதன்பின்பு திடீரென அச்சிறுவனை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் அந்த நபருடன் துணிச்சலுடன் போராடி சிறுவனை மீட்டுள்ளார். இந்நிலையில் அந்த நபர் குறித்த முக்கிய தகவல் ஒன்று காவல்துறையினரால் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! 30 நிமிடங்களுக்கு ஒருவர் பலி…. அதிரும் இங்கிலாந்து…!!

ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒரு புதிய கொரோனா நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கு பல்வேறு நாடுகளும் அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் […]

Categories
உலக செய்திகள்

பிரபல சாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு…நேர்ந்த நிலை…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

உலகின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தென்கொரியாவின் ஸ்மார்ட்போன் மற்றும் மெமரி சிப் போன்றவற்றின் தயாரிப்பு நிறுவனம்  சாம்சங் எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனத்தின் தலைவர் lee-jae yong, சாம்சங் குழுமத்தின் மூன்றாவது தலைமுறையின் தலைவர் ஆவார். இவரின் தந்தை lee kun hee யின் மரணத்திற்குப் பிறகு lee தலைவராக பதவி வகித்துவந்துள்ளார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் பொறுப்பில்  இரண்டு இணை நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களையும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து மீள்பவர்களில் எட்டில் ஒருவர் உயிரிழப்பு… அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்….!!

கொரோனாவிலிருந்து குணமடைவோரில் எட்டில் ஒருவர் 140 நாட்களுக்குள் உயிரிழக்கிறார் என்று அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரிட்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 5 மாதங்களுக்குள் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் எட்டில் ஒருவர் மீண்டும் கொரோனா பிரச்சனைகளால் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Leicester பல்கலைக்கழகமும் தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவில் முதல் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட…. 29 பேர் மரணம்…!!

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிகளில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஆக்ஸ்போர்ட் மற்றும் பைசர் நிறுவனத்தின்  தடுப்பு மருந்துகள் 90 சதவீதம் வெற்றியடைந்ததை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பைசர்  தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது நார்வே நாட்டில் பைசர் […]

Categories
உலக செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன்… கடத்த முயன்ற மர்ம நபர்… போராடி மீட்ட தாய்….!!

சிறுவனை மர்ம நபர் கடத்த முயன்ற போது அவனது  தாய் போராடி மீட்டுள்ளார். லண்டனில் Northala Fields  என்ற பகுதியில் 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.  அப்போது அங்கு வந்த மர்ம நபர் நைசாக சிறுவனிடம்  பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுவனை தூக்கிக்கொண்டு ஓட முயன்றுள்ளார்.இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் அந்த மர்ம நபரை துணிச்சலாக தடுத்து நிறுத்தி சிறுவனை மீட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து தப்பி சென்ற மர்ம நபர் தொடர்பாக  சில முக்கிய […]

Categories
உலக செய்திகள்

மீறப்பட்ட அமைதி ஒப்பந்தம்… கிளர்ச்சியாளர்களின் கொலைவெறி தாக்குதல்… கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்கள்….!!

சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டதுடன் 160 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் 2003ஆம் ஆண்டிலிருந்து டர்பர் மாகாணத்தை மையமாகக்கொண்டு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைதி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த […]

Categories

Tech |