Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுமி…. “கண்ணிமைக்கும் நொடியில்”கடலுக்குள் இழுத்த கடற்சிறுத்தை…. வைரல் வீடியோ…!!

வேடிக்கைபார்த்து கொண்டிருந்த சிறுமியை கடற்சிங்கம் ஒரு கடலுக்குள் இழுத்து செல்லும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கனடா நாட்டில் உள்ள ரிச்மாண்ட் நகரத்தில் உள்ள கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த சிங்கங்களை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சிறுமி ஒருவரும் தடுப்பு சுவரை உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது நீந்தி கொண்டிருந்த கடல் சிங்கம் உட்கார்ந்துகொண்டிருந்த சிறுமியின் உடையை பிடித்து இழுத்து சென்றுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த நபர் ஒருவர் தாமதிக்காமல் கடற்கரையில் குதித்து சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகர்… அமெரிக்காவில் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

கனடாவின்  பிரபல நடிகர் வயது முதிர்வினால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியை சேர்ந்த நடிகர் பிளம்மர். இவர் கடந்த 1958 ஆம் வருடத்தில் ஸ்டேஜ் ஸ்டிரைக் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு காலடி வைத்துள்ளார். மேலும் பிளம்மர் மூன்று முறை திருமணம் செய்தவர். சவுண்ட் ஆப் மியூசிக் என்ற திரைப்படத்தில் கேப்டன் வான் டிராப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பணிக்கு வரவேண்டாம்… தம்பதிகளை திடீரென வெளியேற்றிய அதிகாரிகள்… நீடிக்கும் மர்மம்..!!

கனடாவில் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றிய தம்பதிகளை காரணம் கூறாமல் அதிகாரிகள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவை சேர்ந்த தம்பதிகள் Dr. Xingguo Qui மற்றும் Kedding cheng இருவரும் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இத்தம்பதியினர் திடீரென்று ஆய்வகத்திலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றபட்டனர். சக அறிவியலாளர்களுக்கு இத்தம்பதிகள் இனிமேல் பணிக்கு வரமாட்டார்கள் என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக அவர்கள் வெளியில் அனுப்பப்பட்டார்கள் என்பதற்கான காரணங்கள் ரகசியமானவை என்றும் அதனை தெரிவிக்க […]

Categories
உலக செய்திகள்

பௌத்த தத்துவத்தில் தான் அஹிம்சை இருக்கிறது… அதை பின்பற்றியே என் ஆட்சி… அறிவித்த ஜனாதிபதி..!!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே பௌத்த தத்துவத்தை பின்பற்றியே ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.  இலங்கையில் 73 வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சமயங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் புதிய மதிப்பை வழங்கும் அகிம்சை மற்றும் அமைதி பௌத்த தத்துவத்தில் உள்ளது. மேலும் நாட்டில் இருக்கும் மதங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும்  நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்கள் சரிசமமாக சுதந்திரத்தை அனுபவிக்க […]

Categories
உலக செய்திகள்

சீன கடல்துறையின் அதிரடி சட்டம்… பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்… ஜப்பான் மற்றும் பிரிட்டன் கோரிக்கை…!!

சீனாவின் புதிய கடல்துறை சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் கொண்டுவரப்பட்ட புதிய கடல் துறைக்கான சட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதாவது இச்சட்டத்தின் படி, வெளிநாட்டின் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும். மேலும் இதற்காக கடலோர காவல்படையினர் எந்த வகையிலான நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இதில் ஆயுதங்களும் உபயோகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் […]

Categories
உலக செய்திகள்

பிரபல WWE வீரர் பட்ச் ரீட்…. திடீர் மரணம் – சோகம்…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் (66) காலமானார். இவர் 1978 முதல் WCW, WWE,World League Wrestling உள்ளிட்ட பல்வேறு மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். WWE SmackDown-இல் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ரிக் பெளய்ர், ஹல்க் ஹோகன் உள்ளிட்ட வீரர்களுடன் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

உலகில் முதன் முறையாக.. பிரிட்டனில் புதிய ஆராய்ச்சி… இரண்டு தடுப்பூசி கலப்பு…!!

உலகிலேயே முதன் முதலில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா போன்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசியும் கலப்பது குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் பலவகைகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக விரைவாக கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வழிமுறைகளை கண்டறிவதற்காக இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. மேலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தோன்றிய உருமாற்றமைடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் உருமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

5 வயதில் மண்ணீரல் அகற்றப்பட்ட சிறுமி… தடுப்பூசி செலுத்தியவுடன் உற்சாகமடைந்த.. நெகிழ்ச்சி சம்பவம்…!!

