Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் பதற்றம்…. பேசிக்கொண்ட நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட்டுகள் …!!

நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  புஸ்பா கமல் தாஹல், துணைப் பிரதமர்  இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழல், உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று நேபாளம் – சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான உறவு குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய புஷ்பா கமல்தாஸ், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய […]

Categories
உலக செய்திகள்

இதுவரை இப்படி ஆனது கிடையாது…. ஒரே நாளில் உலகை மிரட்டிய கொரோனா …!!

உலகிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளின் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளது. அங்கு 2,297,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 121,407 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. ரஷ்யா,UK […]

Categories
உலக செய்திகள்

திடீர் வெடிகுண்டு தாக்குதல்…. 3 பேர் உயிரிழப்பு…!!

பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்டாவின் மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றின் மேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற இத்தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

தாமதமாக வந்த சொந்த மகள்…. காரணாம் கேட்டு தந்தை செய்த செயல்…!!

இரவு நேரம் வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் கெர்மனை பகுதியை சேர்ந்த ரெஹானா அமெரி என்கிற பெண் நேற்று முன்தினம் வீட்டிற்கு இரவு 11 மணி அளவில் தாமதமாக வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவரது தந்தை காரணத்தை கேட்டுள்ளார். மகள் காரணத்தை சொல்வதற்குள் இரும்பு கம்பி ஒன்றால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரெஹானா ரத்த வெள்ளத்தில் சரிய அவரை காரில் ஏற்றிக்கொண்டு நகருக்கு […]

Categories
உலக செய்திகள்

வெற்றி பாதையில் ரஷ்யா….? கொரோனா தடுப்பூசி ரெடி…? 18 பேருக்கு செலுத்தப்பட்ட மருந்து…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு தன்னார்வலர்கள் மீது பரிசோதனைக்கு செலுத்தப்பட்டுள்ளது ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ய அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலர்கள் 18 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தி இதுவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உடல்நிலை குறித்த புகார்கள் எதுவும் வந்ததாகவும் தகவல் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட 18 தன்னார்வலர்களும் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.60 லட்சம் பேர் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

நிறவெறி தாக்குதல்…. கருப்பின வாலிபரை சுட்ட போலீஸ் மீது கொலை வழக்கு…!!

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக் கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி போலீஸ் அதிகாரி ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதால் கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ஜார்ஜ் என்பவர் மரணம் அடைந்தார். அதை  தொடர்ந்து நிறவெறி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் அதிக அளவு போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அட்லாண்டாவில் வைத்து மற்றொரு கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ப்ருக்ஸ் என்பவர் காவல்துறையினரால் […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி? ட்ரம்ப் நம்பிக்கை…!!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனஅதிபர் ட்ரம்ப் அவசர காலக்கெடு வைத்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக கொரோனா  தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என அதிபர் அதிகாரிகளை முடுக்கிவிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளை விட தொற்றால் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிபர் கொரோனா  தொற்று பரவலை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை என விமர்சனங்கள் மக்கள் மத்தியில் […]

Categories
உலக செய்திகள்

“சவப்பெட்டியில் கொரோனாவால் இறந்தவர் சடலம்” திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி…!!

சவப்பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாபோலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பிரேசிலில் Goias பகுதியில் இருக்கும் சோதனை சாவடி ஒன்றில் ராணுவ போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஓட்டுநரிடம் விசாரிக்க சென்ற போது 22 வயது இளைஞனான அவர் ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டதால் சந்தேகமடைந்த போலீசார் காரில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஓட்டுநர் சவப்பெட்டி இருப்பதாகவும் அதற்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இப்படி தான் பண்ணுது….! உலகுக்கே அமெரிக்க ஆய்வு தரும் புது தகவல்….!!

கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வு தகவலை அமெரிக்க தேசிய சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ளார் கொரோனா தொற்று குறித்து பல நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நோயாளியின் உடல் நிலைக்கு தகுந்தவாறு தொற்றின் தாக்கம் இருப்பது மருத்துவ நிபுணர்களை திணற வைத்து வருகின்றது. இதுகுறித்த ஆய்வு தகவல் ஒன்றை அமெரிக்காவின் தேசிய சுகாதார இயக்குனர் பிரான்சிஸ் தற்போது வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிக்கு தகுந்தாற்போல் தொற்று மாறுபட்டு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு அழிவு…. அசத்தும் தொழில் நுட்ப முககவசம்…. மாஸ் காட்டும் சுவிஸ் நிறுவனம் ..!!

