பிரபல நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் உள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டுத்தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மேலும் […]
