Categories
உலக செய்திகள்

அலட்சிய அரசே பதில் சொல்! வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய போலீஸ்….. கலவர பூமியான லெபனான்….!!

சமீபத்தில் வெடி விபத்து நிகழ்ந்த லெபனான் தற்போது கலவர பூமியாக மாறியுள்ள புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன. சில தினங்களுக்கு முன்பாக லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்திற்கு பல நாட்டவர்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வரும் சூழ்நிலையில், அரசின் அலட்சிய போக்கால் தான் விபத்து நடந்ததாக குற்றம் சாட்டிய அந்நாட்டு பொதுமக்கள், இறந்த அத்தனை உயிர்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“இனி முக கவசம் அணிந்து கொண்டே சாப்பிடலாம்”… ஜப்பானியரின் புதிய கண்டுபிடிப்பு…!!

உணவகங்களில் சாப்பிடும் பொழுது முகக்கவசம் அணிந்தவாறு சாப்பிடும் வகையில் ஜப்பானியர்கள் புதிய முக கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா காலகட்டத்தில் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. முக கவசம் அணிவதால் மக்கள் சில சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவோர் முகக்கவசத்தைக் கழற்றி விட்டு சாப்பிடவேண்டிய நிலைமை உள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கத்தில், வாய் மற்றும் மூக்கை மறைத்தவாறு […]

Categories
உலக செய்திகள்

14 வயது சிறுமியை சந்திக்க சென்ற நபர்… அங்கு அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் 14 வயது சிறுமி என்று நினைத்து ஆன்லைன் மூலம் அவரிடம் தவறாக பேசி நேரில் பார்க்க சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ஹாரிஸ் கவுண்டியில் ஆன்லைன் மூலம் சிறுமியிடம் தவறாக பேசிய நபர்களை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஆலன் ரோஷன் கூறும் பொழுது, “Eduardo De La Cruz Gomez என்று நபர் சமூக வலைதளம் மூலம் பல பெண்களிடம் தவறாக பேசி வந்துள்ளார். இதனை அடுத்து 14 […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்… பதிலடி கொடுத்த இந்தியா..!!

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு  மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்பொழுது, அதனை மீறி செயல்படும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வீரர்கள் முழுமையாக திரும்புவார்கள்… ” நாங்க கேரண்டி”… நம்பிக்கை அளித்த தலிபான் அமைப்பு…!!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு சென்ற பிப்ரவரி மாத கடைசியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்றை நடத்தியது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அதனைச் சார்ந்த நட்பு நாடுகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு கைமாறாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை முழுமையாக […]

Categories
உலக செய்திகள்

பயங்கர வெடிகுண்டு தாக்குதல்… 8 வீரர்கள் பலி… 11 பேர் படுகாயம்…!!

பயங்கரவாத தாக்குதலில் வெடிகுண்டு வெடித்து சிதறியதால் 8 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தங்களது  ஆதிக்கத்தால்  ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் வெளிநாட்டு பயணிகளை குறி பார்த்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அடாவாடி தனத்தை ஒடுக்குவதற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு […]

Categories
உலக செய்திகள்

“தங்கள் நாடு தப்பித்தால் போதும் என நினைப்பது சுயநலம்”- உலக சுகாதார அமைப்பின் தலைவர்

உலக நாடுகள் கொரோனா பிடியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்பதாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது பற்றி ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.7 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 176,009 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 729,579 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 261,729 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 261,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அமெரிக்காவை புரட்டிப் போடும் கொரோனா… ஒரே நாளில் 63,000 பேருக்கு தொற்று…!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சீனாவில் உள்ள வுகான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,95,24,000 ஆக […]

Categories
உலக செய்திகள்

பிரேசில் நாட்டை உலுக்கும் கொரோனா… 1,00,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை…!!

உலகம் முழுவதும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பிரேசில் நாட்டில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக விஞ்ஞானிகள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொடூர கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

மீன் பிடித்துக்கொண்டிருந்த மகள்… தண்ணீருக்குள் மூழ்கி பாய தயாரான முதலை… உடனே விரைந்து காப்பாற்றிய தந்தை..!!

