ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் அப்பாவி மக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து நாட்டின் ஆயுதப்படை அமைச்சர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டை விட்டு வெளியேற நினைத்த ஆப்கானியர்களும், அங்கிருக்கும் வெளிநாட்டவர்களும் தலைநகர் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக பசியும் பட்டினியுமாக காத்துக்கிடக்கிறார்கள். […]