லண்டனை சேர்ந்த 16 வயதுடைய பெண் ஒருவர் தடுப்பூசி செலுத்தியவுடன் மிகவும் உற்சாகமடைந்ததாக தெரிவித்துள்ளார்.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் Muswell Hill என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயதுள்ள பெண் Esther Rich. இப்பெண்ணிற்கு inherited spherocytosis என்ற விளைவு அவரின் தந்தையிடமிருந்து இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் 5 வயதாக இருக்கும்போது மண்ணீரல் நீக்கப்பட்டுள்ளது. உடலின் மிக முக்கிய பாகம் மண்ணீரல் தான் என்பதால் அது அகற்றப்பட்டவுடன் நோய் எளிதாக தாக்கும். எனவே கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் சடலம் மீட்பு… வருடக்கணக்கில் மறைத்து வந்த மூவர்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுவிட்சர்லாந்தில் உள்ள துர்காவ் மண்டலத்தில் Zezikon என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 2018ஆம் வருடம் ஜனவரி மாதம் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இசபெல்லா என்ற 20 வயதுடைய பெண் தான் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் பிரேத பரிசோதனையில் அப்பெண் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்! பூமியை நோக்கி முரட்டு விண்கல்…. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…. வெளியான தகவல்…!!

பூமியை நோக்கி தற்போது ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தில் பூமிக்கு பக்கத்தில் பல்வேறு விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதேபோன்று ஜனவரி மாதத்தில் விண்கற்கள் பூமிக்கு பக்கத்தில் வந்து சென்றன. இந்த வருடத்திலும் பல்வேறு கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி 2020XU6 என்ற மிகப்பெரிய விண்கல் பூமியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 213 மீட்டர் நீளம் கொண்டது.  இது […]

Categories
உலக செய்திகள்

பிள்ளைகளை நரபலி செய்த சம்பவம்… திடீர் திருப்பம்.. மூத்த மகளின் காதலருக்கு தொடர்பா…?

சித்தூரை சேர்ந்த தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.  சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் மதனப்பள்ளி சிவநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி புருஷோத்தம நாயுடு மற்றும் பத்மஜா. இத்தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளான அலேக்கியா மற்றும் சாயி திவ்யா ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாக நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த கொடூர சம்பவத்தில் இத்தம்பதியினரின் மூத்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தயாரித்த தடுப்பூசிக்கு தடை…? ஒப்புதல் கிடையாது… அதிரடியாக அறிவித்துள்ள நாடு..!!

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு சுவிட்ஸர்லாந்து அரசு தடைவிதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா   தடுப்பூசி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவீடன் மற்றும் போலந்து போன்ற நாடுகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு செலுத்தப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சுவிட்ஸர்லாந்து அரசும் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து கிடைத்திருக்கும் தகவல்களை அவற்றை அனுமதிக்கும் அளவிற்கு தகுதியுடையவையாக இல்லை என்று அனுமதிக்க மறுத்துள்ளது. மேலும் சுவிட்ஸர்லாந்து, […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் மாயமான விமானம்… சட்டத்தை மீறி சரக்கு ஏற்றி சென்றதா..? பத்திரிகையாளர் தகவலால் பரபரப்பு…!!

மலேசியாவில் கடந்த 2014 ஆம் வருடத்தில் மாயமான விமானம் குறித்து அதிகரமான தகவலை பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.  கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் MH 370 என்ற மலேசிய விமானம் சுமார் 239 நபர்களுடன் சென்ற போது மாயமானது. இதுகுறித்த அதிர்ச்சிகரமான செய்தி புலனாய்வு பத்திரிகையாளர் புளோரன்ஸ் என்பவரால் தெரியவந்துள்ளது. அதாவது இந்த விமானமானது மலேசியாவில் உள்ள கோலாம்பூர் என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு செல்ல இருந்தது. அச்சமயத்தில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

நான் மற்ற மக்களை போன்று தான்… ஊரடங்கில் நானும் இதனை செய்யவில்லை… உண்மையை கூறிய அதிபர்..!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஊரடங்கினால் சிகை அலங்காரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.  ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய விஷயங்களுக்காகவும் தங்கள் வீடுகளில் இருந்து 9 மைல் தூரங்களை தாண்டி பயணிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கல், “இந்த ஊரடங்கினால் மற்ற மக்களைப் போன்று நானும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாஸ்போர்ட்” இது இருந்தால் தான் எங்கேயும் போக முடியும்….. பாதிப்பை தடுக்க அரசு அதிரடி அறிவிப்பு….!!

வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்காக புதிதாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் போராடி வருகின்ற நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவர்களுக்கு பிரத்தியேகமாக பாஸ்போர்ட் ஒன்று தற்போது அறிமுகமாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டும், குறைந்து கொண்டும் இருப்பதால் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து இயக்கப்படுவதும், பின்னர் ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனை தொடர்ந்து டென்மார்க் நாட்டின் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

24 மணி நேரத்தில் இவ்வளவு பலியா…? குழந்தை உயிரிழப்பு… பிரிட்டனில் தீவிரமாகி வரும் கொரோனா …!!

பிரிட்டனில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 915 நபர்கள் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   பிரிட்டன், தற்போது வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் 915 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20,364 பேர் கடந்த 24 மணி […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டின் இராணுவத்திற்கு… முடிவு கட்டிய ஜோபைடன்… அமெரிக்காவிற்கு வரவேற்பு..!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் சவூதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்துள்ளார்.  ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து அவரின் முதல் வெளியுறவு கொள்கைக்கான உரையில், ஏமனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் சவுதி அரேபியா மக்களைக் காக்கவும். நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு போன்றவற்றை காப்பதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை சவுதி அரேபியா எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அதிவேகமாக பரவும் காட்டுத்தீ… பல வீடுகள் கருகி நாசம்… ஆஸ்திரேலியாவில் பரபரப்பு…!!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் பல வீடுகள் தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் பெர்த் என்ற நகரில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் அதைச் சுற்றியுள்ள சுமார் 80 கிலோமீட்டர் பகுதிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ கடந்த 4 தினங்களாக பரவி வருவதால் தற்போது வரை சுமார் 70க்கும் அதிகமான வீடுகள் எரிந்து அனைத்தும் சாம்பலாகியுள்ளது. இதனிடையே தற்போது காற்றின் வேகமும் […]

Categories
உலக செய்திகள்

அதிரடியாக ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்… சிறையில் தலைவர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மியான்மர் அரசை கைப்பற்றிய இராணுவம் நாட்டின் தலைவரை இறக்குமதியில் முறைகேடு செய்ததாக சிறை பிடித்துள்ளது.   மியான்மர் அரசு மற்றும் ராணுவத்திற்கு இடையில் பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியை அதிரடியாக கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் போன்ற பல முக்கிய அரசியல் தலைவர்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் அதிரடியாக கைது செய்ததோடு சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

“இது தீவிரவாத அமைப்பு”… உலகிலேயே முதலாக… அதிரடியாக அறிவித்த கனடா…!!

உலகில் முதல் நாடாக கனடா, அமெரிக்காவில் பிரபலமாகி வரும் proud Boys குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட குழு “proud Boys”. இந்த குழு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை கொண்டுள்ளது. கனடா இந்த குழுவினை “தீவிரவாத அமைப்பு” என்று அறிவித்திருக்கிறது. மேலும் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் இந்தக் குழு […]

Categories
உலக செய்திகள்

நோயாளி இறந்து பல மணி நேரம் கடந்தும்… நடவடிக்கை எடுக்கப்படாத அவல நிலை… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவர் 5 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. எனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நோயாளி ஒருவர் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பர்மிங்காம் NHS அறக்கட்டளை தொடர்புடைய பல்கலைக்கழக மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மருத்துவமனைகள் சிலவற்றில் செவிலியர்கள் ஒரே சமயத்தில் சுமார் 17 நோயாளிகளை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இந்த நிறுவனங்களின் தடுப்பூசி… 90% பலனளிக்கிறதா..? ஆய்வில் வெளியான முக்கிய தகவல்…!!

