Categories
உலக செய்திகள்

ரூ. 1,76,83,12,80,000 இழப்பு… 19,000 ஊழியர்கள் பணிநீக்கம்…. 20,000பேருக்கு விருப்ப ஓய்வு… திணறும் அமெரிக்கா …!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கின. இதிலிருந்து மீண்டு வர செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் எடுத்தன. ஆனால் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீண்டு வந்ததால் பல நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் மொத்தமாக திவாலானது. சில […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்…. 11 குழந்தைகள் பலி…. ஆப்கானில் சோகம் …!!

பயங்கரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது. இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது தாக்கி கொள்கின்றனர். அவ்வகையில் ஆப்கானிஸ்தான் தாஹர் மாகாணத்திலுள்ள பஹர்க் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அதோடு வெடிகுண்டுகளை வீசினர். தலிபான் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 40 பேர் மரணம் […]

Categories
உலக செய்திகள்

ரூ.26,124-க்கு ஆசிரியரை…. காட்டி கொடுத்த மாணவர்கள்…. இறுதியில் நடந்த சோகம் …!!

தீவிரவாத இளைஞனால் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ஆசிரியரான சாமுவேல் 18 வயது நிரம்பிய அப்துல்லா என்பவரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதி அப்துல்லாவுக்கு பள்ளியில் உள்ள மாணவர்கள் உதவியதும் அதற்கு 300 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.26,124) கூலியாக பெற்றதும் தெரியவந்தது. தீவிரவாத இளைஞன் சிறுவர்களிடம் ஆசிரியரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதால் தான் சிறுவர்கள் அப்துல்லாவிடம் ஆசிரியரை காட்டிக் கொடுத்துள்ளனர். தற்போது ஆசிரியரின் […]

Categories
உலக செய்திகள்

1இல்ல, 2இல்லை….. 49 வங்கிகள் மூடல்…. பொருளாதாரத்தை புரட்டிய கொரோனா …!!

கொரோனா தொற்றினால் இலங்கையில் 49 வங்கிகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது இலங்கையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் அந்நாட்டில் 49 வங்கிகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூடப்படும் 49 வங்கிக் கிளைகளிலும் கொடுக்கல் வாங்கல்கள் நடக்காது என்றும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களையும் ஏடிஎம் இயந்திரங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூடப்பட இருக்கும் வங்கிகளின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம்…. தண்ணீரில் மூழ்கடித்த பாதிரியார்…. கதறிய பெற்றோர்…!!

பிறந்த குழந்தைக்கு ஆபத்தான முறையில் ஞானஸ்நானம் செய்த பாதிரியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது சைப்ரஸ் நாட்டில் உள்ள லிமாசோல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் வைத்து என்டினா என்பவரது குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்தில் இருந்த பாதிரியார் அழுது கொண்டிருந்த அந்தப் பச்சிளம் குழந்தையை நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் மூழ்கடித்து ஞானஸ்னானம் செய்தார். இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதோடு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட பெற்றோர் பாதிரியார் மீது வழக்கு தொடர்ந்தனர். […]

Categories
உலக செய்திகள்

சமைக்காத இறைச்சியை சாப்பிட்டவருக்கு… மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்…. அதிர்ந்து போன மருத்துவர் …!!

சமைக்காத இறைச்சியை உண்டவர் மூளையில் நாடாப்புழு இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கிழக்கு சீனாவின் ஹாங்க்சோ பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ஸூ ஸோங் என்பவர் ஒரு மாதமாக தலைவலி, வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். அதுவரை மருத்துவமனை செல்லாமல் வலியின் தீவிரம் அதிகரித்தபின் மருத்துவரை நாடிய அவர், தலைவலி தானே மாத்திரை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று நம்பிச் சென்றவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்னர், பின் ஜியாங் ரோங் […]

Categories
உலக செய்திகள்

“கொடூரமா கொன்னாங்க” சவுதி இளவரசர் மீது வழக்கு…. இளம்பெண்ணின் துணிகர செயல்….!!

விமர்சகரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதியின் பட்டத்து இளவரசர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017 ஆம் வருடம் ஜமால் கஷோக்ஜி என்ற பத்திரிக்கையாளர் தாய்நாடான சவுதியை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு சென்றார். சவுதி அரச குடும்பத்தின் விமர்சகராக இருந்த இவர் துருக்கி நாட்டு பிரஜையான ஹாடீஜா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனால் முதல் திருமணம் விவாகரத்து செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பெறுவதற்காக 2018 ஆம் வருடம் சவுதியில் துணைத் தூதரகத்திற்கு சென்றார். […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் நடந்த விபத்து…. 2 பேர் பலி…. கடை அதிர்ந்ததா….? குழப்பத்தில் உரிமையாளர்…!!

கேஸ் வெடித்ததில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் Southall பகுதியிலுள்ள கிங் வீதியில் இன்று காலை கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வணிக வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் தங்கள் எல்லாவற்றையும் இழந்ததாக  வணிக உரிமையாளர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையில் இருந்து மீட்க 40 […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

சீனாவின் தடுப்பு மருந்தா…? நாங்க வாங்க மாட்டோம்…. உறுதியாக கூறிய அதிபர்…!!

சீனா தயார் செய்யும் தடுப்பு மருந்தை நாங்கள் வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார். உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா சீனாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டது. உலக நாடுகள் முழுவதிலும் தொற்று தீவிரமாக பரவி வருவதால் இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவது தான் நிரந்தர தீர்வு என்று ஆய்வாளர்கள் பலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் உள்ளது என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தொற்றை […]

Categories
உலக செய்திகள்

கொரில்லக்கு அறுவை சிகிச்சை…. புது வருகை தந்த கியூட் குட்டி கொரில்லா…. வெளியான காணொளி….!!

கொரிலாவிற்கு அறுவை சிகிச்சை செய்து குட்டி கொரில்லா வெளியில் எடுக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் இருக்கும் பாஸ்டனில் உள்ள பிராங்கிளின் உயிரியல் பூங்காவில் கிகி என்ற கொரில்லா ஆண் கொரில்லா குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குட்டி பிறக்க குறிப்பிட்ட தேதிக்கு முன்பே தாய்க்கு கொரில்லாவிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குட்டி கொரில்லா வெளியில் எடுக்கப்பட்டது. சாதாரணமாக மூன்று முதல் ஐந்து பவுண்டுகள் வரை கொரில்லா குட்டிகளின் எடை இருக்கும். ஆனால் இந்த குட்டியின் எடை 6 […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 6 மாதத்தில்…. உலகில் என்ன நடக்கும் ? கொரோனாவை கணித்த ஜோதிடரின் அடுத்த கணிப்பு …!!

கொரோனவை முதல் முதலாக கணித்த பிரபல ஜோதிடர் அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும்  சம்பவங்கள் குறித்து தமது கணிப்பை வெளியிட்டு உள்ளார். பிரிட்டன் ஜோதிடரான ஜெஸ்ஸிகா ஆடம்ஸ் கடந்த 2019 பிப்ரவரி மாத துவக்கத்திலேயே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 2020ஆம் ஆண்டு பெரும் சேதத்தை விதைக்கும் என தமது கருத்தை வெளியிட்டார். அதோடு முதல் பலி சீனாவின் வூஹான் நகரில் ஜனவரி 10ஆம் தேதி நிகழ்ந்தது என்பதையும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவர் இனி […]

Categories
உலக செய்திகள்

பதறவைத்த வீடியோ….. ஆற்றில் வீசப்பட்ட குழந்தைகள்…. தாயின் கொடூர செயல் ….!!

பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தனது மூன்று வயது மற்றும் ஒரு வயதே ஆன இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. பாலத்தின் மீது நின்று டைக்ரிஸ் ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தாய் வீசும் காட்சி அந்த காணொளியில் […]

Categories
உலக செய்திகள்

வெறும் 1 மணி நேரத்தில்…. கொரோனா ரிசல்ட் கையில்…. கலக்கும் லண்டன் ஏர்போர்ட் ….!!

ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை லண்டன் விமான நிலையம் அமல்படுத்தி வருகிறது. லண்டனில் இருக்கும் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் என கூறப்படுகின்றது. உமிழ்நீர் சோதனையின் அடிப்படையில் இந்த நடைமுறையிலான பரிசோதனை 102 பவுண்ட் க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் தேசிய சுகாதார சேவையை விட ஹீத்ரோ சோதனையின் முடிவுகள் விரைவாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பார்வையாளர்கள் முன்னிலையில்…. காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்…? வெளியான காணொளி…!!

பூங்கா காப்பாளர் கரடிகள் உயிருடன் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் இருக்கும் ஷாங்காய் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் சுதந்திரமாக இருப்பதை பார்க்க பாதுகாப்பான வாகனங்களில் பார்வையாளர்கள் இருந்தபடி பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்காவின் காப்பாளர் ஒருவரை அங்கிருந்த கரடிகள் கடித்து தின்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியான காணொளியில் கரடிகள் கூட்டம் கூடி நின்று சாப்பிடுவதை பார்க்க முடியும் ஆனால் சீன ஊடகங்கள் மனிதனை கரடிகள் […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ட்ரம்ப் கிட்ட பேசணும்” 13 மணி நேரம் டவரில் தொங்கிப் போராட்டம்…. இளைஞரின் செயலால் பரபரப்பு….!!

இளைஞர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச வேண்டும் என்று 13 மணி நேரம் டவரில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பின ஆதரவு இயக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருக்கும் ட்ரம்ப் டவரில் டவரில் தொங்கிக்கொண்டிருந்த படி காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தான் உடனடியாக அதிபர் ட்ரம்பிடம் பேச வேண்டும். அதோடு ஊடகங்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேவை ஏற்பட்டால் தனது […]

Categories
உலக செய்திகள்

என்னடா..! நடக்குது அமெரிக்காவில்… எல்லாமே பொய்யா ? உலக நாடுகள் அதிர்ச்சி …!!

அமெரிக்காவில் நேற்று புதிதாக 70,000தீர்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மூன்று மாதங்களுக்கு உச்ச நிலையை அடைந்த பின்னர் கொரோனா வைரஸ் குறைந்து வருவதாகவே எல்லா நாட்டின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 3 கோடியே 95 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

90 நாட்கள்…. 600 லிட்டர் தண்ணீர்…. 745 கிலோ பூசணி…. வாயடைத்து போன மக்கள் …!!

மிக அற்புதமும், சுவாரசியமும், அதிசயமும் நிறைந்துள்ள பூமியில் அதிசயம் என்பது எங்காவது, ஒரு மூலையில் எப்போதாவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மானுட சமூகத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இப்படியான அதிசயங்கள் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி ஒரு அதிசயம் தான் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது. இது உலகில் வாழும் ஏனைய மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான பூசணி திருவிழா, ஐரோப்பிய ராட்சச காய்கறி வளர்ப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள லூட்விக்ஸ் […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் நடக்க இருந்த திருமணம்…. சினிமா பாணியில் நடந்த சம்பவம்…!!

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான கணவர் வேறு திருமணம் செய்ய போவதை அறிந்த மனைவி சினிமா பாணியில் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் ஜாம்பியா நாட்டை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தேவாலயத்தின் உள்ளே மணமகளுடன் மணமகனாக திருமணத்திற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். அச்சமயம் தேவாலயத்தின் உள்ளே திடீரென குழந்தையுடன் வந்த பெண் தமிழ் திரைப்பட பாணியில் திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டார். திருமணத்திற்கு வந்த பலரும் திகைப்புடன் அந்தப் பெண்ணைப் பார்க்க அவர் “இது எனது கணவர். இதுவரை நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… மீண்டும் தாக்கும் கொரோனா… மிக மோசமான பாதிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் போது ஏற்படும் பாதிப்பே மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு சிலர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது போன்று இரண்டாவது முறை ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளுக்கே ஷாக்…! மிரளும் ஆய்வாளர்கள்….! பூமியின் வேகத்தை குறைக்கும் சீனா …!!

சீனாவில் உள்ள த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டதால் பூமி சுற்றும் வேகம் 0.06 வினாடிகள் குறைந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் உலக அளவில் மிகப்பெரிய அணை த்ரீ கோர்ஜஸ். சீனாவில் உள்ள இந்த அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 17 வருடங்களாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையால் நகரங்கள் பல மூழ்கும் அபாயத்தில் உள்ளது. த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கத்திற்கு மாறாக நீர்மட்டத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உலகையே மிரட்டும் வடகொரியா….. சமாளிக்க ஜப்பான் அதிரடி வியூகம்….!!

வடகொரியாவிடம் இருந்து தப்பிக்க ஜப்பான் தனது ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த போவதாக கூறியுள்ளது. வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதனைத்தொடர்ந்து அதிசக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் தனது ஏவுகணை மற்றும் ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்தும். இந்நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. அதேநேரம் ஜப்பான் வடகொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியா பண்ணுறது சரியில்லை… நாங்க ஏத்துக்க மாட்டோம்… மீண்டும் சீண்டும் சீனா…!!

சட்டவிரோதமாக இந்தியா உருவாக்கியிருக்கும் யூனியன் பிரதேசத்தை எதிர்ப்பதாக சீனா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச பகுதிகளில் 8 பாலங்கள், லடாக் யூனியன் பிரதேசத்தில் 8 பாலங்கள் என மொத்தம் 44 பாலங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைப்பகுதியில் திறந்து வைத்தார். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போது திறக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுமானங்கள் இரண்டு நாடுகளுக்கிடையே மீண்டும் பதட்டம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். இந்திய சட்டத்திற்கு விரோதமாக அமைத்த லடாக் […]

Categories
உலக செய்திகள்

“நான் அனைவரையும் முத்தமிடுவேன்” முகக்கவசத்தை வீசியெறிந்த ட்ரம்ப்….!!

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட அதிபர் பிரச்சாரத்தில் ஆதரவாளர்களை முத்தமிட தயார் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன்பிறகு தொற்றில் இருந்து அதிபர் விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார பேரணியில் சமூக இடைவெளியின்றி பலரும் பங்கேற்றனர். அந்தப் பேரணியில் அதிபர் பேசிய போது, “நான் தொற்றில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் சார்…! எனக்கு பயமா இருக்கு….! உடனே வீட்டுக்கு வாங்க….! பின்னர் நடந்த வினோதம் …!!

பெண் ஒருவர் காவல்துறையினரை உடனடியாக தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் ராட்சத நண்டு ஒன்று நுழைந்துள்ளது. chinese mitten crab என்ற வகையை சார்ந்த அந்த நண்டு பத்து இன்ச் நீளம் கொண்டது. இந்த வகை நண்டுகள் பொதுவாக ஆசியாவில் தான் இருக்கும். ஆனால் சமீப காலமாக இந்த நண்டுகள் ஜெர்மனியில் இருக்கும் நதிகளில் தென்படுகின்றன. பெண்ணின் வீடு ரைன் நதியின் அருகே அமைந்துள்ளது. எனவே அந்த நதியில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! என்னை மன்னிச்சுக்கோங்க….! கண்கலங்கி அழுத கிம்…. வெளியாகிய பரபரப்பு காரணம் …!!

ஆண்டு விழாவில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் மக்கள் முன்னிலையில் கண்கலங்கி மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை அன்று ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்துதல் போன்றவை நடந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்தியில், “வானத்தை விட […]

Categories
உலக செய்திகள்

25,00,000 மக்கள் காலி ? ரெடியான ஏவுகணை…. குறிவைத்த வடகொரியா ….!!

வடகொரியா நாட்டில் எந்த மூலைக்கும் எடுத்து செல்லும் வகையில் உலக அளவில் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஏவுகணையை வல்லரசு நாடுகளால் கூட அளிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் எதிர்ப்புகளை தகர்க்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை எனக் கூறப்படுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் உலகின் அணைத்து நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற உள்ள ஹவாசாங் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… நீங்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்… அதிலிருந்து கொரோனா… ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள்,செல்போன்கள் மற்றும் எவர்சில்வர் போன்ற பரப்புகளில் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது பற்றி பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

சுகாதார முறையை பின்பற்றி….. புதுமையாக நடந்த திருமணம்…. 250 பேர் பங்கேற்பு….!!

250 பேர் கூடி நடைபெற்ற திருமணம் சமூக வலைத்தளத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகின்றது லண்டனில் இருக்கும் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற திருமணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்தியாவை சேர்ந்த ரோமா மற்றும் வினால் பட்டேல் இந்த மாதம் 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண விழாவில் 250 பேர் பங்கேற்றனர். லண்டனில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இவர்களது திருமணம் சுகாதார முறையில் நடைபெற்றதாக […]

Categories
உலக செய்திகள்

“தொடரும் போர்” வான்வெளி தாக்குதல்….. கொன்று குவிக்கப்பட்ட தலிபான் பயங்கரவாதிகள்…!!

ஆப்கானிஸ்தான் அரசின் வான்வேளி தாக்குதலால் 26 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தாக்கி வருகின்றனர். அதேநேரம் ஆப்கானிஸ்தான் அரசும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான செயல்களை செய்து வருகின்றது. அவ்வகையில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த எல்மெண்ட் […]

Categories
உலக செய்திகள்

“இந்து கோவில் சேதம்” பாகிஸ்தானில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் இந்துக்கள்…!!

பாகிஸ்தானில் இருந்த இந்துக் கோவிலை சேதப்படுத்தியது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான கோவில் சேதப்படுத்தப்பட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்து பாகிஸ்தான் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

90 வருடம் கழித்து… மைனே தீவில் பிறந்த குழந்தை….!!

90 வருடங்கள் கழித்து மைனே தீவில் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள மைனே தீவில் 90 வருடங்கள் கழித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் தற்செயலாக மைனே தீவிலிருந்து பவுண்டேஷன் தீவுக்கு செல்ல திட்டங்கள் போட்டு இருந்தனர். அங்கேயே குழந்தையை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்தனர். கல்வின் கூலிட்ஜ் என்பவர் அமெரிக்க அதிபராக இருந்ததில் இருந்தே மைனே தீவில் குழந்தை பிறக்கவில்லை. கடைசியாக 1927ஆம் ஆண்டு தான் அந்த தீவில் […]

Categories
உலக செய்திகள்

ஆர்டர் செய்தது பூனைக்குட்டி…. வீட்டிற்கு வந்தது புலிக்குட்டி…. உண்மை தெரியாமல் விளையாடிய தம்பதி…!!

ஆன்லைனில் பூனைக்குட்டி ஆர்டர் செய்து புலிக்குட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் பூனைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இதனால் ஆப்பிரிக்கா நாட்டின் பிரபலமான சவானா வகையை சார்ந்த பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். 6,000 யூரோக்கள் ஆன்லைனிலேயே செலுத்திய நிலையில் சவானா பூனைக்குட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி நேரத்தை செலவிட தொடங்கினர் தம்பதியினர். இந்நிலையில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பூனையின் நடவடிக்கையில் நாளடைவில் மாற்றம் […]

Categories
உலக செய்திகள்

“மனைவியுடன் விவாகரத்து” முறைப்படி இளைஞனுடன் மருத்துவர் திருமணம்….!!

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்திய மருத்துவர் இளைஞனை திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். அங்கு வட இந்தியாவை சேர்ந்த இளைஞர் தருண் சந்திப் தேசாய் என்பவர் சரத் பொன்னப்பாவிடம்  நட்புடன் பழகி வந்தார். ஆரம்பகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் ஓரின சேர்க்கையாளராக மாறிவிட்டனர். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சரத் பொன்னப்பா […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுக்கு தீமை” கடுமையான நடவடிக்கை எடுப்போம்… ஈரானை எச்சரித்த ட்ரம்ப்…!!

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் எங்களுக்கு எதிராக ஈரான் தீய செயல்கள் செய்தால் இதுவரை பார்க்காத அளவிற்கு கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கக்கூடும். நிச்சயம் அதனை செய்ய தவற மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றியடைந்தால் அணு ஆயுத ஒப்பந்தம் ஈரானுடன் மறுபடியும் போடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் முக்கிய போர்த் தளபதி […]

Categories
உலக செய்திகள்

5 சூட்கேஸ்களுடன் வந்த பெண்…. சோதனை செய்த அதிகாரிகள்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுக்கட்டாய் பணம் அடங்கிய ஐந்து சூட்கேஸ்களுடன் இளம்பெண் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த தாரா ஹான்லான் என்ற பெண் ஹீத்ரா விமான நிலையத்தில் வைத்து ஐந்து சூட்கேஸ்களுடன் தடுத்து நிறுத்தப்பட்டார். விமானநிலையத்தில் அவரது சூட்கேஸ்களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஏராளமான பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் இரண்டு மில்லியன் பவுண்டுகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வருடம் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் தொகையான சட்டவிரோத பணம் இது […]

Categories
உலக செய்திகள்

சிறுமியுடன் நீந்தும் 11 அடி நீள பாம்பு…. வைரலாகும் காணொளி….!!

8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் 11 அடி நீள மலைப்பாம்புடன் இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது ஒவ்வொரு தினமும் சமூகவலைதளத்தில் பல காணொளிகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கும்.  அவ்வகையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.  இன்பார் என்ற சிறுமி தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் 11 அடி […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் முறை… தாக்கும் கொரோனா… மிக மோசமான பாதிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் போது ஏற்படும் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு சிலர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது போன்று இரண்டாவது முறை ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு கட்டாயம் […]

Categories
உலக செய்திகள்

“ஆண் வேடமிட்ட பெண்கள்” செய்த அநியாய செயல்… போலீசை திணறடித்த கும்பல்…!!

ஆண் வேடமிட்டு பெண்கள் பைக்குகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் கராச்சி அருகே இருக்கும் மவுரிபூர் என்ற பகுதியில் தொடர்ந்து பைக்குகள் காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் காணாமல் போகும் பைக்குகள் யாரால் திருடப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அப்போது ஒரு கேமராவில் 18 வயதே நிரம்பிய இளைஞன் பைக் திருடுவது பதிவானது. அதனை வைத்து அந்த இளைஞனை காவல்துறையினர் பல […]

Categories
உலக செய்திகள்

இலக்கியத்துறை… நோபல் பரிசு பெறும்… அமெரிக்க பெண் கவிஞர்…!!!

இந்த வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் என்பவர் இலக்கியத் […]

Categories
உலக செய்திகள்

“ஆன்லைன் காதலன்” 1500 மைல் கடந்து தேடி சென்ற காதலி…. ஏமாற்றத்துடன் திரும்பிய சோகம்…!!

பெண் தொழில் அதிபர் தனது ஆன்லைன் காதலனை சந்திக்க 1500 மைல் தூரம் பறந்து சென்று ஏமாற்றமடைந்து திரும்பியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாஸ்மின் தான் ஆன்லைன் மூலம் சந்தித்து பழகிய காதலனை பார்ப்பதற்காக விமானம் மூலம் இந்டியனாயிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு புறப்பட்டார். விமானம் ஏறிய உடன் ஜாஸ்மின் தனது காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபரிடம் இருந்து அவருக்கு பதில் எதுவும் வராததால் தனது தொலைபேசி எண்ணை அவர் பிளாக் செய்து […]

Categories
உலக செய்திகள்

“தளபதி மரணம்” அதிபர் மட்டும் இல்ல….. நாடே காரணம்…. குற்றம் சுமத்திய ஈரான்…!!

ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அமெரிக்காவும் காரணம் என அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் முக்கிய தளபதியான காசிம் சுளைமாணி அமெரிக்கப் படையினரால் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனால் ஈராக்கில் இயங்கிவந்த அமெரிக்க இராணுவத் தளத்தை ஈரான் ராணுவம் தாக்கியது. இதில் […]

Categories
உலக செய்திகள்

துண்டுதுண்டாக வெட்டி…. எரிக்கப்பட்ட காதலி…. காதலன் வெறிச்செயல்…. அதிரவைக்கும் பின்னணி …!!

காதலியை காதலன் கொன்று துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை எரிப்பது போல் எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த பினார்  என்பவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வந்தவர். இதனால் பலருக்கும் அறிமுகமான இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரைத் தேடி வந்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பினாரின் காதலர் மற்றும் அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி ஆகிய இருவரது தொலைபேசி […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? டிரம்ப் பதிவால் கடுப்பான ட்விட்டர், பேஸ்புக் …!!

பருவக் காய்ச்சலுடன் கொரோனா தொற்றை அதிபர் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன் பிறகு தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆரம்ப கட்டத்தில் கொரோனாவை எப்படி சாதாரணமாக மதிப்பிட்டாரோ அதேபோன்று இப்போதும் கொரோனாவை பருவ காய்ச்சலுடன் ஒப்பீட்டு பேசியுள்ளார். அவர் பதிவில் “ஒவ்வொரு வருடமும் பருவ காய்ச்சல் உயிரிழப்புகளை எடுக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

காதலனை கொன்னுட்டியா ? எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…. காதலி மீது பாய்ந்த சட்டம் …!!

தனது காதலனை கொன்ற நபரிடம் காதலி நகைச்சுவையாக பேசியதற்கு நீதிமன்றம் கேள்விகளை கேட்டு தாக்கியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த சிம்ரன் என்பவரது காதலன் ஹசன் குத்துச்சண்டை வீரர் எல்விஸ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது எல்விஸ் தாக்கியதில் ஹஸன் கோமாவிற்கு சென்றார். தனது காதலன் கோமாவில் இருந்த சமயம் சிம்ரன் ஹாசனை தாக்கிய எல்விஸ்க்கு தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது என பல குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதனிடையே ஹசன் கோமாவில் இருந்து விடுபடாமல் உயிரிழக்க எல்விஸ் மீது கொலைக்குற்றம் […]

Categories
உலக செய்திகள்

வேதியியல் துறைக்கான… நோபல் பரிசு… இடம் பிடித்த இரண்டு பெண்கள்…!!!

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இரண்டு பெண்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய […]

Categories
உலக செய்திகள்

தனியாக நின்ற வேன்கள்….. சோதனையில் கிடைத்த 12 சடலங்கள்…. துண்டுசீட்டில் எழுதப்பட்ட தகவல்…!!

போதைப்பொருள் தொடர்பான போட்டிக்காக கொலை செய்யப்பட்ட 12 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் அமெரிக்கா நாடுகளில் மெக்சிகோ போதைப் பொருள் ஆதிக்கம் நிறைந்தது. அவ்வப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே நடக்கும் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்படுவதும் அந்நாட்டில் சாதாரணமான ஒன்று. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜான் லூயிஸ் மாகாணத்தில் கேட்பாரற்று 2 வேன் நின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அதிர்ச்சி தரும் […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு…. ஊசி மூலம் ஆண்மை அகற்றம்…. கஜகஸ்தானின் நூதன தண்டனை …!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளை கடுமையாக்கி, புதுப்புது சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும்  இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் கஜகஸ்தான் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு கொடுமையான தண்டனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் […]

Categories
உலக செய்திகள்

கோழை மாதிரி கொன்னுட்டீங்க… பதில் சொல்லி ஆகணும்…. ஈரான் திடீர் எச்சரிக்கும் ஈரான் ….!!

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த ஜனவரி மாதம்  ஈரான் நாட்டின் போர்படை தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்க ஏவுகணை தாக்குதல் மூலம் கொன்றது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவம் ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவ படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

3 நாட்களில் OK …! மூச்சு விட முடியல…. கஷ்டமா இருக்கு… பரிதாபத்தில் டிரம்ப் …!!

உலகையே ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை விட்டு வைக்காததை போல அதிபர் டிரம்ப்பையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். வெறும் மூன்று நாட்களே சிகிச்சை பெற்று கடந்த திங்கள்கிழமை வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் உடனடியாக ஆதரவாளர்களுக்கு முகம் காட்டும் வகையில் வெள்ளை மாளிகையில் இருந்தபடி கையசைத்தார். மேலும் கட்டை விரலை உயர்த்தி ஆதரவாளர்களையும், தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ப் பால்கனியில் நின்றுகொண்டிருந்த போது மாஸ்க் அணியாமல் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு வசமான அப்பு…. இந்தியாவுடன் பிளான்…. கைகோர்த்த அமெரிக்கா….!!

குவாட் கூட்டணி நாடுகளின் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சீனாவின் செல்வாக்கை குறைக்க ஆலோசித்தனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் குவாட் என்ற அமைப்பை 2017ஆம் ஆண்டு உருவாக்கியது. இந்திய பசிபிக் பெருங்கடலில் மற்ற நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குவாட் அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. குவாட் அமைப்பு நாடுகளின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ஜப்பான் […]

Categories

Tech |