Categories
உலக செய்திகள்

இனவெறி பிடித்தவர்களில் முதல் அதிபர் ட்ரம்ப் தான்… ஜோ பிடன் குற்றச்சாட்டு….!!..!!

குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜோ பிடன் அதிபர் டிரம்பை இன வெறி பிடித்தவர் என்று ஒரு காணொளி மூலம் கூறியுள்ளார். அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது இதில் அரசு சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறக்கப்பட்டார். கொரோனா பரவலை பற்றி ஏதும்  பொருட்படுத்தாமல் இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் காணொளி மற்றும் நேரடியாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

மீன் சாப்பிட்டவருக்கு நேர்ந்த நிலை… இந்தத் தவறை இனி பண்ணாதீங்க…!!

சரியாக வேகாத ஒரு மீனை உண்டு ஒருவரின் கல்லீரல் முழுவதும் புழுக்களின் முட்டைகள் நிறைந்திருந்த எக்ஸ்ரே காட்சி அதிரவைத்துள்ளது.

Categories
உலக செய்திகள்

8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்… கணவனிடம் கூறிய அதிர்ச்சி தகவல்…!!

தனது 8 மாத குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனின் wembley பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீசார் அழைக்கப்பட்டனர். அங்கு ஒரு 8 மாத குழந்தை கழுத்தறுபட்டு கிடந்துள்ளது. அந்த இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்று மட்டும் கூறிய போலீசார் மேலதிக தகவல்களை வெளியிட […]

Categories
உலக செய்திகள்

தமிழ் பெண்ணிற்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்…. 5,39,000 ரூபாயுடன் குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் செவிலியருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன்னிலையில் நின்று போராடியதற்காக தமிழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் நர்ஸ் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. 59 வயதான கலா நாராயணசாமி தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை பயன்படுத்தியுள்ளதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலா […]

Categories
உலக செய்திகள் கொரோனா

விட்டு விலகாத கொரோனா…. 3 முறையும் “POSITIVE”…. மன வருத்தமடைந்த அதிபர்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் மூன்றாவது முறையும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால்  மன வருத்தம் அடைந்துள்ளார் கொரோனா ஒரு சிறு காய்ச்சல் தான் இதற்கு எதற்கு ஊரடங்கு, முக கவசம் எனக் கூறியவர் பிரேசில் அதிபர் போல்சோனரா. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். அதன் பின் ஒருவாரத்திற்கு மேல் கடந்த 15ம் தேதி போல்சோனரோ இரண்டாவது முறையாக பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

72 மணிநேரம் தான்…. இடத்தை காலி பண்ணுங்க…. சீனாவுக்கு உத்தரவிட்ட அமெரிக்கா…!!

சீன துணைதூதகரத்தை 72 மணி நேர கெடு கொடுத்து மூடும்படி கூறி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதாக  பீஜிங்கிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தி, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் நடத்தி, தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்ததல் ஆகிய செயலால், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் ரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் […]

Categories
உலக செய்திகள்

குடிபோதையில் கார் ஓட்டிய பெண்… பறிபோன 8 வயது சிறுமியின் உயிர்.. குடும்பத்தினர் உருக்கம் ..!!

ஒரு கார் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியினுடைய புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து குடும்பத்தார் உருக்கமாக பேசியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள லண்டன் நகரில் Nihal Toor என்ற 8 வயது சிறுமி தனது தாய், பாட்டி மற்றும் உறவினர்களுடன் காரில் சில நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் வேகமாக nihal Toor வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் சிறுமி nihal படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

தலிபான் பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. கோபத்தில் துப்பாக்கியை கையில் ஏந்திய சிறுமி… 2 பேர் சுட்டுக்கொலை…!!

பெற்றோர்களை கொன்ற தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் உள்ள கிரிவா கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி க்வமர் கல். ஆப்கான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் சிறுமியின் பெற்றோரை சென்ற வாரம் தாலிபன் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அந்தத் தாக்குதலில் தப்பித்த சிறுமி கல் தனது வீட்டில்  பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து தனது பெற்றோரை கொன்ற தீவிரவாதிகளில் இரண்டு பேரை அப்போதே […]

Categories
உலக செய்திகள்

பூட்டப்பட்ட வீட்டில் தீ விபத்து… உள்ளே கதறிய குழந்தைகள்… மூன்று வயது தங்கையை காப்பாற்றிய அண்ணன்..!!

குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சு நாட்டின் grenoble  நகரில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் பெற்றோர் விட்டு சாவியையும் போகும் பொழுது கொண்டு சென்றுள்ளார்கள். “எங்களிடம் சாவி இல்லை” என்று குழந்தைகள் சத்தமிட்டு அலறுவதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்திருக்கிறார்கள். அப்போது அந்த சிறுவர்களில் மூத்தவன் ஆன 10 […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்… காரில் வந்த மர்ம கும்பல்.. தலை தெறித்து ஓடிய கூட்டம்..!!

இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் பலர் காயப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் விழுந்தடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வாரம் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் இறுதி சடங்கிற்காக மக்கள் கூடியிருந்த நிலையில் திடீரென ஒரு காரில் வந்தவர்கள் அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இந்தியாவுக்கு வரும் கொரோனா தடுப்பு மருந்து…. ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியானது வரும் நவம்பர் மாததிற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்துவதற்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருத்துவ நிறுவனமான ஆஸ்திராஜனேகா உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி நம்பிக்கை கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு  செலுத்தி பார்க்கும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது உலக […]

Categories
உலக செய்திகள்

இரண்டு மதத்தினரிடையே இருந்த மோதல்… படுகொலை நாளாக மாறிய திருமண நாள்.. 18 பேர் சுட்டுக்கொலை..!!

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வன்முறை காரணமாக திருமணநாள் ஒரு படுகொலை நாளாக மாறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணி அளவில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினரின் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கும் செய்தியில் நைஜீரியா kaura மாவட்டத்தின் kukum- daji கிராமத்தில் உள்ள வீடு […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இழப்புகளைச் சந்தித்த மக்கள்…. சீனாதான் பொறுப்பேற்கும்…. சட்ட மசோதா தாக்கல்… அமெரிக்கா அரசு அதிரடி…!!

கொரோனாவால் பல இழப்புகளை சந்தித்த மக்கள் சீனாவிடம் இழப்பீடு கோருவதற்கான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது  என்றும் அந்த கொடிய வைரஸை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு அனுப்பி விட்டதாகவும் அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் அமெரிக்க மக்கள் சீனா மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

உலக நாடுகளுக்குத் தொற்றை பரப்பிய சீனா… வேண்டுமென்றே தடுக்காமல் விட்டது -அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவியதிற்கு காரணம் சீனா தான் என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சுமத்தியிருக்கிறார். டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வைரஸ் தொடங்கிய காலத்திலிருந்தே அதற்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதைப்பற்றி வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் கூறுகையில்,”கொரோனா பரவல் விஷயத்தில் சீனா […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தொற்று உறுதி… தனிமைப்படுத்தப்பட்ட பெண் நாடு விட்டு நாடு தப்பியோட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!

கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைத்து இருந்த இளம்பெண் ஒருவர் சிறப்பு விமானம் மூலம் துபாய் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கம் தீவிரமடைந்து வருவதால் நாட்டில்  வைரஸ் பரவும் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா முதல் மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக வைரஸ் தொற்றுள்ள பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலர் சுதந்திரமாக வெளியே சுற்றி திரியும் நிகழ்வும் நடந்து […]

Categories
உலக செய்திகள்

பஸ்ஸில் பயணித்த 20 பேர் … சிறைபிடித்து சென்ற மர்ம நபர்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

உக்ரைனில் துப்பாக்கி முனையில் 20 பேரை பணய கைதிகளாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உக்ரைனில் கடந்த செவ்வாயன்று பஸ்சை வழிமறித்து ஆயுதமேந்திய ஒருவர் அதிலிருந்த 20 பேரையும் மிரட்டி பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கியோவ்க்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள லூட்ஸ் நகரில் நடந்தேறியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தை காவல்துறையினர் முற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை சார்பாக வெளியிட்ட அறிக்கையில், “சம்பந்தப்பட்ட மர்மநபர் வெடிபொருட்களை கையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் அதிர்ஷ்டம்… ஒரே நாளில் 13 பில்லியன் டாலர்… சாதனை படைத்த தொழிலதிபர்..!!

