அமெரிக்காவில் உறைந்த குளத்தில் தவறி விழுந்த தங்கையை காப்பாற்ற குதித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அபிகாயில் லக்கெட் என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரர்களுடன் வீட்டின் அருகே உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார். அவருடைய 10 வயது சகோதரன் பெஞ்சமின் சகோதரியை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் குளத்தில் குதித்தான். பிறகு இருவரும் தண்ணீரில் இருந்து வெளியே […]
