இயக்குனர் சங்கரின் பிறந்தநாளுக்கு உலகநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே அது இயக்குனர் சங்கரின் படங்கள் தான். இவர் இன்று தன்னுடைய 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம். பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே […]
