Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த சமாதான குழு வேண்டும்…. மோடியை பரிந்துரைக்கும் மெக்சிகோ…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிப்பதற்கு மெக்சிகோ பரிந்துரைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் சுமார் ஏழு மாதங்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், உக்ரைன் படையினரும், ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும், மார்செலோ லூயிஸ் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 5-ஆம் ஆண்டு அறுவடை திருவிழா…. விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்…!!!

சீன நாட்டில் ஐந்தாம் அறுவடை திருவிழாவை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார்கள். சீன நாட்டில் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதற்காக தொடர்ந்து ஐந்தாம் வருடமாக அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான வேளாண் கண்காட்சியானது சிங்டு என்ற தென்மேற்கு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 20 நெல் வயல்களில் வடிவமைப்புகள் செய்து, அறுவடையை பறைசாற்றியுள்ளனர். மேலும், உடற்பயிற்சி போட்டிகளும் விவசாயிகளுக்கு விருது அளிக்கும் நிகழ்ச்சியும் அறுவடை திருவிழாவில் நடக்கிறது. எனவே, விவசாயிகள் உற்சாகமாக இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

ஈரானில் பரபரப்பு…. இணையதளங்கள் முடக்கம்…. ஹிஜாப்பிற்கு எதிராக தீவிர போராட்டம்….!!!

ஈரானில் காவல்துறை காவலில்  இருந்த இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து  ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட மோதலில் ஈடுபட்ட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண், காவல்துறை காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்காக, ‘ஹிஜாப் படை’ என்ற தனி காவல்துறை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹிஜாப்பை முறைப்படி அணியாத […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சாலை விபத்து…. இந்தியர் உள்பட 7 பேர் பலி…. கோர சம்பவம்….!!

நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில்  இந்தியர் ஒருவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் பக்மதி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து பிர்கஞ் பகுதிக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான இந்தியரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த 25-வயதான அந்த இளைஞரின் பெயர் ஷரன் நாரயணம் சர்மா […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுத தாக்குதலின் போது…. குளிக்க தலைமுடிக்கு இதை பயன்படுத்தினால் ஆபத்து…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

அணுஉலை விபத்து அல்லது அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால், அப்போது கண்டிஷனர் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாக அமையும். ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கின்றது. ஆனால் அணுஉலை விபத்து அல்லது அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால், அப்போது கண்டிஷனர் பயன்படுத்தினால் நம் உயிருக்கு ஆபத்தாக அமையும். அணு ஆயுத தாக்குதலுக்குப் பிறகு கண்டிஷனர்களை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே காணலாம். அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்… 50 நபர்கள் உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாடு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு ஒன்பது வயதுக்கு அதிகமான சிறுமிகளும் பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதற்கிடையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சஹீஸ் என்னும் நகரத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளம்பெண்ணான மாஷா அமினி, ஹிஜாபை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறையினரால் கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கடுமையாக அதிகரித்த பணவீக்கம்…. மக்கள் கடும் பாதிப்பு….!!!

ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயினில் தான் பொருளாதாரம் கடுமையாக அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதனால் ஐரோப்பிய மண்டலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதத்தை ஐரோப்பிய மத்திய வங்கி அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பணவிக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து எரிவாயு, உணவு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து […]

Categories
உலக செய்திகள்

OMG: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது. சீனா நாட்டில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த தொற்று  பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை மக்களுக்கு மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் தற்போதும் இதன் பாதிப்பு 228 நாடுகள் மற்றும்  பிரதேசங்களில் உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மகாராணியார் இறந்த நாளில்… தாமதமாக வந்த ஹாரி… வெளியான காரணம்…!!!

மகாராணியார் இறந்த நாளன்று இளவரசர் ஹாரி, தாமதமாக வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியாரை ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரலில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்ற தகவல் அறிந்தவுடன் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி போன்ற ராஜ குடும்பத்தினர் அவருடன் இருப்பதற்காக விரைந்தார்கள். அதன்படி இளவரசர் ஹாரி மற்ற அரச குடும்பத்தினரோடு சேர்ந்து லண்டனிலிருந்து RAF என்னும்  விமானத்தில் அபெர்டீனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் தன் மனைவி மேகனுடன் அரச குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சனையால் […]

Categories
உலக செய்திகள்

நாட்டு மக்களை போருக்கு அழைக்கும் ரஷிய அதிபர்…. வெடித்து வரும் போராட்டங்கள்….!!!!

