முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சில்க் சுமிதா, மியா கலிபா,சன்னிலியோன் என சகட்டுமேனிக்கு உறுப்பினர் அட்டை வழங்கி காமெடி பொருளாகி இருக்கிறது திமுகவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எல்லாரும் நம்முடன் என்ற ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை திமுக தொடங்கியுள்ளது. திமுகவில் இணைய விரும்புவோர் தங்களது செல்போன் எண்ணைக் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பியை பதிவிட்டால் போதும் யார் பேரில் வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டை பெறலாம் […]
