Categories
உலக செய்திகள்

“1.50 கோடி” வீடியோக்களுக்கு தடை… யூடியூப் நிறுவனம் அதிரடி .. இதுதான் காரணம்..!!

யூடியுப் தளத்தில் தவறான செய்திகள் பரப்பப்படுவதால் 1.50 கோடி வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. நமக்கு தேவையான தகவல்களை வீடியோ காட்சிகள் மூலமாக திரையிட்டு காண்பிக்க யூடியூப் தளம் பெரிதும் உதவி வருகிறது. இந்நிலையில் இந்த யூடியூப் தளத்தில் தேவையில்லாத வன்முறையை தூண்டும் விதத்தில் பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. சென்ற ஜனவரி மாதம் இந்த புகாரின் அடிப்படையில் 50 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த வன்முறைகள் அதிகரித்ததன் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கர வெள்ளப்பெருக்கு”… 100 ஐ தாண்டிய பலி… அல்லல்படும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று தீவிர மழை பெய்து தீர்த்தது. இந்த மழையால் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. பர்வான், வார்டக் ஆகிய இரு மாகாணங்களில் வெள்ளம் அத்துமீறி பாய்ந்ததால் பல வீடுகள் வெள்ளத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தகவல் அறிந்து […]

Categories
உலக செய்திகள்

ஒரே இடத்தில்…”1500 எலும்புக்கூடுகள்”… பின்னணி இதுதானா…!!

ஜப்பான் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க கல்லறை பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒசாக்கா நகரில் உள்ள உமேடா கல்லறை வரலாற்று சிறப்பு மிக்க கல்லறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கல்லறை அமைந்துள்ள இடத்தில் 1500-க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டின் மேற்கு நகரமான ஒசாக்காவில் அகழாய்வு பணியின் போது ஒரே இடத்தில் இத்தனை எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிடைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது அந்த எலும்புக்கூடுகள் […]

Categories
உலக செய்திகள்

“போலியோ”.. இன்னும் இந்த 2 நாட்டுல மட்டும் இருக்கு…!!

போலியோ நோயை பல்வேறு நாடுகள் வென்று வரும் நிலையில் இரு நாடுகள் மட்டும் இந்த நோய் தாக்கத்தை பெற்று வருவதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 1952 ஆம் ஆண்டு, போலியோ என்ற இளம் பிள்ளை வாதம் என்ற கொடூர நோய் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. இந்நோயிற்குத் தடுப்பூசி மருந்து கண்டறிவதற்குள் பல நாடுகளில் பரவ தொடங்கி பெரும்பாலும் குழந்தைகளை தாக்க ஆரம்பித்தது. இந்நோயிக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“4 ஆண்டுகளுக்கு அதிபர் டிரம்ப் தான்” – மெலனியா

டிரம்பின் மனைவி அடுத்த நான்கு வருடங்களுக்கு அதிபராக டிரம்ப் இருந்தால்தான் அது அமெரிக்காவிற்கு நல்லது என கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லொவேனியாவில் பிறந்து வளர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தவாறு காணொளி வாயிலாக உரையாற்றியபோது, கம்யூனிச ஆட்சியில் இருந்து கொண்டு ஸ்லோவேனியாவில் வளர்ந்து வந்த போது அமெரிக்காவில் உள்ள சுதந்திரம் மற்றும் வாய்ப்புகள் பற்றி கேள்விப்பட்டு, 26 வயதில் அமெரிக்காவிற்கு வந்ததாகவும், அதிபர் டிரம்ப் நாட்டில் முன்னேற்றத்தைை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தை மிரட்டும் “கொரோனா”… 3 லட்சத்தை தாண்டிய பாதிப்பு…!!

வங்காளதேசத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி மனித பலியை வாங்கி வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் வங்காள தேசத்திலும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வங்காளதேசத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மனைவியை கொன்ற இந்திய தடகள வீரர்… தற்கொலைக்கு முயற்சி.. கைது செய்த போலீஸ்..!!

முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் தன்னுடைய தாய் மற்றும் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் 1983-ம் வருடம் குவைத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு ஏறிந்து  வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றவர் இக்பால் சிங். தற்போது 62 வயதான இவர் அமெரிக்கா சென்று குடியேறி, தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் பென்சில்வேனியாவில் உள்ள நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வரும் இவர் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கராக மாறிய… “இந்திய பெண் சாப்ட்வேர்”…!!

ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வெள்ளை மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற நாடுகளை சேர்ந்த 5 பேருக்கு வெள்ளை மாளிகையில் வைத்து குடியுரிமை சான்றுகள் அளிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் அரிய நிகழ்வாக அதிபர் டிரம்ப் முன்பு அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். அப்போது இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணனை வரவேற்று […]

Categories
உலக செய்திகள்

“புல்வாமா தாக்குதல்”… என்ஐஏ விசாரணையை முடுக்கிவிட்ட புகைப்பட ஆதாரங்கள்…!!

புல்வாமா தாக்குதலில் பிடிபட்ட பரூக் என்ற இளைஞர் வைத்திருந்த புகைப்படங்கள் என் ஐ ஏ விசாரணைக்கு உதவியாக இருந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அளவில் பேசப்பட்ட புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான பரூக் என்பவன், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியில் எடுத்த ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் பதிவுகள் , குண்டு தயாரிப்பது குறித்து அவன் எடுத்த படங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஜெய்ஷே முகம்மதின் முக்கிய […]

Categories
உலக செய்திகள்

“கூட்டத்தில் குள்ளநரி”… தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள்…!!

ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தான் அமைப்பை சார்ந்தவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சமீபகலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஆதரவு சிரிய குர்து ஜனநாயக படையினர் பிடித்து வைத்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகளில் 29 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அல் கொய்தா அல்லது பாகிஸ்தானில் இயங்கி வரும் வேறு அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் அமெரிக்கா விசாரணை நடத்திவருகிறது. இந்தியாவை குறிபார்த்து தாக்கும், லஷ்கரே […]

Categories
உலக செய்திகள்

“அதிசயம் ஆனால் உண்மை”… 16 அடி உயர முடி கொண்ட முதியவர்…

முதியவர் ஒருவர் தன்னுடைய கூந்தலை 16 அடி நீளம் வளர்த்து வைத்துள்ளது பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வியட்னாம் நகரில் வசித்து வரும் 92 வயதான நிகியான் சியன் என்ற முதியவர் மெகாங் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது தலைமுடியை 16 மீட்டர் நீளம் வளர்த்து வைத்துள்ளார். கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் இருந்ததால், தலைமுடி கடினமாகி 16 அடி நீளத்துக்கு வளர்ந்து காட்சியளிக்கிறது. அவருடைய 16 அடி நீளமுள்ள கூந்தலை பராமரிக்க கஷ்டப்பட்டு சுருட்டி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் தாக்குதல்… 3 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கும், தாலிபான் நாட்டிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் இருநாடுகளும் சமாதான நிலையை அடைய பல முறை திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் பால்க் மாவட்டத்திலுள்ள ராணுவப் படையினரை குறிபார்த்து தாலிபான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை ஒரு காரில் குண்டு வைத்து வெடிக்கச் செய்து நடத்தியுள்ளது. நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர் என ராணுவ வட்டாரங்கள் […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில்” குதிரை பொம்மையுடன் உலாவந்த 5 வயது சிறுமி… கதறிய பெற்றோர்..!!

நடுக்கடலில் பொம்மையுடன் சிக்கித் தவித்த சிறுமியை கடற்படையின் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஆன்ட்டிரியோ நகரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள கடலுக்கு கப்பலில் சுற்றுலாவாக சென்றுள்ளனர். அப்பொழுது குழந்தை ஒரு பலுனால் செய்யப்பட்ட குதிரை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கடலில் பெரிய அலை சீற்றம் ஏற்பட்டது. பெற்றோரின் கவனக்குறைவால் திடீரென்று அந்தக் குழந்தை கடலில் பொம்மையுடன் போய் விழுந்தது. இதனைக் கண்டு கதறி அழுத பெற்றோர் கடற்படை காவல்துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

“பற்றி எரியும் காட்டுத் தீ”… மீட்பு பணியில் இறங்கும் விமானப்படை…!!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக 15 லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஏற்பட்ட 3வது பெரிய நெருப்பாக, கடும் வெப்பம் மற்றும் தொடர்ந்து மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட காட்டுத் தீ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெருப்பின் காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானஙகள் போராடி வரும் நிலையில் 40க்கும் […]

Categories
உலக செய்திகள்

“எதிராளிகள் கள்ள ஓட்டால் தான் வெல்ல முடியும்”… அதிபர் டிரம்ப் உறுதி…!!

