Categories
உலக செய்திகள்

தமிழ் பேசும் தம்பதி…. அழகான குழந்தை…. இப்படி செஞ்சுட்டாங்களே… அதிர்ந்து போன போலீஸ் …!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரென்ட்  குடியிருப்பு பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்த மலேசிய தமிழ் தம்பதி குடும்பத்தினரோடு  சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குகராஜ்  சிதம்பரநாதன் 42 வயதான இவருக்கு 36 வயது நிரம்பிய பூர்ணா காமேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயதான கைலாஷ் குகராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பூர்ணாவின் உறவினர் ஒருவர் தினமும் தொடர்பில் இருந்த பூர்ணா கடந்த […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பெண்…. குழிக்குள் 6 சடலங்களுடன் மீட்பு…. நடந்தது என்ன…?

இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் ஆறு சடலங்களுடன் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் மெக்சிகோவை சேர்ந்த எஸ்ஸினா என்ற பெண் காணாமல் போயுள்ளார். இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர் காணாமல் போகவில்லை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் அவர் நான்கு பேரால் கடத்தப்பட்டுள்ளார். இதனிடையே காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் இடத்தில குழி தோன்டியுள்ளனர். அதனுள்ளே 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ளது. அதில் மூன்று பெண்கள் என்றும் மூன்று […]

Categories
உலக செய்திகள்

 இயற்பியல் துறை… இந்த வருடத்தின்… நோபல் பரிசு அறிவிப்பு வெளியீடு…!!!

இந்த வருடத்தின் நோபல் பரிசுக்கான பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் இடம் பெற்றுள்ளனர். உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… கொரோனா இவ்வாறும் பரவும்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலம் பரவலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றில் இருக்கின்ற வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுநல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை குறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் இதற்கு முன்னதாக இப்படி ஒரு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்….. செய்த செயலால் எழுந்த சர்ச்சை…!!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வரும் அதிபர் ட்ரம்ப் முக கவசத்தை அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் மருத்துவமனையில் இருந்து திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அவருக்கு தொடர்ந்து தொற்றுக்கான சிகிச்சை வெள்ளை மாளிகையில் வைத்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு புறப்படும் முன் தொற்றை நினைத்து யாரும் பயம் கொள்ளவேண்டாம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட நான் நன்றாகவே இருக்கிறேன் என டுவிட் செய்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

“காதலிக்க மறுப்பு” 10 வருடம் கழித்து பழி தீர்த்த நபர்…. கொடூரமாக நடந்த சம்பவம்…!!

காதலிக்க மறுத்த பெண் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மண்டலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவரது வீட்டின் அருகே மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் அவரை வழிமறித்த நபர் தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் கொடூரமாக தாக்கி உள்ளார். அந்தப் பெண் நிலைகுலைந்து சரிந்த பிறகும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிடம் இருந்து விடுதலையா…? ஒரு வருடம் கவனமா இருங்க…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உடல் அளவில் பல பாதிப்புகளை சந்திப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தாலும் மறுபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் சுகாதார மையம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றது. அவ்வப்போது எச்சரிக்கையும் விடுகின்றது. ஆனால் பலரும் இதனை பின்பற்றுவதில்லை. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இங்கே வரக் கூடாது…. சீனாவுக்கு அடுத்த சிக்கல்…. லண்டனில் மக்கள் போராட்டம்….!!

லண்டனில் இருக்கும் சீன தூதரகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இஸ்லாமியர்கள் மறுப்பு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன இஸ்லாமியர்கள் சீன அரசால் கொடுமைப் படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சீன அரசு இதனை உறுதியாக மறுத்தது. அது மட்டுமல்லாமல் உய்குர் இன இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை குறைக்க அங்கு பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதனையும் சீன அரசு மறுத்தது. இந்நிலையில் ஆதாரத்துடன் அறிவிப்பு ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

உலக மக்களுக்கு மகிழ்ச்சி…..! இன்னும் 3 மாத்தில் கொரோனா தடுப்பூசி? வெளியான புதிய தகவல் …!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலி எடுத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்து விட்டதாக கூறியது. சீனாவும் இந்தியாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உலக நாடுகளுக்கு தொற்றை பரப்பிய குற்றச்சாட்டிலிருந்து சீனா விலக தடுப்பு மருந்தை கண்டறிய தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் இருக்கும் மருத்துவமனையில் பரபரப்பு….! குவிக்கப்பட்ட போலீசாரால் பதற்றம் …!!