கொரோனா வைரஸை அழிக்கும் முகக்கவசம் கண்டுபிடித்துள்ளதாக சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது சுவிட்சர்லாந்தை மையமாக வைத்துஜக் நகரில் இயங்கி வரும்  லிவிங்கார்டு டெக்னாலஜி நிறுவனம் ஒன்று துணிகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு தாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொரோனா வைரஸை அளிப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே தொழில்நுட்பத்தை உபயோகித்து முக கவசங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “முக கவசம் குறித்து கூறியபோது இந்து தொழில்நுட்பம் மாஸ் தயாரிக்கப்பட்ட துணியின் மேற்பரப்பில் ஒரு நேர்மறை மின்னோட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தேர்தலில் தலையீடா ? சீனா பரபரப்பு விளக்கம் …!!

அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடும் எண்ணம் இல்லை என சீனா தெரிவித்துள்ளது அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் அடுத்த வாரம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிடம் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றிபெற தனிப்பட்ட முறையில் உதவி கேட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகவல் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியானது. […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சரே சொல்லிட்டாங்க..! ”கருத்தை கேட்டு நடுங்கிய சீனா” மாஸ் காட்டும் இந்தியா …!!

இந்தியா – சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் 5.50 கோடி தொழிலாளர்கள் வேலை போச்சு…. ஷாக்கிங் ரிப்போர்ட் …!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உலகம் முழுவதிலும் ஐந்தரை கோடி தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு போட்டதிலிருந்து ஐநாவின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொரோனாவின் தாக்கம் வேலைவாய்ப்புகளில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை தொடர்ந்து கண்காணித்து புள்ளி விவரங்களையும், அறிக்கைகளையும் சமர்ப்பித்து வருகின்றது. அதன்படி சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், […]

Categories
உலக செய்திகள்

மகனின் பெயரை ‘X AE A-XII’ என மாற்றிய எலன் மஸ்க்….!!

எலன் மஸ்க் தனது மகனின் பெயரை X AE A-XII Musk என பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எலன் மஸ்க்குக்கு கடந்த மே 5ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு X AE A-12 என பெயர் சூட்டியுள்ளதாக மஸ்க் தனது ட்வீட் செய்திருந்தார். ஆனால், கலிஃபோர்னிய சட்டத்தின்படி பிறப்புச் சான்றிதழ்களில் எழுதப்படும் பெயர்களின் எழுத்துக்கள் அனைத்துமே 26 ஆங்கில எழுத்துக்களை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? – இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடையே பரவியுள்ள சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிடையே முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் குறித்து ஒரு பார்வை… இந்தியா – சீனா ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்தியா – சீனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜூன் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

நீங்களே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் – ரஷ்யா கருத்து …!!

இந்திய – சீன மோதல் பிரச்னையை இரண்டு நாடுகளும் தாங்களாகவே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நாடுகள், இச்சம்பவம் தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி […]

Categories
உலக செய்திகள்

நடுங்கி போன சீனா…. ”கொரோனாவின் 2வது அலை” பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து…!!

சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவ தொடங்கியிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவிய கொரோனா தொற்று பல தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது அலையாக சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் மொத்த விற்பனை சந்தையான சிம்பாடியில் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 8,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 தினங்களில் மட்டும் 137 […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் பதிலடி பயங்கரமாக இருக்கும்” வடகொரியாவை எச்சரித்த தென்கொரியா…!!

இனி வடகொரியா தாக்குதலில் ஈடுபட்டால் எங்களது பதிலடி மிகவும் மோசமானதாக இருக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது சில தினங்களாக தென்கொரியாவை மிகவும் கடுமையாக வடகொரியா மிரட்டி வந்தது. 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் பொதுவான தொடர்பு அலுவலகத்தை தகர்க்கப் போவதாகவும்,  இனி இரு நாட்டிடையே எந்த உறவும் இல்லை என்றும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனிடையே தென் கொரியா எல்லைமீறி நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் ராணுவத்தினரிடம் நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

பொறுமையா இருப்போம்….. பயம்னு எடுத்துக்க வேண்டாம் – சீன ஊடகம் மிரட்டல் …!!