பிரிட்டனில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி சிறந்த பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் East Angila என்ற பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இஸ்ரேலின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி Fizer மற்றும் BioNTech என்ற தடுப்பூசிகள் இஸ்ரேலில் செலுத்தப்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் தடுப்பூசிகள் 90% பயனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தற்போது பிரிட்டனில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உலகில் கோவிட்-19 ஒரு வகை தான்… ஆயிரக்கணக்கான கொரோனா இருக்கு… பிரிட்டன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டன் தடுப்பூசி விநியோக அமைச்சர் கொரோனா வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா பரவலால் தற்போது வரை சுமார் 104 மில்லியன் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில் 2.2 7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸின் மற்றொரு வகையே கோவிட்-19 ஆகும். அதாவது, கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான கொரோனா வைரஸின் வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில வகைகள் உருமாற்றம் அடைந்து காணப்பட்டுள்ளது. இவற்றில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் […]

Categories
உலக செய்திகள்

மாடெர்னா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு… இப்படி ஒரு பக்க விளைவா… பயத்தில் அமெரிக்க மக்கள்..!!

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சில நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமீலியா பிரவுன் என்ற பெண் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி சில தினங்கள் கழித்து தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் ஊறல் ஏற்பட்டதோடு அந்த இடம் சற்று வீங்கிய நிலையில் சிவந்து காணப்பட்டுள்ளது. எனவே அவர் இரண்டாவதாக தடுப்பூசி செலுத்துவதை எண்ணி கவலையடைந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

START-ஆன 2 ஆம் அலை….. அசுர வேகத்தில் நிரம்பும் மருத்துவமனைகள்….. கொரோனா பீதியில் மக்கள்….!!

கொலம்பியாவில் அசுர வேகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவி ஒரு வருடம் ஆகிய நிலையில், ஒருசில நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரண்டாம் அலை  வீசி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பிப்ரவரி மாதம் வரை தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படாது என கொலம்பியா அரசு அறிவித்துள்ளதால் […]

Categories
உலக செய்திகள்

“1 பிளேட் பிரியாணி” 6 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம்…. விலை ரூ.20000 மட்டும் தானாம்…!!

தங்க தட்டில் பரிமாறப்படும் பிரியாணி ரூ.20000 க்கு விற்கப்படுவது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. நம்முடைய நாட்டை தாண்டியும் உலகம் முழுவதும் பிரியாணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி மனதில்  நிற்கக்கூடிய பிரியாணியை ருசிப்பதே அவ்வளவு மனநிறைவு. நமது வாழ்வில் பலவகையான பிரியாணியில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். ஆனால் உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை சுவைத்தது உண்டா? அது என்ன உலகிலேயே மிகவும் உயர்ந்தது என்று கேட்கலாம். துபாய் துபாயில் ஒரு தட்டு பிரியாணி நம் நாட்டு பண […]

Categories
உலக செய்திகள்

வேற எந்த நோயும் இல்ல…. தடுப்பு மருந்தால் மரணம்….? ஜார்கண்டில் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பு மருந்தால் சுகாதார ஊழியர் உயிரிழந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மெதண்டா மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி 151 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது. இதில் தடுப்பு மருந்து போட்ட மறுநாள் மான்னு பகான் என்பவருக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை  குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவருக்கு எந்தவித நோயும் ஏற்படவில்லை . ஆனாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 36 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

என்னப்பா சொல்லுறீங்க! உடம்பில் மது சுரக்குதா…? விசித்திர நோயால் உருவாகும் மது…. ஆச்சர்ய சம்பவம்…!!

பெண் ஒருவருக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உலக அளவில் மதுவுக்காக பலரும் ஏங்கி கிடக்கும் நிலையில், மதுவை  உடலிலேயே உற்பத்தி செய்யக்கூடிய அதிக சக்தியை பெண் ஒருவர் பெற்றுள்ளாராம். அமெரிக்காவில் வசிக்கும் சாரா என்ற 38 வயது பெண்ணுக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரக்கிறதாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவருக்கு ஆட்டோ பிரீவரி சிஸ்டம் எனப்படும் ஒரு அரிதான நோய் இருக்கிறது. இதனால் அவருடைய உடலில் தானாகவே மது […]

Categories
உலக செய்திகள்

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு…. விமானத்தில் பயணிக்க தடை…. அரபுவாழ் தமிழர்களுக்கு கெட்ட செய்தி…!!

கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிய கொரோனாவுடன் மக்கள் போராடி வரும் நிலையில், சமீபகாலமாக பகொரோனா தொற்று திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இடையேயான விமான பயணிகளுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை முதல் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கடங்காத காட்டுத்தீ…. அரண்டு போன ஆஸ்திரேலியா…. பீதியில் மக்கள்…!!

ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான விலங்குகளும் சில மனிதர்களும் உயிரிழந்தன.ர் இப்போது மீண்டும் புதர்களில் காட்டுத்தீ பரவி உள்ளதால் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் பகுதியில் பலமான காற்று வீசி வருவதன் காரணமாக தீ வேகமாக பரவி வரும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். இதையடுத்து பெர்த் […]

Categories
உலக செய்திகள்

“இவர் பொய்யானவர்” நிற்க வைத்து… விஞ்ஞானியை அசிங்கப்படுத்தும் சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரை சிறுவன் ஒருவன் குற்றம் சாட்டும் வீடியோ இணையதளங்களில்  வெளியாகி வைரலாகிவருகிறது.  பிரிட்டனில் இணையதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதாவது பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரான கிரிஸ் விட்டி என்பவர் விக்டோரியா ஸ்டேஷனிற்கு அருகில் இருக்கும் Strutton Ground Marketல் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்று நிற்கச்சொல்லி ஒரு வீடியோவை பதிவுசெய்கிறார்.அதில் அச்சிறுவன் கிரிஸ் விட்டியை பார்த்து “இவர் பொய்யானவர், இங்கே நிற்கும் நபர் […]

Categories
உலக செய்திகள்

மேலும் புதிய வைரஸ் பரவும்… முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் பல புதிய வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகளில் நாம் அடுத்த நிலையை எட்டும் போது, மேலும் அதிகமாக உருமாறிய புதிய கொரோனாவை சந்திக்க நேரலாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது தற்போது பிரிட்டனில் 11 நபர்களுக்கு தென்னாபிரிக்காவில் பரவும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் யாரும் எந்த நாட்டுடனும் பயண தொடர்பில் இல்லை என்பது […]

Categories
உலக செய்திகள்

யாருக்கோ பரிசு விழுந்துவிட்டதே… பொறாமையில் பொங்கியவருக்கு… என்ன கிடைத்தது தெரியுமா…?

கனடாவில் மாகாண வரலாற்றிலேயே முதன் முறையாக லாட்டரியில் மிக பெரிய பரிசுத்தொகையை ஒருவர் பெற்றிருக்கிறார்.  கனடாவிலுள்ள மணிடோபா என்ற மாகாணத்தில் இருக்கும் வின்னிபெக் என்ற நகரில் வசிப்பவர்  John Chua. இவருக்கு இந்த மாகாண வரலாற்றிலேயே முதல் முறையாக லாட்டரியில் மிகப்பெரிய தொகை விழுந்துள்ளது. அதாவது $60 மில்லியன் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து John Chua  கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 23ம் தேதியன்று நான் தூங்கிக்கொண்டிருக்கையில் என் மனைவி என்னை அவசரமாக எழுப்பி, வின்னிபெக்கில் லாட்டரியில் $60 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

10நிமிஷத்துக்கு முன்னாடி பேசுனாரு…! என் காதல் கணவருக்கு இப்படி ஆகிட்டே… பிரிட்டனில் சோக சம்பவம் …!!

பிரிட்டனில் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களில் காதலன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த Tommy Hydes என்ற 24 வயதுள்ள இளைஞர் அவரின் மருமகனான Josh Hydes(20) என்பவருடன் கடந்த சனிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் Shefield ல் உள்ள பாலத்தில் இவர்களின் கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று பாலத்தின் இரும்பு பேரியரில் மோதி, நதியில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த Tommy Hydes மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் ஹீரோவான 99வயது தாத்தா…! நெகிழ்ந்து போன பிரிட்டன் மக்கள்…. இப்போது கண்ணீர் வடிக்கின்றனர்…!!

பிரிட்டனில் NHS ஊழியர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நிதி திரட்டி வழங்கிய இராணுவ வீரர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த ராணுவ வீரரான கேப்டன் Tom Moore(99). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். இந்நிலையில் இவர் கொரோனா காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அயராது பணியாற்றிய NHS ஊழியர்களுக்கு உதவ முடிவு செய்தார். இதன்படி தற்போது 99 வயதாகும் இவர் தன் தள்ளாடும் காலத்திலும்கூட அவரின் தோட்டத்தை சுமார் நூறு தடவை சுற்றி வருவதற்கு முடிவு செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“கன்னத்தில் முத்தமிட்டாள்” பட பாணியில்… 31 வருடம் கழித்து தாயை சந்தித்த மகள்… கண்கலங்க வைக்கும் நிகழ்வு…!!