தனது மகளை நெருங்கிய முதலை அவள் மீது பாயும் முன் தந்தை காப்பாற்றிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ஆன்ட்ரூ என்பவர் தனது பிள்ளைகள் பிரண்ட்லைன் அவளது அண்ணன் மற்றும் அவ்விருவரையும் கவனித்துக்கொள்ளும் ராபின் வேண்டும் என்னும் இளம்பெண் ஆகிய மூவரும் ஏரியில் மீன் மற்றும் நண்டுகளை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அச்சமயம் அவர் கண்களுக்கு திடீரென முதலை ஒன்று தென்பட்டுள்ளது. அது விளையாடிக் கொண்டிருக்கும் தனது மகள் பிரண்ட்லைனை நோக்கி […]

Categories
உலக செய்திகள்

30ஆம் தேதி… 30 நொடிகளில் மொத்த சேமிப்பும் போய் விட்டது… வங்கிக்கு வெளியே கதறிய முதியவர்..!!

வங்கியில் இருந்து தனது மொத்த சேமிப்பான 2 லட்சம் டாலரை எடுத்து விட்டு வெளியில் வந்து 30 வினாடிகளில் திருடனிடம் பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ என்பவர் ஜூன் மாதம் முப்பதாம் தேதி தன் வங்கியில் சேர்த்து வைத்த தனது மொத்த சேமிப்பையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த 30 நொடிகளில் திருடனிடம் பறி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று வங்கியிலிருந்து பணத்தை எடுத்து விட்டு ஃபிரான்சிஸ்கோ வெளியில் வந்து காரை நோக்கி […]

Categories
உலக செய்திகள்

உலகளவில்1.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 724,050 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

மனைவிபோல குழந்தையும் இருக்கு…. தவிக்க விட்டு ஓடிய கணவன்… வெளியான அதிர்ச்சி காரணம் …!!

நைஜீரிய பெண்ணிற்கும் அவரது குழந்தைகளுக்கும் நீல நிறத்தில் கண்கள் அமைந்ததால் அவருடைய கணவர் பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவை சேர்ந்த பெண் ரிஷிகாட் என்பவருக்கு அழகிய நீல நிற கண்கள் இருந்தன. அதேபோல் அவருடைய குழந்தைகளுக்கும் அமைந்திருந்தன. குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுக்கு நீல நிறத்தில் கண்கள் இருந்தால் ரிஷிகாட்டின் கணவர் குழந்தை மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற செய்தி ஆப்பிரிக்க மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இயற்கையிலேயே இத்தகைய கண்ணமைப்புடன் […]

Categories
உலக செய்திகள்

விளையாட்டாக நடந்துச்சு…!! ”ரூ.93,81,337 கிடைச்சுச்சு” அள்ளிய அதிஷ்டசாலி …!!

ஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  அமெரிக்க நாட்டிலுள்ள வர்ஜீனியாவை சேர்ந்த ரேமன் ஹாரிங்டன், சென்ற ஜூலை மாதத்தில் அங்கு உள்ள கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள லாட்டரி சீட்டு கடைக்கு சென்று ஒரே குலுக்கலுக்காக, ஒரு அமெரிக்க டாலர் மதிப்புள்ள 25 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். அவர் வாங்கியுள்ள லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஹாரிங்டன் மட்டுமில்லாமல் அங்கு கூடியிருந்த அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ட்ரைலர் தான்…. 2060இல் காத்திருக்கும் பேராபத்து….. பில்கேட்ஸ் கருத்து….!!

கொரோனாவை விட மிகப்பெரிய ஆபத்து எதிர்காலத்தில் காத்திருப்பதாக பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கையில் எடுத்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த ஊரடங்கு உத்தரவால், பல நாடுகள் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கருத்து […]

Categories
உலக செய்திகள்

வாய்க்கு வந்ததை அடிச்சு விட்ட ட்ரம்ப் – சாட்டையடி கொடுத்த ஃபேஸ்புக், ட்விட்டர் ..!!

