ஒன்றரை வருடமாக சச்சின் பைலட் தன்னிடம் பேசவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட்டிருக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அசோக், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எங்களுக்கு இடையே எந்த உரையாடலும் இல்லை. ஒரு முதலமைச்சருடன் பேசாத, அவரது ஆலோசனை எடுக்காத, அவருடன் எந்த ஒரு உரையாடலையும் வைத்திருக்காத ஒரு அமைச்சரை […]