வருகின்ற அதிபர் தேர்தலில் கள்ள ஓட்டால் மட்டுமே நம்மை ஜெயிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை நடத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலும் வாக்குப்பதிவுகள் இணையம் வழியாகவே நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வழி வாக்குப்பதிவுகள் நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் தன்னுடைய கட்சி பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ” இந்தத் தேர்தலில் அதிக […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அமெரிக்காவில் குறைகிறது “கொரோனா”… நிம்மதியில் மக்கள்…!!

அமெரிக்காவில் இரு வாரங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அனைத்து நாடுகளையும் பாடாய்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா சென்ற இரு வாரங்களில் பெருமளவு பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. தினமும் 43,000 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததை விட இப்பொழுது 21 விழுக்காடு குறைவாகவே வைரசின் தாக்கம் உள்ளதாக ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

19,000 வேலையாட்களை வீட்டிற்கு அனுப்ப… ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு…!!

ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்கா பெரும் பொருளாதார சரிவை மேற்கொண்டுள்ளது. நாடெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பொருளாதார இழப்பையும் மனித உழைப்பையும் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் பெரும் பொருளாதார சுமையை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக விமான பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம் சென்ற மார்ச் மாதம் நலிவடைந்த நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர்கள் வழங்க வேண்டுமென விமான நிறுவனங்கள் தெரிவித்தன. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

“பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகினாரா?”… வெளியான பரபரப்பு செய்தி…!!

போரிஸ் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியில் இருந்து 6 மாத காலத்திற்குள்  விலகிக்கொள்வதாக வெளியான செய்தி பரபரப்பாக வைரலாகி வந்தது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருப்பதால் பதவியிலிருந்து விலகிக் கொள்ள நினைத்திருக்கலாம் என்று மக்கள் பரவிய அந்த செய்தியை நம்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியைப் பரப்பியவர் பிரதமரின் ஆலோசகராக பணிபுரியும் […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியிடம் மூக்கறுபட்ட பாகிஸ்தான்”… இது தான் காரணமா?

நீர்மூழ்கி கப்பலின் புதிய அமைப்பை பாகிஸ்தான்  கேட்டபோது ஜெர்மன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் தண்ணீருக்குள் இரண்டு நாட்களுக்கு மேல் மூழ்கி நிற்க முடியாது. எப்படியும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்த முறையை மாற்றி மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி இருக்கிறது அதன் பெயர் “ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன்” இந்த அமைப்பை பயன்படுத்தி நீர்மூழ்கி  கப்பல்கள் பல வாரங்கள் தண்ணீரில்  மூழ்கி நிற்க முடியும். மேலும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

உலகையே உலுக்கும் “கோர முக கொரோனா”… 2.40 கோடியை தாண்டிய பாதிப்பு…!!

உலக அளவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் மனித இழப்பை கொடுத்து வருகிறது. இந்நிலையில் நாளுக்குநாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். என்னதான் முழு ஊரடங்கு போடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் வைரஸின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதனால் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருடம் கழித்து… மீண்டும் பள்ளி செல்லும் கிரேட்டா தன்பர்க்…!!

சுற்றுசூழல் ஆர்வலராக இருந்த 17 வயது கிரேட்டா தன்பர்க், ஒரு வருடத்திற்கு பிறகு பள்ளியில் சேர உள்ளார். சென்ற வருடம் ஜூன் மாதம் தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு சார்பான போராட்டங்களை கிரேட்டா தன்பர்க் முன்னெடுத்து செயலாற்ற தொடங்கினார். இதன் காரணமாக  பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரம் செய்ய பயணத்தை தொடர்ந்தார். அதனால் அவர் பள்ளிக்குச் செல்லாமல் தொலைதூர கல்வி முறையில் பாடங்களை கற்று வந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த 4 வருடங்களுக்கு நான் தான் அதிபர்”… அதிபர் டிரம்ப் உறுதி…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்ற வாரம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஜோ பிடனை வேட்பாளராக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில் வட கரோலினாவின் சார்லோட் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்பை அதிபர் வேட்பாளராகவும், மைக் பென்சை துணை அதிபர் வேட்பாளராகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அந்த மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், “நான் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக இருப்பது உறுதி” என்று அவர் […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாகிஸ்தான் நபர் கைது..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாகிஸ்தான் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை இரும்பு வேலை பார்த்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில் சமையலறை மட்டும் பொதுவான பகுதியாக இருந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமி உணவை எடுப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறார். இதை பார்த்த குடிபோதையில் இருந்த வாலிபர் அந்த சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார சுமை”… சீனாவிடம் சரணடையும் பாகிஸ்தான்…!!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் சீனாவிடம் சரணடையும் நிலையில் உள்ளது. சீனாவுடன் பாகிஸ்தான் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது கூடுதல் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அண்மையில் சீனா சென்று அந்நாட்டுடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த நிலையில், சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு மேற்கொண்டார். கொரோனா காரணமாக பாகிஸ்தான் பெரும் பொருளாதார வீழ்ச்சியை  பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்த காத்திருந்த “தீவிரவாதி”… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிரியாவில் இருந்து துருக்கியின் தெற்கு காசியான்டெப் மாகாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர், இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டு முக்கிய வீதிகளை உலவு பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்த எண்ணிய நபர், குக்குசெக்மீஸ் மாவட்டத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது அவரை செய்தனர். மேலும் அந்த […]

