சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. […]
