தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே நடக்கும் போரானது எப்பொழுது முடிவுக்கு வரும் என்று அனைத்து நாடுகளும் கவலைப்படும் இவ்வேளையில் ரஷ்யப் படைகள் நாளுக்குநாள் தங்களுடைய தாக்குதலை அதிகப்படுத்திக் கொண்டே வருகின்றனர். இந்த தாக்குதலால் உக்ரேனில் பல நகரங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. மேலும் ரஷ்ய படையினர் உக்ரைனில் வான் வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி பெரும்பாலான நகரங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். […]