கரோனா பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய சர்ச்சை கருத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கியுள்ளன. கரோனா பாதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய சர்ச்சை கருத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதால் அதிபர் ட்ரம்ப் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுனவனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிடம் வம்பிழுத்த பாகிஸ்தான்….. பதிலடி கொடுத்து அசத்தல் …!!

இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என ராமர் கோயில் பூமி பூஜை பற்றிய பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு இந்தியா பதிலளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றது, அரசியல் தலைவர்களிடையெ விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனிடையே பூமி பூஜை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவை விமர்சித்திருந்தது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ”இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

2060 இல் காத்திருக்கிறது பேரழிவு… உலக நாடுகளுக்கு கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரிக்கை…!!

கொரோனாவை விட காலநிலை மாற்றம் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.  சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு நாடுகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. மேலும் இந்த நோயை எப்படி விரட்டுவது? இதனை எவ்வாறு தடுப்பது? என்று பல்வேறு நாடுகளும் போராடி வருகிறது. நிபுணர்கள் கூற்றுப்படி இந்த கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டும்தான்.. அதனால் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

தொடரும் வன்முறைகள்… போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்…!!

கொரோனா காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை கண்டிக்க துருக்கி நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துருக்கியில் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் புதிய சட்டங்களை கடந்த 2011ம் ஆண்டு துருக்கி அரசு கொண்டு வந்தது. இத்தகைய புதிய சட்டங்களுக்கு பழமைவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அச்சட்டங்களை ரத்து செய்வது குறித்து அதிபர் எர்டோகன் ஆலோசித்தார். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

லெபனான் வெடி விபத்து…. ஜேர்மன் தூதரக பெண் பலி…. இரங்கல் தெரிவித்த அமைச்சர்…!!

லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த தகவலை ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas வெளியிட்டிருக்கிறார். அவர் “நாம் பயந்தது போலவே ஆகிவிட்டது. பெய்ரூட் வெடிவிபத்தில் எனது குடியிருப்பில் வசித்து வந்த நமது தூதரக அலுவலர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். நமது சக ஊழியரின் இறப்பு நமது வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

2 மாத இடைவெளி…. மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா… சுகாதார துறை தகவல்…!!

இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட விவரங்களின்படி, அங்கு 24 மணி நேரத்தில் 1,695 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது, இந்த எண்ணிக்கையானது மே 30ம் தேதிக்குப் பிறகு பதிவான மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஆகும். மே 30ம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டில் கிட்டத்தட்ட 1,828 கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருந்தது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணிய மறுப்பு… வெளுத்து வாங்கிய சக பயணிகள்… நடுவானில் சலசலப்பு..

விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பேரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் சர்வதேச விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில நாடுகள் சிறப்பு விமானங்களை இயக்கி கொண்டு வருகின்றன. சிறப்பு விமானங்களில் பயணிப்பவர்களை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, போன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

கணவனை கொன்று…. உடலை துண்டு துண்டாக்கி…. உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி…..!!

தினமும் குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில் மிகவும் பிரபலமான பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ. இவருக்கு மெரினா குஹா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் அலெக்சாண்டர் தினமும் குடித்து விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பதவிப்பிரமாணத்தை பிரதமர் மீறிவிட்டார்… இந்துத்துவா வென்றுவிட்டது… ஓவைசி ஆதங்கம்..!!

பதவிப்பிரமாணத்தை பிரதமர் மோடி மீறிவிட்டார் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இது பற்றி ஓவைசி கூறியதாவது:  “மதச்சார்பின்மை கொண்ட நாடான இந்தியாவில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறியுள்ளார். ராமர் மீது கொண்ட […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 710,038 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

ஸ்டைலாக, கெத்தாக…. கால்மேல கால் போட்டு…. அதிபரை தெறிக்க விட்ட செய்தியாளர்….!!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ட்ரம்ப் திணறிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் உயிரிழப்புகளின் விகிதம் அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அதிபர் ட்ரம்ப் இறப்பு விகிதத்தை பார்க்காதீர்கள் உலக அளவில் இருக்கும் அதிக பாதிப்பை பாருங்கள் என கூறியுள்ளார். ஆனால் செய்தியாளர் உலக அளவில் மற்ற நாடுகளை […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

எல்லாமே OK தான்… நல்லா வேலை செய்யுது…. மாஸ் காட்டும் ரஷ்யா தடுப்பூசி …!!