அமேசான் நிறுவனத்தின் தலைவர்கள் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் அதிகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் 13 மில்லியன் டாலர் சொத்துக்களை ஒரே நாளில் சேர்த்து சாதனை படைத்துள்ளார் கொரோனாதொற்றின் அச்சத்தால் மக்கள் வெளியில் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன்காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ளது. அவ்வகையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் தலைசிறந்து விளங்கும் அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு விரைவில் வெகு விரைவாக அதிகரித்துள்ளது.  அமேசான் நிறுவனரான சொத்து […]

Categories
உலக செய்திகள்

குளியலறையில் நீளமான முடி… கணவருக்கோ தலை வழுக்கை… அப்போ அது யாருடையது?.. விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்தபோது திகைத்துப்போன மனைவி..!!

பணியிலிருந்து அரைநாள் விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்த மனைவி கண்ட காட்சி அவரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது வீட்டு குளியலறையில் மிகவும் நீளமான முடி இருப்பதை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் காரணம் அவரது   கணவருக்கு தலை வழுக்கை அதோடு அந்த பெண்ணிற்கு குட்டையான முடி, நீளம் மிகவும் குறைவு. இதனால் மிகுந்த வேதனை அடைந்த மனைவி அன்பான கணவனை கேமராவை வைத்து வேவு பார்ப்பதற்கு மனமில்லாமல் உண்மையை கண்டறிய என்ன […]

Categories
உலக செய்திகள்

கந்தசஷ்டி பற்றி அவதூறு…”இந்து மதத்திற்கு தீங்கு வரப்போவதில்லை”- இலங்கை ஜெயராஜ் கருத்து

கறுப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்தி வரும் விவகாரத்திற்கு தற்போது இலங்கை ஜெயராஜ் பதில் அளித்துள்ளார். “சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” எனத்தொடங்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்தப் பாடல் வரிகளில் விளக்கமானது  தலையில் தொடங்கி பாதங்கள் வரை ஒவ்வொரு உறுப்பாக விவரித்து அதனை வேல்கள் காப்பதாக இருக்கும். இந்தப் பாடல்களில் ஒவ்வொரு உறுப்பையும் காக்க சொல்வது குறித்து கேலி செய்தும் விமர்சனம் செய்தும் […]

Categories
உலக செய்திகள்

பராமரிப்பாளர் கண்காணிப்பில் இருந்த சிறுமி… திடீரென தப்பியோட்டம்… பொதுமக்கள் உதவியை நாடிய போலீஸ் ..!!

பராமரிப்பாளரிடம் இருந்து தப்பி ஓடி சென்ற சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கனடாவில் உள்ள கோஹரனே நகரை சேர்ந்தவர் டியானா (Tianna TT Medicine shield) என்ற 13 வயது சிறுமி கடந்த 19 ஆம் தேதி அவரை பராமரித்துக்கொண்டிருந்தவரின் கண்ணில் இருந்து திடீரென தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமி குறித்து அடையாளமாக டியானா 5 அடி உயரம் கொண்டவர், பழுப்புநிற கண்கள் கொண்டவர் அதோடு அவர் கடைசியாக சாம்பல் நிற […]

Categories
உலக செய்திகள்

வெள்ளைமாளிகையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றுவோம்… ட்ரம்ப் மறுத்தால் இதுதான் நடக்கும்… அமெரிக்க சபாநாயகர்…!!

வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேற டொனால்டு டிரம்ப் மறுத்தாலும்  கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என அமெரிக்க சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாக்ஸ் நியூஸ் பேட்டி நடந்த போது ட்ரம்ப் அமெரிக்க தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி கூற மறுத்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க தலைவர்கள் அனைவரும் அதிபர் டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இது பற்றி அமெரிக்க  சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், “தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் தோற்றுவிட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமெரிக்காவை நம்பி….. இந்தியாவுக்கு ‘செக் ? சீனாவின் நரித்தந்திரம் அம்பலம் …!!

சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் சீனாவுடன் ஒரு நீண்ட கால ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அங்கீகரித்தது. இதன் மூலம்  400 பில்லியன் டாலர்  வரை ஈரானுக்கு சீனா உதவி செய்யும். ( ஒரு பில்லியன் = 100 கோடி; ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு  ரூ. 75.) இந்திய ரூபாயில் 4000 x 75= 30,00000 கோடிகளாகும். அதாவது, முப்பது லட்சம் கோடிக்கு சமம். இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக நீண்ட நெடுநாட்களாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுபாடுகளால் உணவு பற்றாக்குறை… பசியை தடுக்கும் மருந்து… வடகொரியாவின் புதிய முயற்சி…!!

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பெரும் தொற்று காரணமாக கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே மக்களுக்கு பசியை போக்க மருந்து தயாரிக்கப்பட்டு  வருகிறது. உலக நாடுகளில் தற்போது பொருளாதார தடை மற்றும் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வரும் வடகொரியா, பட்டினியால் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நடத்திய அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு  ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவுடன் இரண்டு முறை […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் தொடர் பெண்கள் கொலை… காரணம் என்ன? ..!!

மெக்ஸிகோவில் தொடர்ந்து பெண்கள் கொல்லப்படுவது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்று காலத்திலும் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை விகிதம் 9.2% ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வருட  முதலில் 17,982 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடம் இதே காலத்தில் நடந்த 17,653 கொலைகளை விட 1.9 சதவீதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பெண்கள் கொல்லப்பட்டு வர காரணம் மக்கள்  தங்கள் வீட்டிற்குள் அடைந்து […]

Categories
உலக செய்திகள்

நான்கு மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டவர்…. சுடுகாட்டில் சுற்றித் திரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி….!!

எகிப்தில் குடும்பத் தலைவர் ஒருவர் இறந்ததாக அவர் சடலத்தை உறவினர்கள் புதைத்த நிலையில் அவர் உயிருடன் திரும்ப வந்தது அனைவரையும் திகைக்க செய்துள்ளது.  முகமது எல் கம்மல் என்பவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆசிரியராக பணியாற்றிய கம்மல் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பி வெளியில் போய் விடுவார். அதன்பின்னர் குடும்பத்தார் அவரை தேடி அலைந்து வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து மாயமான கம்மலை குடும்பத்தார் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

தொடரும் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்….. 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ஆப்கான் ராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப் படை தாக்குதலில் அந்த நாட்டைச் சேர்ந்த 8 ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர். இது பற்றி ராணுவம் தரப்பில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் உள்ள மைதன் மாகாணத்தில் சையத் அபாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 8 ஆப்கன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் […]

Categories
உலக செய்திகள்

ராகுலின் குற்றச்சாட்டு…. நாட்டின் ராணுவத்தையும் கொள்கையும் அரசியலாக்க வேண்டாம்…. பாஜக தலைவர் பதிலடி….!!

ராகுல் காந்தி எப்பொழுதும்போல் சேற்றை வாரி இறைத்து, ராணுவம் மற்றும் நாட்டின் வெளியுறவு கொள்கையை அவர் அரசியலாக்க முயற்சி செய்வதாக  பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி தனது செல்வாக்கை காப்பாற்ற லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று கூறுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த குற்றசாட்டுக்கு பாரதீய ஜனதா தலைவரான ஜே.பி.நட்டா டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில் ராகுல் காந்தி வழக்கம் போல் சேற்றை வாரி வீசியுள்ளதாகவும், […]

Categories
உலக செய்திகள்

“நான் முக கவசம் அணிந்துள்ளேன்” என்னைவிட யாருக்கு தேசப்பற்று அதிகம் – ட்ரம்ப் பெருமை

தான் முக கவசம் அணிந்து இருப்பதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு தன்னைவிட அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அதில் இருந்து தங்களைப் மீட்க ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இந்த கிருமி தொற்று இருப்பவர்களின் சுவாசத்தின் மூலமாக பரவுவதால் முகக்கவசம் என்பது மிக அவசியமாக பார்க்கப்படுகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு […]

Categories
உலக செய்திகள்

SIR, DOOR DELIVERY” கதவைத்திறந்த நீதிபதியின் மகன்…. திடீரென்று நடந்த கோர சம்பவம்…. கவலை தெரிவித்த கவர்னர்…!!

அமெரிக்காவின் பெண் நீதிபதியின் மகன் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள வடக்கு பிரான்ஸ் பகுதியில் வசித்து வருபவர் எஸ்தர் சலாஸ். இவர் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். இவரது கணவர் மார்க் ஆண்டெல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் ஒரே மகனான டேனியல் ஆண்டெல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சலாசின் வீட்டிற்க்கு டெலிவரிக்கு வந்த ஒரு மர்ம நபர் அவர் வீட்டின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கவச உடைகளும் இல்லை…. முக கவசமும் இல்லை…. கொரோனா நோயாளிகளைக் கவனிக்கும் உறவினர்கள்…!!