ட்ரம்ப் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனையின் அருகே கிடந்த சந்தேகத்திற்குரிய பையினால் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறலும் காய்ச்சலாலும் அதிபர் அவதிப்பட்டதால் வாஷிங்டனில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அதிபர் ட்ரம்ப் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அடுத்த 48 மணி நேரம் மிக மிக முக்கியமானது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வாக்குவாதத்தில் கோபம்…. காதலன் செய்த செயல்… உயிருக்கு போராடும் காதலி…!!

வாக்குவாதத்தில் காதலியை காதலன் தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜப்பானில் உள்ள கோவா நகரை சேர்ந்தவர் மாகோடோ கட்டுமான தொழில் செய்து வருபவர். இவர் தனது காதலியுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று இவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் கொண்ட மாகோடோ தனது காதலியின் மீது மண்ணெண்ணெயை தெளித்து காதலி மீது தீ வைத்துள்ளார். பின்னர் அவசர சேவை அழைத்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

“மது போதை” வாஷிங்மெஷினில் நுழைந்த பெண்…. பின் நடந்த விபரீதம்… வெளியான காணொளி…!!

மது போதையில் இளம்பெண் வாஷிங்மெஷினில் உள்ளே மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல் என்பவர் தனது தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் அதிக போதையில் இருந்த அவர் நிதானத்தை இழந்து வாஷிங்மெஷின் உள்ளே விளையாட்டாக புகுந்துள்ளார். ஆனால் அவரால் அதில் இருந்து வெளியில் வர முடியாத அளவிற்கு சிக்கிக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை மிஷின் உள்ளே இருந்து பாதுகாப்பாக மீட்டனர். […]

Categories
உலக செய்திகள்

நான் இறந்து விடுவேனா…? சிகிச்சையில் ட்ரம்ப் கேட்ட கேள்வி….?

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் ட்ரம்ப் நான் இறந்து விடுவேனா என்று கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலால் ராணுவ மருத்துவமனைக்கு அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அதிபர் காய்ச்சலில் இருந்து விடுபட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் பற்றிய தகவல் 48 மணி நேரம் கழித்தே தெரியவரும் என்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இறந்த பெண்…. சடலத்திடம் சில்மிஷம்…. 50 வயது நபர் கைது…!!

பிணவறையில் கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலத்திடம் சில்மிஷம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் Port Kaituma என்ற மருத்துவமனையில் பெண்ணொருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது சடலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கடந்த மாதம் 26ஆம் தேதி Leroy Checon என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் பிணவறையில்  இறந்து கிடந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவர அவரை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்தனர். பின்னர் அவர் […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் கொழுத்திய கணவன்…. சீனா அழகிக்கு நேர்ந்த கொடூரம்….!!

சீனாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண்ணை அவரது கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர் லாமு. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கிராமிய வாழ்க்கை பற்றிய காணொளிகளை இவர் வெளியிடுவதால் தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த லாமு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு குழந்தை லாமுவிடமும் மற்றொரு குழந்தை கணவரிடமும் வளர்ந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

பொய் சொல்லிட்டே இருங்க…. உங்களுக்கு துட்டு தாறோம்…. கோடிகளை கொட்டும் சீனா….!!

