போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது. கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]