மருத்துவமனைகளில் செவிலியர்கள் இல்லாததால் உறவினர்களே கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அவர்களின் சொந்த உறவினர்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றாக பயிற்சியில் இறங்கியிருக்கும் அமெரிக்கா – இந்தியா…. ஒற்றுமை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள்…!!

அந்தமான் கடற்பரப்பில் இந்திய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது இரு நாட்டின் இடையே ஒற்றுமையை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் எல்லை பகுதியை சீன ராணுவர்கள் அத்துமீற முயன்றபோது வந்த மோதல் இன்னும்  ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளுடனும் எல்லை பிரச்சினை சார்பாக தகராறு செய்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தென் சீன கடல்பகுதி அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க விரும்புகின்றது. சீனாவின் இத்தகைய செயலுக்கு கடும் எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

ஓடினால் கதை முடிந்தது… நின்று அசால்ட்டாக கரடியுடன் ‘செல்பி’ எடுத்த பெண்… த்ரில் வீடியோ..!!

மலை ஏற்றத்திற்கு சென்ற பெண்கள் கரடியை கண்டு அச்சத்தில் அசையாமல் நின்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது மெக்சிகோவில் இளம்பெண்கள் சிலர் மலை ஏற்றத்திற்கு சென்றனர். அப்போது தங்கள் பின்னால் கரடி ஒன்று நிற்பதை கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எங்கே தாங்கள் ஓடினால் கரடி விரட்டி வந்து தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் கரடி அருகில் வந்தும் அமைதியாக அவர்கள் இருந்தனர். அவர்களின் அருகே வந்த கரடி இரண்டு காலில் எழுந்து நின்று பெண்ணொருவரின் […]

Categories
உலக செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் பயணம்… பயணியின் கழுத்தை நெரித்த பரிசோதகர்… அதிர்ச்சி வீடியோ..!!

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இளைஞனை பரிசோதகர் கழுத்தை நெரித்தது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெர்மனியில் 28 வயது இளைஞன் ஒருவன் தனது தோழியுடன் ட்ராம் ஒன்றில் டிக்கெட் எடுக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில் பரிசோதகர் வந்த நேரம் அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ட்ராமை விட்டு உடனடியாக இறங்குமாறு பரிசோதகர் கேட்டுக்கொள்ள இளைஞனும் அவனது தோழியும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ட்ராமை விட்டு இறங்கியதும் இளைஞனுக்கும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கட்டுப்படுத்த முடியாத அளவு கொரோனா நோயாளிகள்…. உதவிட முன் வரும் ராணுவம்…!!

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இராணுவ டாக்டர்கள் களமிறங்க உள்ளனர். கொரோனா நோயாளிகளால் அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இந்நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக ராணுவ டாக்டர்கள் களம் இறங்க இருக்கிறார்கள். கொரோனா என்ற கொடூர கிருமியால் அமெரிக்கவில்  ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக பாதிப்பை சந்தித்து வருகின்ற நாடாக இன்னும் அமெரிக்காதான் இருக்கின்றது. இங்கு தொற்று எண்ணிக்கை நேற்று வரை 37,11,464 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 1,40,120 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“யாராவது காப்பாற்றுங்கள்” பலபேர் கூடியிருக்க…. தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்… சிலையாக நின்ற தாய்..!!

சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் விரட்டி சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த 30 வயது அஹலம் என்ற பெண் தந்தையினுடைய  கொடூர செயலுக்கு இரையாகி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்பில் இருந்து “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி […]

Categories
உலக செய்திகள்

1072பேரிடம் சோதனை…. 10 கோடி தடுப்பூசி ஆர்டர்….. தடுப்பு மருந்து வெற்றி …!!

ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்ஸை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதில் ஒரு மிக முக்கியமான வெற்றி செய்தி கிடைத்திருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் முன்னணியில் இருக்கக்கூடிய ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பரிசோதனை விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி 1077 பேருக்கு நடத்தப்பட்டுபரிசோதனையில் அவர்களுக்கு  கொரோனா வைரஸ்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்திருப்பதாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு சோதனை வெற்றி …!!

உலகம் முழுவதும் கொரோனாவும் எதிராக தடுப்பு மருந்து சோதனையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் தடுப்பு மருந்து பரிசோதனையில் முன்னணியில் இருக்கக்கூடிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தற்பரிசோதனை தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி1077 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முயற்சியானது தற்போது வெற்றி பெற்றிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Categories
உலக செய்திகள்

கன மழையால் வெள்ளம்…வெடிகுண்டு வைத்து அணையை தகர்த்த சீனா..!!