உலக நாடுகளில் பொய்களை பரப்ப சீனா கோடிக்கணக்கான பணத்தை சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்த நடைமுறைகளை சீனா கையாண்டுள்ளது என்ற பொய்யான தகவலை பரப்புவதற்காக சீனா ஊடக பயனர்களை விலைக்கு வாங்கியுள்ளது. இதுபற்றி அறிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் மீது வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ள பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்கத்தை சிறப்பாகக் கையாண்டதாகவும் அதன் பலனாக இறப்பு […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப்புக்கு கொரோனா… இனி என்ன நடக்கும் ? கணித்து சொன்ன பெண்….!!

Trumpஅமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரோனா என்ன பாதிப்பை கொடுக்கும் என்பதை மறைந்த பாபா வாங்கா முன்கூட்டியே கணித்த தகவல் வெளியாகியுள்ளது சோவியத் ஒன்றியத்தின் சரிவு, 9/11 தாக்குதல், தாய்லாந்து சுனாமி போன்று பல அழிவுகளை கொடுத்த சம்பவங்களை முன்கூட்டியே சரியாக கணித்தவர் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவர் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான பண்ணை அருகே ஏற்பட்ட தூசி புயலால் தனது கண் பார்வையை இழந்தார். பார்வை பறிபோய் இருந்தாலும் அவருக்கு எதிர்கால நிகழ்வுகளை துல்லியத்துடன் கணிக்கும் சக்தி […]

Categories
உலக செய்திகள்

“ஹே ஜாலி ஜாலி” வேலை கிடைச்சிட்டு…. மகிழ்ச்சியில் பெண் செய்த செயல்… வைரலான காணொளி…!!

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ரோட்டில் இளம்பெண் நடனமாடியது காணொளியாக வைரலாகி வருகிறது ஒவ்வொரு நாளும் பல காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. அவ்வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இளம்பெண்ணின் காணொளியும் பல லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. அந்த காணொளியில் இளம்பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் ரோட்டில் நடனமாடியுள்ளார். இதனை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த பெண்ணிற்கு வேலை கொடுத்த முதலாளி அந்த காணொளியை […]

Categories
உலக செய்திகள்

சிங்கத்திடம் பந்தாவா….? ஊழியருக்கு ஏற்பட்ட துயரம்…. அலறிய மக்கள்… வெளியான காணொளி…!!

உயிரியல் பூங்காவில் ஊழியரின் கையை சிங்கம் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்காவில் இருக்கும் செனகல் பகுதியில் உயிரியல் பூங்காவில் Wade என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விலங்குகளைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் முன் கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை பந்தாவாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரையே பார்வையாளர்கள் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்க திடீரென அந்த சிங்கம் Wade-யின் கையை நன்றாக கவ்வி கொண்டது. இதனை பார்த்த பார்வையாளர்கள் அலற ஊழியரை காப்பாற்றும் நோக்கத்தில் சிலர் சிங்கத்தின் […]

Categories
உலக செய்திகள்

“உடல் தெரியும்படி உடை” என்ன தண்டனை தெரியுமா….? எதிர்க்கும் மாணவ மாணவிகள்…!!

உடல் தெரியும்படி உடை அணியும் மாணவ மாணவிகளுக்கு வித்தியாசமாக தண்டனை கொடுக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் பள்ளியில் மாணவ மாணவிகள் தங்கள் உடல் பாகம் வெளியில் தெரியும்படி உடை அணிந்தால் அவர்களுக்கு வெட்கச் சட்டை என ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழங்கால் வரை நீளம் இருக்கும் அந்த சட்டையில் நான் சரியாக உடை அணிந்து உள்ளேன் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த விநோத தண்டனையில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக சிக்குகின்றனர். 2 மாணவர்கள் மட்டுமே இதுவரை […]

Categories
உலக செய்திகள்

24 மணிநேரம் பெய்த மழை…. புரட்டி எடுக்கும் அலெக்ஸ் புயல்…. 8 பேர் மாயம்….!!

பிரான்சில் அலெக்ஸ் புயலில் சிக்கி 7 பேர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டினரை அலெக்ஸ் என்ற புயல் பாடாய்படுத்தி வருகிறது. அந்நாட்டின் நைஸ்  நகரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 8 பேர் மாயமாகி உள்ளனர். 24 மணி நேரமாக 450 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதேபோன்று 2015-ம் வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸில் ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

எரிந்த வீட்டில் கிடந்த சடலங்கள்…. மரணத்திற்கு காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டில் இரண்டு பெண்கள் உயிர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அந்த இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு இரண்டு பெண்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் அந்த வீட்டில்  சமன் மீர் சச்சார்வி  மற்றும் அவரது மகள் வியன் என இருவர் வசித்து வந்தது தெரியவந்தது. ஆனால் தீயில்   இறந்து கிடந்தது […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்க்கு தொற்று உறுதி….. “அவர் இறந்து விடுவார்” சர்ச்சையை எழுப்பிய பதிவு…!!

 டிரம்ப்க்கு கொரோனா உறுதியான நிலையில் ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தை பதிவிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தி தொடர்பாளராக பணிபுரிந்தவர் சாரா ரஹீம். இவர் அதிபர் டிரம்ப் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு அவர் அதனை உடனடியாக நீக்கி இருந்தாலும் அவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்விட் செய்வது […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு அதிகாரம் இல்லை…. ட்ரம்ப் உத்தரவுக்கு தடை…. நீதிமன்றம் அதிரடி…. இந்தியர்கள் மகிழ்ச்சி….!!

இந்த வருடம் முழுவதும் எச்1பி விசா வழங்கப்படாது என்ற அதிபரின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் தங்கி பணிபுரிய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க அரசு எச்1பி விசா மூன்று ஆண்டுகள் கால கெடுவுடன் வழங்கி வந்தது. அதன் பிறகு தேவைப்பட்டால் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பதற்கான வசதியும் அதில் அடங்கியிருந்தது. இந்த எச்1பி விசாவை இந்தியர்களும் சீனர்களும் தான் அதிகமாக பெற்றிருந்தனர். குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த விசா […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

பெண்களுக்கு முக்கியத்துவம்…. இனி எல்லாமே அவுங்கதான்… சாட்டையை சுழற்றிய ட்விட்டர் …!!

உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் அலுவலகங்களில், அனைத்து செயல்பாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களில், 50 விழுக்காடு பெண்களை 2025க்குள் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கின்படி 42.2 விழுக்காடு பெண்கள் ட்விட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பெண்களின் பங்களிப்பு நேர் பாதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை, சமூக வலைதளத்தை ஆண்டுவரும் இப்பெரு நிறுவனத்தில் 42.2 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தில் 10 விழுக்காடு வரை […]

Categories
உலக செய்திகள்

காவல்நிலையம் போன முதியவர் பலி…. வெளியாகிய திக் திக் தகவல் …!!

கடும் பனியிலும் முதியவரை காவலர்கள் வெளியேற்றிய வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளது. லண்டன் ஆக்சிபிரிட்ஜ்  காவல் நிலையத்திற்கு தஞ்சம் தேடி வந்த முதியவரை கடுமையான குளிரில் வெளியே அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.  2016ஆம் ஆண்டு வசிப்பதற்கு இடமின்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் கிரேக்க நாட்டை சேர்ந்த 63 வயதான பெரிக்கில்ஸ் என்பவர் தஞ்சம் புகுந்தார். அவர் ஆக்ஸ்பிரிட்ஜ் […]

Categories
உலக செய்திகள்

“பாதிப்பு குறைஞ்சிட்டு” அக்டோபர் 12 பள்ளிக்கு போலாம்…. எந்த நாட்டில் தெரியுமா…?

அக்டோபர் 12 ஆம் தேதி நைஜீரியாவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கத்தால் பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தடுப்பு மருந்து உலகம் முழுவதிலும் கிடைக்கும் வரை 20 லட்சம் பேர் தொற்றினால் உயிர் இழப்பார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதனால் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றினால் ஏற்படும் பாதிப்பின் அளவு நைஜீரியாவில் குறைந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இனி இது கிடையாது…. நேத்தோட போட்டாச்சு தடை…

இங்கிலாந்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை விதிக்கப்பட்டது   உலக நாடுகள் பலவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பிளாஸ்டிக் கவர் போன்றவைகளுக்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் பானங்களை கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் பிளாஸ்டிக் ஸ்டராக்கள் போன்றவை நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்நாட்டில் 4.7 பில்லியன் ஸ்டராக்கள் 316 பானம் கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் 1.8 பில்லியன் பிளாஸ்டிக் பட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் […]

Categories
உலக செய்திகள்

இரவு கேட்ட அலறல்…. வீட்டினுள் பார்த்த பயங்கர காட்சி…. அதிர்ச்சியில் போலீஸை அழைத்த தம்பதி…!!

இரவு நேரம் வீட்டிலிருந்து படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நேரம் சுமார் 8.30 மணிக்கு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்த தம்பதி உடனடியாக அலறல் கேட்ட திசை நோக்கி சென்றனர். அங்கு இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணொருவர் அமர்ந்திருப்பதையும் அவரின் அருகே […]

Categories
உலக செய்திகள்

எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா…. சிகிச்சையை தொடங்கிய ட்ரம்ப்…. ட்விட்டரில் பதிவு…!!

தானும் மற்றும் தனது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனுடன் தேர்தல் விவாதங்களில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரும் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அதிபர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில் “இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

“தற்கொலைத் தாக்குதல்” தலிபான்களின் அட்டகாசம்…. 9 பேர் உயிரிழப்பு….!!

ஆப்கானிஸ்தானில் ராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஹெல்மந்த் மாகாணத்திலுள்ள நஹ்ரி சரா மாவட்டத்தில் வெடிபொருள் நிரப்பிய காரில் பயங்கரவாதி ஒருவர் ராணுவ சாவடி அருகே வந்து வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலை தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். அதில் பெண்களும் அடங்குவர். மேலும் 3 பாதுகாப்பு படையினரும் ஒரு குழந்தையும் இந்த தாக்குதலினால் படுகாயமடைந்துள்ளனர். நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்களின் ஆதிக்கம் […]

Categories
உலக செய்திகள்

உயிர் இருக்கும் வரை தேடுவேன்…. நீங்களும் தேடி தாங்க….. பெண் தொலைத்த பொருள் என்ன…?

பெண்ணொருவர் தான் தொலைத்த பொருளை தான் உயிருடன் இருக்கும் வரை தேட போவதாக கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரைச் சேர்ந்த மெலனா மோசட்  என்பவர் அவரிடமிருந்த சென்டிமென்டான பொருள் ஒன்றை தொலைத்து உள்ளார். மொட்டை மாடியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த சமயம் அவருக்கு பிடித்தமான அந்தப் பொருள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனது உயிர் இருக்கும் வரை நான் தொலைத்ததை தேடுவேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அது விலைமதிப்பில்லாத நகையும் இல்லை பரம்பரை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“கடுமையான சூழல்” 1800 கோடி கொடுத்து உதவி… இந்தியாவுக்கு எங்கள் நன்றி…!!

கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் நிதியுதவி வழங்கிய உதவிய இந்தியாவிற்கு மாலத்தீவு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது உயிரிழப்புகள் ஒருபக்கம் துயரத்தை கொடுத்தாலும் மறுபுறம் பொருளாதார வீழ்ச்சி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு ஜிடிபி மைனஸில் போய்க்கொண்டிருக்கிறது. இதே நிலை பல நாடுகளில் நிலவி வருகிறது. அவ்வகையில் மாலத்தீவில் தொற்றினால் 10,297 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 9,508 பேர் குணமடைந்து 34 பேர் […]

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு வந்த மகள்…. கேட்ட தாயிடம் வாக்குவாதம்…. தந்தை கொடுத்த கொடிய தண்டனை…!!

