Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு ராணுவ வீரர்களுக்கு…. பயிற்சியளிக்க இந்தியா உறுதி… தகவல் வெளியிட்ட இந்திய தூதரகம்….!!!!

இலங்கை நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்கும் என்று இந்திய தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.  இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கை நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தூதர் கோபால் பாக்லே கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என உறுதிபட கூறியுள்ளார். இந்தியா தனது, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் அடிப்படையில் திறன் மேம்பாட்டில் இலங்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “கடலுக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகள்”…. அமைச்சர்கள் எச்சரிக்கை….!!!!

பிரித்தானிய கடல் படுகையில் ரஷியா கன்னிவெடிகள் வைத்திருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ரஷியா கடற்பரப்பு தாக்குதலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரித்தானிய சக்தி மையங்கள் மற்றும் இணைய சேவை கேபிள்கள் ஆகியவை கடல் நீருக்கடியில் உள்ளதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு எரிவாயு  கொண்டு செல்லும் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் உச்சக்கட்ட போராட்டம்… இருவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை…!!!

ஈரான் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லிம் மதத்தின் சட்டங்களை கடுமையாக கடைபிடித்து வரும் ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெஹ்ரான் நகரத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் அவரை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை எதிர்த்து நாடு முழுக்க பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி […]

Categories
உலக செய்திகள்

அடடே இது நல்லா இருக்கே… 2 ஆண்களை திருமணம் செய்து “ஒரே வீட்டில் வசிக்கும் பெண்” … வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் 2  கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள கோங்கோ பகுதியில் பிரான்சீன் ஜிசிலி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது முதல் கணவர் ரெமி முருலா  மற்றும் 2-வது கணவர் ஆல்பரட் ஜார்லேஸ்  என்ற இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து ஜிசிலி கூறியதாவது. நான் 6  ஆண்டுகளுக்கு முன்பு ரெமியை திருமணம் செய்தேன். எங்களுக்கு 2  குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

மெய்சிலிர்க்க வைக்கும் காதல்…. பல வருடங்களாக… கடலுக்குள் மனைவியை தேடும் கணவர்….!!!

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் உருவான சுனாமியில் மாயமான தன் மனைவியின் உடலை 11 வருடங்களாக கணவர் தேடி வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் சுனாமி உருவாகி உலக நாடுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த பேரழிவில் சுமார் 19,759 நபர்கள் உயிரிழந்ததாகவும், 2500-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒனாகவா என்ற பகுதியில் வசித்த யூகோ சுனாமியில் மாயமானார். அவரின் கணவர் சுனாமியில் உயிர் […]

Categories
உலக செய்திகள்

ஸ்வாந்தே பாபோ குளத்தில் வீசிய ஊழியர்கள்… எதற்காக தெரியுமா?.. வெளியான வீடியோ…!!!

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாந்தே பாபோவிற்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உற்சாகமாக அவரை தூக்கி குளத்தில் போட்டு கொண்டாடியிருக்கிறார்கள். உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வருடந்தோறும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும். நோபல் பரிசு என்பது சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. தற்போது இந்த வருடத்திற்கான நோபல் […]

Categories
உலக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலம்… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… என்ன காரணம்?…

பாலஸ்தீனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த 25 வயதுடைய அஹ்மத் அபு மர்ஹியா என்ற இளைஞர் ஓரின சேர்க்கையாளர். சமீபத்தில் கடத்தப்பட்ட இவர் மேற்கு கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளர் என்ற காரணத்தால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று ஹெப்ரான் பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு வருடங்களாக அவர் இஸ்ரேலில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு செல்கிறீர்களா?… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…. பிரபல நாடு தங்கள் மக்களுக்கு அறிவுரை…!!!

அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில்  அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…. ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடிப்பு…. 3 பேர் பலி…. பிரபல நாட்டின் மீது ரஷ்யா குற்றச்சாட்டு….!!!!!

ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது நேற்று காலை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.  ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைத்துள்ளார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் பங்கில்…. பயங்கர வெடி விபத்து…. 10 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்து நாட்டில் கிரீஸ்லொக் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அங்க பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

இது என்னடா கொடுமை…. பிரபல நாட்டில் பள்ளிகளில் பயிலும்…. 13 வயதிற்கு மேற்பட்ட மாணவிகளை தேடும் தலீப்பான்கள்….!!!!

ஆப்கானிஸ்தானின் பள்ளிகளில் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகளை தேடும் தலீபான்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள தலீபான்கள். இங்கு 13 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகள் இருக்கின்றார்களா என்று ஆய்வு செய்து அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே கல்வியை இழந்த 30 […]

Categories
உலக செய்திகள்

நடன அழகிகள் மீது சரமாரி கத்திக்குத்து…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நெவாடா மாகாணத்தில் நடன அழகிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நெவாடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் வேகாஸ் என்ற நகரில்  கிளார்க் என்கிற பிரபல பொழுதுபோக்கு இடம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேர கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் மற்றும் ஓட்டல்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கிளார்க் பகுதியில் கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு நாணயத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியா….? கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர்….!!!!

பிரிட்டனில் புதிய சேன்சலர் தனது மினி பட்ஜெட்டை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக The Sun முதலான அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மூத்த முதலீடு மற்றும் சந்தை ஆய்வாளரான Susannah Streeter இது குறித்துக் கூறியதாவது, “சறுக்கு மரத்தில் சறுக்குவது போல, பவுண்டின் மதிப்பு வேகமாக கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதுபோன்று இன்று காலை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே…. பிரபல நாட்டில் மீட்பு படை நாய்க்கு…. சிலை திறப்பா….?

மெக்ஸிகோவில் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரு உதவி செய்த மெக்ஸிகோவின் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபிரிடா என்ற 13 வயதுடைய மோப்ப நாய் ஓய்வு பெற்ற பின்னும் அதன் அபார திறனும், அழகும் குறையவே இல்லை. இது குறித்து மக்கள் பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரா கூறியதாவது, ” இன்று […]

Categories
உலக செய்திகள்

பொதுக்கூட்டத்தில் ஒழுங்கற்ற செயல்பாடு… பதவி நீக்கம் செய்யப்பட்ட வர்த்தக அமைச்சர்…!!!

பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவின் இந்த வருடத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்ட காரணத்தால் வர்த்தக அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய பொதுக்கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் பிரதமர் லிஸ் ட்ரஸின் தலைமையில் இயங்கும் நிர்வாகத்தின் வர்த்தக அமைச்சராக இருந்த கானா் பா்னஸ் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து தற்காலிகமாக அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், சுயேச்சை எம்.பியாக […]

Categories
உலக செய்திகள்

இவர் வெளியேறியது தான் அனைத்திற்கும் காரணம்… கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூஸ் இருவரால் அரண்மனையை விட்டு, ஒரு அதிகாரி வெளியேறியதற்கு இளவரசர் வில்லியம் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலிருந்து வெளியேறிய Sir Christopher Geidt என்ற அதிகாரி,  பொறுப்பில் இருந்திருந்தால் ஹாரி மற்றும் மேகன் நிச்சயம் வெளியேறி இருக்க மாட்டார்கள் என்று இளவரசர் வில்லியம் கருதுவதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த Sir Christopher Geidt, இளவரசர் வில்லியம் மற்றும் மகாராணியார் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். சுமார், […]

Categories
உலக செய்திகள்

இந்தியா விரும்பும் நாட்டிலிருந்து எண்ணெய்யை வாங்குமா….? பிரபல நாட்டு மத்திய மந்திரி பேச்சு….!!!!

இந்தியா எந்த நாட்டிடமிருந்து தேவையான எண்ணெய்யை வாங்கும் என அமெரிக்கா மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி பேசியுள்ளார். அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அந்நாட்டின் பெட்ரோலிய துறை மந்திரி ஜென்னிபர் கிரான்ஹோம் மற்றும் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற உயர்மட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், எரிபொருள் வாங்குவதில் ரஷ்யாவை சார்ந்து […]

Categories
உலக செய்திகள்

கமிலா முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன்…. மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன்…. நடந்த விவாகாரம் என்ன….?

கமிலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. கமிலாவுக்கும், ஆண்ட்ருவுக்கும் கடந்த 1973- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 1995-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதன் பின்னர் கமிலா, சார்லஸை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் – கமிலா என்ன தான் தாமதமாக திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவரும்  […]

Categories
உலக செய்திகள்

மர்மநபர்கள் வெறிச்செயல்…. துண்டுகளாக்கப்பட்ட காளி கோயிலின் சாமி சிலைகள்…!!!

வங்காள தேசத்தில் காளி கோவிலில் இருக்கும் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில்,  நுழைந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்து, துண்டுகளாக்கி அதனை எடுத்து சென்று சிறிது தூரத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, ஆற்றில் சிலைகளை கரைக்கும் நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்… பயங்கர துப்பாக்கிசூடு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படும். இதற்கு இஸ்ரேல் படையினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் அகதிகள் முகாமிற்கு சென்ற இஸ்ரேல் படையினர், முக்கிய குற்றவாளியை தேட அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதலில்…. ரஷ்யாவின் முக்கிய பாலம் கடும் சேதம்… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் கிரீமிய தீபகற்பத்தை சேர்க்கும் முக்கியமான பாலம் குண்டு வெடித்ததில் கடும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீமிய தீபகற்ப பகுதியானது, ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட பிறகு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஒரு புதிய பாலத்தை அமைத்தார். இந்தப் பாலம், கெர்ச் ஜனசந்தியின் இடையில் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் முக்கியமான நிலப்பரப்போடு கிரீமிய தீபகற்பத்தை ஒன்று சேர்க்கிறது. ரயில்களும், மற்ற வாகனங்களும் செல்லும் வகையில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலில் இருக்கும் இம்ரான் கான்…. எந்த நேரத்திலும் கைது?…

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், எப்போது வேண்டுமானாலும் கைதாக நேரிடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், மீது தெஹ்ரீக் -இ- இன்சாப் என்ற கட்சிக்காக பல நாடுகளில் சட்டவிரோதமான முறையில் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பெடரல் ஏஜென்சி விசாரணை மேற்கொண்டது. அதில் பத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கி பிற நாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போது, அவர் எந்த நேரத்திலும் […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதர் நியமனம்… இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?…

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நெதர்லாந்திற்கான தூதராக பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். அமெரிக்க அரசு நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதராக ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவரை நியமித்திருக்கிறது. இவரை நியமனம் செய்ததற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ஷெபாலிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இது குறித்து கமலா ஹாரிஸ் தெரிவித்திருப்பதாவது, நெதர்லாந்து நாட்டிற்கான அடுத்த தூதராக ரஸ்தான் டுகாலை […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாட்டுக்கு நாடு கடத்தல் நிறுத்திவைப்பு”…. ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததற்கு ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான். இந்த சம்பவம் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டுக்கு நாடு கடத்துவது முறையாக இருக்காது என ஜெர்மனி கருதுகின்றது. இது குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser கூறியதாவது “இப்போது உள்ள சூழலில் ஈரானுக்கு யாரையும் நாடு கடத்த வேண்டாம். ஹிஜாப் அணியாததற்கு ஈரான் நாட்டில் ஒரு பெண் கொல்லப்பட்ட விஷயம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் மீண்டும் மோதல்…. ரசிகர் ஒருவர் பலி…. அர்ஜென்டினாவில் பரபரப்பு….!!!!

அஜெண்டினா நாட்டில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனை அடுத்து மைதானம் நிரம்பி வழிந்த காரணத்தால் அது பூட்டப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முற்பட்டதால் அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் ரப்பர் குண்டுகளால் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் விஷயத்தில்…. மேற்கத்திய நாடுகள் தலையிட்டால்…. அணு ஆயுத போரை நடத்த தயங்க மாட்டோம்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பக்கபலமாக இருந்து வருகின்றது. இதனை கடுமையாக எதிர்த்து வரும் ரஷ்ய அதிபர் புதின், போரில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தலையிட்டால் அணு ஆயுத போரை நடத்த தயங்க மாட்டோம் என்று அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 1962-ஆம் […]

Categories
உலக செய்திகள்

என்னது….? செல்போன் “செயலி” மூலம்…. கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா….? பிரபல நாட்டு பேராசிரியரின் கண்டுபிடிப்பு….!!!!

கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையின் இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கை நாட்டை சேர்ந்த  உடாந்த அபேவர்த்தனே ஆவார். இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அதன் அடிப்படையில் “ரெஸ்ஆப்” என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? டெய்லி மெயில் மீது வழக்கா….? இளவரசர் ஹரி மற்றும் 5 பேர்…. தனியுரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு…..!!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, எல்டன் ஜான் மற்றும் பலர் டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளன. செய்தி நிறுவனமான டெய்லி மெயில் அதன் தலைப்புகளில் சட்டவிரோதமான தகவல்களை சேகரித்ததாகக் கூறி அதன் வெளியீட்டாளர் மீது ஆறு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் பாடகர் எல்டன் ஜான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த சட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் மற்றவர்களில் லிஸ் ஹர்லி, சாடி ஃப்ரோஸ்ட், ஜானின் கணவர் டேவிட் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நேரத்தில் இரண்டு மார்க்கமாக”…. அமெரிக்க ராணுவத்தின் அதிரடியால்…. நிலைகுலைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு….!!!!

அமெரிக்கா ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் பல பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய ஆதிக்கம் மீண்டும் ஓங்கி வருகின்றது. இதனை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவப் படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவ படைகள் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது ஒரே நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்…. பிரபல நாட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…. புறக்கணித்த இந்தியா….!!!!

இலங்கை நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த […]

Categories
உலக செய்திகள்

மேக்ரான் நண்பரா…? எதிரியா….? பரபரப்பை ஏற்படுத்திய கேள்விக்கு…. லிஸ் ட்ரஸ் பதிலளித்தாரா….?

பிரிட்டன் நாட்டில் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான லிஸ் ட்ரஸ்ஸிடம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நண்பரா….? இல்லை எதிரியா….? என்ற கேள்வி எழும்பியது. பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அடிக்கடி உரசல்கள் நடந்துகொண்டே இருந்த நிலையில், சட்டென, மேக்ரான் நண்பரா? எதிரியா? என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூறிவிட்டார் லிஸ் ட்ரஸ். அவரது பதில் பிரான்ஸ் தரப்பில் பெரும் எரிச்சலையூட்டியது. இந்தப் பெண் லிஸ் ட்ரஸ் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? 2 வாரங்களில்…. 6-வது முறை 2 ஏவுகணைகளை…. வடகொரியா ஏவியதா….?

அமெரிக்க படைகளுடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வடகொரியா செயல்பட்டு வருகின்றது. தென்கொரியா நாட்டில் கங்னியுங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அமெரிக்கா நேற்று முன்தினம் 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தென்கொரியாவும் 2 ஏவுகணைகளை தன் பங்குக்கு வெற்றிகரமாக சோதித்தது. இருப்பினும் அந்நாட்டின் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர “பாலிஸ்டிக்” ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் வடகொரியா நேற்று அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு “பாலிஸ்டிக்” ரக […]

Categories
உலக செய்திகள்

என்ன….? மியான்மரில் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை…. படம் பிடித்த பிரபல நாட்டு பத்திரிகையாளருக்கு…. 10 ஆண்டுகள் சிறை தண்டனையா….?

மியான்மரில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இங்கு வெற்றி பெற்றவர்கள் எம்.பி.யாக பதவி ஏற்க இருந்த நாளில் (கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 தேதி) ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்களின் இந்த செயலால்…. நாடு முழுவதும் இருளில் மூழ்குமா….? எச்சரித்த எரிசக்தி நிர்வாகம்…..!!!!

பிரித்தானியர்கள் இரவு நேரங்களில் துணி துவைக்கும் இயந்திரங்களை அதிகமாக பயன்படுத்த நேரிட்டால் அது, உண்மையில் நாடு மொத்தம் இருளில் மூழ்கடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3 மணி நேரம் வரையில் குடும்பங்கள் மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகின்றது. இங்கு எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள், எரிவாயு பற்றாக்குறையால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டால், குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறான சூழலில் பொதுமக்களுக்கு அவை அறிவிக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா! அசத்தல்… ” இந்திய மாணவிகளுக்கு… விக்டோரியன் பிரீமியர் விருதுகள்…!!!

ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவிகள் இருவருக்கு விக்டோரியன் பிரீமியர் விருது கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் பயிலும் பிற நாட்டைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்காக விக்டோரியன் பிரீமியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விக்டோரியா அரசு, தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறப்பான சர்வதேச மாணவர்களை கொண்டாடும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில், விக்டோரியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த ரித்திகா சக்சேனா, திவ்யங்கனா சர்மா ஆகிய இரண்டு […]

Categories
உலக செய்திகள்

கனடாவை அதிர வைத்த பயங்கர சம்பவம்…. 11 பேரை கொன்றவர் யார்?.. நீடிக்கும் குழப்பம்…!!!

கனடாவில் 11 நபர்களைக் கொன்ற கொடூர சம்பவத்தில் குற்றவாளி குறித்து மர்ம நீடிக்கிறது. கனடா நாட்டில் கத்தி குத்து தாக்குதலில் 11 நபர்களை இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது ஒரு நபர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் Saskatchewan என்ற பிராந்தியத்தில் கடந்த மாதம் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவரான  மைல்ஸ் சாண்டர்சன், செப்டம்பர் மாதம் ஏழாம் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசமா?.. ஹொங்ஹொங் அரசின் அசத்தல் அறிவிப்பு…

ஹொங்ஹொங் அரசு, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 5 லட்சம் விமான டிக்கெட்கள்  இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹொங்ஹொங் அரசு கொரோனா பரவலால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்ததை மீட்கும் முயற்சியாக 2 பில்லியன் ஹொங்ஹொங் டாலர் மதிப்பு கொண்ட 5 லட்சம் விமான டிக்கெட்களை இலவசமாக அளிப்பதாக அறிவித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டிருக்கிறது. எனினும் பெரிய விமான நிறுவனங்கள் முன்பு போன்று தங்களின் சேவையை மீட்பதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே தான் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டிற்கு சுற்றுலா சென்றால் “விமான டிக்கெட் இலவசம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச விமான டிக்கெட்டுகளை  வழங்க பிரபல நாட்டு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஹாங்காங்  நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் அதிலிருந்து சுற்றுலாத்துறை இன்னும் மீளவில்லை. இதனால் நாட்டில் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் இல்லாமல் போராடுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கெத்து காட்டும் உக்ரைன் படையினர்…. பெரும் பகுதி ரஷ்யாவிடமிருந்து மீட்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட கெர்சன் நகரின் பெரிய பகுதிகளை உக்ரைன் படையினர் மீண்டும் மீட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உச்சகட்டமாக, ரஷ்யபடையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் நான்கு முக்கிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ரஷ்ய அதிபர் வெளியிட்டார். மேலும், ரஷ்ய படையினருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதங்களை தயக்கமின்றி பயன்படுத்துவோம் […]

Categories
உலக செய்திகள்

மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும்…. ஐ.நா. பிரபல நாட்டிற்கு விடுத்த கோரிக்கை….!!!!!

ஏமன் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் 6  மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக ஏமன் நாடு உள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஏமன் அரசாங்கத்திற்கும், சவுதி படைகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதல்களை தடுக்க ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி போர் நிறுத்தம் அமல்படுத்தியது. இந்த நிலையில் இந்த போர் நிறுத்தம் மேலும் நீடிக்க […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. இரத்தம் படிந்த ஆடையுடன் சென்ற நபர்…. என்ன நடந்தது?…

அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் நடந்ததில் ஒரு நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சூதாட்ட விடுதியின் முன்புறத்தில் நேற்று காலையில் திடீரென்று கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரு நபர் பலியானதாகவும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து சூதாட்ட விடுதிக்கு முன்புறம் ஆடைகளில் அதிக அளவு ரத்தத்துடன் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “சடலத்தை பார்க்க பிணவறைக்கு சென்ற doctor”…. காத்திருந்த பேரதிர்ச்சி ….!!!!!