சீனா பயப்படுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என சீன அரசு ஊடகம் தலைவர் இந்தியாவிற்கு  மிரட்டல் விடுத்துள்ளார்.  வடபகுதியில் இருக்கும் லடாக் பகுதியில் இருக்கும் பாயிண்ட் 14 எனுமிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  சீன படைகள் கூடாரமடித்து தங்கியுள்ளது. அதனை அகற்றக்கோரி இந்திய படையினர் கூறியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் மற்றும் 43 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை – பின்வாங்கியது சீனா …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் வீரர்களுக்கும்  இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20  இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதேபோல் சீன தரப்பிலும் 40 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

முப்படைகளும் தயாராக இருங்கள் – ராஜ்நாத்சிங் உத்தரவு …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு  இருக்கும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : சீன தரப்பில் அதிக வீரர்கள் உயிரிழப்பு ?

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் – மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடம் …!!

சீனா நடத்திய தாக்குதலில் மேலும் 4 வீரார்கள் கவலைக்கிடம் என்று ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா  வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாட்டு வீரர்களும் கற்களாலும், கட்டைகளாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில் சீன […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

கால்வான் பகுதியிலிருந்து இருதரப்பும் விலகல் : இந்திய ராணுவம்

கால்வான் பகுதியில் இருந்து இரு தரப்பு வீரர்களும் விளக்கியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்து இருக்கின்றார்கள். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இரு நாட்டு ராணுவ மூத்த  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. சீனா தரப்பில் 43 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்து இருப்பதாகவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் – ராணுவம் உறுதி …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது  லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியா – சீனா மோதல் : 43 சீன வீரர்கள் மரணம், படுகாயம் …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 43 சீனா வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: சீனாவுடன் மோதல்: 20 இந்தியா ராணுவத்தினர் மரணம் …!!

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: சீனாவுடன் மோதல் – 10 இந்திய வீரர்கள் வீரமரணம் ?

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

70,000 பவுண்ட் எடை….. அமெரிக்காவில் உயர்ந்த அனுமான்…. மகிழ்ச்சியில் இந்துக்கள்….!!

அமெரிக்காவில் முதல் முறையாக 25 அடி உயரத்தில் இந்து கடவுளான அனுமான் சிலை நிறுவப்பட்டுள்ளது அமெரிக்காவில் ஹொக்கசின் டெலாவேர் என்கிற இடத்தில் டெலாவேர் இந்து கோவில் சங்கம் சார்பாக வீரத்தில் இணையில்லா ஹனுமான் கடவுளுக்கு புதிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த சிலையின் சிறப்பம்சம் 70,000 பவுண்ட் எடையில்அமைந்தது இந்த சிலை. 25 அடி உயரம் கொண்ட இச்சிலையானது ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அமெரிக்க நாட்டில் ஏராளமான இந்து கோவில்களும், சிலைகளும் […]

Categories
உலக செய்திகள்

நண்பரின் திருமணத்திற்கு சென்ற கடற்படை முன்னாள் அதிகாரி…., 16 வருடம் சிறைத்தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!

ரஷ்யாவிற்கு நண்பரின் திருமணத்திற்காக சென்ற அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரிக்கு  16 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் வழங்கியுள்ளது அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான பால் வீலன் என்பவர் தனது நண்பரின் திருமணத்திற்காக கடந்த 2008ஆம் ஆண்டு ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்த சமயம் திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணம் கேட்டதற்கு ரஷ்யாவை உளவு பார்த்த குற்றத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா காவல்துறையில் சீர்திருத்தம்… இன்று கையெழுத்திடும் அதிபர் ட்ரம்ப் …!!

காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான ஆணையில் இன்று கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் காவத்துறையினரால்  கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. ஜார்ஜ் கொலைக்கு நீதிகேட்டு, நிறவெறிக்கு எதிராக முழக்கமிட்டும்,  ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமையை உறுதிப்படுத்தவும்  அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் அட்லாண்டாவில் ப்ரூக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை வன்முறையை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லையில் நடந்தது என்ன ? பிரதமரிடம் ராஜ்நாத்சிங் விளக்கம் …!!

இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார். இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான  நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் சொன்ன கொரோனா மருத்து…. பயன்பாட்டுக்கு தடை போட்ட எஃப்.டி.ஏ….!!

அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்திற்கு உணவு மற்றும் மருத்துவ கழகம் தடை விதித்துள்ளது மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் தற்போது பல நாடுகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்த இந்த மருந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்த அந்நாட்டின் உணவு மற்றும் மருத்துவ கழகம் மார்ச் மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் மருந்தை பயன்படுத்துவதனால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சீன வீரர்கள் 5 பேர் பலி” அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு …!!

இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் சீன நாட்டு வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் : ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை…!!

இந்திய வீரர்கள் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அதிகாரி உட்பட மூன்று பீர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியா – சீனா எல்லை பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் அவசர ஆலோசனையில்  ஈடுபட்டிருக்கிறார். எல்லையில் […]

Categories
உலக செய்திகள்

அண்ணனை போல ஆக்ரோஷம்… சொல்லி அடித்த கிம் ஜாங் தங்கை… தகவல் தொடர்பு அலுவலகம் தகர்ப்பு …!!

வடகொரியா – தென்கொரியா நாடுகளுக்கு இடையே இருந்த தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் சில நாட்களுக்கு முன்பாக வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி சிலர் பலூன்கள் விட்டு வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்கள். அந்த பலூன்கள் வடகொரிய எல்லை தாண்டி வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் வட கொரியாவின் ஆட்சியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை உலகளவில் பரபரப்பை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சீன ராணுவம் தாக்குதல் – இந்தியா வீரர்கள் வீர மரணம் …!!

ஜூம்மு காஷ்மீர் லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில்  சமீபத்திலேயே பதற்றம் இருந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அங்குள்ள பாங்காங் ஏரி ஆகியவற்றில் இருந்து இந்திய படைகள், சீனப் படைகள் விலகிச் செல்ல வேண்டும். ஒருவருடன் ஒருவர் அந்த இடத்தில் மோதலில் ஈடுபட கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

மொத்த பாதிப்பு 81,12,611 ஆக உயர்வு…. பழைய நிலை எப்போது திரும்பும்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 81,12,611 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலகளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் பாதிப்பில் ஆட்டங்காணச் செய்தது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் சரிய, வெளிநாடுகளில் வேலை பார்த்து வருபவர் களின் நிலை கவலைக்கிடம் ஆகிவிட்டது. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து உலகத்தின் ஒரு மூலையில் கூட பாதிப்பு இல்லை […]

Categories
உலக செய்திகள்

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா….! பீஜிங்கில் மிகப்பெரிய பரிசோதனை …!!

சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் பீஜிங்கில் பரிசோதனையை மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளனர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா தொற்றை பல தடுப்பு நடவடிக்கைகளால் விரைவில் சீனா கட்டுக்குள் கொண்டுவந்தது. ஏப்ரல் மாதம் இறுதியல் தொற்றின் தாக்கம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அந்நாட்டில் இருந்தவர்கள் கருதி இருந்த நிலையில் அவர்களுக்கு பேரிடியாக […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பாதிப்பு…. குறையும் இறப்பு விகிதம்… அமெரிக்காவில் தணியும் கொரோனா பயம் …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் 81 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41  லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் பிரேசிலில் 23,674 பேருக்கு அமெரிக்காவில் 20,680 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரவிவரும் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 1,16,114 பேர் மரணமடைந்துள்ளனர். அந்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் தினமும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இந்திய ஊழியர்கள் இருக்கும் இடம் எங்கே ? பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய அதிகாரிகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. இன்று காலை பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதை அடுத்து இந்திய அதிகாரிகள் இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் ? இந்திய அதிகாரிகளுக்கு என்ன ஆனது ? என்று அடுக்கடுக்கான விவரங்கள், விசாரணைகள் இந்திய அரசால் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, பாகிஸ்தான் காணாமல் போன 2 இந்திய தூதரக ஊழியர் இருக்குமிடம் […]

Categories
உலக செய்திகள்

30 ஆண்டு கடனை அடைக்க…. ஆபாச பட நடிகையான பிரபல வீராங்கனை…. ரசிகர்கள் ஷாக்…!!