சீனாவில் சுஹே ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை சீன அரசு வெடிகுண்டு வைத்து தகர்த்தெரிந்தது. கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சீனா தற்போது கடும் மழை வெள்ளத்துக்கு ஆளாகியிருக்கிறது. வூஹானில் உள்ள யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய அணையினுடைய  நீர்மட்டம் 15 மீட்டருக்கு மேல் உயர்ந்து இருப்பதால் ஆற்றின் குறுக்கே  கட்டியிருந்த அணைகளில் மூன்று […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“அம்மாவை பாக்கணும்” கொரோனாவால் உயிரிழந்த தாய்… கண்கலங்க வைத்த இளைஞனின் செயல்..!!

கொரோனாவால் உயிரிழந்த தாயை மகன் மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. சமீபத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ரஸ்மி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 73 வயதான தனது அம்மாவை பார்க்க ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்ததும் கதறி அழுது தாயை நேரில் பார்க்க வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிராக கருத்து… பணியிடை நீக்கப்பட்ட பேராசிரியர்..!!

சீன அதிபருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சிங்குவா பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணிபுரிந்த ஜூ சாங்ருன். இவர் அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்து வரும் அரசை வெளிப்படையான முறையில் விமர்சித்து வருகிறார். சீனாவில் கொரோனா பரவிய காலங்களில் அதிபர் ஜின்பிங் செய்த மோசடிகள் மற்றும் அது பற்றிய விவரங்கள் குறித்து ஜூ சாங்ருன் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தால் அமெரிக்கா பின்னோக்கி செல்கிறது … ஹார்வார்டு பல்கலைக்கழகம் கவலை ..!!

வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யும் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவை பின்னடையச் செய்யும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இணையம் வழியாக மட்டும் வகுப்பு நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வருகையை  ரத்து செய்யும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தது. இது பற்றி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும்படி நிர்வாகத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக இந்த உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நிர்வாகம் […]

Categories
உலக செய்திகள்

சிவனைத் தேடி வந்த விஷ்ணு…. கொரோனாவில் இருந்து மீண்டு விடுவோம்… அர்ச்சகர்கள் நம்பிக்கை…!

சிவன் சன்னதிக்கு வந்த ஆமையை பிடித்து விஷ்ணுவே வந்ததாக கூறி கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜையை நடத்தியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சில்கூர் பெருமாள் ஆலயத்தில் சிவன் சன்னதி ஒன்று உள்ளது. அந்த சன்னதிக்குள் ஆமை ஒன்று நுழைந்துள்ளது. சன்னதிக்குள் நுழைந்த அந்த ஆமையை பிடித்து அதற்கு பூஜைகள் நடத்தியுள்ளனர் அக்கோவிலில் உள்ள அர்ச்சகர்கள். விஷ்ணு புராணமான தசாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கூர்மம் என்று கருதப்படும் இந்த ஆமை சிவன் சன்னதிக்கு வந்து இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு… இந்தியர் ஒருவர் படுகாயம்…!!

பீகார் எல்லையில் நேற்று திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்தியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தியாவின் நட்பு நாடாக விளங்கி வரும் நேபாளம் சமீப காலமாக தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா இந்தியாவுக்கு எதிராக தனது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார். குறிப்பாக இந்தியாவின் எல்லை பகுதிகளை நேபாளம் உரிமை கோரி வருகின்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனிடையில் இந்திய நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றாக […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“பசுவின் கோமியம்” குடித்தால் கொரோனா தொற்று தாக்காது… பாஜக தலைவரின் பேச்சு… விமர்சித்த கட்சியினர்..!!

பசுவின் கோமியத்தை குடிப்பதால் கொரோனாவை எதிர்த்துப் போராடும் தன்மை கிடைக்கும்  என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கூறியுள்ளார். மேற்கு வங்கம் மாநில பாஜக தொண்டர்கள் இடையே துர்காபூரில் காணொளிக் காட்சி  வழியாக பேசிய பாஜக தலைவர்,”நான் பசுவை பற்றி பேசினால் சிலருக்கு பிடிக்காது. கழுதைகளுக்கு பசுவின் அருமை தெரிய வாய்ப்பில்லை. இது இந்தியா பசுவை தெய்வமாக வழிபட்ட கடவுள் கிருஷ்ணரின் பிறப்பிடம். நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பசுவின் கோமியத்தை குடிக்க வேண்டும். மது […]

Categories
உலக செய்திகள்

கார் சீட்டில் அமர்ந்து செல்லும் ஆந்தை… காவலரின் நெகிழ்ச்சி செயல்…!!