பிரபல நாட்டில் ஒரு நபரை உயிரிழந்ததாக கூறி உயிருடன் பிணவறையில்  வைத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் kevin Reid என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி  கடந்த 5-ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இறந்ததை செவிலியர்கள் தான் உறுதி செய்துள்ளனர்.மேலும் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இறப்பு சான்றிதலுக்காக […]

Categories
உலக செய்திகள்

கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்…. முக்கிய குற்றவாளி அதிரடி கைது…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒரு நபர் கைதாகி உள்ளார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி ஜஸ்லின் கவுர், இவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன் தீப் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த திங்கட்கிழமை அன்று நெடுஞ்சாலையில் வைத்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… திடீரென்று வெடித்து சிதறிய ஆப்பிள் வாட்ச்… மருத்துவமனையில் பயனாளர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆப்பிள் வாட்ச் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் பயனாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க நாட்டில் ஒரு நபர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி அளவு திடீரென்று பெரிதாகியுள்ளது. அதை தொடர்ந்து, வாட்ச் வெடித்து சிதறி விட்டது. அதற்கு முன் வாட்ச்சில் அதிக சூடு இருந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து அதிக அளவில் புகையும்  வெளியேறியுள்ளது. வாட்ச் வெடித்து சிதறியதில் அதன் பயனாளர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. சீனாவுடன் இலங்கை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை… அதிபர் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சீன நாட்டுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். இலங்கை வரலாறு காணாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. எனவே, சீன போன்ற பல நாடுகளிடம் 47, 486 கோடி ரூபாயை கடனாக பெற்றது. அதனை திரும்ப செலுத்த முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கேட்டது. பல தடவை மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

குறையுமா இந்திய பொருளாதார வளர்ச்சி?… வெளியான உலக வங்கியின் அறிக்கை…!!!

உலக வங்கியானது இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறையும் என்று கூறியிருக்கிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நடப்பதற்கு முன் தெற்காசிய பொருளாதாரத்திற்கான அறிக்கை நேற்று வெளியானது. அதில் உலகின் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா நன்றாக மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளை காட்டிலும், குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் இந்திய நாட்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை இத்துடன் மூன்றாம் தடவையாக உலக வங்கி […]

Categories
உலக செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு… யாருக்கு தெரியுமா?… வெளியான தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் பெண் எழுத்தாளர் ஒருவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, இலக்கியம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் உலக அளவில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்தில் இயற்பியல், மருத்துவம் மற்றும் வேதியியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அனி எர்னாக்ஸ் என்ற […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இளவரசர் வில்லியமை விட்டு விட்டு ஓடிய கேட்…. வைரலாகும் வீடியோ….!!!!!

இளவரசி கேட் இளவரசரை  விட்டுவிட்டு ஓடும்  வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் இளவரசியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார்.  கடந்து சில நாட்களுக்கு முன்பு இளவரசர் வில்லியமும்   அவரது மனைவி கேட்டும் பொதுமக்களை சந்திப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து  புறப்பட்ட நேரத்தில் திடீரென இளவரசி கேட் இளவரசரை விட்டு விட்டு ஓடியுள்ளார். எதற்காக கேட் இப்படி ஓடுகிறார் என்று வில்லியம்  பார்த்தபோது. அங்கே ஒரு […]

Categories
உலக செய்திகள்

இவர்களை உடனடியாக பணியில் இருந்து தூக்க வேண்டும்…. பிரபல நாட்டில்”நடைபெற்ற போராட்டம்”….. போலீசாரின் கொடூர செயல்….!!!!

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாட்டில் முல்லை தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் சிலர்  சட்டவிரோதமாக மீன் பிடித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதிகாரிகளும்    அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று மீன் பிடிப்பவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சிறந்த எழுத்தாளரா?…. இலக்கியத்திற்கான “நோபல் பரிசை கைப்பற்றும் பெண்” …. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள விருதுகளில் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசாகும். இந்த விருதானது ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், இலக்கியம்,வேதியல் என பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல்  வெளியிடப்பட்டது. இதனையடுத்து  இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவர்  எழுதிய எல் அகுபேஷன் […]

Categories

Tech |