குடும்ப கடனை அடைக்க பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிரபல கார் பந்தய வீராங்கனையான பிரேசில் என்பவர் பல வருடங்களாக கார் பந்தயத்தில் ஏராளமான வெற்றிகளை குறித்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக கார் பந்தயத்தில் அவர் தொடர் வெற்றி பெறாததால், அந்த பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு அதில் வருமானம் வராததால், விரக்தி அடைந்துள்ளார்.  அதற்கு காரணம் தொடர்ந்து தன்னக்கு பிடித்த கார் ரேஸ் ஓட்டுவதற்காக பல ஆண்டுகளாக கடன் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்திய நாடுகள்…. கொரோனா பிடியில் சிக்கிய துயரம் …!!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள்  மூலமாக அறியப்படுகின்றது கொரோனா தொற்றினால் உலக நாடுகளில் இருக்கும் 78 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்த இருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் உயிர் தப்பிய முதியவர்…. ரூ.8.3 கோடி என ஷாக் ஆக்கிய பில் …!!

தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வழக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பில் பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது அமெரிக்கா வாஷிங்டன் நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் தேதி 70 வயது முதியவரான மைக்கேல் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 62 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு இடையில் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கும் தருவாயில் இருந்தார். ஆனால் பின்னர் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் குணமடைந்து கடந்த மே 5ஆம் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்புடன் ஒப்பந்த திருமணம் ? மனம் திறந்த மெலனியா ட்ரம்ப் …!!

அதிபர் ட்ரம்புடன் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவியான மெலனியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ட்ரம்பை திருமணம் செய்துகொண்டதாகவும் இதனை 5 நாடுகளை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலுக்கு பிறகே உறுதிப்படுத்தியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் மெரி ஜோர்டன் தெரிவித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான டி ஆர்ட் ஆப் ஹெர் டீல்: தி அன்டோல்ட் ஸ்டோரி […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,860,730 பேர் பாதித்துள்ளனர். 4,035,787 பேர் குணமடைந்த நிலையில் 432,200 பேர் உயிரிழந்துள்ளனர். 3,392,743 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,082 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்கள் : 2,142,224 குணமடைந்தவர்கள் : 854,106 இறந்தவர்கள் : 117,527 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,170,591 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் : நேற்று மட்டும் 1,00,780 பேர் குணமடைந்துள்ளனர்….!!

நேற்று மட்டும் கொரோனா பாதித்த 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,860,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,035,787 பேர் குணமடைந்த நிலையில் 432,200 பேர் உயிரிழந்துள்ளனர். 3,392,743 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,082 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 100,780 பேர் கொரோனா தொற்றிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

வேற வேலை நிறையா இருக்கு…. அமைதியாக போய்டுவேன்….. ட்ரம்ப் பரபரப்பு பேட்டி …!!

ஜனநாயக தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார் அமெரிக்காவில் நவம்பர் மாதம் வர இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பாக மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். இதன் காரணமாக ஒருவருக்கொருவர் வாதம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ட்ரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன் “வரும் தேர்தலில் ட்ரம்ப் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முன்னாள் மந்திரி பலி…. வங்கதேசத்தில் சோகம் …!!

வங்காள தேசத்தின் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியான முகமது நசீம் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது நசீம். முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியான இவர் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். கடந்த 2ஆம் தேதி 72 வயதான முகமது நசீம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தலைநகர் டாக்காவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டு அதிபரின் மனைவிக்கு கொரோனா…..!!

உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி காரணத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார் உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலன்ஸ்கா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒலெனா, “எனது குழந்தைகளுக்கும் கணவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி ஆகிவிட்டது. நான் நலமாக இருப்பதாய் உணர்கிறேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க விலகி இருந்து சிகிச்சை எடுத்து வருகின்றேன்” என பதிவு செய்தார் […]

Categories

Tech |