Categories
உலக செய்திகள்

முதன்முறையாக… முகாம்களுக்கு வெளியில் புதிதாக தொற்று… காசா கவலை..!

காசாவில் தடுப்பு முகாம்களுக்கு வெளியே குடியிருக்கும் மக்களில் நான்கு பேருக்கு புதிதாக பெற்று கண்டறியப்பட்டுள்ளது. 360 சதுர கிலோ மீட்டரில் கடற்கரையோரம் அமைந்திருக்கும் காசாவில், 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருவோர், முகாம்களில் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை 109 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், முகாமுக்கு வெளியே வசிக்கும் மக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு முதன்முதலாக […]

Categories
உலக செய்திகள்

“சரியான நேரத்தில் தடுப்பூசி முடிவுகளை கொடுத்தால் உரிமம் வழங்கப்படும்” – ஆண்ட்ரூ பொல்லார்

சோதனை முடிவுகளை உரிய நேரத்தில் கொடுத்தால் மட்டுமே தடுப்பூசிக்கான ஒப்புதல் உரிமம் வழங்கப்படும் என ஆண்ட்ரூ பொல்லார் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல்கட்ட மனித சோதனையில், இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் ஆய்வு பற்றிய போதிய முடிவுகளை விஞ்ஞானிகள் உரிய நேரத்தில் சமர்ப்பித்தால் […]

Categories
உலக செய்திகள்

கடல் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்… சுற்றுச்சூழல் மோசமடைய வாய்ப்பு… மீட்புக் குழு அறிவிப்பு…!!

மொரீசியசில் விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பலால் கடலில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. சென்ற மாதம் 25 ஆம் தேதி மொரீஷியஸின் தென்கிழக்கு கடற்கரையோரம் பவளப்பாறையில் மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தின் கப்பல் மோதியதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பின் மொரீசியஸ் கடற்கரையோரம் எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பேரிடர் மீட்பு குழுவினர், விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பல் மூலம் கசியும் எண்ணெய் மாசு காரணமாக கடல் சூழல் மேலும் பாதிப்படையக் கூடிய […]

Categories
உலக செய்திகள்

“பிங்க்” நிறமாக மாறிய ஏரி… இதுதான் காரணமா?…!!

அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியானது கொன்யா நாட்டில் பிங்க் நிறமாக மாறி காட்சி அளிக்கிறது உலகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் எப்பொழுதும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீரின் வண்ணம் ஒரு நாட்டில் பிங்க் நிறமாக மாறி உள்ளது. வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராக, துருக்கியின் கொன்யா நகரில் உள்ள மெயில் ஒப்ருக் […]

Categories
உலக செய்திகள்

“மண்பானைக்குள் தங்கக் காசுகள்”… இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிப்பு…!!

இஸ்ரேலில் உள்ள ஒரு சதுக்கத்தில் சுத்தமான 24 காரட் தங்க நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 9ஆம் நூற்றாண்டில் உபயோகிக்கப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னதாக உள்ள தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுக்கத்தில் இளைஞர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு மண்பானையில் நிறைய தங்க காசுகள் நிரப்பப்பட்டு இருந்தது. அதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அது […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் கலவரம்”… கருப்பினத்தவரை 7 முறை சுட்ட போலீசார்…!!