மது அருந்திவிட்டு தாயிடம் வாக்குவாதம் செய்த மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹசன் என்பவர் இறைச்சி கடை வைத்திருக்கிறார். இவரது மகள் டிடேம் நடன மங்கையாக இருந்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் டிடேம் நன்றாக மது அருந்திவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது தாய் எதற்காக வீட்டிற்கு குடித்துவிட்டு வந்தாய் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டிடேம் தனது தாயிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய வைரஸ்…. இந்தியாவில் என்ன பாதிப்பு….? வெளியான முக்கிய தகவல்…!!

சீனாவில் இருந்து வரும் புதிய வைரஸ் இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் அவற்றின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு வைரஸ் சீனாவிலிருந்து பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது புதிதாக வரும் இந்த வைரஸ் இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் பலருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மரியாதையில்லாமல்… “மனம் நோகும்படி பேசிய கிளிகள்’… பூங்கா நிர்வாகம் எடுத்த முடிவு..!!

பார்வையாளர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசிய கிளிகள் தனி இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் கிளிகள் இருப்பிடத்திற்கு எரிக், எலிசி, டைசன், பில்லி, ஜெடே  என்ற ஆப்பிரிக்க கிளிகள் 5 புதிதாக வந்தன.  சில தினங்களிலேயே இந்த கிளிகள் பார்வையாளர்களை மரியாதைக் குறைவாக பேசுவதாகவும்  கிண்டல் செய்தும் நடந்து கொண்டதாகவும் பூங்கா நிர்வாகத்திற்கு புகார்கள் வரத் தொடங்கின. ஒரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்க மற்றொரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்கிறது. ஒரு […]

Categories
உலக செய்திகள்

மரம் விழுந்து பலியான பரிதாபம்… தனது பிறந்தநாளில் மகளின் இறுதிச் சடங்கை நடத்திய தாய்… பின் அவர் செய்த செயல்..!!

தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தாய் தனது மகளுக்கு இறுதிச் சடங்கை நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த விக்கி ஹேண்டர்சன் என்பவர் மகள் எல்லா ஹேண்டர்சன். ஆறு வயதான எல்லா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சமயம் அவர் மீது திடீரென மரம் ஒன்று விழுந்து விட்டது. இதில் கடுமையாக காயமடைந்த எல்லா ஏர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். எல்லா […]

Categories
உலக செய்திகள்

உணவில்லாமல்… கடந்த ஆறு மாதத்தில் 46 லட்சம் குழந்தைகள் தவிப்பு… எந்த நாட்டில் தெரியுமா?

உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சத்திற்கு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஊழல், அண்டை நாடான லெபனான் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி, மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுப்போர் போன்ற பல பிரச்சினைகளால் கடந்த 10 வருடங்களில் மட்டும் நாலு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு நாட்டு மக்களின் மொத்த தொகையில் பாதிபேர் இடம்பெயர்ந்துவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் நாணயம் செயலிழந்து போனதால் உணவு கூட வாங்க முடியாமல் பல குழந்தைகள் தவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

புவி வெப்பமடைய… நாங்க காரணம் இல்ல.. இந்தியா தான்… ட்ரம்ப் குற்றச்சாட்டு..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தின் பொது ட்ரம்ப் இந்தியாவை குற்றம் சுமத்தி விவாதம் செய்துள்ளார்.  அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற 90 நிமிட  தேர்தல் விவாதம் நடைபெற்றது. அதில் ட்ரம்ப் மற்றும் பிடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கொரோனா பதிப்பின் விவரம் பற்றிய விவாதத்தின் போது உலகில் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் அமெரிக்கா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை அந்நாடு பகிர்ந்து […]

Categories
உலக செய்திகள்

எதிர்பாராத விதமாக… எரிபொருள் நிரப்பும்போது… டேங்கர் விமானத்துடன் மோதிய போர் விமானம்… நடுவானில் நிகழ்ந்த சம்பவம்..!!

நடுவானில் போர்விமானம் டேங்கர் விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நாட்டிற்கு சொந்தமான f-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது. நடுவானில் வைத்து எரிபொருள் நிரப்பும் சமயம் போர் விமானம் எரிபொருள் நிரப்ப கூடிய டேங்கர் விமானத்தில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயலிழந்த f-35 போர்விமானம் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த விமானி உயிருடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது என்று அரிசோனாவில் உள்ள கடற்படை விமான […]

Categories
உலக செய்திகள்

ரகசிய கேமராவில் சிக்கிய காட்சி… குழந்தைகளை கதற வைத்த ஆசிரியர்… பின் ஆசிரியரை பளார் பளார் என அறைந்த பெற்றோர்..!!

பள்ளியில் பொருத்தப்பட்ட கேமராவில் ஆசிரியரின் செயல் பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது தாய்லாந்தில் ஆசிரியை ஒருவர் நர்சரி பள்ளியில் குழந்தைகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள பள்ளியில் சில இடங்களிலும் வகுப்பிலும் சிசிடிவி கேமராக்கள் ஆசிரியைக்கு தெரியாமல் பொருத்தப்பட்டது. அதன்பிறகு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பெற்றோருக்கு கோபம் அதிகரித்தது. அந்த காணொளியில் Ornuma  என்ற ஆசிரியை சிறிய குழந்தைகளை கடுமையாக அடிப்பது, அவர்களது காதை முறுக்குவது, […]

Categories
உலக செய்திகள்

ஒருவாரம் பள்ளிக்கு வரல… பாட்டியின் சடலத்துடன் தவித்த சிறுவர்கள்… உதவிய ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உயிரிழந்த பாட்டியுடன் சிறுவர்கள் இருவர் ஒரு வாரம் தனியாக வீட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த கோனி டெய்லர் என்பவர் 76 வயதிலும் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் இருவரை தத்தெடுத்து பராமரித்து வந்தார். மிகுந்த பாசத்துடன் குழந்தைகளை கோனி டெய்லர் கவனித்து வந்தார். இந்நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் டெய்லர் திடீரென உயிரிழந்தார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

2 ஆண்டுகளாக காணாமல் போன நிலையில்… நடுக்கடலில் உயிருடன் மிதந்த பெண்… மீட்ட மீனவர்கள்… குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண் நடுக்கடலில் உயிருடன் மிதந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொலம்பியா கடற்பகுதியில் கடந்த 26ஆம் தேதி மீனவர்கள் பெண்ணொருவரை மீட்டுள்ளனர். 46 வயதான ஏஞ்சலிகா என்ற அந்தப் பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். கடுமையான குளிரில் ஆபத்தான நிலையில் தான் அந்தப் பெண்ணை மீனவர்கள் மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி கொடுத்த உதவிக்குழுவினர் அந்தப்பெண் பேசக்கூட முடியாத படி பலவீனமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். மீனவர்களான குஸ்டாவோ, விஸ்பால் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க… எத்தனை சுறாக்கள் கொல்லப்படுகிறது தெரியுமா?… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா தடுப்பு மருந்துக்காக லட்சக்கணக்கில் சுறா மீன்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா  தொற்றினை முழுவதுமாக அளிக்க ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயார் செய்ய சுறா மீன்களின் கல்லீரலில் சுரக்கும் ஒருவகையான எண்ணெய் தேவைப்பட்டுள்ளது. இந்த எண்ணெயின் பெயர் சுறா ஸ்குவாலின் என்று கூறப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலின் பெற வேண்டும் என்றால் அதற்கு 3000 சுறாக்களை கொல்ல வேண்டும். அதே நேரம் ஒரு டன் எண்ணையை […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏறும்போது அமைதியாக இருந்து… பின் பாத்ரூம் சென்றுவிட்டு பேயாக நடந்துகொண்ட பெண்… பறக்கும்போது நடந்த சம்பவம்..!!

