சில நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமியை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வழிபாட்டு தலங்கள் திறப்பு உட்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வழிமுறைகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து கோவிலின் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள […]
