ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் உலக அளவில் தங்களது விற்பனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல சட்டச் சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவில்லை. இதையடுத்து உலக அளவில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறி சுமார் 38,000 பேர் பல்வேறு நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். […]
