காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒவ்வொரு வருடமும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்னும் தலைப்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களாவன, வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் வருடம் தோறும் 16 கோடி முதல் 20 கோடி பேர் இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகளுக்கு ஆளாகின்ற அபாயமான காலகட்டம் உள்ளது. மேலும் இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் […]