ரஷியாவில் 18 வயது முதல் 65  வயது வரை உள்ள ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியா உக்ரைன்  மீது 6  மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை பல நாடுகளும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன்  படைகளிடம் இழந்தும் வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு  மேற்கு நாடுகள் வழங்கும் நவீன ஆயுதங்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றங்கள்…. ஆதாரங்களை திரட்டிய ஐ.நா புலனாய்வு குழு…!!!

உக்ரைனில் நடக்கும் போரில், ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று ஐ.நா சபையின் புலனாய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் போர் குற்றங்கள் செய்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலானய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக இருக்கும் Michelle Bachelet , கடந்த மே மாதத்தில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர்…. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்….!!

ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன அமைச்சருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில்  ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பு ஜெங்குவாக்கு-க்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பு ஜெங்குவா பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரியாகவும், பொது பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். சில நாட்கள் முன்பு வரை சட்ட அமைச்சராக அவர் பணியாற்றி வந்தார். சீனாவின் முக்கிய புள்ளியாக வளம் வந்த இவர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்…. பள்ளி நுழைவு வாயிலில் சிறுவன் குத்தி கொலை…. 2 மாணவர்கள் கைது…!!!

பிரிட்டன் நாட்டில் 15 வயதுடைய சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் ஹடர்ஸ்பீல்டில்  நார்த் ஹடர்ஸ்ஃபீஸ்ட் டிரஸ்ட் என்ற பள்ளிக்கூடத்தின்  நுழைவு வாயிலில் வைத்து 15 வயதுடைய கைரி மெக்லீன் என்ற மாணவனை நேற்று முன்தினம் மதியம் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று 16 வயதுடைய ஒரு சிறுவன் கைதானார். இந்நிலையில் இன்று காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் மந்திரி…. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த நீதிமன்றம்…!!!

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் முன்னாள் சட்டத்துறை மந்திரியான பூ செங்குவா, பதவியில் இருந்த போது குற்றவாளிகளோடு இணைந்து சுமார் 58 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு சலுகைகள் செய்தது, தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது போன்ற வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா.. ஆச்சர்யம்!”…. கருவிலேயே உணவின் சுவை உணரும் குழந்தைகள்…!!!

இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கருவில் இருக்கும் போதே குழந்தைகள் தாய் உண்ணும் உணவின் சுவையை அறியும் என்ற ஆச்சர்ய தகவல் வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் டர்ஹாம் என்னும் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தாயின் கருவறையில் இருக்கும் போதே சிசு, உணவுகளின் வாசனையையும் சுவையையும் உணர்ந்து முக பாவனைகளை வெளிப்படுத்தும் என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது கர்ப்பிணி பெண்கள் 100 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 35 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் இணைவாரா ஹாரி…. எதிர்பார்ப்புடன் காத்திருந்த நாட்டு மக்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஹாரியை இளவரசர் வில்லியம் அளிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹாரி  . இவர் அரச குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கையில் செயல்பட்டார். இதனால் அரசு குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மோகன் இருவரும் அரச பதவிகள் அனைத்தையும் விட்டுவிட்டு பிரித்தானியாவை  விட்டு வெளியேறி அமெரிக்காவில் தற்போது வசித்து வருகின்றனர். ஆனால் இவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதிலிருந்து தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் அரச குடும்பத்தை […]

