உலககோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டமானது கத்தார் நாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அர்ஜென்டினா மற்றும் பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்நாட்டிற்கு வந்திருந்தனர். மேலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அர்ஜென்டினா அணி வெற்றியடைந்த இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்றோர் நேரடியாக பார்த்து இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
