உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் உருவாகி இன்று உலகையே மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். அதிபரின் இந்த குற்றசாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்தது. […]