லண்டனில் வசிக்கும் பெண் தன் 31 வயதில் தன்னை பெற்ற தாயை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனைச் சேர்ந்த பெண் யாஷிகா, தன் 18 வயதில் தன் பெற்றோரிடமிருந்து அதிர்ச்சியான செய்தியை கேட்டுள்ளார். அதாவது அவர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் யாஷிகாவின் வளர்ப்பு பெற்றோர் டொனால்ட் மற்றும் யசந்தா கடந்த 1980 ஆம் வருடத்தில் யாஷிகாவை தத்தெடுத்துகொண்டு இலங்கையை விட்டு வெளியேறி பிரிட்டன் வந்ததாக கூறியுள்ளார்கள். எனினும் வளர்ப்பு பெற்றோர் அவரை […]

Categories
உலக செய்திகள்

சவப்பெட்டியுடன் பயணம்… இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த துயரம்… உகாண்டாவில் பரபரப்பு…!!

உகாண்டாவில் சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றி சென்ற லாரி கார் மற்றும் 3 வாகனங்கள் மீது மோதியதில்  32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு உகாண்டாவில் kasese  பகுதியில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்து குறித்து செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர்  Irene Nakasiita கூறியதாவது, ” லாரி ஒன்று சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை  அதிக சுமையுடன் ஏற்றி வந்தது. அப்போது திடீரென்று அந்த லாரி சாலையில் சென்ற கார் மற்றும் 3 வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

அது வேற வைரஸ்…! இது வேற வைரஸ்…. சிக்கிய பிரிட்டன்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி…!!

பிரிட்டனில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளதாகவும், அது தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிரிட்டனில்  2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் B.1.1.7 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து மிகவும் ஆபத்தானது. மேலும் அதிக அளவில் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த  B.1.1.7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ்  பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு நீங்க தான் சரியான ஆளு”… இந்தியருக்கு முக்கிய பொறுப்பை கொடுத்த பைடன்… குவியும் வாழ்த்துக்கள்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரை  நியமனம் செய்துள்ளார். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள  அனைத்து இடங்களிலும் மலேரியாவை கட்டுப்படுத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் பஞ்சாபி என்ற மருத்துவரை மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார்.  மருத்துவர் ராஜ் பஞ்சாபி லைபீரியாவில் பிறந்தவர் . உள்நாட்டுப் போரின்போது […]

Categories
உலக செய்திகள்

விண்ணுக்கு பறப்போம் வாங்க… பிரபல தொழிலதிபர் அழைப்பு… அமெரிக்கர்களுக்கு கிடைத்த இலவச ஆஃபர்…!!

SpaceX நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. Elon Musk-ன் SpaceX என்ற நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் விண்வெளிக்கு செல்லலாம். SpaceX நிறுவனத்தின் இந்த திட்டம் தான் உலகின் முதல் all-civilian mission என்று தெரியவந்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரை இறங்க டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு சுமார்  ஏழு பேரை  […]

Categories
உலக செய்திகள்

1 வருஷமா வீட்டை விட்டு வெளியவே வராத முதியவர்… அப்புறம் எப்படி கொரோனா வந்துச்சு?… பேத்தி கூறிய அதிர்ச்சி பதில்…!!

கொரோனா பரவல் காரணமாக  1 வருடம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு  கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்று அவரது பேத்தி கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள loxwich என்ற பகுதியை சேர்ந்தவர் 91 வயது முதியவர் Peter Short. இவர் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் தற்போது அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி Peter Short-டை  […]

Categories
உலக செய்திகள்

இத்தனை நாடுகளில்…. அசுர வேகத்தில் பரவிய உருமாறிய கொரோனா…. வெளியான பகீர் தகவல்…!!

உருமாறிய கொரோனா மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பிரிட்டனுடனான தங்களுடைய விமான போக்குவரத்தை தடை செய்தது.  இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

ஆண்களுக்கு அதன் வழியாக…. கொரோனா தடுப்பூசி போட்டால் நல்லது…?… பரவும் தகவலின் உண்மை…!!

ஆண்குறி வழியாக தடுப்பூசி போட்டால் நல்லது என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலக நாடுகள் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்குறி வழியாக ஆண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது. அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

இன்னும் நூறே வினாடிகள் தான்… உலகத்தை நெருங்கும் பேராபத்து… டூம்ஸ்டே கடிகாரத்தின் அறிகுறி..!!

