கொரோனா அச்சுறுத்தலின் போது அமல்படுத்தப்பட்டஉலகளாவிய ஊரடங்கு காரணமாக பூமியின் வளிமண்டலத்தில் காற்று மாசு குறைந்திருப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டின் நவம்பர் மாத நடுப்பகுதியில் சீனாவில் வெடித்த கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்க சர்வதேச நாடுகள் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தின. மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவானது. விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கான எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. உணவு விடுதிகள், […]