Categories
உலக செய்திகள்

போரில் ஈடுபட விருப்பமில்லையா?… எங்கள் நாட்டிற்கு வந்துவிடுங்கள்… அறிவித்த பிரபல நாடு…!!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், போரில் ஈடுபட விருப்பமில்லாத ரஷ்ய மக்கள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் நடக்கும் போருக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தங்கள் ராணுவத்தில் மேலும் அதிக ஆட்களை இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். கட்டாயப்படுத்தியும் மக்களை இராணுவத்தில் சேர்ப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்து விடக்கூடாது என்பதற்காக மனைவிகள் தங்கள் கணவர்களின் காலை உடைப்பதற்கும் தயாரானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. பால்மோரல் அரண்மனையில் 5 முறை உருவான வானவில்…. ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கும் அரச குடும்பத்தினர்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்ந்த பால்மோரல்  அரண்மனையில் 5  முறை வானவில் உருவானது அரச குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம்  தேதி உடல்நிலை குறைவு  காரணமாக பால்மோரல்  அரண்மனையில் உயிரிழந்தார். இவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது பின்னழியில் நின்று பணியாற்றி தூக்கிச் செல்லும் கழிவறையில் பணிபுரிந்தோர், குப்பையை அகற்றியோர்  மற்றும் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் குவித்த மலர்களை அகற்றி தூய்மைப்படுத்திய முதலான பணியாளர்களுக்கு இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் படகு கவிழ்ந்து விபத்து…. லெபனான் நாட்டு அகதிகள் 73 பேர் உயிரிழப்பு…!!!

லெபனான் நாட்டிலிருந்து வந்த படகு சிரியா நாட்டின் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அதிகமானோர் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி கொண்டிருக்கிறார்கள். லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணியை இழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமியர்களின் புனித நகரில்… அதிகளவில் கண்டெடுக்கப்பட்ட தங்கம் மற்றும் தாமிரம்…!!!

புனித நகரான மதீனாவில் பூமிக்கடியில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புனித நகரமான மதீனா, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறப்போகின்றது. இங்கு பூமிக்கடியில் தங்கம் மற்று தாமிரம் இருக்கும் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. சவுதி அரேப்பியாவின் கனிம ஆய்வு மையத்தால் மேற்கொள்ள்பட்ட ஆய்வு ஒன்றில் மதீனா பிராந்தியத்தில் உள்ள அபா அல்-ரஹா எல்லைக்குள் தங்கப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.மேலும் அதே பிராந்தியத்தில் உள்ள அல்-மாடிக் பகுதியில் நான்கு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா… கின்னஸ் சாதனையா… நம்ம ஜான் சீனா என்ன செய்திருக்கிறார் பாருங்க..!!!

“மேக் ஏ விஷ்” என்ற அறக்கட்டளை மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பங்களை ஜான் சீனா நிறைவேற்றி வருகின்றார்.   டபிள்யு.டபிள்யு.இ (WWE) மல்யுத்தப் போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் ஜான் சீனா. தனது தனித்துவுமான தாக்குதல் ஆட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக விளங்குகின்றார். ஹாலிவுட் சினிமாவில் நடிகராகவும் வலம் வரும் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவி செய்து வருகின்றார். அந்த வகையில் ‘மேக் ஏ விஷ்’ என்ற […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம்…. காவல் துறையினர் தாக்கியதில்…. 31 பேர் பலி….!!

ஈரானில் ஹிஜாப் கெடுபிடிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி மாசா என்ற 22 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது ஈரானிய பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்கள் தலைமுடியை கத்தரித்தும் அரசிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டு மக்களின் கொலைகளுக்கு…. ரஷ்யாவை தண்டிக்க வேண்டும்…. கொந்தளிப்புடன் பேசிய பிரபல நாட்டு ஜனாதிபதி….!!

உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யாவை தண்டிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோரியுள்ளார். உக்ரைனில் நடந்து வரும் போருக்கு இடையில் ரஷ்யாவின் பகுதி அணிதிரட்டல் தொடர்பான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரேனிய ஜனாதிபதி  ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரேனிய ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி கூறியதாவது, “உக்ரைனுக்கு எதிராக ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஏன் அனைத்து நாடுகளும் நிரந்தர கவுன்சிலில் உறுப்பினர்களாக இல்லை?…. நடைபெற்ற ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உக்ரைன் அதிபர் ….!!!!

