Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமருக்கு ஏற்பட்ட நெருக்கடி…. அமைச்சரவையில் குழப்பம்…!!!

இங்கிலாந்தில் பிரதமருக்கு நெருக்கடி உண்டாகும் விதமாக, அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வெல்லா பிரேவர்மென் என்ற பெண், உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே நேற்று இரவு அவர் தான் தவறு செய்ததாகவும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 14ஆம் தேதி அன்று நிதி மந்திரியான குவாசி வார்தெங்கை நீக்கிவிட்டு ஜெரேமி ஹன்ட்-ஐ  அமைச்சரவையில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பத்ம பூஷன் விருதைப் பெற்ற மைக்ரோசாப்ட் சிஇஓ…. வெளியான முக்கிய தகவல்….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சாதனை படைத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4  பத்ம பூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 17 […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கரம்… தீ விபத்தில் இடிந்த பிரம்மாண்ட மசூதி….!!!

இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மிகப்பெரிய மசூதியினுடைய குவிமாடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க சுமார் 5 மணி நேரங்களாக போராடினர். எனினும், குவிமாடம் இடிந்து விழுந்தது. திடீரென்று தீப்பற்றி எரிய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இதில், […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல் வழக்கு…. கோட்டபாய ராஜபக்சேவிற்கு சம்மன்…. உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் அட்டூழியம்…. தென்கொரிய எல்லையில் பீரங்கி சோதனை…!!!

தென்கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டுகளை எறிந்து வடகொரியா  சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியும் ஏவுகணை சோதனையும் சமீப நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமீப காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்த கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது. இதன் காரணமாக, கொரியா தீபகற்பம் பதற்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கிகளை எறிந்து […]

Categories
உலக செய்திகள்

அடடே….! பிரபல நாட்டிற்கு பயிற்சியளிக்கும்…. முன்னாள் பிரிட்டன் விமானப்படை பைலட்டுகள்…..!!!!

பிரிட்டனின் முன்னாள் போர் விமானங்களை கவர்ச்சியான சம்பளத்துடன் சீன அரசு தங்களது படையினருக்கான பயிற்சியாளர்களாக அமர்த்தி வருவதாக அண்மையில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமன் 30 விமானிகள் தற்போது சீனா போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுத்த பிரிட்டன் ராணுவ விமானங்களில் சீன அரசு கவர்ந்து வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு குண்டு வீச்சு…. விமானங்கள் இடைமறிப்பு…. அமெரிக்க போர் விமானங்களின் செயலால் பதற்றம்….!!!

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H  ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்கள் கிழமை அன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாய்க்கிழமை அன்று தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும் அதில் ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இடைமறிக்க இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம்… புடினின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பிராந்தியங்களில் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டிடம் கைப்பற்றிய ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டோடு சேர்த்துக் கொண்டனர். உலக நாடுகள், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் ராணுவம், சட்டவிரோதமான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. சூட்கேசுக்குள் சடலமான சிறுமி…. பிரபல நாட்டில் வெடித்துள்ள புலம்பெயர்தல் பிரச்சினை….!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா (Lola Daviet, 12) என்னும் மாணவி, பின்னர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அந்த பிரச்சினை நாடு முழுவதும் அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது. அதற்குக் காரணம், லோலாவைக் கொடூரமாக கொலை செய்த Dahbia B என்னும் இளம்பெண், ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என்பது தான். ஆகத்து மாதம் 20ஆம் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 41 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச கேக் ஏலம்… விலை என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தின் போது சுமார் 41 வருடங்களுக்கு முன் தயார் செய்யப்பட்ட கேக், ஏலத்திற்கு விடப்படவிருக்கிறது. பிரிட்டனின் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் கடந்த 1981 ஆம் வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் 3000- திற்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த விருந்தினர்களில் ஒருவரான நைஜல் ரிக்கட்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தார். அவர் மன்னர் சார்லஸ் திருமணத்தில் […]

Categories
உலக செய்திகள்

வருண் தவான் நடிக்கும் “பெடியா”….. டிரைலர் வெளியீடு…. வைரலாகும் செம வீடியோ….!!!!

இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”. இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”. இந்த திரைப்படத்தின் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக “பெடியா” டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… இது என்ன பயங்கரம்?… 80% பேரை கொல்லும் அதிர்ச்சிகரமான சோதனை…!!!

அமெரிக்க நாட்டின் ஒரு ஆய்வகத்தில் ஹைபிரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை உருவாக்கி விஞ்ஞானிகள் ஆபத்துடன் விளையாடியதாக கடுமையான சர்ச்சை எழுந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் ஒரு ஆய்வகமானது, ஒமிக்ரான், வூஹான் ஆகிய இரண்டு கொரோனா மாதிரிகளையும் ஒன்றாக சேர்த்து புதிதாக ஹைப்ரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை தயாரிக்கும் சோதனையை செய்தது. இதில் 80% எலிகள் இறந்ததாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வை பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு மேற்கொண்டிருக்கிறது. இவ்வாறான […]

Categories
உலக செய்திகள்

இதைத்தவிர வேறு வழியில்லை…. இருளில் மூழ்கப்போகும் பிரபல நாடு… எரிவாயு தலைவர் எச்சரிக்கை…!!!

பிரிட்டனில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று எரிசக்தி தலைவர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது சரிவடைய தொடங்கியிருக்கிறது. எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மின் தடை ஏற்படும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்று எரிசக்தி தலைவராக இருக்கும் ஜான் பெட்டிகிரேவ் கூறியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மக்களுக்கு இவ்வாறான […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் காரிலிருந்து வரும் வாசனை…. வெளியான வினோத காரணம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்திற்கு வித்தியாசமான பொருளை எரிபொருளாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்தில் ஒயின், சீஸ் இரண்டும் கலந்த கலவை தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மன்னர் சார்லஸிற்கு மிகவும் விருப்பமான இரண்டு விஷயங்கள், இயற்கையும் வாகனங்களும் தான். எனினும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர். வாகனத்திலிருந்து வெளியேறும் நச்சு புகையால் இயற்கை மாசடையும். எனவே, ஒயின் மற்றும் சீஸை கலந்து பயன்படுத்தும் விதத்தில் வாகனத்தின் எஞ்சினை மாற்ற நினைத்திருக்கிறார். அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

இப்போ தேர்தல் வச்சா இவர்தா பிரதமர்…. பிரிட்டனில் ஏற்பட்ட மாற்றம்…!!!

பிரிட்டனில் தற்போது பிரதமர் தேர்தல் நடத்தினால், ரிஷி சுனக் வெற்றியடைந்திருப்பார் என கட்சி வாக்காளர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் பதவிக்காக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில் மீண்டும் கட்சி வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 55% ரிஷி சுனக்கிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. தேர்தலில் லிஸ் டிரஸிற்கு வாக்களித்தவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் புதிய பிரதமரை நியமிக்க […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் திடீரென தோன்றிய பாம்பு…. பீதியில் பயணிகள்….!!!!

புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் “யுனைடெட் ப்ளைட் 2038”-ல் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில்…. இந்திய வீரர் சஜன் பன்வாலாவின் சாதனை….!!!

23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார். 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார். இதனை அடுத்து 77 கிலோ எடைப்பிரிவின் கிரேகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
Uncategorized உலக செய்திகள்

சூட்கேஸிற்குள் மாணவி சடலம்…. உடலில் இருந்த எண்கள்…. நீடிக்கும் மர்மம்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில்  வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இவர் தான் பிரதமராக வேண்டும்… இணையத்தில் கோரிக்கை மனு…!!!

பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சனை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஒரு கோரிக்கை மனு உருவாக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டின் அரசாங்கத்தில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய இணையதள பக்கத்தில் வரப்போகும் அடுத்த தேர்தலில் நடைபெற உள்ள மிகப்பெரிய குழப்பத்தை தீர்ப்பதற்கு போரிஸ் ஜான்சன் தான் சரியானவர் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு ஒரு மனு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு”…. கருத்து தெரிவித்த முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாகி….!!!

ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என ஜேமி டைமன் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டில் அடுத்து வரும் 6 முதல் 9 மாதங்கள் வரை பொருளாதார மந்தநிலை ஏற்படும்.  அந்நாட்டின் முதன்மை முதலீட்டு வங்கி நிறுவனமான ஜே.பி.மார்கன் சேஸ்-இன் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த  2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட அவ்வளவு மோசமாக இருக்காது. இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்…. எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்….!!!

ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசும், எரிபொருள் விநியோக நிறுவனமும் சேர்ந்து நுகர்வோருக்கு மானியம் அளித்துள்ளன. இதற்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டதால் […]

Categories
உலக செய்திகள்

அடடே….! 26 வயதில் மந்திரி பதவி…. அசத்தும் பிரபல நாட்டு இளம்பெண்….!!!

சுவீடன் நாட்டில் காலநிலை மந்திரியாக இளம்பெண் ரோமினா போர்மக்தாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய வயது 26 ஆகிறது. ஸ்டாக்ஹோம், சுவீடன் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், வலது சாரி ஜனநாயக கட்சியின் ஆதரவோடு உல்ஃப் கிறிஸ்டெர்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அங்குள்ள மாடரேட் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் லிபரெல் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் இந்த புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தலைமையில் சுவீடன் அரசின் […]

Categories
உலக செய்திகள்

“இனி உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை”…. திட்டவட்டமாக தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!

மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் உக்ரைனில் மிகப்பெரியளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும்…. பிரபல நாட்டில் “நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்…. பாதிக்கப்பட்ட பொதுத்துறை….!!!!

பிரபல நாட்டில் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும்  என கூறி  நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மேலும் பல தொழில் சங்கங்கள் இதில் கலந்து கொள்ள  பல தொழில் சங்கங்களுக்கு  அழைப்பு விடுத்துள்ள நிலையில் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி உயர்வதுடன் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த […]

Categories
உலக செய்திகள்

அனைவரும் நலமாக வாழ வேண்டும்… பிரபல நாட்டில் “குத்து விளக்கு ஏற்றி கொண்டாடப்பட்ட தீபாவளி”….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபாவளி கொண்டாடியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடம் அமைந்துள்ளது. இங்கு வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திரிகள் ஏற்றி அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் கூறியதாவது. […]

Categories
உலக செய்திகள்

“உலகத்தில் இதுதான் ஆபத்தான நாடு”…. ஜோ பைட்டனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் ஜனாதிபதி பிரபல நாடு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 14-ஆம் தேதி  ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன்  கூறியதாவது. உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான். ஏனென்றால் அந்த நாடு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல்  ஆயுதங்களை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இவரின்  கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

விருது வாங்க சென்ற எழுத்தாளர்…. மேடையில் செய்த காரியம்…. என்ன காரணம்?….

சுவிட்சர்லாந்து நாட்டின் எழுத்தாளருக்கு ஜெர்மன் புக் விருது கிடைத்ததை தொடர்ந்து, அவர் மேடையிலேயே மொட்டை அடித்திருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிம் டி எல் ஹொரைசன் என்ற எழுத்தாளர் தன் முதல் நாவலுக்காக (Blutbuch) german book என்ற விருதை பெற்றார். அவரை வெற்றியாளராக அறிவித்த பின் மேடைக்குச் சென்று ஒரு பாடல் பாடினார். அதனைத்தொடர்ந்து ட்ரிம்மரை வைத்து தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். அதற்கான காரணம் என்னவெனில், ஈரான் நாட்டில், ஹிஜாப் சரியாக அணியவில்லை […]

Categories
உலக செய்திகள்

ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்…. சீனாவிற்கு பதிலடி கொடுத்த தைவான்…!!!

சீன அதிபர் ஜின்பிங் சுதந்திரமும் ஜனநாயகமும் சமரசம் கிடையாது என்று கூறியதற்கு தைவான் பதிலடி கொடுத்திருக்கிறது. சீன நாட்டில் அதிகம் பேர் எதிர்பார்த்த ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஜின் பிங்  உரையாற்றிய போது, தைவான் பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது, தைவான் விவகாரத்தில் பிரிவினைவாதிகளை வென்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை  எதிர்க்கும் நிலைப்பாட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம். தைவான் விவகாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

பூச்சிகளை வறுத்து சாப்பிடலாமா?… சிங்கப்பூர் அரசின் புதிய யோசனை…!!!

சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், […]

Categories
Uncategorized

என்ன காரணமாக இருக்கும்?…. பிரபல நாட்டில் “மனைவி மற்றும் மகளை படுகொலை செய்த நபர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள great welding field பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த jillu nash என்ற பெண் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் கடந்த மாதம் 8-ஆம்  தேதி ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சார்லஸ்-டயானாவின் மகளா?… வெளியான புகைப்படம்….!!!!

இளவரசர் சார்லஸ்-டயானாவின் ரகசிய மகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த சார்லஸ்-டயானா தம்பதியின் ரகசிய மகள் எனக் கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து கடந்து 2015 -ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து globe என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் டயானா-சார்லஸ் தம்பதியின் மகள் பெயர் சாரா என கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் அவரை காண கேட் மிடில்டன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டயானாவின் 19-வது வயதில் […]

Categories
உலக செய்திகள்

எங்களால் இதை நிறுத்த முடியாது…. மீண்டும் அணுசக்தி தடுப்பு பயிற்சியை தொடங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு மீண்டும் தனது  ராணுவ பயிற்சியை  தொடங்கியுள்ளது. பிரபல நாடான நேட்டா  தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்க  ரஷியா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே திட்டமிட்டது. ஆனால் இன்று தான் ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியது. இதில் ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து என 30 நாடுகளை சேர்ந்த 60 விமானங்கள் பங்கேற்கும். இந்த பயிற்சி இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறும். ஆனால் பலரும் இந்த பயிற்சியை  கைவிட […]

Categories
உலக செய்திகள்

இதற்கு வெளிநாட்டின் சதிதான் காரணம்…. மீண்டும் வெற்றி பெற்ற “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்”…..!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் பொது தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் அதிபராக இம்ரான் கான் இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷபாஸ்  ஷெரீப் பதவியேற்றார். இதனால் முன்னாள் அதிபர்  நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனடியாக பொதுத்தேர்தலில் நடத்த […]

Categories
உலக செய்திகள்

“அடடே! உலக சாதனை”…. உலகிலேயே வயதான மருத்துவர் இவர் தான்….!!!

அமெரிக்க நாட்டில் ஹோவர்ட் டக்கர் என்பவர் உலகிலேயே அதிக வயது கொண்ட மருத்துவராக  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் என்ற நகரில் வசிக்கும் ஹோவர்ட் டக்கர் என்ற மருத்துவர் 75 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அவர் கொரோனா தொற்று காலகட்டத்திலும் கூட காணொளி வாயிலாக மருத்துவ சேவையை தொடர்ந்து கொண்டிருந்தார். ஓய்வு […]

Categories
உலக செய்திகள்

யாரையும் பழி வாங்குவது நோக்கமில்லை…. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி….!!!!

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அமெரிக்காவில்  சர்வதேச நாணய நிதிய மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய நீதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  அவர்  கூறியதாவது. ஒரு நாட்டின் குற்றங்களை கண்காணித்து அவற்றை பின் தொடர்ந்து செல்லும் அமைப்புதான் அமலாக்கத்துறை. அந்த அமைப்பில் நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமானவை. மேலும் மத்திய புலனாய்வு அமைப்பாக இருந்தாலும் சரி பிற விசாரணை அமைப்புகளாக  இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….. பிரபல நாட்டு இராணுவ தளத்தில் தாக்குதல்…. 11 பேர் பலி….!!!!

ரஷ்ய இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் அருகே ரஷ்ய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடு ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சிக்கிறது…. உலக பணக்காரரில் ஒருவர் குற்றச்சாட்டு….!!!!

ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 6 மாதங்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் நாட்டில் இணைய சேவையை முடக்க ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு எதிராக களமிறங்கிய மக்கள்…. பிரபல நாட்டில் பிரம்மாண்டமான போராட்டம் வெடித்தது….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்ய மாதக்கணக்கில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து மிகப்பெரிய  உக்ரைன் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, ரஷ்யாவுக்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷியா…. திடீரென தனது காதலிகளை கரம் பிடித்த ராணுவ வீரர்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா தனது நாட்டு வாலிபர்களையும் ராணுவ படையில் சேர்த்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்தனர். ஆனாலும் இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு  இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ராணுவ உதவிகளையும் செய்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!… திடீரென பாருக்குள் நுழைந்த தீவிரவாதிகள்….. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு   சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு  மாகாணத்தில் பார் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாருக்கு  தினம்தோறும் ஏராளமானோர் வருவது வழக்கம். அதேபோல் இன்று திடீரென பாருருக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுகாயமடைந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது அதிருப்தியில் இலங்கை…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதியான ரயில் பெட்டிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படுவதாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலிருந்து சுமார் 160 ரயில் பெட்டிகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்தியாவின் கடன் எல்லைக்குள்ளான சுமார் 120 கோடி ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது தெரிய வந்திருக்கிறது. நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய வேறுபாடுகள் அந்த பெட்டியில் உள்ளது. இதன் காரணமாக, அந்த ரயில்கள் இலங்கை தண்டவாளங்களில் சரியாக செயல்படாமல்  இருக்கிறது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்…. தீப்பிடித்து எரிந்த மின் உற்பத்தி நிலையம்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், அங்கு அதிகளவில் தீ […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வீரர்கள்…. வாலிபர் உட்பட 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலிபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் பாலஸ்தீனியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

திடீரென பற்றிய தீ…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஆகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களால் எவ்வளவு முயற்சித்தும் அங்கிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. துரித நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி நாட்டில் அமஸ்ரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடி விபத்தால் ஒரு பகுதி முழுவதும் தீயினால் பற்றி எரிந்தது. மேலும் மற்றொரு பகுதி இடிந்து விழுந்து நாசமானது. இந்த இடிப்பாடுகளுக்குள் அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில்…. 6 பேருக்கு மரண தண்டனை…. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!!!

காங்கோ நாடு ஒரு ஜனநாயக குடியரசாக உள்ளது. இந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் இரண்டு சீன சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு ராணுவ கர்னல்கள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் நான்கு ராணுவ வீரர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மரண தண்டனை பெற்ற ஆறு பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலே குறிப்பிட்ட இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பொய்யான செய்திகளை பரப்பினால்…. “இது தான் கதி”…. அதிரடி காட்டிய துருக்கி அரசு….!!!!

துருக்கி நாட்டில் பொய்யான செய்திகளை பரப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாட்டின் அதிபர் எர்டோகன் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றது என குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் அரசு சார்பில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த வாரம் வெளியான பொய்யான செய்திகள் மற்றும் அதனுடைய உண்மைத்தன்மைகளை குறித்து பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

500 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள்…. இலங்கைக்கு இலவசமாக வழங்கும் சீனா…!!!

சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் […]

Categories
உலக செய்திகள்

இவருக்கு அனைத்து உரிமையும் உண்டு…. இளவரசர் ஹரிக்கு குவிந்து வரும் ஆதரவு….!!!!

இளவரசர் ஹரி கவனமாக தனது கருத்துக்களை வெளியிட வேண்டும் என ராஜ குடும்பம் சார்பில்  கருத்து வெளியிடும் ஒருவர் கூறியுள்ளார். பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் அரச குடும்பத்திற்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார். இதுகுறித்து ராஜா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியதாவது. தனது அனுபவங்கள் தொடர்பில் உண்மையை உடைத்து பேச இளவரசர் ஹரிக்கு எல்லா உரிமையும் இருக்கு. மேலும்  ராஜ குடும்பத்தை நடுங்க வைத்த ஓப்ரா வின்ஃப்ரே […]

Categories
உலக செய்திகள்

நான் வேறு நாட்டு தலைவர்களுடன் பேச மாட்டேன்… ரஷிய அதிபர் புதின் காட்டம்….!!!!

அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு நடைபெறகிறது. இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி- 20 நாடுகளில் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா என பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு காரணம் ரஷியா-உக்ரைன்  இடையிலான போர் நடைபெறுவது தான். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories

Tech |