ராணுவ குடியிருப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களை வெளியேறுமாறு தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தங்க வைப்பதற்காக அங்கிருக்கும் மக்களை மூன்று நாட்களில் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கந்தஹார் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த குடியிருப்பில் இருக்கும் […]