இரு பெரும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் முதல் முறையாக காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் சீன அதிபர் கூறியதில் ‘கொரோனா தொற்று பரவல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களின் தகவல் தொடர்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். […]
