உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வருகின்ற 5 வருடங்களில் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மேயர் சத்யா கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மண் பாதுகாப்பு இயக்கம், கல்குவாரி உரிமையாளர் சங்கம் சேர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தியுள்ளன. ஓசூர் மூக்கண்டபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்கத்தின் நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கியுள்ளார். அதில் மாநகராட்சி மேயர் எஸ். ஏ. சத்யா, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பொன்மணி, குவாரி […]