உலகின் ஆபத்தை கணிக்க உருவாக்கப்பட்ட டூம்ஸ்டே கடிகாரம் நள்ளிரவை நெருங்க 100 வினாடிகளே இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.  உலகில் சிறிய அளவிலான மாற்றங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு கொண்டிருப்பது வழக்கம். இதன் படி இந்த 2021 ஆம் வருடமானது மிகவும் ஆபத்தான வருடமாக இருக்கும் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்திருந்தார். இந்நிலையில் மனித இனத்தின் ஆபத்தை குறிப்பதற்காக கடந்த 1947 ஆம் வருடத்தில் அணு விஞ்ஞானிகள் இணைந்த Bulletin of the Atoic Scientists என்ற அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியாலும் தடுக்க முடியாத… புதிய வகை வீரியமிக்க கொரோனா… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா குறித்து அதிர்ச்சிகரமான தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா பிரிட்டனில் உள்ள கென்ட் என்ற பகுதியில்  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தினால் கூட இந்த புதிய தொற்றை தடுக்க இயலாத நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் புதிய வகை தொற்றை தடுக்கவில்லை எனில் இயற்கையாக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் செய்த தவறை ஜோபைடன் செய்யவில்லை… அவருடன் இணைய தயார்… அதிரடியாக அறிவித்த நாடு..!!

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் இணைய ஈரான் வெளிவிவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.  ஈரானின் வெளிவிவகார அமைச்சரான ஜாவத் சாரீப், அமெரிக்காவுடன் புதிய உறவை உருவாக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் நிறைவேற்றிய நிர்வாக கொள்கைகள் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அந்த கொள்கைகளை பயன்படுத்தவில்லை என்பதே ஆறுதல் அளிக்கிறது. மேலும் அமெரிக்கா எங்களின் எதிரி இல்லை. மேலும் இந்த உறவினால் அமெரிக்காவிற்கும் புதிய வாய்ப்புகளும் அமையும். […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பனிப்பொழிவு… சாலையில் குவிந்து கிடக்கும் அவலம்… நியூயார்க் மக்கள் கடும் அவதி…!!

நியூயார்க்கின் அதிக பனிப்பொழிவினால் நகர ஆளுநர் மக்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் நகரின் ஆளுநரான கியூமோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த பனி புயலானது அசாதாரணமானது. மேலும் இது பிற்பகலில் மிகவும் ஆபத்தானதாக மாறலாம். மேலும் மிக அபாயகரமான நிலையில் சாலைகள் இருக்கிறது.  […]

Categories
உலக செய்திகள்

தீடீரென சுற்றி வளைத்த அதிகாரிகள்… அதிர்ந்து போன பெண்… இது தான் காரணமா..?

கனடாவில் பிசிஆர் சோதனை செய்யாததால் பெண் ஒருவர் அதிகாரிகளால் ரகசியமான இடத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Nikki Mathis. இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்பு கனடா திரும்பிய Nikki கால்கரி விமான நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரின் ஆவணத்தை பரிசோதித்துள்ளனர். அதன் பின்பு Nikkiயை பல அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு வெள்ளை நிற வேனில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் எங்களுடன் வரவில்லை எனில் கைது […]

Categories
உலக செய்திகள்

“நீச்சல் குளத்தை விட்டு வர மாட்டேன்”… விலங்குகள் மீட்பு குழுவினரை திணற வைக்கும் முதலை…. வைரலாகும் வீடியோ…!!

தென்னாப்பிரிக்காவில் நீச்சல் குளத்திலிருந்த ராட்சத முதலையை விலங்குகள் மீட்பு குழுவினர் மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றியுள்ளனர்.  தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் Jacob Breytenbach மற்றும் அவரது மனைவி Angel ஆகிய இருவரும் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் நீச்சல்குளத்தில் இராட்சத முதலை ஒன்று நீந்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக  விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தம்பதியினர் தகவல் அளித்துள்ளனர் . மீட்பு குழுவினர் அந்த முதலையை நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றிய காட்சி தற்போது […]

Categories
உலக செய்திகள்

2000 ஆண்டுகளுக்கு முன்பு…. புதைக்கப்பட்ட மம்மியில்…. அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்…!!

2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மியில் இருந்து தங்க நாக்கு வெளியே வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் பத்து வருடங்களாக மம்மி குறித்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பழமை வாய்ந்த கட்டிடம்  ஒன்றில் ஏராளமான மம்மிகள் புதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆராய்ச்சி சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது மொத்தம் 16 மம்மிகளை வெளியே […]

Categories

Tech |