நடைபெற்ற ஐ.நா.வின் 77- வது பொது சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர்  காணொளி மூலம் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் உக்ரைன் நாட்டின் நிலைமை சரியில்லாததால் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். இவர் பேசிய காணொளி நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்தியா, ஜப்பான் தனது சொந்த நாடான உக்ரைன்  மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ஏன் […]

Categories
உலக செய்திகள்

கம்போடியாவில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு…. ஒருவர் உயிரிழந்ததோடு 22 பேர் மாயம்…!!!

கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகில் சென்ற படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும் 20 நபர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த 40 பேர் ஒரு மீன்பிடி கப்பலில் நேற்று சென்று இருக்கிறார்கள். கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகே சென்ற படகு, திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமிருக்கும் 22 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை […]

Categories
உலக செய்திகள்

மன்னரின் மனைவி என்ற அந்தஸ்து கிடைத்தும்…. மாறாமல் இருக்கும் கமீலா…!!!

பிரிட்டன் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றிருக்கும் சார்லஸின் மனைவி கமீலா, பின்பற்றும் எளிய செயல்முறை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக, பிரபலமானவர்களும் பணக்காரர்களும் உண்ணும் உணவுகளின் விலை எப்போதும் அதிகமானதாகவே இருக்கும். ஆனால் பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட சார்லஸின் மனைவி கமீலாவிற்கு Queen Consort என்ற பதவி கிடைத்திருக்கிறது. அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் அவர் விரும்பி உண்ணும் உணவு டோஸ்ட்டில் வேக வைக்கப்பட்ட பீன்ஸ் தான். இந்த உணவு, அந்நாட்டில் புகழ்பெற்ற பல்பொருள் அங்காடி நிறுவனத்தில் கிடைக்கும். […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான நபர்…. 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்பு…!!!

சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டி 17 நாட்களாக மாயமாகியிருந்த நபர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கான் யூ என்ற நீர்மின்  நிலைய பணியாளரான 28 வயது இளைஞர் வெள்ளத்தில் மாட்டிகொண்டார். அவருடன் தங்கி இருந்த லூவோ என்ற சகப் பணியாளரும் அடித்து செல்லப்பட்டார். எங்கோ […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…. இந்தியா-பூடான் எல்லை கதவுகள் மீண்டும் திறப்பு…. களை கட்டிய சுற்றுலா தளங்கள்….!!

பூட்டான் ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ வழியாக மட்டுமே நுழைவு அனுமதிகளை வழங்கி இருந்தாலும் இப்போது கெலேபு , சம்ட்ரூப் மற்றும் ஜொங்கர் ஆகிய மூன்று கூடுதல் நுழைவு வாயில்கள் திறக்கப்படுகின்றது.  அசாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ட்ரூப் ஜோங்கர் மற்றும் கெலேபு பகுதிகளில் அமைந்துள்ள இந்தியா- பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு முதல் முறையாக இன்று திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்காக பூடானில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

மகாராணியார் இறுதிச்சடங்கில்…. இளவரசியிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன்…. என்ன நடந்தது?..

பிரித்தானிய மகாராணியார் 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகளுக்கு தவறாக அழைப்பு விடுத்ததாக வெளிவிவகார அலுவலகத்தால் மன்னிப்பு கேட்கப்பட்ட டென்மார்க் இளவரசி தற்போது நியூயார்க் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு குழந்தைகளுக்கு தாயாரான 50 வயதுடைய இளவரசி மேரியிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுள்ளது. முதல் முதலில் டென்மார்க் மகாராணியார் மார்கரெட்டுக்கும் இளவரசி மேரி உட்பட மூன்று அழைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்பற்ற முடிவு செய்திருந்த விதிகளின் படி ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும்…. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்…. ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை….!!

கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. 15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று ஆற்றிய உரை. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சர்வதேச விலைவாசி உயர்வு, உணவு தானியம், உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரமே பெரும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் வருங்காலத்தில் இது […]

Categories
உலக செய்திகள்

OMG: உலகில் 2 வினாடிகளுக்கு 1 இறப்பு?…. WHO வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மருத்துவம், சுகாதாரம் ஆகியவை சார்ந்த பல புள்ளிவிபரங்களை உலகசுகாதார நிறுவனமானது(WHO) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி தொற்றா நோய்கள் ஆன இதயபாதிப்பு, புற்று நோய், நுரையீறல் பாதிப்பு போன்றவை காரணமாக உலகில் 2 வினாடிகளுக்கு ஒருவர் இறப்பதாக WHO தெரிவித்து உள்ளது. இந்த இறப்புகளில் 10-ல் 9 வருவாய் குறைந்த (அல்லது) மத்திய தர வருவாய் கொண்ட நாடுகளில் தான் நிகழ்கிறது. இத்தகைய நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக் கொள்ளவோ, வந்தால் உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவோ, இது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அடாவடித்தனம்…. உலகம் சந்திக்கப்போகும்…. அடுத்து நடக்கப் போகும் பேரழிவு….?

அமெரிக்கா சந்திக்கப்போகும் அடுத்த பேரழிவு.  ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் பூதகாரமாகி வருகின்ற  நிலையில், நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு மோதிக்கொள்ளும் இந்த சூழலில் கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா – ரஷ்யா இடையே அணு ஆயுத போர் வெடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற பதற்றம் பல மக்களிடையே உள்ளது.  

Categories
உலக செய்திகள்

உலக நாடுகள் இதனை கவனிக்க வேண்டும்…. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ரஷியா…. அமெரிக்க அதிபர் வேதனை….!!!!

ரஷியா செய்வது வெட்கக்கேடான செயல் என்று அமெரிக்க அதிபர் ஜோ  பைடன்  கூறியுள்ளார். ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பேசியதாவது. வேறு நாட்டினர் மீது ரஷியா தொடுக்கும் போர் வெட்கக்கேடான செயல். மேலும் ஐக்கிய நாடுகள் வாசகத்தில்  இடம் பெற்றுள்ள முக்கிய கொள்கையை ரஷியா மீறியுள்ளது. மேலும் ரஷியா உக்ரைனை  கைப்பற்றும் நோக்கில் பழைய ரஷிய […]

Categories
உலக செய்திகள்

போரில் உக்ரைன் கைகள் மேலோங்க வேண்டும்… அதுவரை ஓய மாட்டோம்… -பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவை உக்ரைன் வெல்லும் வரை அந்நாட்டிற்கு உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் அதிகமான உயிர் பலிகள் ஏற்பட்டதோடு மக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பிரதமரான லிஸ் டிரஸ், ரஷ்ய நாட்டை இந்த போரில் வெல்லும் வரை உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

மன்னராட்சி முறையை எதிர்த்து… ஆஸ்திரேலியாவில் மக்கள் பேரணி….!!!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மக்கள் மன்னராட்சி முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். உலக நாடுகள் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. அதன்படி ஆஸ்திரேலிய அரசும் பிரிட்டன் மகாராணியாரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தது. ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் உலகில் உள்ள பல நாடுகளை தங்களின் காலனி நாடுகளாக பிரிட்டன் மகாராணியார் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற… டென்மார்க் மகாராணிக்கு கொரோனா…!!!

டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கரெத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் அரண்மனை வெளியிட்ட தகவலின் படி, ராணிக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ராணி ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் இருக்கிறார். ராணி, இந்த வாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் ராணி மார்கரெத்திற்கு, 82 வயதாகிறது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது.  இந்த வருடத்தில் ராணி மார்கரெத்திற்கு இரண்டாம் தடவையாக […]

Categories
உலக செய்திகள்

ஹாரி-மேகனின் உணர்ச்சிகரமான நிகழ்வு… இறுதி சடங்கிற்கு பின்… திட்டம் என்ன?