போலீசார் ஒருவர் கருப்பினத்தவரை முதுகில் 7 முறை சுட்டதன் காரணமாக நடத்தப்பட்ட போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன மற்றும் நிறவெறிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை  போலீசார் சுட்டதை கண்டித்து மீண்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கெனாஷா நகரில் நேற்று உள்ளூரில் நடந்த பிரச்சனை காரணமாக ஜக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவரை போலீசார்,  காரை திறந்து உள்ளே செல்ல முயற்சி செய்யும்பொழுது பிளேக்கின் முதுகில் 7 முறை சுட்டுள்ளனர். மேலும் அவர் வந்த காரில் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை புரட்டிப் போடும் “கொரோனா’… இதுவரை 1.82 லட்சம் பேர் பலி…!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா அமெரிக்காவில் மட்டும் அதிக பலி எண்ணிக்கையை கொடுத்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல நாடுகள் அல்லப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,16,000 ஐ கடந்துள்ளது. இன்றைய வரை உள்ள நிலவரப்படி, 2,38,692 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களில் 66,36,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் 61 ஆயிரத்து 767 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. உலகம் […]

Categories
உலக செய்திகள்

“பிளாஸ்மா சிகிச்சை”… ஆரம்ப கட்டத்தை தாண்டவில்லை… உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…!!

பிளாஸ்மா சிகிச்சை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி பெரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சையை நடைமுறைப்படுத்த நேற்று முன்தினம் தான் அதிபர் டிரம்ப் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த சிகிச்சை முறையை அங்கீகரிக்கவில்லை. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவும்யா […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 22 அகதிகள் பலி…!!

நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்ததில் 22 அகதிகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகு ஒன்றின் மூலம் பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கியவர்களை தேட ஆரம்பித்தனர். […]

Categories
உலக செய்திகள்

“சீனா அணை கட்டக்கூடாது”… காஷ்மீரில் கடும் போராட்டம்…!!

ஜுலம் – நீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை எதிர்த்து காஷ்மீரில் தீப்பந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதில் ஒன்றாக ஜுலம் – நீலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டனர். இந்த அணை கட்டப்படுவதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க – சீன வர்த்தகம்… தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை…!!

அமெரிக்க சீன நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் இருந்துதான் பரவியது என அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் அமெரிக்க மற்றும் சீன நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. மேலும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே போல் சீனாவிலும் அதிக வரி வசூலிப்பதாக அந்நாட்டு அரசு […]

Categories
உலக செய்திகள்

“வந்தாச்சு அடுத்த கேம்”… வார்னர் பிரதர்சின் புதிய முயற்சி…!!

வார்னர் பிரதர்ஸின் அடுத்த விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் கோதம் நைட்ஸ் முக்கிய இடம் பிடிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசி ஃபேண்டம் எனும் ரசிகர்கள் நிகழ்வில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தனது பேட்மேன் விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் ‘கோதம் நைட்ஸ்’ என்ற விளையாட்டை வெளியிட்டிருக்கிறது. இந்த விளையாட்டு தொடர்பான சுமார் 8 நிமிடக் காணொலியை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அரங்கேற்றியுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், பேட் கேர்ள், ராபின் ஆகியோர் இலக்கை அடைய முன்னேறிச் செல்லும் […]

Categories
உலக செய்திகள்

வரலாற்று மிக்க புதிய சாதனை… ஜப்பான் பிரதமர்…!!

ஜப்பான் நாட்டின் பிரதமராக சுமார் 8 வருட காலமாக நீடித்து நின்று ஷின்சோ அபே சாதனை படைத்துள்ளார். சென்ற 2012ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்ஸோ அபே  பதவியில் நிலைகொண்டு வருகிறார். இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, 2,799 நாள்கள் அவர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம், அந்நாட்டில் அதிக வருடங்கள் ஆட்சிப் புரிந்து வரும் பிரதமர் என்ற சாதனையை அவர் தனது பதவியின் மூலம் நிரூபித்துள்ளார். 1964 முதல் 1972ஆம் […]

Categories
உலக செய்திகள்

உசேன் போல்ட்டுக்கு “கொரோனா”… வெளியான டுவிட்டர் பதிவு…!!