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் வெற்றிபெற ரஷ்யா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ள கமேலியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளையும் முடிவு செய்துவிட்டதாகவும், இறுதி ஒப்புதலை பெற காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

“Love Propose” இளைஞன் செய்த செயல்…. எரிந்து நாசமான வீடு…. தீயணைப்புத் துறையினர் வாழ்த்து…!!

இங்கிலாந்தில் தனது காதலிக்கு வித்தியாசமாக ப்ரப்போஸ் பண்ணுவதற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டினால் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்து நாட்டின் தெற்கு யார்க்‌ஷ்ரின் மாகாணத்தின் அபேடெலி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் நெடுநாள் தோழியான ரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார். இதனால், அவர் தனது காதலியிடம் காதலை சொல்ல வேண்டும் என எண்ணி, தனது காதலி ரியாவுக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு, […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவில் வெள்ளம்…. 15 பேர் உயிரிழப்பு…. 11 பேர் மாயம்…!!

தென்கொரியாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் சில பேர் காணாமல் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தென்கொரியாவில் சில நாள்களாக கனமழை மழை பெய்த நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இதில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 1,300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 705 கிடங்குகள் மற்றும் கால்நடை கொட்டகைகளிலும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது. தலைநகர் சியோலில் […]

Categories
உலக செய்திகள்

லெபனானில் திடீர் வெடி விபத்து… பயங்கரவாதிகள் தாக்குதலா??.. அதிபர் டிரம்ப் சந்தேகம்…!!

லெபனானில் நடந்த வெடி விபத்து சம்பவம் பயங்கரவாதிகள் தாக்குதல் போன்று உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.  நேற்று லெபனான் நாட்டில் உள்ள ஒரு துறைமுக கிடங்கில் சக்திவாய்ந்த வெடி விபத்து ஒன்று நேர்ந்தது. அதில் 73 பேர் பலியாகி 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திடீரென்று நடந்த இந்த விபத்துக்கான காரணங்கள் எதுவும் அறியமுடியவில்லை. மேலும் இந்த விபத்தில் என்ன வகையான வெடி பொருட்கள் வெடித்தது என்பது பற்றியும் உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய….. ”2750 டன் அமோனியம் நைட்ரேட்” பரபரப்பு தகவல் …!!

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பெய்ரூட் நகரையே உலுக்கியது. 15 கிலோமீட்டர் தொலைவிற்கு இதன் அதிர்வலையை உணர்ந்ததாக மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த துயர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமாகின. கண்ணாடிகள் அதிர்வால் நொறுங்கியது. அருகிலிருந்த கார்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன. […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 231,560 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 711,189 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் ஷாக் … ”7 லட்சம் பேர் மரணம்”….. அதிர வைக்கும் கொரோனா ..!!

215 நாடுகளில் கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனா வைரஸ் அதீத வேகம் எடுத்து பரவிவருகிறது. உலக அளவில் தினமும் இரண்டு, லட்சம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்படுவதோடு….  5000, 6000 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பும் பதிவு செய்வது மக்களையும், அரசாங்கத்தையும் திணற அடித்துக் கொண்டிருக்கின்றது. நேற்று புதிதாக 2 லட்சத்து 54 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா இறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 86 லட்சத்து 99 […]

Categories
உலக செய்திகள்

பயங்கர குண்டு வெடிப்பு… 3,700 பேர் காயம், 73 பேர் மரணம்…. பதறவைக்கும் வீடியோ …!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு இல்லை… ரஷ்யா கொடுத்த தகவல்…. ஷாக் ஆன உலக நாடுகள் …!!

உலக நாடுகளை கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த உலக அரங்கமே ஒன்றிணைந்து தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த இந்த சூழலில்தான் ரஷ்ய நாட்டின் கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய சோதனை நிறைவடைந்து விட்டதாக கடந்த வாரம் தெரிவித்தது.  அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

7 லட்சத்தை எட்டும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை…. பதறும் உலக நாடுகள்….!!

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றின்  எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

எப்படி இருக்கப் போகிறது புதிய இயல்பு நிலை?

ஊரடங்குக்கு பிறகான காலத்தில், புதிய இயல்பு நிலை மிகக்கடினமாக இருக்கப்போகிறது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தியும், உலக நாடுகள் முயன்று கொண்டிருக்கிறது. இருப்பினும், முன்பிருந்த சூழல் போல் புதிய இயல்பு நிலை இருக்கப் போவதில்லை. போக்குவரத்து, பள்ளிகள், வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றார்போல் பாதுகாப்பான சூழலை உருவாக்க உலக நாடுகள் தொடர்ந்து முயன்றுவருகின்றது. மற்றொரு முனையில், அரசுகள் விதிக்கும் விதியை மக்கள் பின்பற்றியாக வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, ஜப்பானில் உள்ள தீம் பார்க்குகள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் உட்பட….. யாருக்கும் அனுமதியில்லை… ட்ரம்ப் அதிரடி உத்தரவு ..!!

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அரசின் ஒப்பந்தங்களில் பணியமர்த்த கூடாது என்று அதிபர் டரம்ப் புதிய உத்தரவிட்டுள்ளார். உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றால் பொருளாதார ரீதியாகவும், அமெரிக்கா மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்ற விவகாரங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

மில்லியன் கணக்கில் மாணவர்கள் பாதிப்பு….. பேரழிவை எதிர்நோக்கும் தலைமுறை…. எச்சரிக்கும் ஐநா….!!

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் உலகம் தலைமுறை பேரழிவை எதிர் கொள்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 170 நாடுகளில் இருக்கின்ற பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால் 1 பில்லியனுக்கும் மேலான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 மில்லியன் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப் படிப்பை தவறவிட்டு இருப்பதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தரெஸ் கூறியுள்ளார். கொரோனாவிற்கு முன்னர் ஏற்கனவே 250 மில்லியனுக்கும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொற்றின் தாக்கம்… ராஜினாமா செய்த சுகாதார அமைச்சர்…. புதிய அமைச்சர் பதவி ஏற்பு….!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாகிஸ்தான் நாட்டில்  சுகாதார துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,80,000ஐ கடந்து போய் கொண்டிருக்கிறது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் பாகிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

“துல்லியமில்லை” கொரோனாவுக்கு மருந்தே கிடையாது….. WHO அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவுக்கு மருந்தே கிடைக்காமல் போகலாம் என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உலக நாட்டு அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் முற்றிலும் கொரோனாவை அழிப்பதற்காக தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவில் இதற்கான பணிகள் அதிதீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் வெளியான பரபரப்பு செய்தி – ஷாக் ஆகிய மக்கள்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கி கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இதற்க்கு பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக அரங்கமே இரவுபகலாக தடுப்பு மருந்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனாவுக்கு நிரந்தரமாக மருந்தே கிடைக்காமல் போகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளது உலகிற்கே பரபரப்பை ஏற்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 203,509 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 697,189 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 199,861 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 199,861 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மாஸ் காட்டும் இந்தியா…. உலகளவில் பெருமிதம்…. உலக சுகாதார அமைப்பு புகழாரம்…!!

நேற்று ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட செயல் இயக்குனர் மைக்கேல் ரயான் இந்தியாவை புகழ்ந்து தள்ளினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் சக்திவாய்ந்த தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கொரோனவை முடிவுக்கு கொண்டுவரும் சக்திவாய்ந்த மருந்துகளையும் தயாரித்து வரும் இந்தியா, சர்வதேச அளவில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது உண்மை தான். 130 கோடி மக்கள் தொகையை கொண்ட பெரிய நாடு […]

Categories

Tech |