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்விற்கு பின் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இருவரும் அன்றிரவு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது தெரிய வந்துள்ளது. பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இருவரும் மகாராணியின் இறுதிச் சடங்கில் முக்கிய இடங்களை கொண்டு இருந்தனர். இளவரசர் ஹாரி, மகாராணியின் சவப்பெட்டிக்கு பின்னால் லண்டன் மற்றும் வின்ட்சர் கோட்டை வழியாக மேற்கொள்ளப்பட்ட ஊர்வலங்களில் கலந்து […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் மெய்க்காப்பாளர்…. டம்மி கைகளுடன் சுற்றி திரிந்தாரா….? பொதுமக்கள் பார்வையில் சிக்கிய ஏமாற்று வேலை….!!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மெய்க்காப்பாளர்கள் “டம்மி கைகளை” பயன்படுத்துவதாக சில அரச ரசிகர்கள் ஊகித்துள்ளனர். பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று கொண்டார். மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகும். இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து கழுகு பார்வை கொண்ட அரச ரசிகர்கள் மன்னருடனான இத்தகைய சந்திப்பு சந்தர்ப்பங்களின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை உலுக்கிய வெள்ளம்…. அரசு மீது அதிருப்தியில் பொதுமக்கள்….!!

பாகிஸ்தான் நாட்டில் எதிர்பாராத விதமாக கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் இப்போது மீட்பு  பணியில் சரிவர ஈடுபடாத பாகிஸ்தான் அரசு மீது அந் நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்டன் ஆய்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியானது. அதன் அடிப்படையில் சுமார் 14 மாவட்டங்களில் கடுமையாக வெள்ளம் பாதித்த 38 இடங்களில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி கூட அரசு செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளம் காரணமாக இப்பகுதியை […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்…. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவு…!!!

மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மெக்சிகோ நாட்டின் மேற்கு மைகோகன் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 7.7 என்ற அளவில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. எனவே, மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள். பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த சம்பவத்திலிருந்து தற்போது வரை மக்கள் மீளவில்லை. அதற்குள் இன்று மீண்டும் பயங்கர […]

Categories
உலக செய்திகள்

மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க…. பிரான்ஸ் அரசின் புதிய திட்டம்…!!!

பிரான்ஸ் நாட்டில் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 1970 கோடி ரூபாய் செலவு செய்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு எரிபொருள் சேமிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு மிதிவண்டிகளின் பயன்பாட்டை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எனவே, போக்குவரத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்தும் மக்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கிராமங்களில் மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க தனியாக வழித்தடம் அமைத்தல், மிதிவண்டியை வாங்குவதற்கு நிதி உதவி போன்ற திட்டங்களுக்கு அடுத்த வருடத்தில் சுமார் 1970 கோடி ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

செல்லப்பேரன் மீது அதீத அன்பு கொண்டிருந்த மகாராணி…. சுவாரஸ்ய தொகுப்பு…!!!

அமெரிக்காவிலிருந்து தன் செல்லப் பேரன் ஹாரியின் அழைப்பு வந்த உடனே உற்சாகமாகும் மகாராணியார், சில காலங்களில் மாறிவிட்டதாக அரண்மனை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹாரி, அரச குடும்பத்தை விட்டு பிரிந்து அமெரிக்க நாட்டிற்கு சென்று வாழ தொடங்கிய போதும், தன் பாட்டி மகாராணியாருடன் தொலைபேசியில் பேசுவாராம். தன் செல்லப் பேரன் ஹாரி அழைத்தவுடன் மகாராணியார் உற்சாகமடைவார் என்று அரண்மனை பணியாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், சில காலங்கள் அவரின் உணர்வில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றும் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும் வைரம்…. 10 வயது சிறுவனிடமிருந்து திருடப்பட்டதா….? வெளியான பகிர் தகவல்கள்….!!

மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் கிரீடத்தை அலங்கரிக்கும் மதிப்புமிக்க வைராமானது 10 வயது சிறுவனை ஏமாற்றி கைவசப்படுத்திய ஒன்று என அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. குறித்த வைரமானது ஆண் வாரிசுகள் அணிந்தால், அது உயிரைப்பறிக்கும் சக்தி கொண்டது எனவும் கூறுகின்றனர். அது கோஹினூர் வைரம். தற்போதைய அதன் மதிப்பு 350 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள வண்டல் சுரங்கங்க பகுதியிலிருந்து 1800-களில் கண்டெடுக்கப்பட்டதாகும். தற்போது மகாராணியார் காலமான நிலையில், அந்த வைரத்தின் உண்மையான பின்னணி குறித்து இரு […]

Categories
உலக செய்திகள்

மன்னர் மூன்றாம் சார்லஸின்…. இறுதிச் சடங்கு எப்படி நடக்கும்….? முன்னதாகவே தயாரான திட்டங்கள்….!!