தனது காரில் காவலர் ஒருவர் அடிபட்ட ஆந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் பறக்க முடியாமல் தவித்த ஆந்தையை சிகிச்சைக்காக தனது காரில் வைத்து கூட்டி செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. விலங்குகள் பறவைகள் பற்றிய செய்திகள் எப்போதுமே நம் மனதுக்கு நெருக்கமானவையாக இருக்கும். அதுபோலதான்  காவல்துறை அதிகாரி ஒருவர் தனது காரின் பின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா பாதிப்பு எதிரொலி… போலீசார் மீது மிளகுப் பொடி தூவிய போராட்டக்காரர்கள்…!!

போராட்டத்தில் காவல்துறையினர் மீது மிளகுப்பொடியை போராட்டக்காரர்கள் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகம் முழுதும் கொரோனா வைரஸைக் கையாள்வதில் ஒரு சில அரசுகளைத் தவிர மற்ற அரசுகள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னாமாகி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் புள்ளிவிவரங்களை மறைப்பது, ஊழல் போன்ற விவகாரங்கள், லாக்டவுன், பொருளாதார இழப்பு ஆகியவை மக்களிடையே பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலில் ஜெரூசலேமில் சனிக்கிழமையன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்ஹாயு வீட்டின் முன்னாலும் டெல் அவிவில் உள்ள பூங்கா ஒன்றிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு குழந்தைகளுக்கு பாட்டி…. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி..!!

நான்கு பிள்ளைகளைப் பெற்று இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியான பெண் சீருடை அணிந்து பள்ளி சென்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள ரிபோய் மாவட்டத்திலுள்ள உம்ஸ்னிங் லுமும்பி கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதாகும் லாகிண்டியூ சியெம்லீ. சிறுவயதில் கணக்கு பாடம் கடினமாக இருந்ததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். அதன் பிறகு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார். ஆனாலும் இல்லற வாழ்க்கை இவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. தனியொரு […]

Categories
உலக செய்திகள்

டவுசரை குட்டையா தச்சிட்டாரு… போலீஸாரிடம் புகார் கொடுத்த நபர்…!!

டவுசரை குட்டையாக தைத்துவிட்டதால் காவல்நிலையம் சென்று ஒரு நபர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வாழ்ந்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே இவர் சமீபத்தில் இரண்டு மீட்டர் துணியை எடுத்துக் கொண்டு தையல்காரரிடம்  சென்று தனக்கு வேண்டிய அளவிற்கு டவுசர் தைத்து கொடுக்குமாறு கொடுத்துள்ளார். தையல்காரரும் அளவு எடுத்து வைத்துக்கொண்டு துணியை பெற்றுக்கொண்டு கூலியாக 70 ரூபாய் வாங்கியுள்ளார். துபேவும் சரி என்று  கூறிவிட்டு தனது டவுசரை வாங்க இரண்டு நாள் கழித்து […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு செய்த கொடூரம்… 35 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிபதிக்கு Thumbs Up சொல்லிய குற்றவாளி…!!

35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதியை பார்த்து குற்றவாளி தம்ப்ஸ் அப் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த ஆரோன் மற்றும் கெல்லி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றார். பின்னர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை கெல்லி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கெல்லி வயிற்றில் ஆரோன் குழந்தை வளர கெல்லியிடம் தன்னுடன் வந்து வாழும் படி கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கெல்லி […]

Categories
உலக செய்திகள்

“ப்ரிட்ஜில் இருந்த சடலம்” வீட்டிற்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவர் மனைவியின் வீட்டிற்கு சென்ற சமயம் அவரை பிரிட்ஜில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த எலிஸ் ஏஞ்சலா என்பவரது முன்னாள் கணவர் தனக்கு வேண்டிய ஆவணங்களை எடுப்பதற்காக அவரது முன்னாள் மனைவியின் வீட்டிற்கு தன் சகோதரன் மற்றும் சகோதரன் மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்ததால் இரும்பு வேலை செய்பவர் ஒருவரது உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு தனக்கு தேவையான ஆவணத்தை தேடிக்கொண்டிருந்த இவர் வீட்டில் பிரிட்ஜ் […]

Categories

Tech |