விமானத்தில் பயணித்த பெண் செய்த திகைப்பூட்டும் செயலால் சக பயணிகள் அவருக்கு பேய் பிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர் அமெரிக்காவில் டெட்ராய்ட் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பெண் ஒருவர் நடந்து கொண்ட விதம் சக பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் செயல் பார்ப்பவர்களுக்கு பேய் படம் ஒன்றை நினைவுபடுத்தியுள்ளது. Exorcist எனும் பேய் படத்தில் வரும் காட்சியைப் போல் அந்த பெண் திடீரென்று சத்தம் போட்டு பயணிகளின் இருக்கைகள் மேல் ஏறி […]

Categories
உலக செய்திகள்

பயங்கரம்..! கழிவுநீர்க்குழாயில் அடைப்பு… ஊழியர்கள் சரிசெய்யும்போது.. “தென்பட்ட உடல் பாகம்”… விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!!

கழிவுநீர் குழாய் அடைப்பை சுத்தம் செய்ய வந்த பணியாளர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவைச் சேர்ந்த Adam என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக துப்புரவு பணியாளரை அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த பணியாளர் குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததை கண்டு சந்தேகம் கொண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனால் Adam வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அடைப்புக்கு காரணமான பொருள் மாமிசம் போன்று இருப்பதை கண்டு வீட்டின் […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்குள் வைத்து… பலரை சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்… மதியம் நடந்த பயங்கரம்..!!

மர்ம நபர் வீட்டில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்தவர்களை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரிகான் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் ஒரு வீட்டில் இருந்த குடும்பத்தினரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது திங்கள்  மதியம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் கோபமடைந்த அந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் பலர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியரை பார்த்து பயந்த குழந்தைகள்… வேலையே விட்டு தூக்கிய நிர்வாகம்… ஏன் தெரியுமா?

மழலை குழந்தைகள் பயப்படுவதால் பள்ளி நிர்வாகம் ஆசிரியரை கற்பிப்பதில் இருந்து  விடுவித்து உள்ளது பிரான்ஸ் பாலிசோ பகுதியில் இருக்கும் பள்ளியில் சில்வைன் என்பவர் மழலை குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து வந்தார். ஆனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயங்கரமான கனவுகள் கண்டு தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் சில்வைன் என்றும் புகார் அளித்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் மழலைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்த சில்வைனை 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி […]

Categories
உலக செய்திகள்

மாமா பையனை திருமணம் செய்… “மறுத்த மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை”… அதிர்ச்சி சம்பவம்..!!

திருமணத்திற்கு சம்மதிக்காத மகளை தந்தையே கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பைசலாபாத் நகரில் தந்தை ஒருவர் தனது மகளை அவரது மாமா மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அதனை மறுத்துள்ளார். இதனால் தந்தை மகள் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த அன்று தந்தை மகள் இடையே ஏற்பட்ட தகராறில் மகள் என்றும் பாராமல் கோடாரியால் தந்தை […]

Categories
உலக செய்திகள்

10 வருஷமா இப்படி பண்ணி இருக்காரே…! சிக்கலில் அமெரிக்கா அதிபர்…. டிரம்ப் குறித்து பரபர தகவல் ..!!

அதிபர் ட்ரம்ப் பத்து வருடங்களாக வருமான வரி செலுத்தவில்லை என்று செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்க அதிபரான ட்ரம்ப் 15 வருடங்களில் 10 வருடங்கள் வருமான வரியை செலுத்த வில்லை என்று பிரபல பத்திரிக்கை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் செய்தி குறிப்பில், “அதிபர் ட்ரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டத்திலும் மற்ற உரிமை ஒப்பந்தங்களிலும் இருந்து 2018ஆம் வருடத்திற்குள் 7427.4 மில்லியன் டாலர் வருமானமாக சம்பாதித்து இருந்தாலும் கடந்த 15 வருடங்களில் […]

Categories

Tech |