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டப்பந்தயத்தில் உலகையே வியப்பில் ஆழ்த்திய ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒலிம்பிக் போட்டியில் 2008, 2012, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் 100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்று உலகிற்கே பெருமை சேர்த்தவர். இவர் 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப்பின் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். Stay Safe my ppl 🙏🏿 […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் “கொடூரத் தாக்குதல்”… 7 ராணுவ வீரர்கள் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிபார்த்து தாக்குதலை நடத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளின் அட்டூழியம் காரணமாக அந்நாட்டில் அதிகமாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ஒவ்வொரு செயலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தெற்கு பிராந்தியத்தை ஆக்கிரமித்திற்கும் இந்த பயங்கரவாதிகளின் நோக்கம் மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ வேண்டும் என்பதே. இதன் காரணமாக பல பயங்கரவாத அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“கொரோனா வைரஸ்”… 1 கோடியே 63 லட்சம் பேர் மீண்டனர்… உற்சாகத்தில் மக்கள்…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை தாண்டியுள்ளது. சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகப்படியான மனித பலியை வாங்கி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். இந்தக் கொடிய வைரஸ் தன்னுடைய தாக்கத்தை ஒருபக்கம் காட்டிக் கொண்டு வந்தாலும் தன்னலமில்லாத மருத்துவர்களின் சேவையால் கோடிக்கணக்கான மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் தற்பொழுது வரை […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயம்… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!!

12 வயது குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதில் எந்தவித பயனும் இல்லாமல், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உபகரணங்கள் ஊழல்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!!

கொரோனா பாதுகாப்பு உபகரணங்களில் ஊழலில் ஈடுபடுவது கொலை செய்வதற்கு சமம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், ” உலகின் கொடூரமான காலகட்டத்தில், தொற்று நோய்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை கொலை செய்வதற்கு சமம். அதிலும் குறிப்பாக பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையிலேயே கொலை செய்வதற்கு தான் சமம். ஏனென்றால் சுகாதார ஊழியர்கள் அனைவரும் இந்த உபகரணங்கள் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

என்னது! கொரோனா முடிய இன்னும் இரண்டு ஆண்டா?…என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க…!!!

கொரோனா வைரஸை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள போதும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குள் […]

Categories
உலக செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… “தடைகளை கடந்து புதிய தொடக்கமாக அமைய வேண்டும்”… ஜோ பிடன் வாழ்த்து…!!

நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்தநிலையில் ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு விநாயகசதுர்த்தி வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் எல்லா தடைகளையும் கடந்து, இது […]

Categories
உலக செய்திகள்

இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகுமா?… உலக சுகாதார அமைப்பு…!!!

கொரோனா வைரஸ் தொற்றை இரண்டு ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள போதும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள்… மீண்டும் நெருங்கும் ஆபத்து… மருத்துவ பேராசிரியரின் எச்சரிக்கை…!!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் ஆபத்து இருப்பதாக ஆக்ஸ்போர்ட் மருத்துவ பேராசிரியர் கூறியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிரமான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அனைத்து பாதுகாப்பு ஆன்டிபாடிகளையும் இழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர் கூறியுள்ளார். இதுபற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சர் ஜான் பெல் கூறுகையில், ” கொரோனா பாதிப்பு மீண்டும் வராமல் பாதுகாக்கக்கூடிய ஆன்டிபாடிகள் ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… தலை தூக்கிய இந்திய கலாச்சாரம்…!!!

கொரோனா அச்சத்தால் இரு நாட்டு அதிபர்கள் கை குலுக்காமல், வணக்கம் தெரிவித்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா அச்சத்தால், […]

Categories
உலக செய்திகள்

ஜலதோஷம் மற்றும் கொரோனா இடையேயான வித்தியாசம்… விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு…!!!

ஜலதோசம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையே வாசனை, சுவை இழப்பில் உள்ள வித்தியாசம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணம் என்றும் மருந்து சாப்பிடாவிட்டால் ஒருவாரத்தில் குணம் என்றும் வேடிக்கையாக ஒரு பழமொழி இருக்கிறது. மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் இருக்கின்ற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் நம்மிடமிருந்து ஓடிவிடும். சாதாரண காலங்களில் ஜலதோஷம் வந்தால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அதனால் வாசனையை நுகர முடிவதில்லை. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… பணக்காரர்களுக்கு முன்னுரிமை கிடையாது… போப் ஆண்டவர் கருத்து…!!!

பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை பதுக்கி வைக்க கூடாது என்று போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு போப் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், ” கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்த தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள். கொரோனா தடுப்பூசி, உலக மக்கள் அனைவருக்கும் உரிமையானதாக இருக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |