கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் உலகம் தலைமுறை பேரழிவை எதிர் கொள்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 170 நாடுகளில் இருக்கின்ற பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால் 1 பில்லியனுக்கும் மேலான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 மில்லியன் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப் படிப்பை தவறவிட்டு இருப்பதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தரெஸ் கூறியுள்ளார். கொரோனாவிற்கு முன்னர் ஏற்கனவே 250 மில்லியனுக்கும் […]