செப்டம்பர் 8-ஆம் தேதி மகாராணி 2-ம் எலிசபெத் மறைந்ததை தொடர்ந்து, மன்னர் மூன்றாம் சார்லஸ் இப்போது அரியணை ஏறியுள்ளார். மகாராணி மறைந்த 11 நாட்களுக்குப் பிறகு அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த அரசு இறுதிச் சடங்கின் போது இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட சேவைக்குப் பிறகு அவர் அடக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “திருநங்கைகளுக்கு எதிரான கொடூர தாக்குதல்கள்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

திருநங்கைகளுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையில் 10,418 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அந்நாட்டின் ஊடகங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் அவர்கள் அச்சுறுத்துதழில் வாழ்கின்றனர்.  செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று ஒரு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. கரை ஒதுங்கிய 230-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்….. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

திமிங்கலங்கள்  கரை ஒதுங்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை 14 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது. இதனையடுத்து இன்றும் 230- க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 100-க்கும் அதிகமான திமிங்கலங்கள்  உயிருடன் இருந்துள்ளது. அவற்றை பத்திரமாக மீட்டு கடலில் விடுவதற்கான நடவடிக்கையில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. இந்த அனைத்து திமிங்கலங்களும் உணவு […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம்…. ஹிஜாப்பை எதிர்த்து தீவிரமாக போராடும் பெண்கள்….!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் சென்ற 22 வயது பெண்ணை காவலர்கள் அடித்துக் கொன்றதையடுத்து, ஹிஜாபை எதிர்த்து பெண்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தற்போது வரை பெண் உட்பட மூன்று நபர்கள் பலியாகியுள்ளனர். ஐந்தாம் நாளாக தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், பெண்கள் பலர் தங்களின் ஹிஜாபை கழற்றி எறிந்திருக்கிறார்கள். மேலும், அதனை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் புயலில் சிக்கி ” 4 பேர் பலி”…. அதிகாரிகள் அளித்த அதிர்ச்சி தகவல்…..!!!!!

பிரபல நாட்டில் புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கியாஷூ  தீவை  சக்தி வாய்ந்த  நான்மடோல் புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கட்டிடங்களின் மேற்கூரை பலம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும்  நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் […]

Categories
உலக செய்திகள்

இது ஒரு துரதிருஷ்டவசமான செயல்…. இந்தியா-பாகிஸ்தான் குறித்து பேசிய துருக்கி அதிபர்…. வெளியான தகவல்கள்….!!!!

துருக்கி அதிபர் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐ.நா. சபையில் பேசி வருகிறார். அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் பேசியதாவது. இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்று இறையாண்மையை நிலைநாட்டி உள்ளது. ஆனால் இன்று வரை இரு நாடுகளும் பரஸ்பர அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. இது ஒரு துரதிருஷ்டவசமானது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… 2 லட்ச ரூபாயை டிப்ஸாக கொடுத்த வாடிக்கையாளர்… அதன் பின் நடந்தது என்ன?…

அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு பீட்சா நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளர் 2.3 லட்சம் ரூபாய் டிப்ஸை ஒரு பணியாளருக்கு வழங்கிய நிலையில் அதன் பிறகு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் ஸ்க்ரான்டான் நகரத்தில் இயங்கி வரும் ஒரு பீட்சா நிறுவனத்திற்கு சென்ற எரிக் ஸ்மித் என்ற நபர் சாப்பிட்ட பின் பீட்சாவிற்கான பில்லுடன் சேர்த்து தனக்கு பரிமாறிய  பணியாளருக்கு 2.3 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இதனால் அந்த பணியாளர் மகிழ்ச்சியடைந்தார். எனினும், அவர் டிப்ஸ் […]

Categories

Tech |